1980ல் மொரீசியஸ் நாட்டில் பெரிய அளவில் நடந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு
Wednesday, 29 October 2014
மொரீசியஸ் தமிழன்
மொரீசியஸ் தமிழன்
இது புள்ளிவிபரம் அள்ளித்தரும் பதிவல்ல
7ட7ட7ட7ட7ட7ட7ட7ட7ட7ட
மொரீசியஸ் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் அருகே இருக்கும் பெரிய தீவுப் பகுதியான மடகாஸ்கர் அருகே உள்ள சிறிய தீவு ஆகும்.
மொரீசியசில் 75,000 தமிழர் வசிக்கின்றனர். இது அந்நாட்டு மக்கட்தொகையில் 6% ஆகும்.
பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய ஆட்சியின் போது மற்ற எவரைவிடவும் தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
மற்ற இனத்தவருக்காவது சிற்றரசுகள், சமஸ்தானங்கள் போன்றவை இருந்தன.
தமிழர்கள் முழுமையான சுரண்டலில் இருந்தபோது, மற்ற இனங்கள் போல் கேட்க ஆளில்லாத நாதியற்ற தமிழனிம் பஞ்சத்தால் சீரழிந்து கால்வயிறு கஞ்சிக்காக அடிமைகளாக பல்வேறு நாடுகளுக்கு ஓட்டிச்செல்லப்பட்டனர்.
300 ஆண்டுகளுக்கு முன்பு அப்படி சென்றவர்கள்தான் மொரீசியஸ் தமிழர்கள்.
1960ல் 'இந்தியர்கள் குடியேறிய 150வது ஆண்டு' அங்கே இருந்த வடஹிந்தியரால் கொண்டாடப்பட்டது.
அதுவும் உண்மை கிடையாது. ஆங்கிலேய ஆட்சி 1810ல் மொரீசியஸில் ஏற்படுத்தப்பட்டது. அதைக் கணக்கிட்டு இப்படி செய்தனர். மற்றபடி அங்கே தமிழரை விட அதிகம் குடியேறிவிட்ட ஹிந்தியர் 100ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். ஆனால் அந்த நாட்டையே கைப்பற்றிவிட்டனர்.
இன்று அந்நாட்டை ஆள்வோர் ஹிந்தியரே.
தமிழர் அங்கே போய் 250 ஆண்டுகள் ஆகிறது. வடஹிந்தியர் அளவு இல்லாவிட்டாலும் உலகின் மற்ற தமிழரின் பரிதாப நிலையோடு ஒப்பிடும்போது மொரீசியஸ் தமிழர் ஓரளவு நல்லநிலையில் உள்ளனர். அதற்குக் காரணம் அவர்களின் இனப்பற்றுதான். அது பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
ஹிந்தியாவிலிருந்து தலைவர்களை அழைத்துவந்து பெரிய அளவில் தடபுடலாக 1960ல் அவர்கள் 150வது ஆண்டைக் கொண்டாடியபோது தமிழர்கள் குடியேறியதைக் கணக்கிட்டு 250ஆண்டுதான் கொண்டாடப்படவேண்டும் என்று தமிழர் கோரினர். ஹிந்தியன் என்றைக்கு தமிழனை மதித்தான்?
முடியாது என்று சொல்லிவிட்டான்.
அப்போது மொரீசியஸ் தமிழறிஞர் திரு.தங்கணமுத்து,அங்கே ரோஸ்ஹில் பகுதியின் மேயராக இருந்த ஒரு தமிழரை சந்தித்து ஆலோசித்தார்.
பிறகு அவரது தனிப்பட்ட முயற்சியால் பிரான்ஸ், பிரிட்டன், புதுச்சேரி, சென்னை போன்ற இடங்களுக்கு பயணம் செய்து 300 ஆண்டுகள் பழமையான ஆவணங்களைத் திரட்டி மொரீசியஸ் அரசிடம் காட்டினார்.
150வது ஆண்டை கொண்டாடியாயிற்று. எனவே, வேறு எதாவது கேளுங்கள் என்றார் ஹிந்தியரான பிரதமர்.
தமிழர்கள் அடிமையாக வந்துசேர்ந்ததைக் கொண்டாடுவது சரியாக இருக்காது என்று மொரீசியஸின் தலைநகரத்தில் 250வது ஆண்டைக்குறிக்கும் வண்ணம் 250 அடி நினைவுத்தூணும் அதன் திறப்புவிழா அன்று அதனுடைய அஞ்சல்தலை வெளியீடும் கேட்டார்.
இன்றைக்கு மொறீசியஸ் தலைநகரான போர்ட் லூயிஸ் -ல் 'சிலம்பு' என்று பெயரிடப்பட்ட அந்த 250 அடி தூண் மிடுக்காக நிமிர்ந்து நிற்கிறது.
அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது.
அதுமட்டுமா?
1980ல் 'உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டை' மொரீசியஸில் பெரிய அளவில் நடத்திக்காட்டினர்.
