Sunday 19 October 2014

கரிப்புகை கொண்டாட்டம்

கரிப்புகைக் கொண்டாட்டம்

மமமமமமமமமமமமமமமமம

கதையைக் கேளுங்கள்.

ஒரு அரக்கன் இருந்தானாம் அவன் கடலுக்குள் பூமாதேவியை ஒழித்துவைத்தானாம்.
கிருஷ்ணன் பன்றி அவதாரம் எடுத்துப்போய் அதை மீட்டுவந்தானாம்.
உடனே பூமாதேவியை அந்த பன்றி பாலியல் உறவு செய்ததாம்.
பூமி கர்ப்பமாகி நரகாசுரனைப் பெற்றதாம்.
அவன் கொடுமைகள் பல செய்தானாம். உடனே கிருஷ்ணன் அவனைக் கொன்றுவிட்டானாம்.

இந்த கருமாந்திர எழவை நாம் கொண்டாடவேண்டுமாம்.

தீப்=சுடர், ஆவலி=வரிசை
தீபாவலி(அ)  திவாலி என்ற சமசுக்கிருதப் பண்டிகையைக் கொண்டாட விளக்குதானே ஏற்றவேண்டும்?
ஏன் சீன மக்கள் கண்டுபிடித்த sulfur, charcoal , potassium-nitrate கலந்து தயாரிக்கப்படும் வெடியை வெடிக்கவேண்டும்?

happy diwali என்று ஆங்கில எழுத்தில் வாழ்த்தனுப்பிவிட்டு சமசுக்கிருதப் பண்டிகையான தீவாலியை கொண்டாட டெல்லியில் ஒரு வடயிந்தியன் பட்டாசு வெடிப்பான்
சிதறும் குப்பைத்தாளில் தமிழ் எழுத்துக்கள் கருகிப்போய் இருக்கும்.

அதை தயாரிக்கும்போது விபத்தில் வருடாவருடம் சிவகாசி மக்கள் சாகிறார்களே அதைப்பற்றி உனக்குக் கவலையுண்டா?
அதை சரமாகப் பின்னும் ஏழைத் தமிழ்மக்கள் முதிர்கன்னிகளாகவோ, கல்வி கிடைக்காத சிறுவராகவோ, வேளாண்மை ஒழிந்த விவசாயியாகவோ இருப்பார்.
அதைப்பற்றி கவலையுண்டா?

தினக்கூலி கொடுத்து பட்டாசு தயாரித்து அதில் கொள்ளை லாபம் பார்க்கும் பணமுதலைகளின் விதிமீறல்கள் பற்றிக் கவலையுண்டா?

அல்லது பட்டாசு வெடித்து வெளிவரும் ரசாயனப் புகை காற்றை மாசுபடுத்துகிறதே
நுரையீரலைப் பாதிக்கிறதே
அதைப்பற்றியாவது கவலையுண்டா?
மரத்தை வெட்டி தயாரிக்கப்படும் காகிதம் வீணாகிறதே, தெருவெல்லாம் குப்பையாகிறதே அதைப்பற்றி கவலையுண்டா?
காசு கரியாகிறதே அதைப்பற்றியாவது கவலையுண்டா?
குழந்தைகள் சில சமயம் காயப்படுகிறார்களே அதைப்பற்றியாவது கவலையுண்டா?
தீவாலி அன்றுகூட விடுமுறை கிடைக்காமல் வேலைக்குச் செல்லும் ஆலைத்தொழிலாளர் பற்றி கவலையுண்டா?
தீவாலிக்கு முதல்நாள் கடன்காரன் காலில் விழும் ஏழைத் தகப்பன் பற்றியாவது கவலையுண்டா?

உனக்குக் கவலையெல்லாம் ஒருநாள் விடுமுறை, அன்றைக்கு குடி, கூத்து, தீனி, கூத்தாடி நடிகைகளின் குலுக்கல்
வேறென்ன?

கொண்டாட நாள் வேண்டுமானால் பொங்கல் ஒன்று போதாதா?
இயற்கை தந்த அரிசியையும் காய்கறியையும் கதிரவனுக்குப் படைத்து, மாட்டுக்குப் படையல் செய்து, காக்கைக்கு சோறுவைத்து, கரும்பும் பனங்கிழங்கும் காய்கறி உணவும் உண்டு, சொந்த பந்தங்களைக் கண்டு ,
'தமிழன்' கொண்டாடும் பொங்கலுக்குக் கால்தூசு பேறுமா தீவாலி?

மகனைக் கொன்றவன் பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காகக் அவனைத் தண்டிக்காமல் மனுதர்மத்தைக் கடைபிடித்த தெலுங்கு மன்னனான கிருஷ்ணதேவராயனும் அவனது வாரிசுகளும் தமிழகத்தைக் கைப்பற்றி சமசுக்கிருதத்தையும், வர்ணாசிரமத்தையும், தீண்டாமையையும், தீவாலிப்பண்டிகையையும் 500 ஆண்டுகள் முன்பு தமிழன் மீது திணித்தனர்.

10,000 ஆண்டு பழமையான நாகரீகம் கொண்டவன்,
"தன்னாட்டு பிராமணனைக் கொன்று மனுதர்மத்தை மீறிய படுபாவி" என்று சாளுக்கியக் கல்வெட்டு கதறும் இராசராசசோழன் வழிவந்த தமிழன்
நீ இன்றைக்கும் அடிமையாக இருக்கலாமோ?

போர்க்களத்தில் வெடி வெடித்த புலியினமே நீ மனதால் கருகி மாளும் காலம் வந்ததும் ஏனோ?

(நரபலி பக்ரீத்
https://m.facebook.com/photo.php?fbid=499972893439702&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 ).

No comments:

Post a Comment