Friday, 30 June 2023

மனநோயாளிகள் படைத்த மாமன்னன்

மனநோயாளிகள் படைத்த மாமன்னன் 

 தலித்திய புரட்சியாளர்கள் இந்திய அளவில் இழிவுகளை அள்ளி வந்து தமிழர்கள் தலையில் போடுவது வழக்கம்.
 மாமன்னன் படத்தில் உத்திரபிரதேசத்தில் 2 சிறுவர்களைக் கல்லால் அடித்து கொன்ற வன்கொடுமையை தமிழர்கள் மீதும் தமிழகம் மீதும் சுமத்திவிட்டார்.
 அதுவும் 2 ஐ 3 ஆக்கி அந்த மூன்று விடலைகளும் கல்லால் அடிபட்டு துடிதுடித்து சாவதை அணு அணுவாகக் காட்டுகிறார். அதாவது நாம் மனம் வருந்தி திருந்த வேண்டுமாம் ஆனால் மனநலம் பாதிக்கும் அளவுக்கு இதைக் காட்டவேண்டிய அவசியம் என்ன?!

 சரி இதற்கு தீர்வாக என்ன காட்டுகிறார் ஒரு அருந்ததியர் சபா நாயகர் ஆவதைக் காட்டுகிறார். அது தான் தமிழகத்தில் ஏற்கனவே நடந்து விட்டதே தனபால் சபாநாயகராக இருந்தாரே?! 
 எங்கேயோ ஒரு கஞ்சன் போட்ட கழிவை  அள்ளி வந்து ஒரு கொடைவள்ளல் சாப்பிடும் தட்டில் கொட்டி புரட்சி செய்கின்றனர் இந்த தலித்திய மன நோயாளிகள்.

 திமுக தலைமையை புனிதப் படுத்தவும் தவறவில்லை. திமுக கட்சிக்குள் அமைச்சர்கள் மத்தியிலே சாதிய பாகுபாடு உள்ளது படத்தில் வருகிறது. தென்காசி MP ஐ உட்கார சொல்லாமல் நிற்க வைத்து பேசியவர் KKSSRR, இதே போல திருமாவுக்கு ப்ளாஸ்டிக் சேர் போட்டது ராஜ கண்ணப்பன் இதை அப்படியே வில்லன் செய்வதாக காட்டிவிட்டு இது முதலமைச்சருக்கு தெரிந்து அவரை தண்டிப்பதாகக் காட்டி திமுக தலைமையை புனிதப் படுத்தி விட்டார். 

 திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறனையும் மிரட்டி இருக்கிறார்கள். அவர் உதயநிதி நன்றாக நடித்துள்ளார் என்று தடுமாறியபடி கூறுகிறார். படத்தை முழுமையாகப் புகழ்ந்தால் சந்தேகம் வரும் என்று நல்லது கெட்டது என 50-50 ஆக சொல்கிறார். இறுதியில் சம்பந்தம் இல்லாமல் இந்துத்துவ எதிர்ப்பு  பேசி ஈவேரா வையும் குறிப்பிடுகிறார். காட்சிகளைக் குறிப்பிடும்போது கீழே spoiler alert என்றும் வருகிறது.

Thursday, 29 June 2023

தீட்சிதர்கள் ஆதரித்த வள்ளலார்

தீட்சிதர்கள் ஆதரித்த வள்ளலார்

 ஒரு பொய்க்கதை உலா வருகிறது...
 அதாவது சிறந்த சிவ பக்தராக இருந்த வள்ளலார் சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்களால் அவமானப் படுத்தப் பட்டதாகவும் அதனாலேயே சைவத்தில் இருந்து வெளியேறி தனி மதம் படைத்ததாகவும் சிதம்பரத்துக்கு போட்டியாக அருகிலேயே ஞான சபை எனும் கோவில் கட்டி கருவறை வரை செல்லும் சாதி பாகுபாடு இல்லாத முறையைக் கொண்டு வந்ததாகவும் அந்த கதை கூறுகிறது.

 இது உண்மை இல்லை!

இருந்தால் சான்று தரவும்! 

 வள்ளலார் தனது நூல்களில் பல விடயங்களை இடித்துரைத்து எழுதியுள்ளார். ஆனால் எங்கும் தீட்சிதர் பற்றியோ சிதம்பரம் கோவில் முறைமைகளைப் பற்றியோ இடித்துரைக்கவில்லை.
 தனி வழிபாட்டு முறை நிறுவிய நோக்கம் பற்றி கூறும்போதும் தீட்சிதர் அல்லது தில்லை அம்பலம் பற்றி எதுவும் கூறவில்லை. 

 வள்ளலார் நெடுங்காலம் சைவ அடியாராக இருந்தார் பிற்பாடு அவருக்கு ஞானம் பிறந்தது. வழிபாடு என்பது எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே தனியாக எளிமையான ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தினார். சிலை வழிபாட்டில் எளிமைக்கு அதிக வாய்ப்பில்லை. எனவே ஜோதி வடிவமாக இறைவனை உருவகப் படுத்தினார் (அவர் சைவத்தை விட்டு வெளியேறவில்லை. தன் கோவிலுக்கு வந்து அருளுமாறு சிதம்பர நடராஜரை அழைத்து பாடலும் எழுதுகிறார். இதை வைத்தே தீட்சிதர்கள் மீதான பொய் கட்டமைக்கப் படுகிறது).

 வள்ளலாரின் இந்த கொள்கையைய எதிர்த்தவர் தீவிர சைவ மதப் பற்றாளரான யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்!
 இவருக்கும் வள்ளலாருக்கும் கருத்தியல் மோதல் பல ஆண்டுகளாக நடந்துவந்தது.

 மோதல் உச்சத்திற்கு போக வள்ளலார் சைவ தலைமை பீடமான சிதம்பரத்தின் பூர்வ அந்தணர் குடிகளான தீட்சிதர்களிடம் உதவி கேட்கிறார். 

அவர்கள் சபா  நடேச தீட்சிதர் என்பவர் தலைமையில் ஒரு பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்து நாவலருக்கு எதிராகப் பேசுகின்றனர். வள்ளலாரும் இதில் பேசுகிறார். இது நடந்தது கி.பி.1869 இல்! 
இதற்கு பதிலடியாக நாவலர் மானநஷ்ட வழக்கு போடுகிறார்.
 அவ்வழக்கில் முதல் 5 குற்றவாளிகள் தீட்சிதர்கள்!
ஆறாவது குற்றவாளிதான் வள்ளலார்!
வழக்கை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி கடுமையாகப் பேசிய சபா நடேச தீட்சிதருக்கு ரூ.50 (அப்போது மிகப் பெரிய தொகை) தண்டம் விதித்தும் மென்மையாகப் பேசிய மற்றவரையும் வள்ளலாரையும் விடுதலை செய்துவிடுகிறார்.
இது ஆவணப் படுத்தப்பட்ட சான்று.

 ஆக வள்ளலாருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய தீட்சிதர்கள் மீதே பழியைப் போட்டு வள்ளலாரைக் கோவிலை விட்டு தீட்சிதர்கள் துரத்தியதாக கதை எழுதியுள்ளனர் திராவிட அடிப்பொடிகள்!


 

 

Monday, 26 June 2023

தகப்பன் தலைவன் மன்னன்

தகப்பன் தலைவன் மன்னன் 

ஆண்டு: கி.பி.2216

ஒரு அரசியல் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு

 சென்ற மாதம் நமது தலைவர் abcd அவர்களை விமர்சித்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள கருத்துகள் எதையும் மறுக்கவில்லை. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன். அதில் நம் ttt-நாட்டை ஆளும் நமது t-ராணுவம் ஏன் அனைத்துலக சபை மக்களாட்சிக்கு அழைத்தபோது ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பவில்லை என்று கேட்கப்பட்டுள்ளது.
 நமது t-இனம் பல்வேறு சுரண்டல்களுக்கும் அடக்குமுறைக்கும் கலவரங்களுக்கும் இனப்படுகொலைக்கும் ஆளான போது உலகம் முழுக்க கேட்கும்படி நாங்கள் இதைத் தான் கேட்டோம். எங்களுக்கு ஜனநாயக வழியில் வாக்கெடுப்பு நடத்தி தனிநாடு தர உயிரைக் கொடுத்து உடலை எரித்து போராடினோம். அப்போதெல்லாம் செவிசாய்க்காத இந்த உலகமும் உலக சபையும் சர்வதேச ஜனநாயக சக்திகளும் நாம் திருப்பி அடிக்கத் தொடங்கியபோது நமக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கினர். இப்போது நம் போன்ற அடக்குமுறைக்கு உள்ளாகும் இனங்களுக்கு நாம் உதவும்போது சத்தமாக கத்துகிறார்கள். 

 நாங்கள் நடப்பது எங்கள் தலைவர் abcd காட்டிய வழியில் தான். இந்த உலகில் ஒவ்வொரு மொழிவழி இனங்களும் தனிநாடு அடையும்வரை நாங்கள் ஓயப் போவது இல்லை. 

 எங்கள் ஆயுத வர்த்தகத்தை குறை கூறும் எவரும் இன விடுதலை என்பது ஆயுதம் தூக்காமல் கிடைக்க வாய்ப்பே இல்லை என்கிற சூழல் நிலவுவது பற்றி பேச மறுப்பது ஏன்?
 ஒரு அரசு ஒரு குறிப்பிட்ட மக்களை சுரண்டும்போது அதிலிருந்து அவர்கள் விடுபட ஜனநாயக வழியில் முயற்சிக்கும் போது அதை ஆயுதத்தால் அடக்கும் அரச பயங்கரவாதம் இந்த உலகில் இருக்கும் வரை ஆயுதங்களுக்கான தேவையும் எங்கள் ttt- நாட்டு ஆயுத நாட்டாமை தொடரவே செய்யும்.

  நாங்கள் தலையெடுத்த பிறகுதான் இந்த உலகில் இனப் படுகொலைகள் நின்றன. பெரிய நாடுகள் சிறிய நாடுகளை சுரண்டிவதும் அரசுகள் சிறுபான்மையினரைச் சுரண்டுவதும் பெருமளவு குறைந்தது. பிற நாடுகள் போல எங்கள் விடுதலை போதுமென்று எங்களால் இருக்க முடியாது. எங்களைப் போல யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

 எங்கள் தலைவர் காட்டிய வழியில் உலகில் மூத்த இனமென்கிற பொறுப்புடன் படை கட்டினோம், தாய்நிலத்தை மீட்டோம், ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளை மீட்டோம், உட்கட்டமைப்புகளைப் பெருக்கினோம், ஆயுதங்கள் தயாரித்தோம், எங்களைப் போன்றவர்களை உலகளாவி ஒன்று திரட்டினோம். தொடக்கத்தில் கடைசி நேரத்தில் களத்தில் இறங்கிய நாம் பிறகு இன ஒடுக்குமுறை முளை விடும் இடங்களைக் கண்டறிந்து முன்பே விடுதலைக்கான விழிப்புணர்வு ஊட்டினோம். 

 இந்த நூறாண்டுகளில் ஏறத்தாழ 32 இனங்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளோம். 
50 இனவழி நாடுகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. நாங்கள் நடத்துவது ராணுவ ஆட்சிதான். 
எங்களை வழிநடத்துவது எதிர்க்ககட்சி மற்றும் தலைவர் வழிநடக்கும் tt- தீவிரவாதிகள் தான்.
 ஏன் நாங்கள் அவர்கள் சொற்படி நடக்க வேண்டும் என்று அறிய வரலாற்றைத் திருப்பிப் பார்க்க வேண்டும்.

