Thursday, 31 October 2019

தமிழகம் இழந்த பகுதிகள் - தவறான வரைபடம்


தமிழகம் இழந்த பகுதிகள் - தவறான வரைபடம்
முதல் படத்தை "தமிழகம் இழந்த பகுதிகள்" என பல்வேறு தமிழ்தேசிய அமைப்புகள் கூறுகின்றனர்.
இந்த வரைபடம் "தமிழ்தேசியப் பேரியக்கம்" மற்றும் "தமிழர்களம்" ஆகிய கட்சிகளாலும் பயன்படுத்தப் படுகிறது.
இரண்டாவது படம் நான் தயாரித்த "தமிழர்நாடு" வரைபடம் மற்றும் மேற்கண்ட "தமிழகம் இழந்த பகுதிகள்" வரைபடத்தின் ஒப்பீடு.
(தெளிவான தமிழர்நாடு வரைபடம் காண
தேடுக : தமிழர்நாடு வட்டார எல்லைகள் )
முதலாவது படமே பெரியதாக உள்ளது.
இத்தனை பெரிய நிலப்பரப்பு நம்முடையது என்று எந்த சான்றுகள் அடிப்படையில் யார் வரைந்தார்கள் என்று தெரியவில்லை.
நான் வரைந்த தமிழர்நாடு வரைபடம் நான் திரட்டிய சான்றுகள் அடிப்படையில் வரையப்பட்டது.
இதற்கென தனி வலை ஏற்படுத்தி (vaettoli. wordpress. com)  அதில் மண்மீட்பு சான்றுகளைத் தொகுத்து வைத்துள்ளேன்.

ஒரு பகுதி நமக்கு சொந்தம் என்று கூற நாம் காட்டவேண்டிய சான்றுகளாவன
1) இலக்கியம்
2) கல்வெட்டு
3) அரசு ஆவணம்
4) புத்தகம்
5) தற்போதைய மக்கட்தொகை
இதில்
'இலங்கை' ஆக்கிரமித்துள்ள பகுதிகள்
'கேரளா' ஆக்கிரமித்துள்ள பகுதிகள்
'ஆந்திரா' ஆக்கிரமித்துள்ள பகுதிகள்
ஆகியவற்றிற்கு மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் திரட்டிவிட்டேன்.
கர்நாடகா ஆக்கிரமித்துள்ள பகுதிகளுக்கு மட்டும் பழமையான கல்வெட்டு சான்று தவிர மீதி நான்கும் உள்ளது.
தமிழகத்திற்கும் கன்னட நாட்டிற்கும் இடையே தற்போதுள்ளதை விட பெரிய காடு இருந்துள்ளது.
அதில் தமிழ்ப் பழங்குடிகள் வாழ்ந்துள்ளனர்.
அக்காலத்து இலக்கிய சான்றுகள் நமக்கு சாதகமாக உள்ளன.
காடுகளுக்கு அந்தப் பக்கத்திலிருந்து கன்னடர் சிறிய அளவில் குடியேறினர்.
சில நடுகற்களும் குகைக் கல்வெட்டுகளும் பாறைக் குடைசல்களும் நிறுவினர்.
பிறகு தமிழ் அரசு பேரரசாக விரிந்தது.
கன்னடரை விரட்டிவிட்டு தமிழர்கள் குடியேறி நாடு, நகரம், கோவில் என நாகரிகமாக வாழ்ந்தனர்.
பிறகு கன்னடர் தமிழரை அடக்கி மிக அதிக அளவில் குடியேறி காவிரிக்கரை வரை பரவினர்.
காவிரி தோன்றும் குடகு இப்பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதி மண்மீட்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
பிற எல்லைகள் போல அல்லாது கன்னடர் - தமிழர் எல்லை ஒரு இழுபறியிலேயே உள்ளது.
ஆனால் இவ்வெல்லைக்கு இருபுறமும் நமக்கு கடற்கரையை ஒட்டி வெகுதூரம் வரைக்கும் சான்றுள்ளது.
இந்தப்பக்கம் கேரள எல்லையையும் தாண்டி கோகர்ணம் (Gokharna) வரை நமக்கு சான்று உள்ளது.
அந்த பக்கம் வடபெண்ணை ஆறு வரை நமக்குச் சான்றுள்ளது.
அதையும் தாண்டி இமயம் வரை நமக்கு இலக்கியச் சான்று உள்ளது.

