Saturday, 11 October 2014

புகென்வில்லில் பிறப்போம்

புகென்வில் என்ற தீவானது (Bouganville island) ஆஸ்திரேலியாவுக்கு அருகே இருக்கும் பப்புவா நியூகெனிக்கு அருகே உள்ளது.

1,80,000 மக்கள் தொகை கொண்ட சிறிய தீவான புகென்வில்லின் விடுதலைப் போராட்டம் பற்றி கூற வார்த்தைகள் வரவில்லை.

1967ல் புகென்வில்லில் காப்பர் இருப்பது கண்டறியப்பட்டது;
1968ல் அங்கே 220ஹெக்டேர் மழைக்காடுகளை நஞ்சு தூவியும், வெட்டியும், எரித்தும் அழித்துவிட்டு பெரிய காப்பர் தோண்டும் சுரங்கம் அமைக்கப்பட்டது.

1975ல் பப்புவா நியூகெனி தனிநாடானபோது (உலகின் எல்லாத் தீவுகளைப் போலவும்) வல்லாதிக்கங்கள் பந்தாடி பந்தாடி இறுதியாக பப்புவா நியூகெனியின் கீழ் புகென்வில் வந்தது;
அறப்(நியாயப்)படி புகன்வில் சாலமன் தீவுகளுடன்தான் இணைக்கப்படவேண்டும்;
ஆனால், ஆஸ்திரேலியாவின் ஆதரவுடன் அங்கே சுரங்கம் நடத்திய பணமுதலைகள் அவ்வாறு நடக்கவிடாது ஆஸ்திரேலியாவின் அடிவருடி நாடான பப்புவா-நியூகெனியுடன் அத்தீவு இணையுமாறு பார்த்துக்கொண்டனர்.

புகன்வில் மக்கள் தாய்வழிச் சமூகம்;
நிலமானது தாய் அதன்பிறகு அவளது மகள் என்றுதான் கைமாறும்;
காப்பரைத் தோண்டியெடுக்க 800 பெண்களிடம் நிலம் பிடுங்கப்பட்டது;
காப்பர் சுரங்கத்தின் கழிவுகள் மலைபோல் குவிந்தன;
அந்தத் தீவின் உயிராறான(ஜீவநதி) ஜாபா நஞ்சாகிவிட்டது;
கடல் மாசானது;
மீன்கள் செத்துமிதந்தன;
மீன்வளம் ஒழிந்தது, அந்தத் தீவில் மீன்பிடிப்பதே முதன்மைத் தொழில் அந்த அப்பாவி மக்கள் கொத்தடிமை போல அதே சுரங்கத்திற்கு வேலைக்குச் செல்லவேண்டிய நிலை;
சுரங்கமோ நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டே போனது;
புகன்வில் மக்கள் ஆர்ப்பாட்டம், மனு, கோரிக்கை, ஊர்வலம் எல்லாம் செய்துபார்த்தார்கள், எதுவும் நடக்கவில்லை.

20 வருடங்களாக பொறுமைகாத்த இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்;
1988ல் 4,5 இளைஞர்கள் சுரங்கத்தின் வெடிபொருளையேத் திருடி சுரங்கத்தின் மின்னாலையிலும் முக்கியமான இயந்திரங்களிலும் பொருத்தி வெடிக்கச்செய்தனர்;
பெரிய சேதம்; சுரங்கம் மூடப்பட்டு அதிலிருந்தவர்கள் ஓடிவிட்டனர்;
அதன்பிறகு பப்புவா நியூகெனியா படையை அனுப்பியது ஏனென்றால் அந்நாட்டின் உற்பத்தியில் 45% சுரங்கத்திலிருந்தே வந்துகொண்டிருந்தது;
அவர்கள் போய் மண்ணின் மைந்தர்களிடம் அடிவாங்கிவிட்டு வந்தனர்;
பப்புவா- நியூகெனி அடுத்த படையை அனுப்பியது;
அவர்களையும் தோற்கடித்தனர்;
அதன்பிறகு ஆஸ்திரேலியாவின் உதவியுடன் அந்த நாட்டைத் தனிமைப் படுத்தினர்;
அந்த நாட்டுக்குள் யாரும் போகமுடியாது யாரும் அந்நாட்டை விட்டு வெளியே வரவும் முடியாது;
எந்த நாடும் அவர்களுக்கு உதவவில்லை;
அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவும் முடியாது;
சுரங்கத்தின் கழிவுகளால் அந்த மக்களுக்கு குடிநீர்கூட மிஞ்சவில்லை.