 எமது தலைவர் தாய்நிலத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஜனநாயகத்தால் முடியாத சீர்திருத்தங்களை தனது 8 ஆண்டு சர்வாதிகார ஆட்சியில் செய்துவிட்டு நாட்டை விடுதலைப் படையிடம் ஒப்படைத்தார். அவரது காலத்தில் அத்தனை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டிருந்தன. விளைநிலங்கள், நீர்நிலைகள், சாலைகள், காடு என அத்தனையும் ஆக்கிரமிப்புகள் இடித்து நொறுக்கபட்டு மீட்கப்பட்டன. மத கட்டுமானங்கள் எல்லாமே தகர்க்கப்பட்டன. அதில் இருந்த செல்வங்களைக் கைப்பற்றப் பட்டன. இனத்தின் பகைவர்கள் ஒழிக்கப்பட்டு அவர்களின் சொத்துகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. குற்றவாளிகள், பைத்தியங்கள், உழைக்க முடியாதவர்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர். அருங்காட்சிய பொருட்கள் அனைத்தும் விற்கப்பட்டன. தொழிற்சாலைகள், வாகனங்கள், மரங்கள், தனியார் ஆடம்பர பொருட்கள் என எல்லாமே விற்கப்பட்டு நாடே காலியானது. ஏனென்றால் 30 ஆண்டுகால விடுதலைப் போரில் நாடே சுடுகாடாக ஆகிவிட்டிருந்தது. மக்கள் கால்வயிறு உணவு இல்லாமல் அல்லாடும் நிலை. எங்கும் பஞ்சம், பட்டினி, நோய் என்று எழ முடியாத சூழல். மண் மலடாகி குடிநீர் நஞ்சாகி இருந்தது எங்கள் தாய்நிலம். உலக நாடுகள் எதுவும் உதவ முன்வரவில்லை. இந்த நிலையில்தான் தலைவர் ஆட்சி தொடங்கியது. தலைவரிடம் இருந்தது ஆயுதமும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் மட்டுமே!  தாய்நிலத்தை சுத்தமாக்கிவிட்டு இழந்த எல்லைகளை மீட்ட தலைவர். உலகில் தன் போன்று இருந்தவர்களைத் திரட்டினார். அவர்களிடம் பொருள் பெற்று ஆயுதங்களை தயாரித்து விற்றார். போர்த் தந்திரங்களை விற்று விடுதலைக்கு உதவினார். தமது ஆட்களை அனுப்பினார். உலகில் விடுதலை வேண்டிய இனங்களை தீவிரவாதிகளாக மாற்றினார். அவர்கள் கொலை செய்தனர், கொள்ளை அடித்தனர் அவர்களுக்கு ஆயுதம் கொடுத்த எமக்கும் அதில் பங்குண்டு. 7 ஆண்டுகளில் கடனில் இருந்து சுழியத்திற்கு கொண்டுவந்தார் தலைவர். தாய்நிலத்தில்  வறட்சியைத் தாங்கும் தாவரங்களை நட்டார். காடுகளை அழித்து விவசாய நிலங்கள் ஆக்கினார். தண்ணீர் தரும் தென்னை, பனை போன்ற மரங்களை நஞ்சான நிலத்தில் நட்டார். உலகத் தலைவர்களைக் கடத்தி பிணையத் தொகை கேட்பது, பணத்திற்காக கொலைசெய்வது, தேடப்படும் குற்றவாளிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பு அளிப்பது, பிற நாட்டு வங்கிகளைக் கொள்ளை அடித்தது, பிற நாடுகளின் அரசாங்க கட்டமைப்பை குண்டு வைத்து தகர்த்து போட்டி நாடுகளிடம் பணம் பெறுவது, போதை மருந்து கடத்தல் என அவர் செய்யாத அட்டூழியமே இல்லை. ஆனால் அவர் முடிந்த அளவு பொதுமக்களுக்கு சேதம் இல்லாமல் செய்தார். தலைவரது தூண்டுதலால் அப்போது விடுதலைக்காக போராடிய அத்தனை இனங்களும் இதைச் செய்தன. இதைக் குறை சொல்பவர்கள் அரச பயங்கரவாதம் எங்கள் மக்களை இனப் படுகொலை செய்து பெண்களையும் குழந்தைகளையும் கற்பழித்த போதும் இறந்த உடல்களில் இருந்து உடல் உறுப்புகளை வெளிநாடுகளுக்கு விற்றபோதும் புதைத்த பிணங்கள் முழுமையாக மக்க வேதிமருந்துகள் வாங்கப்பட்டு இனப் படுகொலை தடயங்கள்  மறைக்கப்பட்ட போதும் மௌனம் காத்தது ஏன்?  தலைவர் ஆட்சி முடிந்த பிறகு அவர் விலகிக் கொள்ள அவரது t- படை ஆட்சி பொறுப்பை ஏற்றது. ராணுவம்  பலப்படுத்தப்பட்டு தாய்நிலத்தை ஆட்சி செய்கிறது.
 தலைவரது தீவிரவாதக் குழு தனியாக இயங்குகிறது. எதிர்க்கட்சி, உளவுத்துறை, வெளியுறவு செயல்பாடுகளைத் தொடர்கிறது. ஏனென்றால் ttt நாடு அங்கீகரிக்கப்படும் என்று நினைத்து அதை தனியாகவும் நாடு செய்யமுடியாததை செய்ய தீவிரவாதிகள் தனியாகவும் இருக்க வேண்டும் என்றும் தலைவர் நினைத்தார். ஆனால் ttt நாடு அங்கீகரிக்கப்பட்டால் பிற நாடுகளில் அரசியல் தலையீடு செய்ய முடியாது. இதைத் தலைவரால் ஏற்கமுடியவில்லை. உலகம் முழுக்க இனரீதியான கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க தலைவர் விரும்பவில்லை. தலைவர் தலைமையில் இருந்து விலகிய பிறகும் வெளிநாடுகளில் தலைவர் நடவடிக்கைகள் தொடர்ந்தன இப்போதும் தீவிரவாத tt-படை அதைத் தொடர்கிறது. தேர்தல் நடக்காமல் இல்லை. தாய்நிலத்தில் பெயருக்கு தேர்தல் நடத்தப்பட்டு அதில் விடுதலைப் படையினரும் தீவிரவாதப் படையினரும் தலைவர் ஆதரவாளர்களும் பதவியில் அமர்ந்தனர். அதன் பிறகும் நாட்டில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களை தலைவர் வழிகாட்டிய படியே ttt நாட்டு அரசு செய்தது. நாட்டின் பிரச்சனைக்குரிய அல்லது பாதுகாப்பற்ற பகுதிகள் தலைவர் மற்றும் அவரது தீவிரவாத படையான tt படை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. நாட்டில் மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் குடியேற்றம் நடந்தது. சிறியவர் முதல் பெரியவர் வரை சிறிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. உணவுக்காக மக்கள் வேலை செய்தனர். ராணுவம் சார்ந்த தொழில்களே செய்யப்பட்டன. பிற நாடுகளில் இருந்து மூலப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு கைகளாலும் சிறிய ரக தொழிற்சாலைகளிலும் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. மக்கள் வேறுநாடுகளுக்கு குடிபெயரவோ, போதைப் பொருள் விளைவிக்கவோ தடை விதிக்கப்பட்டது. எல்லை தாண்டி படை சென்று அணைகளை உடைத்து தண்ணீரை விடுவித்தது. நஞ்சான நிலத்தடி நீர் கொஞ்சம் மேம்பட்டதும் வறட்சி தாங்கும் தானியங்கள் விதைக்கப்பட்டன. தொடர்ந்து மழை மேகங்கள் தடுக்கப்பட்டு செயற்கை மழை பொழிவிக்கப்பட்டது. பிறகு நஞ்சான சதுப்பு நிலங்கள் தூர் அள்ளப்பட்டு கடலில் கொட்டப்பட்டது. பல ஆண்டுகளாக எமது மண், மலை, காடுகள், பொருளாதாரம் என அனைத்தையும் சுரண்டிய அண்டை இனங்களிடம் அதே வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இனப் படுகொலைக்கு காரணமான அண்டைநாட்டு அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களுக்கு ஆதரவளித்த குறிப்பிட்ட மக்கள் அவர்களின் சொத்துகளை அனுபவித்து வந்த வம்சாவளிகள் என அனைவரும் கொல்லப்பட்டு செல்வம் கைகப்பற்றப் பட்டது. உலகம் முழுவதும் இவர்கள் பதுக்கி வைத்திருந்த செல்வங்கள் மிரட்டல் மூலம் மீட்கப்பட்டன. இது அத்தனையும் ttt நாடு நாலாபக்கமும் சூழப்பட்டு போர் நடந்த வேளையில் செய்யப்பட்டது. பணம் கைக்கு வந்ததும் வேற்றின கூலிப்படைகள் வரவைக்கப்பட்டு போர் நடந்தப்பட்டது. உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்கள் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டது. அதாவது உலக வல்லாதிக்க நாடுகள் செய்த அத்தனையையும் தலைவர் செய்தார். அவர் தலைவராக இல்லை தகப்பனாக இருந்தார். இனத்தை தன் பிள்ளையாக நினைத்தார். இந்த இனத்தை மீண்டும் ஈன்றெடுத்த தாயாக மாறினார். அவரை இனவாதி என்பவர்கள் வேற்றினத்தார் வெளியேற்றம் மற்றும் பதில் இனப் படுகொலை நடவடிக்கைகளால் அனாதையான குழந்தைகளை எங்கள் இனத்தில் குழத்தை இல்லாதவருக்கும் திருநங்கைகளுக்கும் விதவைகளுக்கும் கொடுத்து வளர்க்கச் செய்தார். அவர்களைக் கண்கானிக்கவும் செய்தார். நூறாண்டுகளில் அவர்கள் இனத்தோடு கலந்து கரைந்துவிட்டனர். அப்படிப் பார்த்தால் t-இனத்தில் மிகப் பெரிய இனக்கலப்பு செய்தது தலைவர்தான்.

t- தாய்நிலத்தில் குடியேறி தலைமுறை தலைமுறையாக நன்றியுடன் நடந்துகொண்டு விடுதலைப் போரில் ஆரம்பத்தில் இருந்தே பங்களித்த ஒரு இனம் இப்போதும் ttt -நாட்டு குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு நலமாக வாழ்கின்றனர். 
 பெண்கள் மட்டுமல்லாது திருநங்கைகள் ராணுவத்துக்கு தகுதியானவர்கள் என்று தனி படையணியை உருவாக்கிய போது அவர்களின் சாதனைகளைக் கண்டு உலகம் முழுவதிலும் இருந்து திருநங்கையர் எங்கள் ராணுவத்தில் இணைந்தனர். அவர்களும் எங்கள் நாட்டுக் குடிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

 தாய்நில விடுதலைக்குப் பங்களிக்காத t- இனத்தவர்களையும் தலைவர் தண்டித்துள்ளார். அவர்கள் தனியாக முத்திரை குத்தப்பட்டு இன்று அவர்களின் சந்ததியினர் அந்த அடையாளத்துடன் வாழ்கின்றனர். இவர்களுக்கு எந்த வாய்ப்பிலும் முன்னுரிமை கிடையாது.

தலைவர் abcd வறட்டு குருதித் தூய்மை பேசும் இனவெறியர் அல்லர். அவர் உலகத் தலைவர் ஆகும் தகுதி உடையவர்

 தலைவரும் அவரது ராணுவமும்  செய்த சாதனைகள் எவ்வளவு முயன்றும் மூடி மறைக்க முடியாத எரிமலையாக தகித்தது. இதே சூடு பல நாடுகளுக்கு பரவியது. இன ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கொதித்து எழுந்தனர். தலைவர் நடந்த வழியை அவர்கள் சிந்தாந்தமாக ஏற்றுக் கொண்டனர். இது ஒரு மதம் போல பரவியது.

  அவர்கள் எமது நாட்டுடன் கூட்டணி அமைத்துக் கொண்டனர். பணம், உணவு, வளம் என் எது முடியுமோ அதைக் கொடுத்து ஆயுதங்களையும் வழிகாட்டுதலையும் வாங்கிக்கொண்டனர். பெரிய நாடுகள் உடைந்தன. இனங்கள் விடுதலை அடைந்தன. தம் தாய்நிலத்தை தமது தலைவர் மூலம் ஆளத் தொடங்கின.

  இந்நிலையில் தலைவர் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். மண்ணை ஆளாவிட்டாலும் நாட்டையும் உலகத்தையும் தொடர்ந்து வழிநடத்தினார். தாய்நிலத்தில் மீண்டும் காடுகள் உருவாக்கப்பட்டன. கதியற்று பல நாடுகளில் இருந்த t-மக்கள் மீண்டும் தாயகம் அழைத்துவரப் பட்டனர். வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருந்த சில t-மக்களும் பலவந்தமாக தாய்நிலம் வரவழைக்கப்பட்டனர். 

 நாடு வளர்ச்சிப் பாதையில் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த்து. அதே வேளையில் இயற்கையை வளர்க்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பகைவர்கள் உதவியது இங்கேதான். காட்டுக்கு அவர்களின் பிணங்களே நல்ல உரமாக ஆனது. நாளடைவில் நாடே காடாக மாறிவிட்டது. எங்கள் நாடே காட்டு வாழ்க்கைக்கு மாறிவிட்டது. மக்கள் விசப்பூச்சி விரட்டி களிம்புகளை உடலில் தேய்த்துக்கொண்டு விசமுறிவு மருந்துகளைக் கையில் வைத்துக்கொண்டு காட்டுக்குள் வாழ்கின்றனர். பூமி மேலிருந்து பார்த்தால் எங்கள் நிலம் பச்சையாகவும் அண்டை இனங்கள் நிலம் வறண்டும் காணப்படுகிறது. 