கல்வெட்டு தலைமை அலுவலகம் மைசூர் நகரில் இருப்பதால் பழமையான தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு பழமையான கன்னட கல்வெட்டுகள் மட்டும் வெளிவந்துள்ளன.
நானறிந்த வரையில் மேற்கண்ட வரைபடம் அளவு நிலத்தை நாம் கோர நம்மிடம் சான்றுகள் இல்லை.

இந்த வரைபடம் பற்றி மேலும் விபரம் தெரிந்தோர் தொடர்பு கொள்ளவும்.

நன்றி!








Saturday, 26 October 2019

சிவகாசிக்கு உதவி

சிவகாசிக்கு உதவி

  பட்டாசுக்கு வெடிக்காமல் "பச்சை தீபாவளி" கொண்டாடுவோம் என்று சில சூழலியல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உடனே சில இசுலாமிய பயங்கரவாதிகள் "பட்டாசை புறக்கணிப்போம்" என்று பிரச்சாரம் செய்ய
"அப்டித்தான் வெடிப்போம்" என்று சில இந்துத்துவ பயங்கரவாதிகள் ஆரம்பிக்க
வழக்கம்போல குழப்பத்தில் சிக்கிவிட்டது தீபாவளி.

இந்திய ஒன்றியம் மற்றும் அதன் அண்டை நாடுகள் வரை தீப்பெட்டியும் வெடியும் ஏற்றுமதி செய்யும் சிவகாசி நிறுவனங்களை நசுக்க களமிறங்கி உள்ளன சில வட ஹிந்திய நிறுவனங்கள்.

இவை போதாது என்று தமிழகத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட பங்காற்றும் சிவகாசி வெடிமருந்து தொழில் தற்போது சீன பட்டாசு போட்டியையும் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

ஏற்கனவே மோடி செய்துவரும் பொருளாதார சீர்கேட்டினால் பாதி சிவகாசி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

இவற்றிற்கெல்லாம் தீர்வுதான் என்ன?

இயற்கையும் பாதிப்படையக் கூடாது,
பொருளாதாரமும் பாதிக்கப்படக் கூடாது.

என்ன செய்யலாம்?

சிவகாசி வெடிமருந்து தொழில் அம்மக்களுக்கு வாழ்வாதாரத்தை தருகிறதோ இல்லையோ கட்டாயம் நோயையும் உயிரிழப்பையும் தருகிறது.

கடினமாக உழைக்கும் மக்களால் "குட்டி ஜப்பான்" என்று பெயர் பெற்றாலும் மக்கள் என்னமோ வேறுவழியின்றிதான் வெடிமருந்து தொழிலுக்கு போகிறார்கள்.

அதில் முதலாளிகளுக்கும் சரி தொழிலாளர்களுக்கும் சரி அரசுக்கும் சரி பெரிய வருமானம் எல்லாம் கிடையாது.

சிவகாசி ஒன்றும் பாலைவனப் பகுதி இல்லை.
அது விவசாய பூமி.
இப்போதும் கூட!
இதுபோக சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர் பெற்றது.

அரசாங்கம் இவ்விரண்டையும் முன்னேற்றினால் பட்டாசு ஆலைகளை படிப்படியாக மூடிவிடலாம்.

அதுவரை நாம் சிவகாசி பட்டாசு வெடித்துதான் ஆகவேண்டும்.
ஆனாலும் கொண்டாட்டத்திற்காக இயற்கையை நாசம் செய்வதை ஏற்க முடியாது அல்லவா?!

எனவே கூடிய விரைவில் அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இந்த அடிமை திராவிட கட்சிகள் அதைச் செய்யும் என்ற நம்பிக்கை இல்லை.

ஈழத்திற்கு வெடிமருந்து மட்டுமல்லாது செங்கண்ணன் என்கிற ஒரு கரும்புலியையும் அனுப்பிவைத்தது சிவகாசி மண்.

தமிழர்கள் ஆயுதம் தூக்கும்போதும் வெடிமருந்தும் இளைஞர்களும் கொடுத்து முன்னனியில் நிற்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

புலிகள் வழியில் தமிழர்களுக்கான அரசு அமைந்த பிறகு சிவகாசியையே கூட "பச்சைகாசி" ஆக்கிவிடலாம்.