90களில் மொரீசியஸின் காசுத்தாளில்(currency) தமிழ் எழுத்துகளும் எண்களும் இடம்பெற்றிருப்பதை நீக்கிவிட்டு இந்தியை புகுத்த ஹிந்தியர் முயன்றபோது கொதித்தெழுந்த தமிழர் பெரிய அளவில் போராடி தமிழைக் காப்பாற்றினர்.
(எங்களுக்குச் செவிசாய்க்காவிட்டால் எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார்- என்றெல்லாம் அப்போது தமிழ் இளைஞர்கள் முழங்கினார்களாம்).
அந்த பணத்தாள்களின் படத்தைத்தான் இன்று நாம் பெருமைபீற்றிக் கொண்டிருக்கோம்.
தொடர்ந்து தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துவரும் மொரீசியசு தமிழர் 2013ம் ஆண்டு கூட 'தமிழ்க் கோவில்கள் கூட்டமைப்பு' சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் நிறுவியுள்ளனர்.
.
.
.
.
விரைவில் ஒருநாள்
எழுவான் தமிழன்.
( https://m.facebook.com/photo.php?fbid=507933492643642&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr )
Tuesday, 28 October 2014
அணையை உடைத்து காவிரியை மீட்டவன்
அணையைத் தகர்த்து
காவிரியை மீட்டவன்
&&&&&&&&&&&&&&
மைசூர் மன்னன் முதலாம் நரசிம்மன் (1141- 1173)
காவிரியைத் தடுத்தபோது
இரண்டாம் இராசராச சோழன் (1145- 1163)
அணையை உடைத்து
காவிரியை விடுவித்தான்.
இதுவே இன்றைக்கு தமிழ் அரசாங்கமும் படையும்
நாம் உருவாக்கியிருந்தோமானால்
காவிரியை கன்னடவன் விதிமீறி அணைகட்டித் தடுத்திருப்பானா?
அல்லது மலையாளி செண்பகவல்லி அணையை உடைத்திருப்பானா?
அல்லது பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவேன் என்று தெலுங்கன் அறிக்கைவிடுவானா?
https://m.facebook.com/photo.php?fbid=507610149342643&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr
Sunday, 26 October 2014
பணக்காரத் தீவிரவாதி (2/2)
'பெரும்பாலும் மக்களுக்கு வரும் பிரச்சனைகள் சிலரால்தான் வரும். பிரச்சனை வரும்போதுதான் அவர்களை தீர்த்துக்கட்டி தேவையானதைப் பறித்துக்கொள்ள நல்லவாய்ப்பு அமைகிறது. மக்களுக்கும் நல்லது நடக்கிறது. மற்றபடி நாங்கள் மக்களுக்கு எந்த உதவியும் செய்வதே கிடையாது. மக்கள் எங்களுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை'.
'இதுவரை கைதாகியிருக்கிறீர்களா?'
'இல்லை, என் கூட்டாளிகளில் ஒருவரைக் கைது செய்து விலங்கிட்டு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.ஒன்று பணம் கொடுத்து அவர் குற்றமற்றவர் என்றாக்க வேண்டும் அல்லது தாக்குதல் நடத்தி காவலை உடைத்து மீட்கவேண்டும் என்ற நிலை. பணம்கொடுத்து சட்டநடவடிக்கை மூலம் அவரை மூன்று மணிநேரத்தில் வெளியேகொண்டுவர ஆணை பிறப்பிக்கவைத்தேன். ஆனால், அவர்கள் விடுதலை செய்யுமுன் அதிரடி நடவடிக்கை மூலம் அவரை மீட்டிருந்தேன். அதன்பிறகு பெரிய படையை அனுப்பினார்கள். எங்களுடன் மோதியதில் அதில் ஒருவர்கூட மிஞ்சவில்லை. அதன்பிறகு பட்டாளத்தை அனுப்பினார்கள் கடுமையான சண்டைக்குப் பிறகு பேச்சுவார்தை நடத்தி போர்நிறுத்தம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்'.
'எப்படி?'
'நேர்மையான ஒருங்கிணைக்கப்பட்ட படையாகவும் எங்களால் இயங்கமுடியும், நேர்மை இல்லாமல் குறுக்குவழியில் தீவிரவாதிகளாகவும் இயங்கமுடியும். உயிரைப்பற்றி கவலையும் இல்லை, ஈவிரக்கம் காட்டுவதும் இல்லை. எங்களுக்கு ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலைகளே உள்ளன.
உலகில் நவீனமாக சந்தைக்கு வரும் தொழில்நுட்பத்தை கள்ளசந்தையில் உடனடியாக வாங்கிவிடுவோம். இந்த வீட்டுக்கு மேலே கூட இரண்டு தாக்குதல் வானூர்திகள் உள்ளன'
'எப்படி இதையெல்லாம் செய்தீர்கள்?'
