Saturday 25 October 2014

அணையை உடைத்துக்காட்டிய மலையாளி

அணையை
உடைத்துக்காட்டிய
மலையாளி

??? ??? ???
??? ??? ???
??? ??? ???

முல்லைப்பெரியாறு சில உண்மைகள் நூலிலிருந்து,

செண்பக அணை உடைப்பு :

1954 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் தமிழக அரசு ராஜபாளையத்தை அடுத்துள்ள செண்பகவல்லி அணையை கட்டியது.
1976 ஆம் ஆண்டு கேரள அரசு இடுக்கி அணையை கட்டி முடித்தது. இடுக்கி அணைக்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக கேரளவனத் துறையினர் 1981ஆம் ஆண்டு தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து தமிழக அரசு கட்டியிருந்த செண்பகவல்லி அணையை உடைத்து விட்டனர்(?!?!???)

கேரள அரசு இப்படி அத்துமீறி நடந்தும் தமிழக அரசு அப்போது எச்சரித்ததோடு விசயத்தை பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டது.
பின் தமிழக (பொதுப்பணித்துறை) அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தவே தமிழக அரசு செண்பகவல்லி அணையை கேரள அரசு கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தியது.
இடித்த அணையை கட்டித் தருவதாக ஒப்புக்கொண்ட கேரள அரசு அதில் பகுதி,பணம் தமிழக அரசிடம் கேட்டது(??).
தமிழக வனப்பகுதியில் கேரள.அரசு உடைத்த செண்பக அணையை கட்டித் தருவதற்காக கடந்த 1991 ஆம் ஆண்டு ரூபாய் 5லட்சத்து 50ஆயிரத்தை தமிழக அரசு கோட்டயத்தில் உள்ள கேரள நீர் வளத்துறை அலுவலகத்திக்கு வழங்கியது.

அணையையும் உடைத்து, பணமும் பெற்று கொண்டு கேரள அரசு இதுவரை அந்த அணையை கட்டவில்லை. "உடைந்த அணைக்கு நஷ்ட ஈடாக பணத்தை கேரள அரசிடம் வாங்குங்கள், நாம் நம்முடைய இடத்தில் அணை கட்டிககொள்வோம்" என்று தமிழக அதிகாரிகள் தடுத்தும் கேட்காமல் தமிழக அரசு கேரள அரசிடம் செண்பகவல்லி அணையையும் இழந்து பின் பணத்தையும் இழந்து  நிற்கிறது.

கண்ணாடி முன் சென்று உங்கள் முகத்தைப் பார்த்து காறித் துப்பிக்கொள்ளுங்கள்.

நான் அதைத்தான் செய்தேன்.

( https://m.facebook.com/notes/walter-williams/அணையை-பலப்படுத்த-நடந்த-பணிகள்-முல்லை-பெரியாறு-சில-உண்மைகள்-2/208401425900883?fref=nf  )
https://m.facebook.com/photo.php?fbid=506527702784221&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr

No comments:

Post a Comment