அனைத்து மத தமிழரும்
எண்ணெய் தேய்த்து குளித்து
கறிச்சோறு உண்டு
தீபங்கள் ஏற்றி
சுளுந்து கொளுத்தி
முன்னோர் வழிபாட்டுடன்
"தீவாளி" எனும் "கார்த்திகை" யைக் கொண்டாடலாம்.

ஆனால் அதுவரை சிவகாசிப் பட்டாசு வெடித்தே ஆகவேண்டும்!

Wednesday, 16 October 2019

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

1947 க்கு பிறகு இந்தியா சந்தித்த போர்கள், இழப்புகள் மற்றும் முடிவுகள்
------------

1947 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 1104 பேர்
முடிவு = போர்நிறுத்தம்
-------------

1962 சீனா உடனான போர்
உயிரிழப்பு = 1383 பேர்
முடிவு = தோல்வி
-----------

1965 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3000 பேர்
முடிவு = வெற்றி
------------

1971 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3843 பேர்
முடிவு = வெற்றி
-------------

1984 சீக்கியர் உடனான போர்
உயிரிழப்பு = 634 பேர்
முடிவு = வெற்றி
------------

1987 புலிகள் உடனான போர்
உயிரிழப்பு = 1138 பேர்
முடிவு= பின்வாங்கல் (விலகுதல்)
-------------

1999 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 700 பேர்
முடிவு = வெற்றி
-------------
இதில் சேர்க்கப்படாதவை

ஜுனாகத், ஹைதராபாத் (32 பேர் உயிரிழப்பு) ஆக்கிரமிப்புகள் சேர்க்கப்படவில்லை.

கோவா(22 உயிரிழப்பு) , தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி (44 உயிரிழப்பு) ஆகியவற்றை கைப்பற்ற போர்ச்சுகல் உடன் நடந்த போர்கள் சேர்க்கப்படவில்லை.

காங்கோ மற்றும் சிசெல்ஷ் நாடுகளுக்கு படையுதவி செய்த முடிவுகளையும் சேர்க்கவில்லை.

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடந்த எல்லை மோதல்கள் சேர்க்கபடவில்லை.

(இதில் வட கிழக்கு, காஷ்மீர் ஆயுதக் குழுக்கள் மற்றும் நக்சலைட்  உடனான போர் நடவடிக்கைகள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்து கொண்டு இருப்பதால் அவற்றைச் சேர்க்கவில்லை)

மேற்கண்ட அனைத்திலும் பாகிஸ்தான் (1947), சீனா (1962) மற்றும் புலிகள் (1987 - 1990) தவிர்த்த அனைத்து போரிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதில் பாகிஸ்தானை மீண்டும் போரிட்டு 3 முறை தோற்கடித்துள்ளது.

1967 இல் சியாச்சின் எல்லை மோதலில் சீனாவைக்கூட தோற்கடித்துள்ளது.

என்றால் இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றுதானே பொருள்?!

(தகவல்களுக்கு நன்றி: Wikipedia)

Sunday, 13 October 2019

2000 ஆண்டு பழமையான தமிழிசை தொடர்பான கல்வெட்டு!

2000 ஆண்டு பழமையான தமிழிசை தொடர்பான கல்வெட்டு!

 சமீபத்தில் நண்பருடன் நடந்த விவாதத்தில், Youtube இல் ஒரு பரதநாட்டிய காணொளியில் கன்னட நபர் ஒருவர் போட்டிருந்த கமெண்ட் ஒன்றை காட்டி என்னிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
 அந்த கன்னட நபரின் கமெண்ட்டானது,
'Just like karnataka shastriya sangeetha bharathanatya is from Deccan, after all root word bharatha or natya, neither is Dravidian terms, also it can't be preceeded without jathi or thala and neither got root in tamil.
May be tamils stole or carried it out'
 என்று இருந்தது.

 ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அறச்சலூர் கிராமம்.
 அங்கு நாகமலை என குறிப்பிடப்படும் நீண்ட மலைத்தொடரின் குன்று ஒன்றில் இசைத்தாளத்தில் அமைந்த தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
 ஐந்து வரிகளில் அமைந்த இந்த கல்வெட்டு
'த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த'
என்று வெட்டப்பட்டுள்ளது.
 இதை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் படிக்கலாம்.

 இந்த கல்வெட்டு கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்பது தொல்லியலாளர்கள் கருத்து.