 தலைவர் ஒரு சொட்டு நீரையும் ஒரு பச்சை இலையையும் கூட அண்டை இனங்களுக்கு எப்போதும் கொடுக்கக்கூடாது என்று கட்டளை இட்டுள்ளார். ஒரு மனிதன் செய்த தவறுக்கு அவரது சந்த்திகளும்  பொறுப்பு என்றும் விதி வகுத்துள்ளார். இன்று தெருவெங்கும் பழங்களும் காய்கறிகளும் கொட்டிக் கிடக்கிறது. சாக்கடையில் கூட தூய தண்ணீரும் ஓடுகிறது.  அண்டை இனங்கள் பஞ்சம் வந்து செத்துக்கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் நாங்கள் இயற்கைக்குக் கேடான எதையும் ஏற்பதில்லை அவர்கள் வளர்ச்சி என்று இயற்கையைக் கொன்றனர். எங்கள் நாட்டிற்குள் ஊடுறுவ முயன்று தினமும் உயிரை விட்டுக்கொண்டு இருக்கின்றனர். நாங்கள் இருந்திருக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கின்றனர். இதுவே அவர்களுக்கு நாங்கள் கொடுத்த தண்டனை. உலகையும் உலக இனங்களையும் நேசிக்கும் நாங்கள் எங்களைச் சுரண்டிய அண்டை இனத்தாருக்கு இரக்கம் காட்டுவதில்லை. இதை வெளிப்படையாகக் கூற எங்களுக்கு அச்சம் இல்லை ஏனென்றால் நாங்கள் சாவைப் பார்த்தவர்கள். 

 எங்கள் முன்னோர்கள் தலைவர் தலைமுறைக்கு முன்னால் சற்று அரசியல் விழிப்புணர்வுடன் இருந்திருந்தால் சுரண்டலை ஆரம்பத்திலேயே தடுத்திருப்பார்கள். அண்டை இனத்தாரின் முன்னோர்கள் சுரண்டிக் கொழுக்கவும் பழகி இருக்க மாட்டார்கள். இந்த மோசமான நிகழ்வுகள் நடக்காமலே போயிருக்கும். அப்பாவி மக்களைச் சுரண்டுவது குற்றம் என்றால் அப்பாவியாக இருப்பதும் குற்றம்தான். அந்த வகையில் எங்கள் முன்னோர்களின் சந்ததிகளான நாங்களும் குற்றவாளிகள்தான்.



Sunday, 25 June 2023

அமைப்பு தொடங்க புதிய பெயர்கள்

அமைப்பு தொடங்க புதிய பெயர்கள்

 புதிய கட்சி அல்லது இயக்கம் தொடங்கவுள்ள தமிழ்தேசியர்கள் இந்த யோசனையை எண்ணிப் பார்க்கவும்...

 அமைப்புக்கு வைக்கும் பெயர் மிகவும் முக்கியம்.
 பழைய சொற்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
 தமிழ்தேசியம் கூட பழைய சொல் ஆகி விட்டது. ஏனென்றால் அந்த சொல்லைக் கொண்டு பல்வேறு லெட்டர் பேட் இயக்கங்கள், கட்சிகள், சங்கங்கள், குழுக்கள் வந்துவிட்டன.

 எனவே "தமிழர்தேசியம்" என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
 
 இதைவிட அதிரடியாக வேண்டுமென்றால் "இனம்" எனும் சொல் வருமாறு செய்யலாம்.
தெளிவாக புரிய "தமிழின" என்ற சொல் வருமாறு பார்த்துக் கொள்ளலாம்.

 இதைவிட அதிரடியாக வேண்டுமானால் மக்களை நேரடியாக குறிக்கும் வகையில் "தமிழினத்தார்" என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் 

 இதைவிட அதிரடியாக வைக்க வேண்டுமானால் "குடி" என்பதை சேர்த்துக் கொள்ளலாம்.
 அல்லது இனம், குடி இரண்டும் வருமாறு செய்யலாம்
"தமிழினக் குடிகள்" என்றவாறு...

 அதையும் விட அதிரடியாக என்றால் "சாதி" என்பதை சேர்க்கலாம். தமிழ்ச் சாதியினர் கட்சி, தமிழினச் சாதிகள் , தமிழர் சாதிய ஒற்றுமை என்றவாறு...
(சாதி என்பதற்கு தொல்காப்பியம் கூறும் பொருளைக் கூறலாம். பறவைச் சாதி என்றவாறு)

அதன் முதல் எழுத்துக்களின் சுருக்கமும் குறிப்பிட்ட உச்சரிப்புடன் இருக்கவேண்டும். தி.மு.க போன்று.

படை, கழகம், கட்சி, இயக்கம், விடுதலை, புரட்சி, தமிழ், புதிய, எழுச்சி, முன்னணி, முன்னேற்றம், மக்கள்  என பழைய பதங்களை வைக்காமல் மண், நிலம், சேனை, படையணி, ஒற்றுமை, மீட்பு, எதிர்ப்பு, இணைவு, பிணைந்த போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.

 பெயர் முக்கியம்தான், ஆனால் செயல்பாடு தான் வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.

எனது தவறுகளும் குழப்பங்களும்

எனது தவறுகளும் குழப்பங்களும்


எனது தவறுகள்.....

* கோசர் வடுகர் என்று கூறியிருந்தேன் அது தவறு அவர்கள் தமிழரே!
 (இதை ஏற்கனவே எழுதியுள்ளேன்)

* ராஜேந்திர சோழன் காலத்தில் வடக்கத்தி பிராமணர் குடியேற்றம் நடந்ததாக எழுதியுள்ளேன். அதுவும் தவறு. அப்போது நிலம் பெற்றவர்கள் வைணவ (தமிழின) பார்ப்பனர்களே!

* போத்தீஸ் நிறுவனம் சேனைத்தலைவர் உடையது என்று கூறியது தவறு. அது மூப்பனார் பட்டம் கொண்ட (தமிழின) சாலியர் குடி உடையது.

* தாலியறுத்தான் சந்தை ஒரு பொய்க் கதை என்பது அறிந்ததும் என் புத்தகத்தில் அதை நீக்கிவிட்டேன் (இதை ஏற்கனவே எழுதியுள்ளேன்)
அதேபோல முலைவரி என்பதும் ஒரு கட்டுக் கதை என்றும் நிரூபணம் ஆகிவிட்டது.

* தமிழர்நாடு வரைபடம் தயாரித்த போது பல வரைபடங்கள் வெளியிட்டு கருத்து கேட்டு குழப்பம் - ஆராய்ச்சி - தெளிவு என்று பயணித்தபோது பல தவறான வரைபடங்கள் வெளியிட்டுள்ளேன்.
 எனவே எனது "தனித் தமிழர்நாடு - வட்டார எல்லைகள்" எனும் வரைபடம் இறுதியானது ஆகும் (என் புத்தக முகப்பிலும் இருக்கும்).
 இதேபோல இதன் அடுத்த கட்ட நகர்வு "அகன்ற தமிழர்நாடு" மற்றும் குடியேற்ற திட்டமான "அகன்ற தமிழகம்" ஆகியனவும் இறுதியானதே!
 (இவற்றை விளக்க "வரைபடங்களின் தொகுப்பு வரைபடம்" ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்)

* எனது புத்தகம் "தனித் தமிழர்நாடு" என் பதிவுகளில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த தொகுப்பு.
 எனவே இணைய பதிவுகளை ஒப்பிடும்போது புத்தகத்தில் உள்ளதே இறுதியானது ஆகும்

* தன் தலையை தானே அறுக்கும் நவகண்டம் பலி தமிழர் முறை என்று கூறியிருந்தேன். அது தவறு. அது சாளுக்கிய கலப்பு சோழர் (குலோத்துங்கன்) வருகையால் ஏற்பட்டது ஆகும்.

* ஆரம்ப காலத்தில் சைவ நாயன்மார்கள் மதவெறி பிடித்தவர்கள் என்று பெரியபுராணம் கூறுவது அடிப்படையில் எழுதியிருந்தேன். அது தவறு. பெரியபுராணம் வேற்றினத்தார் ஆட்சியில் உள்நோக்கத்துடன் எழுதப்பட்ட தவறான நூல் ஆகும். இதை சமணர் கழுவேற்றம் பொய் என்று அறிந்தபோது அறிந்துகொண்டேன்.

* ஆரம்ப காலத்தில் ராமன் ஒரு வடவன் என்று தாத்தாச்சாரியார் கூறியபடி எழுதியுள்ளேன். பிற்பாடு தமிழ் இலக்கியங்களில் இராமன் பற்றி வருவதை அறிந்து தெளிந்துகொண்டேன்.
(ஏற்கனவே இராமன் தமிழனே என்று பல பதிவுகள் எழுதிவிட்டேன்)

* பிற்கால பாண்டிய அரசில் இசுலாமிய அமைச்சர்கள் இருந்தனர். அவர்கள் தமிழர்கள் என்று எழுதியுள்ளேன். இது தவறு. அவர்கள் ஈரான் நாட்டு சிற்றரசர் மரபைச் சேர்ந்த அராபியர்கள் ஆவர். 

* சிவசங்கர் மேனன் தனது புத்தகத்தில் கருணாநிதி புலிகள் அழிவதை விரும்புவதாக கூறியுள்ளதாக எழுதியுள்ளேன். அது உண்மைதான். ஆனால் அது புத்தகத்தில் நேரடியாக கூறப்படவில்லை. தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி என்றே குறிப்பிட்டுள்ளார்.

* சுப.முத்துக்குமார் ஈழத்திற்கு சென்று தலைவருக்கு நெருக்கமாக இருந்ததாக எழுதியுள்ளேன். அவர் ஈழத்திற்கு உதவியதும் பயணம் செய்ததும் உண்மை. ஆனால் தலைவர் கூட இருந்தமைக்கு சான்று கிடைக்கவில்லை.

* தலைவர் பிரபாகரன் இந்திய புலிகள் போர் முடிந்த பிறகும் தமிழகம் வந்து சென்றதாக எழுதியுள்ளேன். அது தவறு
(அவரது குடும்பம் பாலச்சந்திரன் பிரசவத்தின் போது சென்னை வந்தனர்).

* ஈழத்தில் பொன்னம்பலம் ராமநாதன் தெலுங்கு வம்சாவளி என்று எழுதியிருந்தேன். அது தவறு. போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை.

* மதுரை சுல்தான்கள் செய்த கொடுமைகளுக்கு மதுரா விஜயம் தவிர்த்த சான்றுகள் இல்லை என்று கூறியிருந்தேன் ஆனால் அரேபிய பயணி இபின் பதுத்தா குறிப்புகள் சான்றாக உள்ளன.

* கோசர்களின் கடவுள் முருகன் என்று கூறியிருந்தேன். அதுவும் தவறு. ஆவியர் குடியின் தலைவன்தான் முருகன்.

* சென்னை எனும் பெயர் சென்னப்ப நாயக்கர் எனும் தெலுங்கர் பெயரால் ஏற்பட்டது என்று எழுதியுள்ளேன்.
 அவர் தமிழின வன்னியரா அல்லது தெலுங்கரா என்பதில் குழப்பம் உள்ளது. ஆனால் சென்னை என்பது தமிழ்தான். சென்னிநல்லூர் என்ற கல்வெட்டும் மாதரசன் பட்டிணம் என்ற கல்வெட்டும் உள்ளது. சென்னை எனும் பெயரை வள்ளலார் குறிப்பிட்டும் உள்ளார்.

* அம்பேத்கர் தனது முதுநிலை பட்டப் படிப்பில் காட்டிய புள்ளிவிபரத்தில் மதராஸ் மாகாணம் அதிக வரி கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை எழுதியுள்ளேன். இது உண்மைதான். ஆனால் புள்ளிவிபரப் படி ஆரம்பத்தில் கல்கத்தா அதிக வரி கட்டிவந்துள்ளது பிறகு குறுகிய காலம் மதராஸ் முந்திக் கொண்டது பிறகு பம்பாய் முதலிடம் பிடித்து கடைசி வரை முதலிடமாக இருந்தது.
 இப்போதும் இந்திய அரசுக்கு அதிக வரிகட்டி குறைந்த நிதி பெறுவதில் முதலில் மகாராஷ்டிரா பிறகு தமிழ்நாடுதான். வங்கதேசம் பிரிந்துவிட்டதால் அவர்கள் இந்த சுரண்டலில் இருந்து தப்பிவிட்டனர் எனலாம். 

* முத்துராமலிங்க தேவர் காங்கிரஸ் எதிரிகளை ஒன்று திரட்ட சவார்க்கருக்கு உதவிப் பணம் அளித்தார் என்று எழுதினேன். பிற்பாடு அது தவறு என்றும் அது வேறொருவர் என்று அறிந்த பிறகு புகைப்பட ஆதாரத்துடன் எழுதி திருத்திக்கொண்டேன்.

* சிசேரியன் கூடாது என்று உணர்ச்சிப் பூர்வமான பதிவு எழுதி மருத்துவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டிய பிறகு அறிவியல் பூர்வமான பதிவு ஒன்று எழுதியுள்ளேன்


எனக்கு இருக்கும் குழப்பங்கள்.....

* மௌரியர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இளஞ்சேட் சென்னி தலைமையில் அமைக்கப்பட்ட தமிழர் கூட்டணிப் படையில் சேரநாடு இருந்ததாக எழுதியுள்ளேன். சத்திய புத்ர என்று அசோகர் குறிப்பிடுவது அதியமான் அரசையே! அதியமான் சேர மரபுதான். ஆனாலும் சேரநாடு இந்த கூட்டணியில் இருந்தது என்று உறுதியாகக் கூறமுடியவில்லை.