'நேர்வழியில் இது முடியாது, குறுக்குவழியில் வந்ததுதான். அதுவும் பத்தே ஆண்டுகளில்'.
'நீங்கள் இயங்கும் பகுதிகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?'
'என்மொழி பேசும் மக்கள் வாழும் இடம் அத்தனையும் சில பகுதிகள் நேரடியாகவும் சில பகுதிகள் மறைமுகமாகவும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இங்கே நான் என்ன நினைக்கிறேனோ அது நடக்கும். எந்தவொரு தலைவனுக்கும் அவன் மொழி, வட்டாரம், சாதி, மத மக்களின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கவே செய்யும்'.
'அரசியலில் உங்கள் பங்கு என்ன?'.
'ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு ஆதரவு வழங்குகிறேன். அவர்கள் நேரடியாக அரசியல்கட்சியாக இல்லாமல் அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறார்கள். அவர்கள்தான் எங்கள் கொள்கைகளைப் பரப்புகிறார்கள். மற்றபடி நான் தீர்மானிக்கும் கட்சிதான் ஆட்சிக்கு வரும்'.
'உங்களுக்கு அஞ்சாதவர்களும் உண்டா?'
"உயிர் இருக்கும் எவனும் எனக்கு அஞ்சிதான் ஆகவேண்டும்".
'உங்கள் முன்மாதிரி யார்?'
'உலகில் பட்டாளத்தையே முறியடித்த நிழலுகப் பெருந்தலைகள் இருந்திருக்கிறார்கள். எல்-சாப்போ, வீரப்பன் போன்றவர்கள் என் முன்மாதிரிகள்'.
'போதைப்பொருட்களை கடத்துவதாகச் சொல்கிறார்களே?'.
'ஆம், ஆயுதம் வாங்கும் கள்ளச்சந்தையில் சிலசமயம் போதைப்பொருட்களையும் கைமாற்றவேண்டிவரும். மற்றபடி போதைப்பொருட்களை நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் சொத்துக்களில் சரிபாதி போதைப்பொருள் விற்றவர்களிடம் பறித்ததுதான்.
எங்கள் குழுவினர் எந்த தீயபழக்கமும் இல்லாதவர்கள். அவர்களுக்கு போதை அவர்கள் வாழும் வாழ்க்கைதான்'.
'யாரும் வழிதவறியதே இல்லையா?'.
'இல்லை, குழுவில் சேருமுன் போதைக்கு அடிமையாக இருந்தவர்களை பயிற்சி மூலம் விடுவிப்போம். சிலர் வழிதவறியதால் விண்ணுலகம் அனுப்பிவிட்டோம்'.
'கொலைதான் எல்லாவற்றுக்கும் தீர்வு என்று நினைக்கிறீர்களா?'.
'வேறு தீர்வே இல்லாத சிலருக்கு, தெரிந்தே வரம்பு மீறும் சிலருக்கு, உயிர்வாழத் தகுதியில்லாத சிலருக்கு ஒரே எளிதான தீர்வு ஒரு தோட்டா உடனடி மரணம்'.
'உங்களுக்கு எதிரிகள் உண்டா?'
'எதிரியாக வரலாம் என்று யாரையெல்லாம் சந்தேகிக்கிறேனோ அவர்களை தீர்த்துவிடுவேன்.ஆனாலும், பல எதிரிகள் இருக்கிறார்கள். சரிக்கு சரியான எதிரிகள் சிலர்தான். அவர்களையும் விரைவில் ஒழித்துவிடுவேன்'.
'இது எத்தனை நாளைக்கு?'
'தெரியவில்லை, தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நடைமுறை மாறும்வரை'.
'நீங்கள் அதிகம் பகட்டாக இருப்பதாகத் தோன்றுகிறதே? கொஞ்சம் மக்களுக்கும் கொடுக்கக்கூடாதா?'.
'ஏழை போலவும் எளிமையாக இருப்பதாகவும் பிரபலங்கள் நடிக்கிறார்கள். ஏனென்றால், இங்கே ஏழைகள் அதிகம். ஏழைகளே இல்லாத நாட்டில் ஏழையாக நடிப்பது பலனளிக்காது அல்லவா? யாரும் விரும்பி ஏழையாக இருப்பதில்லை. மக்கள் எப்போதும் உதவிகளை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் வாழ்க்கையில் இடையூறு செய்யாமல் இருந்தால் அவர்கள் வாழ்ந்துகொள்வார்கள். என்னுடைய நோக்கம் தவறான வழியில் சேர்த்துவைப்பவன் இருக்கக்கூடாது. இருந்தால் விட்டுவைக்கமாட்டேன். நாங்கள் பறிப்பதை நாங்களே வைத்துக்கொள்கிறோம். மக்களிடம் பறிப்பது எளிது. ஆனால் பணமுதலைகளிடம் பறிப்பது உயிரைப் பொருட்படுத்தாமல் துணிந்தால்தான் நடக்கும். உயிரைப் பணயம் வைத்து செயல்படுகிறோம். பெரிதாக எதாவது கிடைத்தால்தான் நாங்கள் பெரிதாக செயல்படமுடியும்'.