 இதற்கு அருகிலேயே இன்னொரு கல்வெட்டு தமிழி (தமிழ் பிராமியி)லிருந்து வட்டெழுத்தாக மாற்றமடைந்த காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது.
 அதில்
'எழுத்தும் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன்'
என குறிப்பிடப்பட்டுள்ளது.
 அதாவது "மணிவண்ணக்கனான தேவன் சாத்தன் இங்கு கீறப்பட்ட இசை எழுத்துகளை சேர்த்தமைத்தான்" என்பது இதன் பொருளாகும்.

 இசை எழுத்துகள் பற்றி அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரையில் “பாலை” என்னும் படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் குறிப்பிடுகின்றார்.
 அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர் என திரு.துரை சுந்தரம் குறிப்பிடுகின்றார்.

அதோடுமட்டுமில்லாமல் இதனருகிலேயே இருவரின் நடன ஓவியங்கள் (Petroglyphs) கீறப்பட்டுள்ளன.
 அது நாட்டியத்தை காட்டுவதற்கானது தான் என்பதை குறிப்பிட்டு சொல்லவேண்டியதில்லை.
 பார்த்தாலே தெரியும்.

கிபி 300 க்கு பின் தான் கன்னடத்துக்கான எழுத்தே தோன்றியதாக கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
 அதுவும் பழங்கன்னடம் தமிழோடு நெருக்கமான வார்த்தைகளை கொண்டுள்ளது.
 அது கிளாசிக்கல் கன்னடமாக மாறியது கிபி 8 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தான்.
 ஏனெனில் அதன் பின்பு தான் கன்னடத்துக்கு இலக்கியமே படைக்கப்படுகிறது.
 இந்த மாதிரி எல்லாம் எதிர்காலத்தில் சிலர் அறிவற்று கேட்பார்கள் என்று தான் அனைத்தையும் பாறைகளிலும் பானை ஓட்டிலும் எழுதி வைத்து சென்றிருக்கிறார்கள் தமிழர்கள்.

 காவிரியையும் கோலாரையும் கண்ணெதிரில் சமீபத்தில் நம்பி கொடுத்து ஏமாந்தோம்.
 எங்களது உரிமைகளை கூட சட்ட ரீதியாக பெற முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்.
 வரலாற்றிலும் பலவற்றை ஏமாந்திருக்கிறோம்.
சில வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது.
அதில் இசையும் ஒன்று.

நன்றி: Vicky Kannan



Friday, 11 October 2019

திராவிட கட்சிகளில் சாதியம் -3



திராவிட கட்சிகளில் சாதியம் -3


 மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழகத்தார் பட்டியல்.

 இதில் தமிழரல்லாதார் மஞ்சள் வண்ணம் இட்டு காட்டப்பட்டுள்ளனர்.

 தமிழரல்லாத வந்தேறி சாதிகளில் மாநில மக்கட்தொகைஙயில் 0.12% இருக்கும் இசை வேளாளர் மிக அதிகம் பயனடைந்துள்ளனர்.

 அடுத்ததாக 4.43% உள்ள நாயுடு (நாயக்கர்) அதிகம் பயனடைந்துள்ளனர்.

 வந்தேறிகளுக்கு அதிகம் வாய்ப்பளித்தது தி.மு.க ஆகும்.
 இதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் உள்ளது.

 [நன்றி: அச்சமில்லை]

Thursday, 10 October 2019

திராவிடக் கட்சிகளில் சாதியம் -2



திராவிடக் கட்சிகளில் சாதியம் -2

 சென்னை பல தரப்பட்ட மக்கள் வாழும் பகுதி ஆகும்.

 இதில் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட வேட்பாளர்கள் அவர்கள் சாதி அடிப்படையில் ஒப்பிடப் பட்டுள்ளனர்.

 இதில் பல்வேறு தமிழ்ச்சாதி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ள தி.மு.க
 ஒரு நாயுடு, இரண்டு இசை வேளாளர் இருக்குமாறே வாய்ப்பளித்துள்ளனர்.

 இதில் கருணாநிதி குடும்பம் அதிக பயன் அடைந்து வந்துள்ளது.
 இவர்களுக்கு அடுத்து நாயுடு (நாயக்கர்) பயனடைந்துள்ளனர்.