* முத்துராமலிங்கத் தேவர் மதுரை கோவிலில் ஆலய நுழைவு நடத்தியதாக நான் எழுதியுள்ளேன். ஆனால் அதுவும் உறுதியாகத் தெரியவில்லை. 

* தீரன் சின்னமலை மைசூர் அரசிடமிருந்து கொங்கு பகுதியை மீட்டதாக எழுதியுள்ளேன். தீரன் சின்னமலை உண்மையா கற்பனையா என்பதும் தெரியவில்லை (ஆனால் பாலக்காடு கணவாய் மீதான உரிமைக்காக கொங்கு வேளாளர்கள் ஆங்கிலேயருடன் மோதியுள்ளனர்). 
 
* பாரதியார் கடைசி காலத்தில் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து ஊர் திரும்பியதாக கூறுவதிலும் எனக்கு குழப்பம் உள்ளது எனவே அது பற்றி நான் எதுவும் எழுதவில்லை.

* அழகுமுத்து கோன் மறவரா கோனாரா என்கிற குழப்பமும் உள்ளது எனவே அது பற்றி நான் எதுவும் எழுதவில்லை.

* சோழ வம்சாவளி என்று கூறிக் கொள்ளும் பிச்சாவரம் வன்னியர் குடும்பம் பல்லவ வம்சாவளி என்றும் கூறப் படுகிறது. 
 இவர்கள் 1900 களுக்கு பிறகே சோழர் பரம்பரை என்று உரிமை கோரியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதில் குழப்பம் உள்ளதால் இது பற்றி நான் எதுவும் எழுதவில்லை.

* நம்பியாண்டார் நம்பி இராசராச சோழன் காலத்தவர் என்பதில் எனக்கு குழப்பம் உள்ளது. சிதம்பரம் தீட்சிதர் பிடியிலிருந்து சுவடிகளை மீட்ட காலம் ராசராச காலத்தில் அல்ல சாளுக்கிய கலப்பு சோழரான இரண்டாம் ராஜராஜன் காலத்தில் என்பது எனது ஊகம்.

எனது தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதுடன் குழப்பங்கள் தெளிய தேடல் தொடரும் என்றும் கூறிக்கொள்கிறேன்

Friday, 23 June 2023

எனது சிந்தனைகள்

எனது சிந்தனைகள்

தமிழ்தேசியம் பற்றிய எனது சிந்தனைகள்....

* ஈழமும் தமிழகமும் ஒரே நாடாக இருக்க வேண்டும் (இதை ஆதித்தனார் ஏற்கனவே கூறியிருந்தார்) அதை மேம்படுத்தி தமிழகமும் ஈழமும் இழந்த பகுதிகளை மீட்டு 'தனித் தமிழர்நாடு' என்று நான் தயாரித்த வரைபடம் அடிப்படையில் தனிநாடாக இருக்க வேண்டும்.
"ஒரே நாடு" "ஒரே எல்லைக்கோடு" இதற்கான முழக்கம்

* திருச்சி தமிழர்நாட்டு தலைநகராக இருக்க வேண்டும்

* மண்ணழிப்பு திட்டங்கள் இனப் படுகொலைக்கும் மேலாக "பேரினப் படுகொலை" என்று கொள்ளப்பட வேண்டும்

* "தமிழின் பழமையை நிறுவுதல்" அல்லது "தமிழ்மொழியை வளர்த்தல்" போன்றவற்றை ஒத்திவைத்தல் தனிநாடு அடைவதை முதன்மை இலக்காக கொள்ளுதல்

* மொழிவழி தேசியத்தை மறுத்தல் இனவழி தேசியத்தைக் கைக்கொள்ளல் இனம் கண்டறிய சாதியை பயன்படுத்துதல் மற்றும் சாதியை வெளிப்படையாக அறிவித்தல்.
(இதை முதலில் கூறியது நான் என்றே நினைக்கிறேன்

* தேசியவாதத்தில் சாதி ஒழிப்பு, சூழலியல் ஆர்வம், மத எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, மொழித்தூய்மை, கலாச்சாரத் தூய்மை, கொள்கை வேறுபாடு போன்றவற்றை புறந்தள்ளுதல்.
அதாவது சாதி, மத உணர்வுகளை ஒழித்துவிட்டு தூய தமிழில் பேசி நம்மாழ்வார் வழி நடக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் 
இனத்தின் அனைத்து மக்களையும் அவர்கள் இருக்கும்படியே அரவணைத்து செல்லுதல்.

* தமிழின பார்ப்பனரை தமிழ் இனமாக ஏற்றல். அவர்களைப் பார்ப்பனர் என்றே அழைத்தல்.  தமிழறிந்த தமிழ்நாட்டிற் பிறந்த பிற இனத்தவரை புறந்தள்ளுதல்.

* ஒருவரின் தாத்தா பாட்டி நால்வரில் மூவர் தமிழ்ச் சாதியாக இருந்தால் அவர் முழுத் தமிழர் ஆவார்.
 நால்வரில் இருவர் தமிழர் என்றால் அவர் அரைத்தமிழர். அந்த அரைத் தமிழர் தனது வாரிசை ஒரு தமிழருடன் மணமுடித்தால் அவர் சந்ததி தமிழர் என்றாகும்.

* தமிழின இசுலாமியரை தமிழராக ஏற்றல் என்பதை மேம்படுத்தி அவர்களை பிற தமிழர் போலவே பெயர்வைத்துக் கொள்ளவும் சாதிப் பட்டத்தைப் பயன்படுத்தவும் அராபிய தோற்றத்தை கைவிடவும் வலியுறுத்துதல்

* இந்து என்ற வரையறையில் வருவோரை வடக்கத்திய மற்றும் வேற்றின சடங்குகளை நீக்கி தமிழ்-இந்து ஆக்குதல் (இதை முதலில் கூறியது நானே)

* ஆரிய கருத்தியல் பொய்யானது. நடைமுறையில் ஆரியம் என்பது ஹிந்தியம் என்றே கொள்ளவேண்டும்

* தமிழர்நாட்டில் தமிழர் பண்பாட்டை தனி மதமாக உருவாக்குதல். மதமாற்ற பிரச்சாரத்திற்கு தடை செய்தல்.

* புதுச்சேரி மாநிலத்தை கலைத்தல் அந்த சிறப்பு அந்தஸ்தை குடகு மக்களுக்கு விட்டுக் கொடுத்தல். அதன் மூலம் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணுதல். 

* காவிரியை தடுத்தால் கடலில் இருந்து தமிழகம் வழியே குடகு மலைக்குப் போகும் மழை மேகங்களைத் தடுத்து தமிழகத்திலேயே செயற்கை மழை பொழிவித்தல். மராத்தியரைத் துணைக்கு அழைத்தல்.
 கர்நாடகா மேகதாது அணையைக் கட்டினால் குண்டு வைத்து உடைத்தல் (தமிழரசன் தீட்டிய திட்டம்).

* இருபக்க மக்கள் போராட்டம், பொருளாதார தடை, குடியேற்றம் மூலம்  (முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள) தேவிகுளம், பீர்மேடு மீட்டல். 

* ஈழ மக்கள் தற்போது மலையக மக்களை ஈழத்தில் குடியேறிக் கொள்ள அழைக்க வேண்டும். 
 தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் தமிழகத்தின் குடிகளாக (சட்டத்திற்கு புறம்பாகவேனும்) குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

* திருப்பதி கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் இருப்பதை வைத்து அதை தமிழக அரசிடம் ஒப்படைக்க வழக்கு போடுதல்.
 இதே போல சபரிமலை கோவில், திருவனந்தபுரம் கோவில், காளத்தி, பெங்களூரைச் சுற்றியுள்ள சோழர் கோவில்கள் மீதும் உரிமை கோரி வழக்கு போடுதல். இக்கோவில்களில் கூட்டமாக 'தமிழர் ஆலய நுழைவு' நடத்துதல்.

* தமிழர்நாட்டில் முதல் வேலையாக ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள ஆழம் குறைந்த கடலை மண் போட்டு நிரப்புதல் (பாலம் கட்டும் சிந்தனை ராமாயண காலத்திலேயே உள்ளது. சாலை போடும் சிந்தனை பாரதியார் கூறியது).

* தமிழர்நாட்டில் இரண்டாவது வேலையாக சீனப் பெருஞ்சுவர் போல தமிழர்நாட்டுக்கு வடக்கே பெருஞ்சுவர் கட்டுதல் 

* புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி தமிழர்நாடு அமைத்தல் அதற்கு இந்தியாவின் எதிரி நாடுகளின் உதவியைப் பெறுதல். இதற்கு இந்திய ராணுவத்தில் மற்றும் தமிழக காவல்துறையில் இருந்த அல்லது இருக்கும் ராணுவத்தினரை பயன்படுத்துதல்.

* ஈழத்தை மீட்ட பிறகு தக்க காலம் பார்த்து சிங்களவர் மீது பதில் - இனப்படுகொலை நடத்தி நீதியை நிறுவுதல். அதற்கு ஈழப் படுகொலைக்கு பொறுப்பான அரசியல்வாதிகள், அதிகாரிகள், வாக்காளர்கள் மற்றும் இவர்களது வாரிசுகளைத் தேர்தெடுத்தல்

* தமிழர் உளவுத்துறை நிறுவுதல் தமிழின எதிரிகள் மற்றும் துரோகிகளை உலகின் மூலை முடுக்கெல்லாம் தேடி அழித்தொழித்தல் (இஸ்ரேல் செய்தது போல). அத்தோடு அவர்கள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டல். 

* தென்னிந்திய இனங்கள் மொழிவழி நாடுகளாக தார்மீக ஆதரவு அளித்தல். விந்திய மலைக்கு தெற்கே இலங்கை மாலத்தீவு வரை 'தெற்காசிய தீபகற்ப நாடுகள்' என்கிற பெயரில் யூனியன் உருவாக்குதல்.
 அதன் எல்லையை மாலத்தீவு தாண்டி தெற்கே  பிரிட்டிஷ் கடல்கடந்த தீவுகள் வரை நீட்டித்தல்.

* இந்தி மொழிக்குடும்ப நாடுகள் அதாவது காஷ்மீர், வடகிழக்கு, தென்னிந்தியா தவிர்த்த இந்தியாவுடன் பாகிஸ்தானின் கிழக்கு பாதி, நேபாளத்தில் மேற்கு பாதி மற்றும் வங்கதேசம் சேர்ந்த 'அகண்ட இந்தியா' அமைக்க ஆதரவு தெரிவித்தல்

* உலக இனங்களுக்கு 'மொழிசார்ந்த இனவழி' நாடுகள் அமைத்துக்கொள்ள குரல்கொடுத்தல். பெரிய நாடுகளை உடைத்து இனவழி நாடுகள் ஆக்கும் அரசியலைச் செய்து உலகளாவிய அரசியலில் ஈடுபடுதல். 
மொழிக்குடும்பம் அடிப்படையில் நாடுகளின் கூட்டணி அமைய வலியுறுத்துதல்.

* உலக இனங்களை சாதி, மதம், நாடு கடந்து மொழி, இனம், பண்பாடு ஆகியன அடிப்படையில் இனத்தையே மதமாக நிறுவி அதைத் தழுவ அழைத்தல். இதன் மூலம் உலகளாவிய மதவாத சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தல்

* நடுநிலைப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அரசியல் மயமாக்கல். இவர்கள் இணைந்து மாணவர் உரிமைகளை பெறுதல்.

* மீனவர் பிரச்சனை தீர அவர்கள் ஆயுதம் திரட்டி சிங்கள கடற்படையைத் திருப்பி தாக்குதல். சிங்கள ராணுவத்தினரை உயிருடனோ பிணமாகவோ தமிழக கடற்கரையில் கொண்டுவந்து போடுதல். கச்சத் தீவில் பெருவாரியாகக் குடியேறுதல். கரும்புலி போன்ற எதிர்தாக்குதல் நடத்தி இலங்கை கப்பல்களை எதிர்கொள்ளுதல்.

* தமிழர் வீழக் காரணம் பிற்காலத்தில் போர்க் குடிகளின் பாராமுகம். அந்த வகையில் தென்மாவட்ட போர்க்குடி செங்குத்தர் சமுதாயம் முதற்காரணம்.
ஆகவே அவர்கள் தமிழ்தேசியத்திற்கு உழைக்க வேண்டும். அதிலும் சகோதரிகள் இல்லாத திருமணமாகாத ஏழை அல்லாத இளைஞர்கள் முன்னணியில் நிற்கவேண்டும்.

* சொத்துரிமை அடிப்படையில் இடவொதுக்கீடு வழங்குதல். சாதியை இரண்டாவது காரணியாக சேர்த்தல் ஏற்கனவே இடவொதுக்கீடு பெற்றவர்களின் வாரிசுக்கு முன்னுரிமை வழங்காமல் தவிர்த்தல்.