'உங்களுடைய இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'.
'நான் ஏன் இந்த வாழ்க்கையை வாழ்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, என்னைப் போன்று எங்கள் குழுவினரைப்போன்று வாழாத வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையே அல்ல.ஏதோ செய்கிறேன். ஆனால் செய்வது சரி என்றுமட்டும் சொல்வேன்'.
பணக்காரத் தீவிரவாதி (1/2)
பணக்காரத் தீவிரவாதி
terrorist,rebellion, smugler,businessman, don,leader, murderer,revolutionist, billioner,gangster, racist, humantarian, god father, politician and
ANY PERSONALITY THAT IS EXTREME
அந்த பரவலான தலைவரை பேட்டிகாண பெருமுயற்சி செய்து இசைவு கிடைத்தது,
தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவரைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.
மறைவிடத்தில் இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவரது வீடு ஒரு நகரத்தின் நடுவில் இருந்தது முதல் வியப்பு.
அந்த வீடைப் பார்க்கவேண்டுமே மிகப்பெரிய வீடு, சுற்றி தோட்டம், ஆயுதம் ஏந்திய காவல், பகட்டின் உச்சம் அதையும் மிஞ்சும் கலைநயம். இந்தவீடு அவர் அவ்வப்போது வந்து போவதாம். இதைவிடப் பத்துமடங்கு பெரிய வீடுகள் பல்வேறு நகரங்களில் இருக்கிறதாம்.
ஒரு அறையில் காத்திருக்கச்.சொன்னார்கள். அங்கே அவரது படங்கள் இருந்தன.
அவரைப் பற்றி பலரும் எச்சரித்தார்கள். அதிலும் நான் ஒரு பெண். இருந்தாலும் துணிந்து சென்றேன். அவர் வரைந்த ஓவியங்களும் இருந்தன. அதெப்படி சாதனை நாயகர்கள் அனைவரிடமும் வரையும் பழக்கம் இருக்கிறது?!
'அவர் வந்துவிட்டார்' என்று உடனிருந்தவர் கூற வாசலைப்பார்த்தேன்.
அவர் ஒரு இருசக்கரவண்டியில் கறுப்புகண்ணாடியைக் கழட்டியவாறு வந்திறங்கினார்.
நான் எழுந்து நிற்க, அவர் என்னைக் கடந்துசெல்லும்போது முறைப்பது போல் கூர்மையாகப் பார்த்துவிட்டு ஒரு அறைக்குள் சென்றார். 'மரியாதைக்காக எழுந்துநிற்பது அவருக்குப் பிடிக்காது' என்றார் உடனிருந்தவர். 'அப்படியா? ஏன்?' 'அது அப்படித்தான். எழுத்து நிற்பது, சல்யூட் அடிப்பது, காலில் விழுவது இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. வணக்கம்கூட லேசாக தலையை அசைத்தால் போதும்'.
அவர் உடைகளை மாற்றிக்கொண்டு வந்தார்.
இருக்கையில் அமர்ந்தார்.
உயர்தரமான ஆடைகள் ஆனால் நகைகள் எதுவும் அவர் அணிந்திருக்கவில்லை.
ஆனால் அத்தனை மிடுக்கு.
பால் கலக்காத தேநீரை அவரே தயாரித்து எடுத்துவந்திருந்தார்.
'நாங்கள் பால் பயன்படுத்துவது கிடையாது, அது கன்றுக்காக தாய்ப்பசு சுரப்பது, தவிர பாலில் உள்ள லாக்டோஸ் செறிக்கவும் முடியாமல் கழிவாக வெளியேறவும் முடியாமல் உடலிலேயே தங்குகிறது. இது உடல்நலத்துக்குக் கேடு. இன்று பெண்கள் சீக்கிரமே வயதுக்கு வருவதும் மற்ற விலங்குகளை விட மனிதர்களே அதிகம் பாலியல் வல்லுறவு செய்வதற்கும் பாலருந்துவது ஒரு காரணம். ஏனென்றால் கன்றுதான் விரைவில் பருவமடையும்' என்று கூறினார்.
எனக்கு நான் பார்க்கவந்த ஆள் இவர்தானா? என்று ஐயமேற்பட்டது.
'எந்த மொழியில் பேட்டியை வைத்துக்கொள்ளலாம்?' என்று கேட்டார். 'எனக்கு உங்கள் மொழி நன்றாகத் தெரியும், அதிலேயே வைத்துக்கொள்ளலாம்' என்றேன். 'இல்லை எங்கள் தாய்மொழியை வேற்றுஆட்களுடன் நாங்கள் பேசுவதில்லை, தொடர்புமொழியில் வைத்துக்கொள்ளலாம்' என்றார்.
