Wednesday 29 October 2014

மொரீசியஸ் தமிழன்

மொரீசியஸ் தமிழன்

இது புள்ளிவிபரம் அள்ளித்தரும் பதிவல்ல

7ட7ட7ட7ட7ட7ட7ட7ட7ட7ட

மொரீசியஸ் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் அருகே இருக்கும் பெரிய தீவுப் பகுதியான மடகாஸ்கர் அருகே உள்ள சிறிய தீவு ஆகும்.

மொரீசியசில் 75,000 தமிழர் வசிக்கின்றனர். இது அந்நாட்டு மக்கட்தொகையில் 6% ஆகும்.

பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய ஆட்சியின் போது மற்ற எவரைவிடவும் தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
மற்ற இனத்தவருக்காவது சிற்றரசுகள், சமஸ்தானங்கள் போன்றவை இருந்தன.
தமிழர்கள் முழுமையான சுரண்டலில் இருந்தபோது, மற்ற இனங்கள் போல் கேட்க ஆளில்லாத நாதியற்ற தமிழனிம் பஞ்சத்தால் சீரழிந்து கால்வயிறு கஞ்சிக்காக அடிமைகளாக பல்வேறு நாடுகளுக்கு ஓட்டிச்செல்லப்பட்டனர்.

300 ஆண்டுகளுக்கு முன்பு அப்படி சென்றவர்கள்தான் மொரீசியஸ் தமிழர்கள்.

1960ல் 'இந்தியர்கள் குடியேறிய 150வது ஆண்டு' அங்கே இருந்த வடஹிந்தியரால் கொண்டாடப்பட்டது.
அதுவும் உண்மை கிடையாது. ஆங்கிலேய ஆட்சி 1810ல் மொரீசியஸில் ஏற்படுத்தப்பட்டது. அதைக் கணக்கிட்டு இப்படி செய்தனர். மற்றபடி அங்கே தமிழரை விட அதிகம் குடியேறிவிட்ட ஹிந்தியர் 100ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். ஆனால் அந்த நாட்டையே கைப்பற்றிவிட்டனர்.
இன்று அந்நாட்டை ஆள்வோர் ஹிந்தியரே.
தமிழர் அங்கே போய் 250 ஆண்டுகள் ஆகிறது. வடஹிந்தியர் அளவு இல்லாவிட்டாலும் உலகின் மற்ற தமிழரின் பரிதாப நிலையோடு ஒப்பிடும்போது மொரீசியஸ் தமிழர் ஓரளவு நல்லநிலையில் உள்ளனர். அதற்குக் காரணம் அவர்களின் இனப்பற்றுதான். அது பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

ஹிந்தியாவிலிருந்து தலைவர்களை அழைத்துவந்து பெரிய அளவில் தடபுடலாக 1960ல் அவர்கள் 150வது ஆண்டைக் கொண்டாடியபோது தமிழர்கள் குடியேறியதைக் கணக்கிட்டு 250ஆண்டுதான் கொண்டாடப்படவேண்டும் என்று தமிழர் கோரினர். ஹிந்தியன் என்றைக்கு தமிழனை மதித்தான்?
முடியாது என்று சொல்லிவிட்டான்.

அப்போது மொரீசியஸ் தமிழறிஞர் திரு.தங்கணமுத்து,அங்கே ரோஸ்ஹில் பகுதியின் மேயராக இருந்த ஒரு தமிழரை சந்தித்து ஆலோசித்தார்.
பிறகு அவரது தனிப்பட்ட முயற்சியால் பிரான்ஸ், பிரிட்டன், புதுச்சேரி, சென்னை போன்ற இடங்களுக்கு பயணம் செய்து 300 ஆண்டுகள் பழமையான ஆவணங்களைத் திரட்டி மொரீசியஸ் அரசிடம் காட்டினார்.
150வது ஆண்டை கொண்டாடியாயிற்று. எனவே, வேறு எதாவது கேளுங்கள் என்றார் ஹிந்தியரான பிரதமர்.
தமிழர்கள் அடிமையாக வந்துசேர்ந்ததைக் கொண்டாடுவது சரியாக இருக்காது என்று மொரீசியஸின் தலைநகரத்தில் 250வது ஆண்டைக்குறிக்கும் வண்ணம் 250 அடி நினைவுத்தூணும் அதன் திறப்புவிழா அன்று அதனுடைய அஞ்சல்தலை வெளியீடும் கேட்டார்.

இன்றைக்கு மொறீசியஸ் தலைநகரான போர்ட் லூயிஸ் -ல் 'சிலம்பு' என்று பெயரிடப்பட்ட அந்த 250 அடி தூண் மிடுக்காக நிமிர்ந்து நிற்கிறது.
அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது.

அதுமட்டுமா?
1980ல் 'உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டை' மொரீசியஸில் பெரிய அளவில் நடத்திக்காட்டினர்.

90களில்  மொரீசியஸின் காசுத்தாளில்(currency) தமிழ் எழுத்துகளும் எண்களும் இடம்பெற்றிருப்பதை நீக்கிவிட்டு இந்தியை புகுத்த ஹிந்தியர் முயன்றபோது கொதித்தெழுந்த தமிழர் பெரிய அளவில் போராடி தமிழைக் காப்பாற்றினர்.
(எங்களுக்குச் செவிசாய்க்காவிட்டால் எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார்- என்றெல்லாம் அப்போது தமிழ் இளைஞர்கள் முழங்கினார்களாம்).
அந்த பணத்தாள்களின் படத்தைத்தான் இன்று நாம் பெருமைபீற்றிக் கொண்டிருக்கோம்.
தொடர்ந்து தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துவரும் மொரீசியசு தமிழர் 2013ம் ஆண்டு கூட 'தமிழ்க் கோவில்கள் கூட்டமைப்பு' சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் நிறுவியுள்ளனர்.
.
.
.
.

விரைவில் ஒருநாள்
எழுவான் தமிழன்.

( https://m.facebook.com/photo.php?fbid=507933492643642&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr )

No comments:

Post a Comment