* தமிழரில் 3% க்கும் குறைவான தமிழ்க் குடிகள் ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும். இவர்கள் தேர்தலில் வென்று அல்லது வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியை வைத்து பதவி பெற்று அந்த பதவிக் காலத்தை தமக்குள் சதவீத அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் 

*  தமிழர்நாடு அமைய அதிகம் பங்களித்தவர் மன்னராக முடிசூட்டுதல். அவரது சந்ததி அரச பரம்பரையாக தொடர்தல்

* தமிழர் நாட்டில் ஒரு தலைவருக்கு அவர் பிறந்த அல்லது வாழ்ந்த இடத்தில் ஒரே ஒரு உருவச்சிலை அதுவும் அவர் உருவம் அளவுக்கு மட்டும். மற்றபடி அனைத்து தேவையில்லாத சிலைகளும் அகற்றப் படுதல்

* தமிழர்நாட்டில் கொங்கு மண்டலத்தை ராணுவ மையமாக பயன்படுத்துதல்

* தமிழர் நாட்டையே முடிந்த அளவு காடாக மாற்றி மொத்த மக்களும் காட்டுவாசி வாழ்க்கைக்குத் திரும்புதல். தொலைதொடர்பு சிறப்பாக இருத்தல் மற்றும் வான்வழிப் போக்குவரத்தை பயன்படுத்துதல்.

* தமிழர்நாட்டில் மரத்தில் வீடு கட்டுதல். விவசாய நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்றுதல். மேல்மட்டம் பயிர் விளைச்சல் என்றால் அதற்குக் கீழே போக்குவரத்து சுரங்கம் அமைத்தல்

* தமிழர்நாடு வளங்கொழிக்கும் அண்டை இனங்கள் பசியால் சாகும் நிலை வரும் அன்று இரக்கம் பார்க்கக்  கூடாது. நாம் உபரி வளங்களை வீணாக்கினாலும் அண்டை நான்கு இனங்களுக்கும் இந்திய துணைக் கண்டத்துக்கும் நேரடியாக எந்த வித்ததிலும் உதவக் கூடாது. இதுவே அவர்கள் நம்மைச் சுரண்டியதற்கு தண்டனை.

* தமிழர்நாடு பொருளாதாரத்தைப் பெருக்கி பிறகு குமரிக்கண்ட ஆய்வில் ஈடுபடுதல் 

* தமிழர்நாட்டில் பழங்குடிகளுக்கு நிலவுரிமை மற்றும் காவல்துறை கொண்ட மாநில அந்தஸ்து வழங்குதல். விருப்பம் இல்லாவிட்டால் தனிநாடாகும் உரிமை வழங்குதல்.

* தமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே கூட்டெழுத்து முறையில் உள்ளது. கையெழுத்து வடிவாக அதைப் பயன்படுத்த வேண்டும்.

* தமிழர்நாடு அமைந்த பிறகு வேற்றினத்தாரை வெளியேற்றுதல் மற்றும் உலகத் தமிழரை அழைத்துவந்து குடியேற்றுதல்

* தமிழர்நாட்டில் ஊர்முறை ஆட்சி வேண்டும். ஒவ்வொரு ஊரும் தன்னிறைவு பெற்று குட்டி அரசாங்கமாக இயங்க வேண்டும். நிதி மொத்தமாக சேர்வது தடுக்கப்பட வேண்டும். நாடு தழுவிய திட்டங்களுக்கு மட்டும் தேவைப்படும்போது நிதி வழங்க வேண்டும்.

* தமிழர்கள் அனைவரும் தமிழர்நாட்டில் வாழ்வதை விரும்பவேண்டும். வெளிநாடு போய் சுகபோகமாக அல்லது பிழைப்புக்காக வாழ்வது கேவலம் என்பதை உணர வேண்டும்

* தமிழர்நாடு அமைந்த பிறகு சாதிச் சான்று அழிக்கப்பட்டு தமிழர் எனும் இனச்சான்று வழங்கப்பட்டு சாதி ஒழிக்கப்படும். பெயருக்கு பின் பிறந்த ஊர் சேர்க்கும் வழக்கம் வரும். 
தமிழர்நாடு அமையும் வரை சாதியே தமிழர் அடையாளம்.

* தமிழர்நாட்டில் திருநங்கை படையணி உருவாக்குதல் மற்றும் பெண்கள் படையணி உருவாக்குதல். இவர்களுக்கு இலகுரக ஆயுதங்கள் தளவாடங்கள் உருவாக்குதல்.

* கோலார் தங்க வயலில் தங்கம் தீர்ந்துபோன இடத்திற்கு கீழே இன்னொரு தங்க மலை உள்ளது.
(அத்தனை ஆழத்தில் தோண்டும் தொழில்நுட்பம் தற்போது இல்லை)
தமிழர்நாடு அதைக் கைப்பற்றி தோண்டி எடுக்க வேண்டும். 

* தமிழர்நாட்டு விடுதலைக்கு அதிகம் பங்களித்த தனிமனிதர், சாதி, ஊர், குழு என யாராயினும் அவர்களும் அவர்களது சந்ததிகளும் உயர்சாதி என்று அடையாளப் படுத்தப்பட்டு தமிழர்நாட்டில் அனைத்து வாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
 போராடாத அல்லது குறைந்த பங்களிப்பு செய்த எந்த தமிழரும் கீழ்சாதி என்று அறிவிக்கப்பட்டு அவர்களது சந்ததி தமிழர்நாட்டில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுவர்

* தமிழர்நாட்டுக்கு புலிகளின் அரசாங்க விழுமியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அதாவது சட்டம், சின்னம் போன்றவை. 

* 2009 க்குப் பிறகு யாராவது தமிழர்நாடு வேறுநாடு ஈழம் வேறுநாடு என்றால் அவர்கள் துரோகிகள் என்று கொள்ளப்பட்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

* ஈழ இசுலாமியர் தமிழர்நாட்டில் இணைய மறுத்தால் அவர்கள் விரட்டப்பட்டு தமிழகத்து இசுலாமியர் குடியேற்றப்படுவர்.

* ஒரு மனிதர் குற்றம் செய்தால் அதை எதிர்க்காத அவரது சந்ததியும் 
அக்குற்றத்தால் ஏற்படும் பலனை அனுபவிக்கும் அவரது சந்ததியும் அந்த மனிதர் செய்த குற்றத்திற்கு பொறுப்பாவர். எனவே அந்த மனிதருக்கு கொடுக்கப்படும் தண்டனை அவரது வாரிசுகளுக்கும் கொடுக்கப்படும். அதாவது தலைமுறை தாண்டினாலும் தண்டனை நிச்சயம். இதுவே அவரது குற்றத்தை எதிர்த்து அதன் பலனை அனுபவிக்காமல் விலகிய அவரது ரத்த உறவுகள் தண்டனையில் இருந்து தப்பிப்பார்.

* தமிழர்நாடு அமைந்த பிறகு மக்கட்தொகை அடர்த்தியான பகுதியில் (தமிழகம்) இருந்து குறைவான (ஈழம்) பகுதிக்கு குடியேற்றம் நடக்கும்.

* ஈழத்திற்கு துணைத் தலைநகரம் என்று திருகோணமலை ஆகும். திரிகோணமலைக்கும் சென்னைக்கும் முக்கிய நீர்வழிப் போக்குவரத்து இருக்கும். 

* இவை போக 'தமிழ்தேசியம் பயணிக்க வேண்டிய பாதை' எனும் பதிவில் கால அட்டவணையும் செயல் திட்டங்களும் எனது சிந்தனை ஆகும். அத்துடன் தனித் தமிழர்நாடு புத்தகம் மண்மீட்பு தொடர்பான சிந்தனைகளைக் கொண்டுள்ளது.

மேற்கண்ட அனைத்தும் விரிவான பதிவுகளாக வேட்டொலி இணையத்தில் உள்ளன.

Monday, 19 June 2023

மதராஸ் ஐ மட்டுமாவது பிரிட்டிஷ் ஆளவேண்டும் என்ற ஈவேரா

பிரிட்டிஷ் அரசர் மரணத்திற்கு ஈ.வே.ரா அஞ்சலி

சவர்க்கர் கூட பிறகுதான் ஆங்கிலேய அடிமையாக மாறினார் ஈ.வே.ரா எப்போதுமே ஆங்கிலேயர் அடிமைதான்.
மன்னர் ஜார்ஜ் இறந்தபோது ராஜ விசுவாசத்துடன் ஈ.வே.ரா எழுதிய உருக்கமான இரங்கல்.
இதில் 'ஆங்கில ஆட்சியின் குறைகளுக்கு மன்னரை குறை சொல்லக்கூடாது' எனும் கருத்து கவனிக்கத்தக்கது.
மேலும், இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் பெறும் காலம் கனிந்தபோது கூட 'தமிழகத்தை மட்டுமாவது ஆங்கிலேயர் தொடர்ந்து ஆள வேண்டும்' என்று ஈ.வே.ரா வலியுறுத்தியதையும் காணலாம்.
27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே, கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
”திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும்,
நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான
ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது”.
நமது குறிக்கோள் ‘விடுதலை’ வெளியீடு :- 1948
(நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு)
9 செப்., 2022

இலக்கியம் கூறும் தமிழ்நாடு எனும் சொல்

இலக்கியம் கூறும் தமிழ்நாடு எனும் சொல்
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
(சிலப்பதிகாரம், காட்சிக் காதை)
பொருள்: சேரனே! நீ கடல்களை வேலியாக்கொண்டு இந்நிலப்பரப்பை தமிழ்நாடாக ஆக்க நினைத்தால் எவரும் எதிர்க்க முடியாது.
"தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
(சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை)
பொருள்: தெற்கிலிருக்கும் தமிழ்நாட்டு மூவேந்தர் வடக்கே படையெடுத்து வில், புலி, மீன் பொறித்த கொடியை பறக்கவிட்ட நாள்.
-----------------
"தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த"
(பரிபாடல்)
பொருள்: பாண்டியனின் மதுரை நகரத்தின் புகழ் தமிழை எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்றுள்ளது.
------------------
“நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“
(தொல்காப்பிய உரை)
ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்கவேண்டும் என்று கூறி அதற்கு உதாரணமாக இதைக் கூறுகிறார் இளம்பூரணர்.
----------------------
"சோணாடு கடந்தால்.... மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ”
(கம்ப ராமாயணம்)
பொருள்: சோழ நாடு கடந்து மலைநாடு (எனும் சேரநாட்டு) அருகே தமிழ்நாடு (எனும் பாண்டிய நாட்டை) அடையலாம்
----------------------
“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்”
“மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்”
(பெரிய புராணம், திருநாவுக்கரசு நாயனார் புராணம்)
“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்”
(பெரிய புராணம், திருஞான சம்பந்த மூர்த்திகள் புராணம்)
-------------------------
“கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”
(இராசராச சோழனுலா)
--------------------------
"செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே"
"தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! "
(பாரதியார்)
நன்றி: வி.இ.குகநாதன்
____________________________________
"தமிழ்நாடு" எனும் சொல் மட்டும் கணக்கில் கொண்டு (சங்கம் மருவிய காலத்துக்குப் பிறகான) இலக்கிய சான்றுகள் இப்பதிவில் காட்டப்பட்டுள்ளன.
பழமையான இலக்கியங்கள் நமது நாடு பற்றி கூறுவனவற்றை ஏற்கனவே 'இலக்கியத்தில் தமிழர்நாடு' எனும் பதிவு இட்டுள்ளேன்.
இந்திய அளவில் தமிழினம் போல எந்த இனமும் தமது நிலத்தை (சிற்றரசு, பேரரசு கடந்து) மொழி அடிப்படையில் பெயரிட்டு அழைத்ததில்லை.
2 நவ., 2022 

1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம்

1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம் 

 1977 ஆகஸ்ட் இல் சிங்களப் பகுதிகளில் தமிழர்கள் மீது கலவரம் நடந்தது. 300 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50,000 தமிழர்கள் அகதிகளாக தமிழர் பகுதிகளுக்கு சென்றனர்.
 கொழும்பு மற்றும் மலையகத் தமிழர்கள் இதில் கடுமையாகப் பாதிப்பட்டனர்.
 இதன் அதிர்வலை தமிழகம் வரை பரவியது.
தமிழகத்தில் சிலர் கூடி "தமிழக ஈழ நட்புறவுக் கழகம்" எனும் அமைப்பு தொடங்கப்பட்டு 1978 இல் சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டு "இலங்கையில் ஈழம்" எனும் நூல் வெளியிடப்பட்டது.
 அதில் 1978 வரையான இலங்கை வரலாறு விளக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக மலையகத் தமிழருக்கும் ஈழத் தமிழருக்குமான வேறுபாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
 இதில் தொடக்கத்திலேயே ஈழ வரைபடம் இடம்பெற்றுள்ளது.
அதில் 'இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தின் ஒரு பகுதி அதாவது திரு. வன்னிய சிங்கம் கூறிய தமிழ்ப்பகுதியே. பருத்தித்துறை முதல் பதுளை வரை மன்னார் முதல் மட்டக்களப்பு வரை பொத்துவிலும் உள்ளடக்கிய பகுதியே இங்கு ஈழம் என்று குறிக்கப்படுகிறது' என்கிற விளக்கமும் உள்ளது.
 தமிழகத்திற்கு ஈழம் பற்றி எதுவும் தெரியாது என்கிற கருத்தை இந்நூல் பொய்யாக்குகிறது. 
 1980 இல் மதுரையில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக மாநாடு நடந்துள்ளதும் இங்கே குறிப்பிடத் தகுந்தது.
 