அதன்பிறகு ஆங்கிலத்தில் பேட்டி தொடர்ந்தது.
'உங்கள் செயல்பாடுகள் என்னென்ன?'
"என் செயல்பாடு உயிரை எடுப்பது, அவன் யாரோ அவன் நோக்கம் என்னவோ இருந்துவிட்டுப்
போகட்டும், என்னைப்போன்ற ஒரு மாந்தனை நான்
கொல்கிறேன், இதுதான் நான் செய்வது, பல
உயிர்களை வாழ வழிசெய்ய சில உயிர்களை நான் கொல்கிறேன்,
இதுதான் என் செயல்பாடு".
'உங்களுக்கு அரசாங்கத்தைப் பற்றி கவலையில்லையா?'.
'இல்லை, அரசாங்கத்தை விட நவீனமான ஆயுதங்கள் என்னிடம் இருக்கும்வரை, சொல்லப்போனால் அரசாங்கமே நான் நடத்துவதுதான்'.
'இருசக்கரவண்டியில் சுற்றுகிறீர்களே, பாதுகாப்பு தேவையில்லையா?'.
'இல்லை, நான் போகும் முன்பே என் உளவு ஆட்களும் பாதுகாவலர்களும் அங்கே பாதுகாப்பை உறுதி செய்திருப்பார்கள்'.
'இதுவரை எத்தனைபேரைக் கொன்றிருப்பீர்கள்?'.
'தெரியவில்லை, ஆயிரக்கணக்கில் இருக்கும்'.
'ஏன்?'.
'என் வழியில் குறுக்கே வருபவர்களை, எதிர்ப்பவர்களை, அவர்கள் தலைதூக்கும் முன்பே நான் தீர்த்திருப்பேன்'.
'வெளிப்படையாகக் கூறுகிறீர்களே பயமில்லையா?'.
'இல்லை'.
'பேட்டி வெளியானபிறகு அரசாங்கம் படையெடுத்து வரலாம்'.
'தோற்றுப்போவார்கள்'.
'எப்படி?'.
'நான் உருவாக்கியுள்ள கூட்டம் அப்படி, அவர் தங்கள் பெருமையை, திமிரைக் காப்பாற்றவேணும் உயிரை பணயம் வைத்து போராடுவார்கள்'.
'எப்படி இதை உருவாக்கினீர்கள்?'.
'அடுத்தவனுக்காக உழைக்காமல், எவனுக்கும் அடிபணியாமல் ஆயுதம் ஏந்தி கொள்ளைக்காரர்களிடம் கொள்ளையடிக்கிறோம். அந்தப் பணத்தைக்கொண்டு நன்றாக வாழ்கிறோம். இப்படி ஒரு வாழ்க்கைக்கு உயிரையே கொடுக்கலாம் என்று எண்ணுபவர்கள் என் படையினர்'.
'எத்தனைபேர் இருப்பார்கள்?'.
'துல்லியமாகத் தெரியவில்லை, ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்'.
'எங்கிருந்து இது தொடங்கியது?'.
'நான் உலகத்தின் புரட்சியாளர்களைப் படித்து புரட்சிகரமாக எதையாவது செய்யவேண்டும் என்று செயல்பட்டு குற்றவாளியானேன். ஆனால், பெரிய அளவில் குற்றம்புரிபவர்கள் வாழ்வாங்கு வாழ்வதைப் பார்த்தேன். பணக்கார முதலாளிகள்தான் போரையும், வெற்றி தோல்வியையும், பேச்சுவாழ்த்தையையும், தீர்ப்புகளையும்,ஒப்பந்தங்களையும், புரட்சிகளையும், ஆட்சிகளையும், வாழ்வையும், சாவையும் தீர்மானிக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக மாற நினைத்தேன். வழி அவர்கள் வழிதான். உயிரைப் பற்றி கவலைப்படாமல், எதற்கும் துணிந்த கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு, ஆயுதங்களை பயன்படுத்தி பணத்தை பறிப்பது, அவர்களுக்கே எதிராக அதைப் பயன்படுத்துகிறேன். அவர்கள் சராசரி மக்களைக் கொள்ளையடித்து சேர்த்துவைந்திருப்பதை நான் பிடுங்கிக்கொள்கிறேன். இன்று உலகத் தீவிரவாத அமைப்புகளில் பணக்காரக் குழு நாங்கள்தான்'.
'இதற்கு தலைவனாக எப்படி ஆனீர்கள்?'
'முதலில் நான்தான் சில நண்பர்களுடன் தொடங்கினேன். தப்பான வழியில் பணம் சேர்ப்பவர்களை கொள்ளையடித்து, கடத்தி, மிரட்டி, கொன்று பணத்தை எடுத்துக்கொள்வோம். இது பெரும்பாலான இளைஞர்களை ஈர்க்கவே குழு பெரிதானது.எங்கள் குழுவிலேயே சிலர் மக்களைத் துன்புறுத்தத் தொடங்க அவர்களை நான் தீர்த்துக்கட்டிவிட்டேன். பிறகு சிலர் தனியே பிரிந்து குழு தொடங்கினர். அவர்களையும் ஒழித்துக்கட்டியபிறகு வேறுவழியில்லாமல் என்னையே தலைவனாக்கிவிட்டனர்'.
