Tuesday 6 June 2023

இரண்டு அருந்ததியர் வன்கொலை

இரண்டு அருந்ததியர் வன்கொலை

 எனக்குத் தெரிந்து திருநெல்வேலி மாவட்டத்தில் பதவிக்காக நடந்த சாதிய கொலை என்றால் ஜக்கன் மற்றும் சேர்வரான் ஆகிய இருவர் கொலைதான்!

 அதாவது காதல், குடும்பம், பணம் என தனிப்பட்ட விடயம் அல்லாமல் பதவிக்கான போட்டியில் ஆதிக்க வெறிகொண்டு செய்யப்பட்ட கொலைகள்!

 2006, 2007 காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் இவை!

 இதில் கொல்லப்பட்ட இருவருமே சக்கிலியர் (அருந்ததியர்) ஆவர்!

இதற்குக் காரணம் இவர்கள் (இடவொதுக்கீடு படி) பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு வந்தது மட்டுமே! 

 இந்த இரண்டு கொலைகளையும் செய்தது இவர்களுக்கு கீழ் பணியாற்றிய ( பஞ்சாயத்து துணைத் தலைவர்) நாயக்கர்கள்! 

 இந்த இரண்டு கொலைகள் பற்றி அருந்ததிய அமைப்புகள் வாய் திறப்பதே இல்லையே ஏன்?!

பதவிக்கான கொலை என்றால் நினைவுக்கு வருவது 1996இல் நடந்த மேலவளவு முருகேசன் கொலை.
 சொல்லப்போனால் மேற்கண்ட இரண்டையும் விட பயங்கரமான சம்பவம் மேலவளவு முருகேசன் கொலை. அது பதவிக்காக செய்யப்பட்டது அல்ல. கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதில் எழுந்த போட்டி சமூக மோதலாக உருவெடுத்தது. பட்ட பகலில் ஓடும் பேருந்தை 20 பேர் (கள்ளர்) பறித்து 6 பேரை (பறையர்) வெட்டிக் கொன்றனர். இதில் கைதானவர்கள் வன்கொடுமை சட்டத்தில் கைதாகவும் இல்லை. பிறகுதான் வழக்கு பதவிக்காக தலித் படுகொலை என மாறியது. 

 அப்போதும் அருந்ததியர் அமைப்புகள் அல்லது தலித் அமைப்புகள் போராட்டம் எதுவும் செய்யவில்லை. புரட்சி பாரதம் பூவை மூர்த்தியார் மட்டுமே போராடினார். குற்றவாளிகள் தண்டனை பெற்று விடுதலையும் ஆகிவிட்டனர். பாதிக்கப்பட்டோர் அரசு வேலை, இழப்பீடு என வழங்கப் பெற்றனர். 

 ஆனால் சக்கிலியர் கொல்லப்பட்ட வழக்குகளில் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை.

No comments:

Post a Comment