இந்நூலைப் பாதுகாத்து வைத்துள்ள படிப்பகம் (padippakam) இணையத்திற்கு நன்றி! 

இரண்டாவது பெரும்பான்மை மொழிகள்

இரண்டாவது பெரும்பான்மை மொழிகள் 


 படத்தில் மாவட்ட வாரியாக இரண்டாவது பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழிகள் குறிக்கப்பட்டுள்ளன (2011 கணக்கெடுப்பு அடிப்படையில்).

 எல்லை மாவட்டங்களில் அருகாமை மொழி பரவியிருப்பது இயல்பு என்ற வகையில் நோக்கினால் தமிழ் அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பரவியுள்ளது (இவற்றில் தமிழர் இழந்த பகுதிகளும் அடங்கும்).


 இந்த அடிப்படையில் தமிழகத்தில் நியாயமான பரவல் என்றால் அது குமரி மற்றும் நீலகிரி மாவட்டஙகளில் வழங்கும் மலையாளம் மட்டுமே! 


 தெலுங்கு எல்லையோர மாவட்டங்கள் மட்டுமின்றி கடைக்கோடியில் திருநெல்வேலி வரை இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது இது தெலுங்கரின் பெருந்தொகையான குடியேற்றத்தைக் குறிக்கிறது.


 தமிழ் மண்ணுக்குச் சிறிதும் தொடர்பில்லாத உருது, குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட சௌராஸ்ட்ரா ஆகியனவும் சில பகுதிகளில் தெலுங்கைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன.


 அதாவது அரசியல் கண்ணோட்டத்தில் தமிழகத்தினுள் ஒரு திராவிடம், ஒரு பாகிஸ்தான், ஒரு அகண்ட பாரதம் இருப்பது போல் தோன்றுகிறது.


 வரைபடம் வழங்கியவர்: கார்வேந்தன் அழகையா

நன்றி: statsofindia.in 

முகநூல் பதிவு: 10.11.2022


மீண்டும் தனித் தமிழர்நாடு

மீண்டும் தனித் தமிழர்நாடு

"தனித் தமிழர்நாடு" புத்தகம் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது
தனித் தமிழர்நாடு இரண்டாம் பதிப்பில் புதியதாக சேர்க்கப்படவுள்ள 13 தலைப்புகள்,
1) தமிழர் பேரரசுகள் 
(தமிழர் ஆண்ட பேரரசுகள் பற்றியது)

2) அசோக சக்கரம் சொல்லும் உண்மை
(அசோகர் ஆட்சியில் தமிழகம் இல்லாதது பற்றியது)

3) பெங்களூர் மைய நகரம் முழுக்க தமிழர்கள்
(பெங்களூர் நகரம் பற்றியது)

4) ஜமீன்களின் அட்டூழியம்
(கீழ வெண்மணி, குறிஞ்சாக்குளம் போன்றவை)

5) மொழி வரைபடம் 1822
(முதல் மொழி வரைபடம்)

6) தமிழகம் இழந்த நிலம் தற்கால நிலை

7) இரண்டாவது பெரும்பான்மை மொழிகள்
(தென்னிந்திய மாநிலங்களில் இரண்டாவது பெரும்பான்மை கொண்டு விளங்கும் மொழிகளின் மாவட்ட வரைபடம்)

8) 1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம்

9) தமிழ்ப் பெருஞ்சுவர்
(சீனப் பெருஞ்சுவர் போல தடுப்பு சுவர் பற்றியது)

10) கண்டியில் தெலுங்கர் குடியேற்றம்
(கண்டி நாயக்கர் பற்றியது)

11) புலிகள் ஆண்ட ஈழம்
(புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய வரைபடம்)

12) தேசிய தனியரசும் பழங்குடி துணையரசும்
(தமிழர்நாட்டில் பழங்குடி மக்களின் நில உரிமை பற்றியது)

13) இழந்தது தேவிகுளம் பீர்மேடு மட்டும்தானா?
(2011 இல் புதிய தலைமுறை இதழில் வந்த மண்மீட்பு கட்டுரை)

14) வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை
(வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப் படுவது பற்றியது)

* சான்றுகள் குறைவாக உள்ளதால் நீக்கப்பட்டது
1) தாலியறுத்தான் சந்தை

* மொத்தம் 300 பக்கங்கள்
* 120 க்கும் மேற்பட்ட படங்கள் (55 வண்ணப்படங்கள்)
* முன்பை விட பக்கங்கள் குறைக்கப்பட்டு நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு வெளிவருகிறது.

தனிப் பஞ்சாபிய நாடு

Separate Punjabi Nation
தனிப் பஞ்சாபிய நாடு

 Dear Punjabi brothers!
we (Tamil nationalists) may hesitate to support Khalistan (based on religious ethnicity),
 but we will support Punjabistan (linguistic ethnicity). 

 அன்புள்ள பஞ்சாபி சகோதரர்களே!
தமிழ்தேசியவாதி ஆகிய நாங்கள் சீக்கிய மத அடிப்படையில் ஆன காலிஸ்தான் கோரிக்கையை ஆதரிப்பதில் தயக்கம் இருக்கலாம்,
 ஆனால் மொழி அடிப்படையிலான பஞ்சாபிய தேசியவாதத்தை ஆதரிப்போம்! 

Map: punjabi speaking land border 
Source: Grierson linguistic map (1933)
முகநூல் பதிவு: 07.03.2023

ஒரே நாடு ஒரே எல்லைக்கோடு முழக்கம்

ஒரே நாடு!
ஒரே எல்லைக்கோடு!
ஒரே இனம்!
ஒரே மொழி!

ஐரோப்பியர் ஆட்சிக்கு முந்தைய ஈழம் வரைபடமாக

ஐரோப்பியர் ஆட்சிக்கு முந்தைய ஈழம் வரைபடமாக

 ஐரோப்பியர் காலத்து தமிழர் தாய்நில வரைபடம் இந்நூலில் தரப்பட்டுள்ளது.
 அது மட்டுமல்லாது இந்நூலில் அகழ்வாராய்ச்சி சான்றுகள் முதல் 1990 ஆம் ஆண்டு வரை நடந்த குடியேற்றம் வரை நமது தாய்நிலம் சுருங்கியது வரைபடமாகத் தரப்பட்டுள்ளது.
 தேவையான சான்றுகள் அனைத்தும் விரிவாக தரப்பட்டு உள்ளன.
சிறப்பான நூல்.
 

நூல்: தமிழீழம் நாடும் அரசும்
ஆசிரியர்: சு. இராசரத்தினம்

Saturday, 10 June 2023

பச்சையப்பன் கல்லூரியில் பறையர் இடம்பெற்றது யாரால்

பச்சையப்பன் கல்லூரியில் பறையர் இடம்பெற்றது யாரால்?

இந்த ராமசாமி பக்தர்கள் எத்தனை ஸ்டிக்கர்தான் கைவசம் வைத்துக்கொண்டு திரிகின்றனர் என்று தெரியவில்லை.
பச்சையப்பன் கல்லூரியில் ஈ.வே.ரா தான் பறையர்களுக்கு இடம் வாங்கிக் கொடுத்தாராம்!
ஆனால் பாருங்கள் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் எழுதிய சுயசரிதையான 'ஜீவிய சரிதம்' நூலில்
‘‘ஜாதி இந்துக்கள் ஸ்தாபித்திருக்கும் ‘பச்சையப்பன்’ கலாசாலையில் பிள்ளைகளைச் சில காலத்திற்குப் பிறகு சேர்க்கவும் இம்மனுவே காரணம்’’ என்று தன்னைப் பற்றி கூறியுள்ளார்.

அதாவது பச்சையப்பன் கல்லூரியில் எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் தொடர்முயற்சியால் 21.11.1927ல் அனுமதி கிடைத்தது.
உடனே ஈ.வே.ரா அனுமதி கிடைத்த செய்தி தனக்கு தெரியாதது போல பச்சையப்பன் கல்லூரியைக் கண்டித்து தன் விபச்சார எழுத்து நடையில் கடுமையாக எழுதி அது ஆறு நாட்கள் கழித்து  27.11.1927 குடி அரசு இதழில் வெளியிடப்பட்டது.
அது வருமாறு,
"தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக் கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாது என்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களையும் (டைனாமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெரிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும் கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன் நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களை விட இழிந்தவர்களா? என்று அறிய விரும்புகின்றோம்."
(குடி அரசு - கட்டுரை - 27.11.1927)

இந்த ஒன்றை வைத்து பச்சையப்பன் கல்லூரியில் பறையர் இடம்பெற காரணமே ஈவேரா அதைக் கையில் எடுத்ததுதான் என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டனர்.

இதற்கு 18 ஆண்டுகள் முன்பே அயோத்திதாசர் 1909 இல் முதன்முதலாக இது பற்றி எழுதியுள்ளார். அது வருமாறு,
"மகாகனந்தங்கிய பச்சையப்பன் என்பவரின் பொதுச்சொத்துக்கு மேற்பார்வை உடையோராய் நியமிக்கப் பெற்ற சாதியாசாரமுடையோர் அதே பச்சையப்பன் காலேஜில் கைத்தொழிற்சாலையை ஏற்படுத்தி, 'சாதியாசாரமுள்ளவர்களை மட்டிலும் அச்சாலையில் சேர்க்கப்படும். சாதியாசாரமில்லாதவர்களை அவற்றுள் சேர்ப்பதில்லை’ என்று பயிரங்க விளம்பரம் வெளியிட்டிருக்கிறார்கள்."
(தமிழன், சனவரி 6, 1909)

அதன்பிறகு எம்.சி.ராஜா மற்றும் ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரின் தொடர்ச்சியான முயற்சியால் பச்சையப்பன் கல்லூரியில் அனைவருக்கும் இடம் தரப்பட்டது.

ஆட்சியில் இருந்த நீதிக் கட்சி வெற்று கடிதங்களையும் அலங்கார அறிக்கைகளையும் விடுத்ததைத் தவிர எதுவும் செய்யவில்லை.

நன்றி: நீதிக் கட்சியின் மறுபக்கம், ம.வெங்கடேசன்

Friday, 9 June 2023

247 மாணவர்கள் விளையாடும் வாய்ப்பை இழந்தனர் அமைச்சர் நடிப்பில் பிசி

247 மாணவர்கள் விளையாடும் வாய்ப்பை இழந்தனர் அமைச்சர் நடிப்பில் பிசி 

 தமிழை விளையாட்டுத் துறை அமைச்சரின் மெத்தனத்தால் தேசிய அளவில் விளையாடக் காத்திருக்கும் 247 மாணவர்கள் வாய்ப்பை இழந்தனர்.
 பங்கேற்க கடிதம் போடவில்லை!
 நிதி ஒதுக்கவில்லை!
இதன் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் உபரி மதிப்பெண்கள் கிடைக்காது!

 பதில் சொல்லவேண்டிய அமைச்சர் உதயநிதி மாமன்னன் படப்பிடிப்பில் இருக்கிறார்!

 //நடப்பாண்டு 247 மாணவர்களை தேர்வு செய்து மே 29ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளி கல்வித் துறை , பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது குறித்த கடிதம் முறையாக சென்று சேரவில்லை எனவும் தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
மேலும் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கப்படும் நிலையில், நடப்பாண்டு அதற்கான நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. 

இதனால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. 

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேரும் பொழுது பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் கூடுதலாக மதிப்பெண்கள் விளையாட்டு பிரிவு தரவரிசையின் போது வழங்கப்படும். நடப்பாண்டில் அந்த வாய்ப்பினை தமிழக மாணவர்கள் இழந்துள்ளனர்.//

நன்றி: தந்தி டிவி .காம்
தமிழகம்? காரணம் என்ன..?
9 Jun 2023 4:50 AM GMT

Thursday, 8 June 2023

சாம்ராஜ் போட்ட சர்பத்

இதுதான் சாம்ராஜ் என்கிற எவரோ ஒருவர் தலைவர் பிரபாகரன் பற்றி கேலியாக எழுதிய கவிதை.....