 தமிழரில் முதலியார்களுக்கு அடுத்தபடியாக
 நாடார், வன்னியர்கள் பயனடைந்துள்ளனர்.

சாதி பரவல் மாவட்டவாரியாக 1921 அட்டவணை

1985 இல் தமிழர்கள் கொஞ்சம் கூட சமூக நீதி இல்லாமல்
மாநில மக்கட்தொகையில்
4.40% உள்ள நாயுடு(நாயக்கர்)
1.43% உள்ள ரெட்டியார்
ஆகியோரை விட்டுவிட்டு
0.12% மட்டுமே இருந்த
 அதாவது மொத்தமே 58,327 பேர் கொண்ட மேளக்கார சாதியிடம் (இசை வெள்ளாளரிடம்) போய் ஆட்சியைக் கொடுத்துள்ளனர்.

 இது நம்மை நம்பி வந்த தெலுங்கு வந்தேறிகளுக்கு நாம் செய்த அநீதி இல்லையா?!

சாதிகள் பரவல் மாவட்ட வாரியாக






திராவிடக் கட்சிகளில் சாதியம் -1



திராவிடக் கட்சிகளில் சாதியம் -1

 2011 இல் தி.மு.க போட்டியிட்ட இடங்களில் நிறுத்திய வேட்பாளர்களின் சாதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடம்

 இதில் பட்டியல் சாதியாருக்கான 46 தனித் தொகுதிகள் போக இடம்பெற்றுள்ளோர்

படுகர் 1
செட்டியார் 3
இசை வேளாளர் 3
கொங்கு வெள்ளாளர் 11
குறும்ப கவுண்டர் 1
மீனவர் 1
முதலியார் 3
முக்குலம் 20
முஸ்லீம் 7
முத்தரையர் 4
நாடார் 7
நாயுடு 8
பார்கவ குலம் 4
பிள்ளைமார் 4
ரெட்டி 3
வன்னியர் 12
யாதவர் 2

 இதில் படுகர், இசை வேளாளர் (சின்ன மேளம்), நாயுடு, ரெட்டி ஆகியோர் தமிழரல்லாதார் என்பதை உறுதியாகக் கூறலாம்.

 சதவீத அடிப்படையில் பார்க்கும் போது

மக்கட்தொகையில் 0.12% உள்ள இசை வேளாளர்,
3.2% அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது ஏறத்தாழ 30 மடங்கு ஆகும்.

மக்கட் தொகையில் 4.4% உள்ள நாயுடு (நாயக்கர்),
 8.5% என்ற அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது இரண்டு மடங்கு ஆகும்.

மக்கட்தொகையில் 1.43% உள்ள ரெட்டியார்,
 3.2% அளவு இடம்பிடித்துள்ளனர்.
 இது இரண்டரை மடங்கு ஆகும்.

மக்கட்தொகையில் 12% இருக்கும் வன்னியர் சரியாக 12% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 6.8% இருக்கும் கொங்கு வெள்ளாளர் 11% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 6.6% இருக்கும் நாடார் 7.4% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 8.8% இருக்கும் முக்குலத்தோர் 21.25% பெற்றுள்ளனர்.
இது இரண்டேகால் மடங்கு ஆகும்.

ஆனால் 5.7% சதவீதம் உள்ள பிள்ளைமார் வெறும் 4.25% தான் பெற்றுள்ளனர்.

 தி.மு.க ஆட்சியில் அதிகாரப் பகிர்வு என்பது வந்தேறி சாதிகளுக்கு நல்ல லாபமாகவும்
 பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பெரும்பான்மை சாதிகளுக்கு ஓரளவு லாபமாகவும்
 முன்னேறிய சாதியார் மற்றும் பிற்படுத்தப்பட்டோரில் சிறுபான்மையினர் ஆகியோர்க்கு நஷ்டமாகவும் உள்ளது.

 இது வேட்பாளர் தேர்வு அடிப்படையில் மட்டுமே!

தொடரும்....

[CASTE IN POLITICAL RECRUITMENT: THE STUDY OF TWO
MAJOR DRAVIDIAN PARTIES IN TAMIL NADU]

அரசியலில் வன்னியர் இழந்தது என்ன?!











அரசியலில் வன்னியர் இழந்தது என்ன?!