'நீங்கள் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் தட்டிக்கேட்கிறீர்களா?.
Saturday, 25 October 2014
அணையை உடைத்துக்காட்டிய மலையாளி
அணையை
உடைத்துக்காட்டிய
மலையாளி
??? ??? ???
??? ??? ???
??? ??? ???
முல்லைப்பெரியாறு சில உண்மைகள் நூலிலிருந்து,
செண்பக அணை உடைப்பு :
1954 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் தமிழக அரசு ராஜபாளையத்தை அடுத்துள்ள செண்பகவல்லி அணையை கட்டியது.
1976 ஆம் ஆண்டு கேரள அரசு இடுக்கி அணையை கட்டி முடித்தது. இடுக்கி அணைக்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக கேரளவனத் துறையினர் 1981ஆம் ஆண்டு தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து தமிழக அரசு கட்டியிருந்த செண்பகவல்லி அணையை உடைத்து விட்டனர்(?!?!???)
கேரள அரசு இப்படி அத்துமீறி நடந்தும் தமிழக அரசு அப்போது எச்சரித்ததோடு விசயத்தை பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டது.
பின் தமிழக (பொதுப்பணித்துறை) அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தவே தமிழக அரசு செண்பகவல்லி அணையை கேரள அரசு கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தியது.
இடித்த அணையை கட்டித் தருவதாக ஒப்புக்கொண்ட கேரள அரசு அதில் பகுதி,பணம் தமிழக அரசிடம் கேட்டது(??).
தமிழக வனப்பகுதியில் கேரள.அரசு உடைத்த செண்பக அணையை கட்டித் தருவதற்காக கடந்த 1991 ஆம் ஆண்டு ரூபாய் 5லட்சத்து 50ஆயிரத்தை தமிழக அரசு கோட்டயத்தில் உள்ள கேரள நீர் வளத்துறை அலுவலகத்திக்கு வழங்கியது.
அணையையும் உடைத்து, பணமும் பெற்று கொண்டு கேரள அரசு இதுவரை அந்த அணையை கட்டவில்லை. "உடைந்த அணைக்கு நஷ்ட ஈடாக பணத்தை கேரள அரசிடம் வாங்குங்கள், நாம் நம்முடைய இடத்தில் அணை கட்டிககொள்வோம்" என்று தமிழக அதிகாரிகள் தடுத்தும் கேட்காமல் தமிழக அரசு கேரள அரசிடம் செண்பகவல்லி அணையையும் இழந்து பின் பணத்தையும் இழந்து நிற்கிறது.
கண்ணாடி முன் சென்று உங்கள் முகத்தைப் பார்த்து காறித் துப்பிக்கொள்ளுங்கள்.
நான் அதைத்தான் செய்தேன்.
( https://m.facebook.com/notes/walter-williams/அணையை-பலப்படுத்த-நடந்த-பணிகள்-முல்லை-பெரியாறு-சில-உண்மைகள்-2/208401425900883?fref=nf )
https://m.facebook.com/photo.php?fbid=506527702784221&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr
Thursday, 23 October 2014
திருவனந்தபுரம் தமிழன் சொத்து
திருவனந்தபுரம் தமிழன் சொத்து
2ஜி ஊழல் 1.75 லட்சம் கோடி
அதைவிடப் பெரிய தமிழ்ச் சொத்து பறிபோனது
யாருக்காவது தெரியுமா?
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 2011ல் குவியல் குவியலாகத் தங்கமும் வைரமும் கிடைத்தது;
இதை மதிப்பிடும் பணி 2014 ஆகஸ்டில் முடிந்தது.
விலைமதிப்பு கணக்கிடப்பட்ட பொருட்களின் மதிப்பு மட்டும் இரண்டரை இலட்சம் கோடி
மேலும் வைரம்,வைடூரியம் போன்ற மதிப்பிட முடியாத பொருட்களும் உள்ளன.
இது கேரள அரசுக்கோ அல்லது ஹிந்திய நடுவணரசுக்கோ போய்ச்சேரவுள்ளது.
ஆனால், இது தமிழர்களுக்கு தமிழக அரசுக்கு சேரவேண்டியது ஆகும்.
பத்மநாபபுரம் கோவிலைக் கட்டிய வேணாட்டு அரசர்களின் தலைநகரான பத்மநாபபுரம் தமிழகத்தில் நாகர்கோவில் அருகே உள்ளது.
இதைத் திற்பரப்பு, கல்குளம் என்றும் அழைப்பர்.