ஒண்டிப்புலி சர்பத் அந்தத் தீவில் மிகப் பிரபலம்.
சீறும் அதன் சிவப்பு முகமே குப்பியில் லட்சினை.
அது பெயருக்குப் பொருத்தமாய் ஊரில் வேறு எவரும் தலையெடுக்காது பார்த்துக்கொண்டது.
கூழ் பதநீர் கள் எல்லாவற்றிக்கும் தடை.
சர்க்கஸிலும் கூட புளிக்குழம்பு தேச விரோதம்.
மொழியிலிருந்து குதித்தோடியது அந்த நான்கு கால் மிருகம்.
கால் நூற்றாண்டு காலத்தில் அதற்கு சர்பத்திற்கும் ரத்தத்திற்கும் குழப்பம்.
ரத்தத்தை சர்பத் என்றது சர்பத்தை ரத்தம் என்றது.
தீவின் அக்கரையில் வாழும் அதன் கழுதைப்புலி முகவர்கள் விற்று வாழ்ந்தனர் வெகுகாலமாய் அதை.
ஒரு வைகாசி மாதத்தில் ஒண்டிப்புலி ஒண்டிப்புலியாய் கடற்கரையில் மரித்தது.
இறக்கும் மதியப் பொழுதிலும் கடலின் சிவப்பை அது சர்பத் என்றே
இறுதிவரை நம்பியது.
- சாம்ராஜ்

(நன்றி: yarl .com)

  இந்த எழவெல்லாம் ஒரு கவிதை என்றால் பல்லியின் எச்சம் கூட சிற்பம் என்றாகும்!

 இதிலிருந்து தெரிவது என்றால்...
 நாலாந்தர கவிதையாக இருந்தாலும் தமிழ்தேசியத்துக்கு எதிராக இருந்தால் அதை எழுதியவனுக்கு வாயில் கவ்வ கொடுத்துவிடுவார்கள் ஒரு விருதினை!

 

Wednesday, 7 June 2023

கோவில் என்றால் பொதுதான்

 திரௌபதியம்மன் கோவில் பிரச்சனை பற்றி விரிவாகத் தெரியவில்லை.

 கோவில் என்றால் அது பொதுதான்.

 அது ஒரு சாதியில் ஒரு கொத்துக்குள் ஒரு கொடிவழி பங்காளிகள் முட்டுசந்துக்குள் கட்டிக்கொண்ட கோவில் என்றாலும் அதில் சாமி கும்பிட அனைவருக்கும் உள்ளது.

 ஆனால் கோவில் சடங்குகளில் வெளியாட்கள்  உரிமை கோருவதோ தலையிடுவதோ சரியாகாது.

 பொட்டல்புதூரில் எங்கள் சேனைத்தலைவர் சமுதாயம் கட்டிய மாயாண்டி கோவிலில் பரம்பரை பரம்பரையாக பூசாரியாக இருந்துவந்த பறையர் சமுதாயத்தினர் (பிற்கால கோவில் கட்டுமானத்தில் பங்களிப்பு செய்துள்ளனர்) கொடை நடத்த உரிமை கோரியபோது இதேபோல் பிரச்சனை ஆனது.
 அதாவது ஒரு ஊரில் 2,3 சமுதாயங்கள் சேர்ந்து நடத்தும் கோவில்களில் நான்காவதாக ஒரு சமுதாயம் கொடை நடத்த அனுமதி கேட்டு கொடை நடத்திக் கொடுத்து வழிபடுவது இங்கே அடிக்கடி நடக்கும்.
 நேர்த்திக் கடன் நிறைவேற்ற தனிநபர் கேட்பதும் உண்டு.
 ஆனால் ஒரு சமுதாயம் மட்டும் நடத்தும் கோவில்களில் இந்த கொடையை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.
 அது அதே சமுதாயத்தில் அதே கொத்தில் வேறு கொடிவழி கேட்டால் கூட விட்டுத் தருவது அரிது. 
 மேற்கண்ட பறையர் - சேனைத்தலைவர் பிரச்சனையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து ஊர்சபை கோவிலைப் பூட்டிவிட்டனர்.
 அவரவர் தனித்தனியே கொடை நடத்துமாறு கூறிவிட்டனர்.
 கோவிலுக்கு வெளியே எங்கள் சமுதாயம் வாழைத்தண்டில் சந்தனம் அப்பி மாயாண்டி உருவம் செய்துவைத்து கொடை நடத்தியபோது அங்கே வந்த பறையர்கள் பூசை உரிமையைக் கோரி தெருக்களிலேயே குடும்பத்துடன் தங்கிவிட்டனர்.
இவர்களுக்கு உணவும் பிற உதவிகளும் எங்கள் சமுதாயத்தினர்தான் செய்தனர்.
 பிறகு ஊர்சபை கூடி சாமியாடி பூசை செய்யும் அவர்களது உரிமையை அவர்களுக்கே கொடுத்தனர்.
 ஒரு பறையர் சாமியாடி ஊர்சுற்றி எங்கள் சமுதாய வீடுகள் முன் நின்று கால்கள் கழுவப் பெற்று திருநீறு பூசி ஆசீர்வாதம் அளித்து பூசை நடத்திக் கொடுத்தார்.
 பிறகு அடுத்த கொடை வரும்போது சமாதானம் ஆகிவிட்டனர்.
பழையபடி கோவில் சடங்குகள் சேனைத்தலைவர் சமுதாயமும் பூசை உரிமை பறையர்களுக்கும் என்றவாறு தொடர்கிறது.
 இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சிறு கீறல் கூட இல்லாமல் ஒரு கெட்டவார்த்தை கூட பேசாமல் இந்த பிரச்சனை நடந்து முடிந்தது.

 இதைப் போல இன்னொரு உதாரணமும் உள்ளது. வெள்ளங்குழி என்கிற கிராமத்தில் வயல்வெளிகள் மத்தியில் பள்ளர் பெருமக்களுக்குப் பாத்தியப்பட்ட இசக்கியம்மன் கோவில் உள்ளது. என் அப்பாவின் பாட்டி கன்னிப் பெண்ணாக இருக்கும்போது இருட்டிய பிறகு இந்த கோவிலின் அருகே ஓடும் வாய்க்காலைக் கடந்து குறுக்கு வழியில் வீட்டிக்குப் போனாராம். அப்போது இசக்கியம்மன் அவர் மீது இறங்கி காய்ச்சல் கண்டதாம். அந்த கோவிலுக்கு அழைத்துபோய் கூறி கேட்டபோது காத்து கருப்பு அடிக்கப் பார்த்த இந்த கன்னிப் பெண்ணை காப்பாற்ற அவளைப் பிடித்ததாகவும் இதற்கு கைம்மாறாக தனக்கு இந்த பெண் வாக்கப்படும் சந்ததி சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என்றும் சாமி கூறிவிட்டதாம். 
 அதை என் அப்பாவின் ஆச்சி கடைபிடித்து என் ஆச்சி கடைபிடித்து என் அம்மா கடைபிடித்து இன்றும் தொடர்கிறது.
 
 

மேல்பாதி கோவிலுக்கு சீல் வைத்தது சரியா?

மேல்பாதி கோவிலுக்கு சீல் வைத்தது சரியா?

பதிவர்: Deva Sena Pathy

மேல்பாதி கிராமத்தின் வன்னியர்களின் குல தெய்வமான திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் !

 வேங்கைவயல் பிரச்சனையில், ஏழு மாதங்கள் ஆகியும், அங்கு பட்டியல் சமூக மக்களுக்கு நீதி வழங்க வக்கில்லாத திமுக அரசு, இன்று வேண்டுமென்றே திரௌபதி அம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்துள்ளது.

 மேல்பாதி ஊரில் உள்ள பிடாரி அம்மன் கோவில், அனுமன் கோவில், விநாயகர் கோவில், முருகன் கோவில் ஆகிய கோவில்களில் பட்டியல் சமூக மக்கள் அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு தீண்டாமை இருப்பதாக சொல்லப்படுவது அபத்தமானது.

எறையூரில் சில வருடங்களுக்கு முன்பு வன்னியர் கிருஸ்தவர்களுக்கும், ஆதி திராவிட கிருஸ்தவர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு இரண்டு பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த பிரச்சனையில், அந்த ஊரின் சர்ச் சீல் வைக்கப்படவில்லை.
ஆனால், மேல்பாதி-யில் மட்டும் வேண்டுமென்றே இந்து கோவில் என்பதால் அதன் வழிபாடு முடக்கப்பட்டுள்ளது.
தனியார் பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டு, சில குடும்பங்களுக்கு மட்டுமே குலதெய்வமாக இருக்கும் திரௌபதி அம்மன் கோவிலில், அறநிலைய துறைக்கு என்ன வேலை?

அறநிலைய துறையின் அபகரிப்பு முயற்சியை உயர்நீதிமன்றமே ரத்து செய்துவிட்ட பிறகும், அது அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில் என்று ஊடகங்கள் குறிப்படுவது ஏன் ?

அந்த கோவிலில் பிராமணர் சமூகம் உட்பட வேறு எந்த சமூகமும் அனுமதிக்கப்படுவதில்லை. 
அந்த கோவிலை குலதெய்வமாக கொண்டிராத, அல்லது அவர்களது உறவினர்கள் அல்லாத, பிற வன்னியர்களும் அனுமதிக்கப் படுவதில்லை. 
பிறகு எப்படி அதை தீண்டாமை என சொல்லமுடியும் ?

மேல்பாதி கிராமத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எனது தலைமையில் ஒரு சமாதானக் குழு உருவாக்கப்பட்டு அதில் பறையர் பேரியக்கம் தலைவர் சிவகுரு பறையனார், வட்டார வன்னியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொறுப்பாளர்கள் வர்மா, பொன்னுரங்கம் ஆகியோர் இணைந்து மேல்பாதி கிராமத்திற்கு சென்று பறையர் சமூக பெருமக்களையும், வன்னியர் சமூக பெருமக்களையும் சந்தித்தோம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவரையும் சந்தித்து ஆக்கப்பூர்வமான தீர்வுகளை முன்வைத்து வந்திருந்தோம்.

எங்கள் சமாதானக் குழு மேற்கொண்டுவரும் சமாதான முயற்சிகள் வெற்றியடைந்து அமைதி நிலை திரும்பும் நிலையில், அதை குலைக்கும் விதமாக வேண்டுமென்றே திரௌபதி அம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்துள்ளது திமுகவின் விடியா அரசு!

இது அந்த கிராமத்தில் அமைதி திரும்பவதை இந்த திமுக அரசு விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. வேண்டுமென்றே வன்மத்தோடு இரு சமூகங்களிடையே பிரச்சனையை உண்டாக்குவது போல ஒரு அரசாங்கமே நடந்து கொள்வது வேதனையானது.

திமுக அரசின் இந்த செயல்பாடு வன்னியர் பெருமக்களின் திரௌபதி வழிபாட்டை குலைத்து சீரழிக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டிருக்கிறது.

 திமுகவின் விடியா அரசு திரௌபதி கோவிலை உடனடியாக விடுவித்து பட்டா நிலத்தில் இருக்கிற அந்த கோவிலை அபகரிக்கிற முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும்.

Tuesday, 6 June 2023

இரண்டு அருந்ததியர் வன்கொலை

இரண்டு அருந்ததியர் வன்கொலை

 எனக்குத் தெரிந்து திருநெல்வேலி மாவட்டத்தில் பதவிக்காக நடந்த சாதிய கொலை என்றால் ஜக்கன் மற்றும் சேர்வரான் ஆகிய இருவர் கொலைதான்!

 அதாவது காதல், குடும்பம், பணம் என தனிப்பட்ட விடயம் அல்லாமல் பதவிக்கான போட்டியில் ஆதிக்க வெறிகொண்டு செய்யப்பட்ட கொலைகள்!

 2006, 2007 காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் இவை!

 இதில் கொல்லப்பட்ட இருவருமே சக்கிலியர் (அருந்ததியர்) ஆவர்!

இதற்குக் காரணம் இவர்கள் (இடவொதுக்கீடு படி) பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு வந்தது மட்டுமே! 

 இந்த இரண்டு கொலைகளையும் செய்தது இவர்களுக்கு கீழ் பணியாற்றிய ( பஞ்சாயத்து துணைத் தலைவர்) நாயக்கர்கள்! 

 இந்த இரண்டு கொலைகள் பற்றி அருந்ததிய அமைப்புகள் வாய் திறப்பதே இல்லையே ஏன்?!

பதவிக்கான கொலை என்றால் நினைவுக்கு வருவது 1996இல் நடந்த மேலவளவு முருகேசன் கொலை.
 சொல்லப்போனால் மேற்கண்ட இரண்டையும் விட பயங்கரமான சம்பவம் மேலவளவு முருகேசன் கொலை. அது பதவிக்காக செய்யப்பட்டது அல்ல. கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதில் எழுந்த போட்டி சமூக மோதலாக உருவெடுத்தது. பட்ட பகலில் ஓடும் பேருந்தை 20 பேர் (கள்ளர்) பறித்து 6 பேரை (பறையர்) வெட்டிக் கொன்றனர். இதில் கைதானவர்கள் வன்கொடுமை சட்டத்தில் கைதாகவும் இல்லை. பிறகுதான் வழக்கு பதவிக்காக தலித் படுகொலை என மாறியது. 