 சில வன்னியர்கள்,
 அதாவது வன்னியரில் உள்ள பள்ளிகளில் உள்ள பா.ம.க வினரில் உள்ள மிகச்சிலர்,
 வன்னியர்களை பிற தமிழர்கள் அதுவும் குறிப்பாக நாடார், முக்குலம், கொங்கு வேளாளர் ஆகியோர் அடிமைப் படுத்த நினைப்பதாகவும்
 அதனால் வடதமிழ்நாடு தனியாகத் தேவை என்றும் வாதிடுகின்றனர்.

 இதில் சிறிதும் உண்மையில்லை!

--------
 மக்கட்தொகையில் 12.5% உள்ள வன்னியர்கள் எம்.எல்.ஏ பதவிகளில் 19.7% இருந்தனர் (1967 இல்).

 1971 இல் 16.7% ஆகவும்
1977 இல் 16.2% ஆகவும்
1980 இல் 16.7% ஆகவும்
குறைந்தனர்.

 அப்போது
1980 இல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட பின் இந்த சதவீதம் 17.5% என உயர்ந்த்து.

 1989 இல் பா.ம.க தொடங்கப்பட்டு தேர்தலில் குதித்தது.
  இதனால் அனைத்து கட்சிகளிலும் வன்னியர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து ச.ம.உ பதவிகளில் வன்னியர்கள் 18.8% ஐப் பிடித்தனர்.

 பா.ம.க பெற்ற வாக்கு எண்ணிக்கையைப் பார்த்த பிற கட்சிகள் மேலும் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

 1991 மற்றும் 1996 இல் வன்னியர் சட்டப் பேரவையில் 22.6% ஐப் பிடித்தனர்.

[CASTE IN POLITICAL RECRUITMENT: THE STUDY OF TWO
MAJOR DRAVIDIAN PARTIES IN TAMIL NADU]
-----------

 இது M.L.A பதவி தற்போது M.P பதவிகளைப் பார்ப்போம்.
-------
 1977 இல் வன்னியர்கள் அமைச்சர் பதவிகளில் 12.8% இருந்தனர்.
 அதாவது 39 இருக்கைகளில் 5 பேர்.

 வன்னியர் சங்கம் தொடங்கிய பின் 1980 இல் இது 15.4% ஆக உயர்ந்து
1984 இல் மீண்டும் 12.8% ஆனது.

பா.ம.க தொடங்கப்பட்ட பின்
1989 இல் 18.3% ஆக உயர்ந்தது.

1991 இல் 15.4% உயர்ந்து
1996 இல் 12.8% மீண்டும் ஆனது.

1998 இல் 25.6% ஆக உயர்ந்தது.
அதாவது 39 இல் 10 வன்னியர்கள்.

1999 இல் 20.51% ஆகவும்
2004 இல் 15.4% ஆகவும்
2009 இல் 12.8% ஆகவும்
இருந்து வந்துள்ளது.

 [புள்ளி விபரங்களுக்கு நன்றி:  'அச்சமில்லை' இதழ்]

 மக்கட்தொகையில் 12.5% உள்ள வன்னியர்கள் பல்வேறு கட்சிகளிலும் இருந்துகொண்டு தனது பங்கிற்கு அதிகமாகவே பதவிகளைப் பெற்று வந்துள்ளனர்.
-----


Thursday, 3 October 2019

தமிழரே மூத்தகுடி - டார்வினின் சக ஆய்வாளர் ஹெக்கல்

தமிழரே மூத்தகுடி - டார்வினின் சக ஆய்வாளர் ஹெக்கல்

உலகப்புகழ்பெற்ற பரிணாம தத்துவவியலாளரும், பரிணாம கோட்பாட்டின் தந்தை டார்வினின் தோழருமான ஏர்ன்ஸ்ட் ஹெக்கல் உலகின் முதல் மனித இனம் தமிழர்கள் என்கிறார்.

அவர்கள் தோன்றியதும் தெற்காசியாவின் தென்முனையில் இருந்த பகுதியே என கண்டறிந்தார், Ernst Haeckel.

அதுவும் கடலில் மூழ்கிய லெமூரியாவே என்று ஆய்ந்து அறிவித்திருக்கிறார்.
அவர்கள் இங்கிருந்தே உலகெங்கும் பரவி படர்ந்திருப்பார்கள் என்பது ஹெக்கலின் கூற்று.

இன்றைய உயிரியலில் இருக்கும் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உலகுக்கு தந்தவர் அந்த 'ஹெக்கல்'.