உலகில் யாராயிருந்தாலும் நம்பிக்கை இழந்திருப்பர், ஆனால் புகன்வில் மக்கள் தோல்வியை ஏற்கவில்லை.
பெரிய பெரிய நாடுகள், பெரிய படைகள், நவீன ஆயுதங்கள் ஆதிவாசி மக்களான புகென்வில்காரர்கள் என்ன செய்யமுடியும்?

புகென்வில் புரட்சிப் படை ஒன்றை நிறுவினார்கள்;
தென்னை மரங்களை நட்டனர்;
அவர்கள் தேங்காயே உணவாக இளநீரே குடிநீராக தேங்காயெண்ணையே எரிபொருளாகக்கொண்டு அவர்கள் உயிர்வாழ்கின்றனர்;
ஒரு நாளைக்கு 20 நேரம் உழைக்கிறார்கள்;
கைவிடப்பட்ட சுரங்கத்திலிருந்து வண்டிகளையும் இயந்திரங்களையும் எடுத்துக்கொண்டு அவற்றை தேங்காய் எண்ணெயில் இயங்குமாறு வடிவமைத்தனர்;
சுரங்கத்திலிருந்து கிடைத்த குழாய்களை துப்பாக்கிகளாக மாற்றினார்கள்; சுரங்கத்தின் வெடிமருந்தைக் கண்ணிவெடிகளாக மாற்றினார்கள்;
முழு உலகமும் கைவிட்டபிறகும் அவ்வப்போது தாக்கவரும் பப்புவா நியூகெனி படைகளை எதிர்த்து தம் சொந்த மண்ணில் சொந்த அறிவைக்கொண்டே அவர்கள் போர்புரிகிறார்கள்.
25ஆண்டுகளாக போராடிவருகிறார்கள்;
இதுவரை ஏறத்தாழ 15,000 பேர் இறந்துவிட்டதாகத் தெரிகிறது;
இப்போது அங்கே என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது;
உதவி செய்ய யார் போனாலும் பப்புவா-நியூகெனி அரசு சுட்டுக்கொன்றுவிடுகிறது;
புகன்வில் மக்களைப் பற்றி தவறான கருத்துகளை ஊடகத்தில் பதிகின்றன வல்லாதிக்கங்கள்.
ஆஸ்திரேலியா இதுவரை 32மில்லியன் டாலரை செலவளித்து பப்புவா நியூகெனியாவுக்கு பயிற்சி, ஆயுதம், மருந்து என எல்லா உதவிகளும் செய்துவருகிறது;
ஆனால், வெளியே ஆதரவு கொடுக்காததுபோல் நடிக்கிறது;
உலக நாடுகளும் இதைக் கண்டுகொள்ளவில்லை.
இந்தோனேசியா சாலமன் தீவுகளையும் புகன்வில்லையும் கட்டுப்படுத்த ஆசைப்படுகிறது;
புகன்வில் மக்கள் எத்தனைநாள் தாக்குப்பிடிப்பார்களோ தெரியாது;
எப்போது முற்றாக அழிவார்களோ தெரியாது;

தாய்மண்ணைக் காக்கப் போராடும் மக்களுக்கு இந்த நவநாகரீக உலகில் கிடைக்கும் பரிசு இனவழிப்பு ஒன்றுதான்.

வணங்காமண் விட்ட கண்ணீர்
https://m.facebook.com/photo.php?fbid=366649190105407&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment