Showing posts with label இயக்கம். Show all posts
Showing posts with label இயக்கம். Show all posts

Sunday, 25 June 2023

அமைப்பு தொடங்க புதிய பெயர்கள்

அமைப்பு தொடங்க புதிய பெயர்கள்

 புதிய கட்சி அல்லது இயக்கம் தொடங்கவுள்ள தமிழ்தேசியர்கள் இந்த யோசனையை எண்ணிப் பார்க்கவும்...

 அமைப்புக்கு வைக்கும் பெயர் மிகவும் முக்கியம்.
 பழைய சொற்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
 தமிழ்தேசியம் கூட பழைய சொல் ஆகி விட்டது. ஏனென்றால் அந்த சொல்லைக் கொண்டு பல்வேறு லெட்டர் பேட் இயக்கங்கள், கட்சிகள், சங்கங்கள், குழுக்கள் வந்துவிட்டன.

 எனவே "தமிழர்தேசியம்" என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
 
 இதைவிட அதிரடியாக வேண்டுமென்றால் "இனம்" எனும் சொல் வருமாறு செய்யலாம்.
தெளிவாக புரிய "தமிழின" என்ற சொல் வருமாறு பார்த்துக் கொள்ளலாம்.

 இதைவிட அதிரடியாக வேண்டுமானால் மக்களை நேரடியாக குறிக்கும் வகையில் "தமிழினத்தார்" என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் 

 இதைவிட அதிரடியாக வைக்க வேண்டுமானால் "குடி" என்பதை சேர்த்துக் கொள்ளலாம்.
 அல்லது இனம், குடி இரண்டும் வருமாறு செய்யலாம்
"தமிழினக் குடிகள்" என்றவாறு...

 அதையும் விட அதிரடியாக என்றால் "சாதி" என்பதை சேர்க்கலாம். தமிழ்ச் சாதியினர் கட்சி, தமிழினச் சாதிகள் , தமிழர் சாதிய ஒற்றுமை என்றவாறு...
(சாதி என்பதற்கு தொல்காப்பியம் கூறும் பொருளைக் கூறலாம். பறவைச் சாதி என்றவாறு)

அதன் முதல் எழுத்துக்களின் சுருக்கமும் குறிப்பிட்ட உச்சரிப்புடன் இருக்கவேண்டும். தி.மு.க போன்று.

படை, கழகம், கட்சி, இயக்கம், விடுதலை, புரட்சி, தமிழ், புதிய, எழுச்சி, முன்னணி, முன்னேற்றம், மக்கள்  என பழைய பதங்களை வைக்காமல் மண், நிலம், சேனை, படையணி, ஒற்றுமை, மீட்பு, எதிர்ப்பு, இணைவு, பிணைந்த போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.

 பெயர் முக்கியம்தான், ஆனால் செயல்பாடு தான் வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.

Wednesday, 5 October 2016

மள்ளர் - மறவர் கூட்டணி

தமிழர்நாட்டுத் தமிழ்ச்சாதிகள் கூட்டமைப்பு

பதிவு போட்டது போதும் என்று தற்போது தம்பி "சுரேஷ்" உடன் இணைந்து,

சாதியாக பிரிந்து...மன்னிக்கவும்...
சாதியாக பிரிக்கப்பட்டு அடித்துக்கொள்ளும் தமிழ் இனக்குழுக்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்குடன்

நான்கு கூட்டணிகளை முகநூலிலும் வாட்ஸ்அப் இலும் உருவாக்கவுள்ளோம்.

இது சிறிய ஆரம்பம்தான்.
இந்நான்கும் இயக்கங்களாகவும் கட்சிகளாகவும் வளரவேண்டும்.

சாதிய அடையாளத்துடன் முதலில் ஒன்றிணைவோம்.
பிறகுதான் சாதிகடந்து தமிழ்ச்சாதியாக ஒன்றிணைவது சாத்தியப்படும்.

முதலில் மள்ளர்-மறவர் கூட்டணி

இவ்விரு இனக்குழுக்களையும்  சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் தமது எண்ணையும் இனக்குழுவையும் தனிசெய்தியிலோ கருத்துகளிலோ அனுப்புங்கள்.

சாதிவெறியர்களும் சாதி ஒளிப்பு பேர்வழிகளும் எட்டிநிற்கவும்.