Ecology, phylum, phylogeny, Protista போன்ற உயிரியல் கோட்பாட்டுக்களை அறிமுகப்படுத்தியதே ஹெக்கல் தான்.

டார்வினின் Natural Selection 'ஐ ஹெக்கல் ஆதரித்தாலும், வாழ்நாள் காலத்தில் கற்றுக்கொள்ளும் புதிய பண்புகள் சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன என்கிற லாமார்க்கிசத்திலும் (Lamarckism) நம்பிக்கை கொண்டிருந்தார், ஹெக்கல்.

ஹெக்கல் 1880'களில் தமிழ் ஈழத்திற்கு பயணம் செய்து அங்கே பல காலம் தங்கி ஆய்வுகளும் செய்திருக்கிறார்.
அதை தனது 'ஒரு சிலோன் பயணம்' என்கிற நூலிலும் குறித்திருக்கிறார்.

தனது அனுபவம் குறித்து எழுதும்போது..
'மிக செயற்கையான இந்த சமூக வாழ்வை விலைக்கு விற்று விட்டு, பதிலாக 'இற்கையின் குழந்தை' எனும் வாழ்வை இங்கே வாங்கப்போகிறேன்'
என்று எழுதி இருக்கிறார்.

சங்கமும், தமிழும், ஈழமும், புலிகளும் தாங்கி நின்ற செங்காந்தள் மலர் பற்றி தனது நூலில் கசிந்துருகுகிறார்.

ஐரோப்பாவின் அகெடமியாக்கள் வளர்த்தெடுத்த நவ நாகரிக மங்கையரைவிட கருப்பு கற்பக சிலைகளாக இருக்கிறார்கள் தமிழ்ப் பெண்கள் என்று எழுதியிருக்கிறார் ஹெக்கல்.

அப்படியான ஒரு தமிழ்ப்பெண்ணின் படத்தை அவர் தனது நூலிலும், அவருக்கு பின் அவரது மியூசியத்த்திலும் நிறுத்தியிருக்கிறார்கள்.

அவர் சோசியல் டார்வினிசத்திலும் நம்பிக்கை கொண்டார்.
வலுவான சமூக அமைப்புக்கள் சமூக அரசியலில் தமது சக்தியையும், பொருளாதாரத்தில் நமது ஆளுமையையும் நிலைநிறுத்திக் கொள்கின்றன என்பது அது.

மாறாக வலுவிழந்தவை இரண்டிலும் வீழ்ந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுகின்றன என்பதுதான் சோசியல் டார்வினிசம்.

இதை கேபிடலிசம் தத்து எடுத்துக்கொண்டது.
கறுப்பினத்தை விட வெள்ளையர்கள் மேலும் பரிணாம மாற்றமடைந்து, உலகை ஆளுமை செய்கிறார்கள் என்கிற அவரது புரிதலை ஐரோப்பிய நாஸி மற்றும் பாசிச சக்திகள் தமக்கு ஏற்றவாறு கற்பிதம் செய்து கொண்டன.

இதனால் அரசியல் பொருளாதார ரீதியில் இன்று உலகை ஆளும் யூத லாபி ஏர்ன்ஸ்ட் ஹெக்கலின் மனித பரிணாம கோட்பாட்டை இருட்டடிப்பு செய்கிறது.

இப்படியான உலகப்புகழ் பெற்ற பரிணாம கோட்ப்பாட்டாளர்களின் தத்துவங்களை கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் பூம்புகாரோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டிய தருணம் இது.

இடையில் வந்த இடைச்செருகல்களான ஆரிய- திராவிட புரட்டுக்களை அறுத்தெறிந்து விட்டு தமிழினம் தனது வரலாற்றை மீட்டெடுத்து மீண்டும் இந்த அநீதியான உலகுக்கு அறம் போதிக்க வேண்டும்.

பிகு:
(இந்த எர்ன்ஸ்ட் ஹெக்கலும், கோத்தேவும், காரல் மார்க்ஸும், அவரின் ஆசான் தத்துவமேதை ஹெகலும் (Hegel) நான் PhD பட்டம் பெற்ற University of Jena'வில் PhD பட்டம் பெற்றவர்கள் என்பது பெருமிதம் கொள்ள வைக்கும் சுயபுராணம்)

நன்றி: Krishna Muthukumarappan