1061ல் ஐயடிகள் திருவடி என்கிற தமிழ்மன்னன் இந்தத் திற்பரப்பில்தான் வேணாட்டு அரசமரபைத் தோற்றுவித்தான்.
தொடர்ந்து வந்த 42வேணாட்டு அரசர்கள் சேரநாட்டை மலையாள மயமாக்காமல் தமிழர்நிலமாகவே நீடிக்க தொடர்ந்து போராடுகிறார்கள்.
அன்றைய நம்பூதிரிகளின் தலைநகர் போன்றது தற்போது தமிழகத்தில் உள்ள சுசீந்திரம்.
அன்று வேணாட்டு அரசர்கள் இல்லாவிட்டால் சுசீந்திரத்தை மீட்டிருக்கமுடியாது.
இந்த மரபில் 'மூன்றாம் ஆதித்தவர்மன் திருவடி' என்ற மன்னனையும் அவனது 5மகன்களையும் நம்பூதிரிகள் நஞ்சு வைத்துக் கொன்றனர்.
அவனது மனைவியான உமையம்மை பெரும்முயற்சி செய்து அரசை மீட்டார்.
கிட்டத்தட்ட வேலுநாச்சியார் வாழ்க்கை போலத்தான்.
இதன் கடைசி மன்னன் 'பாலமார்த்தாண்ட வர்மன் திருவடி' தற்போதைய திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாபசாமியின் தீவிர பக்தனாக இருந்தான்.
தனது தலைநகரான திற்பரப்பை பத்மநாபபுரம் என்று பெயர்மாற்றம் செய்தான்.
(தமிழர்களின் வெட்கக்கேடு தமிழகத்தில் உள்ள 'பத்மநாப அரண்மனை' கேரளாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தமிழக முதல்வரே அதற்குள் போகவேண்டுமானால் அதை நிர்வகிக்கும் மலையாளிகளிடம் கேரள அரசின் சின்னம் பொறித்த சீட்டை வாங்கிவிட்டுத்தான் போகமுடியும்.
ஆனால், அந்த அரண்மனையின் கல்வெட்டு,வாள்,கேடயம்,ஆவணம், நாணயங்கள் அனைத்திலும் தமிழே காணப்படுகிறது.)
இவன் திருவரங்கம் (சிறிரங்கம்) கோவிலைப் போலவே பத்மநாபசாமிக்கு நகலெடுத்ததுபோலக் கோவில் கட்டினான். இவனுக்குப் பிள்ளைகள் இல்லை. இவன் இரண்டு பெண்களைத் தத்தெடுத்தான் அதன்பிறகு அந்த வம்சம் மலையாளியாகிப்போனது. திருவடி என்ற அடைமொழிக்குப் பதில் திருநாள் என்ற அடைமொழியைப் போட்டுக்கொண்டனர். தற்போதைய மன்னன் பெயர் உத்திராடம் திருநாள்.
பாலமார்த்தாண்டன் சாகும்போது கோவில்சொத்துக்களையெல்லாம் பாதாள அறையில் வைத்துப்பூட்டி இதைத் திறப்பவர்கள் பாம்புதீண்டி சாவார்கள் என்று எழுதிவிட்டு இறந்துவிட்டான்.
அந்த சொத்துக்கள்தான் தற்போது வெளியே வந்துள்ளன.
இதை வெளியேகொண்டு வந்தவரும் ஒரு தமிழரே ஆவார்.
மன்னர் தலைமையில் பத்மநாபசாமி கோவில் தேவஸ்தான கமிட்டி கூடி அறைகளைத் திறப்பது என்று தீர்மானம் செய்கிறது.
இது வெளியே கசிந்துவிடுகிறது.
அக்கோவில் பக்தரும் வழக்கறிஞருமான சுந்தரராஜன் என்ற திருநெல்வேலிச் சீமை அம்பாசமுத்திரத்தில் பிறந்த ஒரு தமிழனுக்குத் தெரிந்துவிடுகிறது.
சிறிதும் தாமதியாமல் அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் இக்கோவில் சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வழக்குப் போடுகிறார். பிறகு வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது. உலகத்திற்கே இவ்விடயம் தெரியவருகிறது.
இன்று அந்தத் தன்மானத் தமிழன் உயிருடன் இல்லை.
பெருமதியான இச்சொத்துக்கள் மலையாள அரசுக்கே போய்ச்சேரவுள்ளது.
(இதற்கு வசதியாக கோவிலில் இருந்த தமிழ்க் கல்வெட்டுக்கள் எல்லாவற்றையும் தூய்மைபடுத்துகிறோம் என்ற பெயரில் அரவை(grinder) வைத்து தேய்த்து மலையாளிகள் அழித்துவிட்டனர். ஆனாலும் அதன் திருச்சுற்றில்(பிரகாரம்) கூரையில் பாண்டியர் சின்னமான மீன்சின்னம் இருக்கிறது.)
மலையாளிகளிடம் நாம் பறிகொடுத்தது கொஞ்சநஞ்சமல்ல.
