தீட்சிதர்கள் ஆதரித்த வள்ளலார்
ஒரு பொய்க்கதை உலா வருகிறது...
அதாவது சிறந்த சிவ பக்தராக இருந்த வள்ளலார் சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்களால் அவமானப் படுத்தப் பட்டதாகவும் அதனாலேயே சைவத்தில் இருந்து வெளியேறி தனி மதம் படைத்ததாகவும் சிதம்பரத்துக்கு போட்டியாக அருகிலேயே ஞான சபை எனும் கோவில் கட்டி கருவறை வரை செல்லும் சாதி பாகுபாடு இல்லாத முறையைக் கொண்டு வந்ததாகவும் அந்த கதை கூறுகிறது.
இது உண்மை இல்லை!
இருந்தால் சான்று தரவும்!
வள்ளலார் தனது நூல்களில் பல விடயங்களை இடித்துரைத்து எழுதியுள்ளார். ஆனால் எங்கும் தீட்சிதர் பற்றியோ சிதம்பரம் கோவில் முறைமைகளைப் பற்றியோ இடித்துரைக்கவில்லை.
தனி வழிபாட்டு முறை நிறுவிய நோக்கம் பற்றி கூறும்போதும் தீட்சிதர் அல்லது தில்லை அம்பலம் பற்றி எதுவும் கூறவில்லை.
வள்ளலார் நெடுங்காலம் சைவ அடியாராக இருந்தார் பிற்பாடு அவருக்கு ஞானம் பிறந்தது. வழிபாடு என்பது எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே தனியாக எளிமையான ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தினார். சிலை வழிபாட்டில் எளிமைக்கு அதிக வாய்ப்பில்லை. எனவே ஜோதி வடிவமாக இறைவனை உருவகப் படுத்தினார் (அவர் சைவத்தை விட்டு வெளியேறவில்லை. தன் கோவிலுக்கு வந்து அருளுமாறு சிதம்பர நடராஜரை அழைத்து பாடலும் எழுதுகிறார். இதை வைத்தே தீட்சிதர்கள் மீதான பொய் கட்டமைக்கப் படுகிறது).
வள்ளலாரின் இந்த கொள்கையைய எதிர்த்தவர் தீவிர சைவ மதப் பற்றாளரான யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்!
இவருக்கும் வள்ளலாருக்கும் கருத்தியல் மோதல் பல ஆண்டுகளாக நடந்துவந்தது.
மோதல் உச்சத்திற்கு போக வள்ளலார் சைவ தலைமை பீடமான சிதம்பரத்தின் பூர்வ அந்தணர் குடிகளான தீட்சிதர்களிடம் உதவி கேட்கிறார்.
அவர்கள் சபா நடேச தீட்சிதர் என்பவர் தலைமையில் ஒரு பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்து நாவலருக்கு எதிராகப் பேசுகின்றனர். வள்ளலாரும் இதில் பேசுகிறார். இது நடந்தது கி.பி.1869 இல்!
இதற்கு பதிலடியாக நாவலர் மானநஷ்ட வழக்கு போடுகிறார்.
அவ்வழக்கில் முதல் 5 குற்றவாளிகள் தீட்சிதர்கள்!
ஆறாவது குற்றவாளிதான் வள்ளலார்!
வழக்கை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி கடுமையாகப் பேசிய சபா நடேச தீட்சிதருக்கு ரூ.50 (அப்போது மிகப் பெரிய தொகை) தண்டம் விதித்தும் மென்மையாகப் பேசிய மற்றவரையும் வள்ளலாரையும் விடுதலை செய்துவிடுகிறார்.
இது ஆவணப் படுத்தப்பட்ட சான்று.
ஆக வள்ளலாருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய தீட்சிதர்கள் மீதே பழியைப் போட்டு வள்ளலாரைக் கோவிலை விட்டு தீட்சிதர்கள் துரத்தியதாக கதை எழுதியுள்ளனர் திராவிட அடிப்பொடிகள்!
No comments:
Post a Comment