 அப்போதும் அருந்ததியர் அமைப்புகள் அல்லது தலித் அமைப்புகள் போராட்டம் எதுவும் செய்யவில்லை. புரட்சி பாரதம் பூவை மூர்த்தியார் மட்டுமே போராடினார். குற்றவாளிகள் தண்டனை பெற்று விடுதலையும் ஆகிவிட்டனர். பாதிக்கப்பட்டோர் அரசு வேலை, இழப்பீடு என வழங்கப் பெற்றனர். 

 ஆனால் சக்கிலியர் கொல்லப்பட்ட வழக்குகளில் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை.

அம்பேத்கர் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரா

அம்பேத்கர் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரா 

 இந்திய அளவில் ஜாதி, மதம், மொழி, பிறப்பிடம் என அனைத்தையும் கடந்து தலித் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று நினைப்பது நடக்காத காரியம் ஆகும்.
  இத்தகைய தலித்திய - தேசியத்தை வலியுறுத்துவதன் மூலம் தலித் மக்களை ஒரு போலியான இலக்கை நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பது இந்திய ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்திற்கு வசதியான ஒன்று.

  அம்பேத்கராலேயே இந்த 'இந்திய- தலித்திய ஒருமைப்பாடு' சாத்தியப் படவில்லை.
 அவர் காலத்திற்குப் பிறகு இந்திய அளவில் செல்வாக்கு பெற்ற தலித் தலைவர் யாரும் இதுவரை உருவாகவில்லை.
 அம்பேத்கர் கூட தனது அத்தனை முயற்சிகளிலும் தோல்வியையே அடைந்தார்.
 அவர் ஆளும் வர்க்கத்துக்கு அடிபணிந்து (ஆங்கிலேயர் அல்லது காங்கிரஸ்) அந்த ஆதரவின் மூலம் சில விடயங்களைச் சாதித்தாரே தவிர மக்கள் ஆதரவு அவருக்கு கிடைத்ததே இல்லை.

  இதனை நாம் தற்போது ஆராய்ந்து பார்ப்போம்.
 அம்பேத்கர் தனிமனிதனாக இந்திய அரசியலில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் (அவரது 20 ஆண்டுகால நோக்கமான) பௌத்த மதமாற்றம் ஆகும்.
 அன்று பௌத்த மத மாற்றம் இன்றைய இந்தியாவில் பௌத்தம் மூன்று மடங்கு வளர காரணம் என்கின்றனர்.
 அவருடைய மதமாற்றம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏறத்தாழ சுழியமாக (1951 இல் 0.01%)  இருந்த பௌத்த மதத்தை ஏறத்தாழ 7% ஆக சதவிகிதமாக உயர்த்தியது.

  அதாவது அவர் தனது செல்வாக்கில் உச்ச நிலையில் இருந்த போது தன்னுடைய சொந்த பலத்தில் செய்த ஒரே காரியம் பௌத்த மதமாற்றம் மட்டுமே.
 இந்த ஒரு நிகழ்வை வைத்தே அவருக்கு எந்த அளவு மக்கள் செல்வாக்கு இருந்தது என்பதை நாம் கணக்கிட முடியும்.

 1956 இல் அம்பேத்கர் பௌத்த மதமாற்றம் செய்த போது அவருடன் மதம் மாறியவர்கள் ஏறத்தாழ 6 லட்சம் பேர்!
 இன்று இந்தியாவில் உள்ள பௌத்தர்களில் 78% இவர்களே!

 உண்மை என்னவென்றால் இவர்கள் அனைவரும் அம்பேத்கரது சொந்த ஜாதிக்காரர்கள் மட்டுமே!
  அன்று மகாராஷ்டிராவில் அவருடைய சொந்த ஜாதியான மஹர் சாதி 9% இருந்தனர்.
 அதாவது அம்பேத்கர் தலித்துகளுக்கு பௌத்த மதத்திற்கு மாற அழைப்பு விடுத்த பொழுது அவருடைய சொந்த இனத்தில் அவருடைய சொந்த ஜாதியில் 80% அதைச் செய்தனர்.

 இந்த வட்டத்திற்கு வெளியே அப்போது பௌத்தத்திற்கு மாறியவர்கள் மிகமிக சொற்பம்!

 இந்த ஆதரவுக்கும் காரணம் அம்பேத்கர் தனது ஜாதிக்கு (ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்ததன் மூலம்) ஒரு படையணியை உருவாக்கி கொடுத்தார்.
 (இந்தியாவிலேயே சாதியின் பெயரால் ஒரு படையணி இருக்கிறது என்றால் அது மகர் படையணிதான்!)
 அதன் மூலம் மகர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
 (அதற்கு முன்பே பழைய பாம்பே மாகாணத்தில் 25% ராணுவ சிப்பாய்கள் மகர் சாதியினர்தான்,  இவர்கள் அம்பேத்கரால் தனியான ஒரு படையணியாக மஹர் என்ற பெயரிலேயே இடவொதுக்கீடு போல பெற்றனர். அதன் மூலம் ராணுவத்தில் மகர்களுக்கான பணியிடங்கள் உறுதி செய்யப்பட்டது.
 ஆனால் இன்று அம்பேத்கர் ரசிகர்கள்தான் நாம் சாதியின் பெயரிலேயே இடவொதுக்கீடு கேட்டால் சாதிவெறியன் என்கின்றனர்).
 இதனாலும் இயல்பான சாதிப்பற்றாலும் மகர் சாதியினர் மட்டுமே அவருக்கு முழுமையான ஆதரவை அளித்துள்ளனர்.
 பௌத்த மதமாற்றம் நடந்த போது அன்று மகாராஷ்டிராவில் இருந்த இவரது சொந்த ஜாதினர் முற்று முழுதாக மதம் மாறி இருந்தால் கூட 9% வந்திருக்க வேண்டும்.
 ஆனால் 7% தான் பௌத்தம் எட்டியது.
 இதிலிருந்தே அவரது சொந்த ஜாதினர் கூட 100% அவரை ஆதரிக்கவில்லை எனலாம்.
 தன் சொந்த மாநிலத்தில் தன் சொந்த ஜாதியினரையே 100% திரட்ட முடியாத ஒரு தலைவரை தான் இந்திய அளவிலான தலைவராக தலித்திய வாதிகள் பிம்பப் படுத்துகின்றனர்.

 இவருடன் காந்தியையோ ஜின்னாவையோ நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் காந்தி மக்களுக்கு அழைப்பு விடுத்த போது இந்தியா முழுவதும் மக்கள் அந்த அழைப்பை ஏற்று அவர் சொன்னதை செய்துள்ளனர்.
 ஜின்னா இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்த போது இனம், மொழி தாண்டி இஸ்லாமியர்கள் போராட்டங்களிலும் கலவரங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
  ஆனால் அம்பேத்கர் இந்திய அளவில் அழைப்பு விடுத்த போது அவ்வாறு நடக்கவில்லை.
 எனவே அம்பேத்கரை மையப்படுத்தி கட்டமைக்கப்படும் "இந்திய - தலித்தியம்" எனும் கருத்து ஆளும் வர்க்கத்திற்கும் இந்திய ஏகாதிபத்தியத்திற்கும் சாதகமானது.
 இப்படி மதம் மாறிய அம்பேத்கரிய பௌத்தர்கள் கூட கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடையவில்லை.
 
 இதுவே அம்பேத்கர் தனது இனத்திற்குள் மட்டும் அரசியல் செய்திருந்தாலோ அதிலும் ஒருவேளை மகாராஷ்டிரா தனிநாடு ஆகியிருந்தால் அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பார் அல்லவா?!

 நான் ஏற்கனவே கூறியது போல!
தமிழின தலித்துகள் தனித் தமிழர்நாடு அடைய ஆதரவு தர வேண்டும்!
 இனவாத தேசியத்துடன் தலித்திய அரசியல் தீர்வைத் தர வல்லது.
 இனம் தாண்டிய எந்த அரசியலும் எந்த மக்களுக்கு நன்மை பயக்காது.

 அம்பேத்கர் வாழ்க்கையே இதற்கு சான்று! 

பி.கு: இந்த கட்டுரையில் தலித் என்கிற சொல் எளிமையாகப் புரிந்து கொள்ள மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது.
 இது Scheduled caste பிரிவில் உள்ளவர்களைக் குறிக்கும்.
 

Monday, 5 June 2023

SC நாயுடு

SC நாயுடு

 SC பட்டியலில் தெலுங்கு கவரா (நாயுடு) இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
 ஆம். இருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை வட்டம் (தமிழகத்துடன் இணைந்த பகுதி) தனியான இடவொதுக்கீடு பட்டியல் கொண்டது.
 இதன் scheduled caste பட்டியலில்  Kavara (எண்.11) உள்ளனர்.
 1000 பேர் கூட தேறாத இவர்களுக்கு sc சலுகை கொடுத்துள்ளது திராவிடம்.

நன்றி: தென்காசி சுப்பிரமணியன்

 இதே போல (திருவிதாங்கூர் லிருந்து) கேரளாவுடன் சேர்ந்த பகுதிகள் உண்டு.
 கேரளா SC பட்டியலிலும் Kavara உண்டு. ஆனால் மலையாளிகள் நம் போன்று இளித்தவாயர் இல்லை.
 அவர்களது SC பட்டியல் (எண்.23) இல் தமிழ் அல்லது தெலுங்கு பேசாத கவரா எவரும் இருந்தால் அவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். 
 அதோடு கவரா உட்பிரிவுகள் அத்தனையும் குறித்து இவர்களுக்கு சலுகை கிடையாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
 அதாவது,
23. Kavara (Other than Telugu speaking or Tamil speaking Balija, Kavarai, Gavara, Gavari, Gavarai Naidu, Balija Naidu, Gajalu Balija or Valai Chetty)
என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
 அதாவது இந்த வரையில் எந்த கவராவும் வரமுடியாது.

Saturday, 3 June 2023

நம் முடிவு நெருங்கிவிட்டது

நம் முடிவு நெருங்கிவிட்டது 

 முதலில் பிறருக்கு உதவும் ஆசை இருந்தது. கொல்லாமை கொள்கையாக இருந்தது.

 அதன் பின்னர் பிறரை கொல்லும் ஆசை இருந்தது.
அதனால் தன் சுயநலத்திற்காக பிறரை கொன்றனர். அதன் மூலம் லாபம் அடைந்தனர்.

 அதன் பிறகு தன்னை தானே கொல்லும் ஆசை வந்தது
 இதனால் மது குடித்தனர், புகையிலை புகைத்தனர், வேகமாக வண்டி ஓட்டினர், மேலும் பல ஆபத்தான காரியங்களில் இறங்கினர்.
 தன்னைத் தானே சிறிது சிறிது அழித்து இன்பம் கண்டனர்.

தற்போது இது ஒரு படி மேலே போய் தன்னையும் தன்னுடைய தலைமுறையையும் சேர்த்து கொல்லும் ஆசை வந்துவிட்டது. இதனால் மக்கள் திமுக விற்கு வாக்களித்தனர்.

இதன் மூலம் தான், தன் பிள்ளை, தன் பேரப்பிள்ளை  என மொத்தமாகக் கொல்லும் ஆசையை நிறைவேற்றிக் கொண்டனர்.

 இந்த உலகம் முடிவை நோக்கிச் செல்கிறது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

 தி.மு.க தமிழ்நாட்டில் தோன்றியதால் மட்டுமே இத்தனை காலம் ஒரு மாநிலத்தில் முடங்கி இருககிறது. 
இல்லையென்றால் இவர்களின் தந்திரத்திற்கும் வெறிக்கும் இந்நேரம் இந்த உலகையே விழுங்கியிருப்பர். 

 வேறொரு மாநிலத்தில் ஈவேரா வும் கருணாநிதியும் பிறந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் இவர்கள் ஆட்சியைப் பிடித்து கால் நூற்றாண்டு ஆகியிருக்கும்.

 ஏனென்றால் இவர்களைவிட கொடூரமானது காங்கிரசோ அல்லது பாஜகவோ அல்லவே அல்ல! 

 தந்திரத்தின் இலக்கணமான கருணாநிதியை முற்று முழுமையான வெற்றி பெற விடாமல் கடைசி வரை ஒரு தத்தளிப்பிலேயே வைத்திருந்த தமிழர்கள் இன்று சரியாக பல்விளக்கக் கூடத் தெரியாத ஸ்டாலினிடம் வீழ்ந்து கிடக்கின்றனர்.

 2009 க்குப் பிறகு தனக்கே புரியாத தற்கொலை எண்ணத்துடன் அலைகின்றனர்.

 தமிழர்களை விழிப்படையச் செய்ய முயற்சிப்பது வீண்வேலை என்றே தோன்றுகிறது.

 நேற்று கருணாநிதியின் கேடுகளை நினைவு கூர்ந்த விதம் ஆறுதலாக இருந்தாலும் முன்பு போல வீரியமாக இல்லை!

 நாம் வடுக ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோமா?!

 நம் முடிவை நாமே தேட ஆரம்பித்து விட்டோமா?!

 தன் கழுத்தையும் தன் குழந்தையும் கழுத்தையும் தானே அறுக்க திட்டமிடுபவனை எவர்தான் நெடுநேரம் தடுத்து நிறுத்த முடியும்?!