1949ல் தமிழர் பெரும்பான்மையாக இருந்த திருவாங்கூர் சமஸ்தானமும் மலையாள பெரும்பான்மை கொச்சி சமஸ்தானமும் (இரண்டையும் ஆண்டோர் மலையாளிகள்) 1949ல் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானமாக இணைகின்றன.
இதற்கு முதல்வராக இருந்த பட்டம்தாணுப்பிள்ளை என்ற மலையாளி மொழிவழி மாநில அமைப்பின்போது தமிழகத்துடன் சேரப் போராடிய தமிழர்களை வன்முறையால் அடக்கி ஒடுக்குகிறான்.
( பழனி மாணிக்கம், திருவலங்காடு கோவிந்தசாமி சிறையிலேயே அடித்துக் கொல்லப்பட்டனர்; 7பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்; 10,000பேருக்கு மேல் காணாமல் போயினர்)
அன்றைய தமிழ்த் தலைவர்களான மார்சல் நேசமணி,நத்தானியேல்,பி.எஸ்.மணி ஆகியோர் தமிழகத்தலைவர்களிடம் கேரளாவில் இருக்கும் 9தமிழ்வட்டங்களைத் (தாலுகா) தமிழகத்துடன் இணைக்க உதவி கோரினர்.
காமராசர் (தற்போதும் கேரளாவில் தமிழர் 90%வசிக்கும்) தேவிகுளம், பீர்மேட்டை இணைக்க அவர்கள் கோரியபோது 'குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாதான்' என்றுவிட்டார்.
ஈ.வே.ரா உதவிகேட்டு வந்தவர்களை முடியாது என்றுகூறி திருப்பியனுப்பினார்.
ம.பொ.சி,ஜீவானந்தம் ஆகியோர் உதவினர்.
9வட்டங்களில் 4வட்டங்கள் தமிழகத்துடன் இணைந்தது அதில் கன்னியாகுமரி, செங்கோட்டை, கல்குளம்,பிளவன்கோடு, அகஸ்தீஸ்வரம், தோவாளை, குற்றாலம், நாகர்கோவில் போன்ற முக்கிய இடங்கள் மீட்கப்பட்டன.
மீதி 5வட்டங்கள் பறிபோயின.
இதில் திருவனந்தபுரம், ஆனைமலைக் குன்று, பாலக்காடு, முல்லைப்பெரியாறு அணைக்கட்டு, தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி, தேக்கடி,பரம்பிக்குளம் நீர்நிலை, கொல்லங்கோடு, நெய்யாறு நீர்நிலை, பொன்முடி போன்ற முக்கியமான பகுதிகள் பறிபோயின.
பறிபோன திருவனந்தபுரம் தற்போதைய கேரளத் தலைநகரம் தமிழர் மண்ணேயாகும்.
காந்தளூர் சாலை என்று இராசராசசோழன் கல்வெட்டுகளில் வருவது அனந்தப்பபுரமே ஆகும்.அங்கே தமிழ்ப் பல்கலைகழகம்கூட இருந்தது.
அதற்கு மூவேந்தர்களும் கொடை கொடுத்திருந்தனர்.
திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் தற்போதும் தமிழரே வாழ்கின்றனர். அலங்கோட்டு ஆசான் என்பவர் தலைமையேற்க தொல்காப்பிய அரங்கேற்றப்பட்டது.
அந்த அலங்கோடுதான் திருவலங்கோடு அதைத்தான் திருவாங்கோர் (travangore) என்று திரித்துள்ளனர்.
வேணாட்டு அரசரின் மலையாள வாரிசுகள் கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு தலைநகரை மாற்றுகின்றனர்.
திருவனந்தபுரம் சேரநாட்டில் எப்போதும் இருந்ததில்லை.அது (தமிழக)நாஞ்சில் நாட்டின் பகுதியாகத்தான் இருந்தது.
திருவனந்தபுரத்தின் உட்பகுதியிலும், நகருக்கு வெளியே சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வாழ்வோர் தமிழரே.
நம் அப்பனும் தாத்தனும் கொஞ்சம் சூடு சுரணை உள்ள பிறவிகளாக இருந்திருந்தால் திருவனந்தபுரம் நம்மிடம் இருந்திருக்கும்.
முல்லைப்பெரியாறு நம்மிடம் இருந்திருக்கும்.
45% கேரளா நம்மிடம் இருந்திருக்கும்.
பத்மநாபசாமி கோயில் சொத்து
http://m.youtube.com/watch?v=CUznor_kPgo&itct=CB0QpDAYCCITCIWuwOi5w8ECFQQJywoddTIA91Iw4K6V4K-B4K6k4K-N4K6k4K-B4K6V4K-N4K6V4K6w4K6j4K6Z4K-N4K6V4K6z4K-N&hl=en-GB&gl=IN&client=mv-google
https://m.facebook.com/photo.php?fbid=505955586174766&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739