Thursday 23 October 2014

திருவனந்தபுரம் தமிழன் சொத்து

திருவனந்தபுரம் தமிழன் சொத்து

2ஜி ஊழல் 1.75 லட்சம் கோடி
அதைவிடப் பெரிய தமிழ்ச் சொத்து பறிபோனது

யாருக்காவது தெரியுமா?

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 2011ல் குவியல் குவியலாகத் தங்கமும் வைரமும் கிடைத்தது;
இதை மதிப்பிடும் பணி 2014  ஆகஸ்டில் முடிந்தது.
விலைமதிப்பு கணக்கிடப்பட்ட பொருட்களின் மதிப்பு மட்டும் இரண்டரை இலட்சம் கோடி
மேலும் வைரம்,வைடூரியம் போன்ற மதிப்பிட முடியாத பொருட்களும் உள்ளன.
இது கேரள அரசுக்கோ அல்லது ஹிந்திய நடுவணரசுக்கோ போய்ச்சேரவுள்ளது.
ஆனால், இது தமிழர்களுக்கு தமிழக அரசுக்கு சேரவேண்டியது ஆகும்.

பத்மநாபபுரம் கோவிலைக் கட்டிய வேணாட்டு அரசர்களின் தலைநகரான பத்மநாபபுரம் தமிழகத்தில் நாகர்கோவில் அருகே உள்ளது.
இதைத்  திற்பரப்பு, கல்குளம் என்றும் அழைப்பர்.
1061ல் ஐயடிகள் திருவடி என்கிற தமிழ்மன்னன் இந்தத் திற்பரப்பில்தான் வேணாட்டு அரசமரபைத் தோற்றுவித்தான்.
தொடர்ந்து வந்த 42வேணாட்டு அரசர்கள் சேரநாட்டை மலையாள மயமாக்காமல் தமிழர்நிலமாகவே நீடிக்க தொடர்ந்து போராடுகிறார்கள்.
அன்றைய நம்பூதிரிகளின் தலைநகர் போன்றது தற்போது தமிழகத்தில் உள்ள சுசீந்திரம்.
அன்று வேணாட்டு அரசர்கள் இல்லாவிட்டால் சுசீந்திரத்தை மீட்டிருக்கமுடியாது.
இந்த மரபில் 'மூன்றாம் ஆதித்தவர்மன் திருவடி' என்ற மன்னனையும் அவனது 5மகன்களையும் நம்பூதிரிகள் நஞ்சு வைத்துக் கொன்றனர்.
அவனது மனைவியான உமையம்மை பெரும்முயற்சி செய்து அரசை மீட்டார்.
கிட்டத்தட்ட வேலுநாச்சியார் வாழ்க்கை போலத்தான்.
இதன் கடைசி மன்னன் 'பாலமார்த்தாண்ட வர்மன் திருவடி' தற்போதைய திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாபசாமியின் தீவிர பக்தனாக இருந்தான்.
தனது தலைநகரான திற்பரப்பை பத்மநாபபுரம்  என்று பெயர்மாற்றம் செய்தான்.

(தமிழர்களின் வெட்கக்கேடு தமிழகத்தில் உள்ள 'பத்மநாப அரண்மனை' கேரளாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தமிழக முதல்வரே அதற்குள் போகவேண்டுமானால் அதை நிர்வகிக்கும் மலையாளிகளிடம் கேரள அரசின் சின்னம் பொறித்த சீட்டை வாங்கிவிட்டுத்தான் போகமுடியும்.
ஆனால், அந்த அரண்மனையின் கல்வெட்டு,வாள்,கேடயம்,ஆவணம், நாணயங்கள் அனைத்திலும் தமிழே காணப்படுகிறது.)

இவன் திருவரங்கம் (சிறிரங்கம்) கோவிலைப் போலவே பத்மநாபசாமிக்கு நகலெடுத்ததுபோலக் கோவில் கட்டினான். இவனுக்குப் பிள்ளைகள் இல்லை. இவன் இரண்டு பெண்களைத் தத்தெடுத்தான் அதன்பிறகு அந்த வம்சம் மலையாளியாகிப்போனது. திருவடி என்ற அடைமொழிக்குப் பதில் திருநாள் என்ற அடைமொழியைப் போட்டுக்கொண்டனர். தற்போதைய மன்னன் பெயர் உத்திராடம் திருநாள்.
பாலமார்த்தாண்டன் சாகும்போது கோவில்சொத்துக்களையெல்லாம் பாதாள அறையில் வைத்துப்பூட்டி இதைத் திறப்பவர்கள் பாம்புதீண்டி சாவார்கள் என்று எழுதிவிட்டு இறந்துவிட்டான்.
அந்த சொத்துக்கள்தான் தற்போது வெளியே வந்துள்ளன.
இதை வெளியேகொண்டு வந்தவரும் ஒரு தமிழரே ஆவார்.

மன்னர் தலைமையில் பத்மநாபசாமி கோவில் தேவஸ்தான கமிட்டி கூடி அறைகளைத் திறப்பது என்று தீர்மானம் செய்கிறது.
இது வெளியே கசிந்துவிடுகிறது.
அக்கோவில் பக்தரும்  வழக்கறிஞருமான சுந்தரராஜன் என்ற திருநெல்வேலிச் சீமை அம்பாசமுத்திரத்தில் பிறந்த ஒரு தமிழனுக்குத் தெரிந்துவிடுகிறது.
சிறிதும் தாமதியாமல் அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் இக்கோவில் சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வழக்குப் போடுகிறார். பிறகு வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது. உலகத்திற்கே இவ்விடயம் தெரியவருகிறது.
இன்று அந்தத் தன்மானத் தமிழன் உயிருடன் இல்லை.
பெருமதியான இச்சொத்துக்கள் மலையாள அரசுக்கே போய்ச்சேரவுள்ளது.

(இதற்கு வசதியாக கோவிலில் இருந்த தமிழ்க் கல்வெட்டுக்கள் எல்லாவற்றையும் தூய்மைபடுத்துகிறோம் என்ற பெயரில் அரவை(grinder) வைத்து தேய்த்து மலையாளிகள் அழித்துவிட்டனர். ஆனாலும் அதன் திருச்சுற்றில்(பிரகாரம்) கூரையில் பாண்டியர் சின்னமான மீன்சின்னம் இருக்கிறது.)

மலையாளிகளிடம் நாம் பறிகொடுத்தது கொஞ்சநஞ்சமல்ல.
1949ல் தமிழர் பெரும்பான்மையாக இருந்த திருவாங்கூர் சமஸ்தானமும் மலையாள பெரும்பான்மை கொச்சி சமஸ்தானமும் (இரண்டையும் ஆண்டோர் மலையாளிகள்) 1949ல் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானமாக இணைகின்றன.
இதற்கு முதல்வராக இருந்த பட்டம்தாணுப்பிள்ளை என்ற மலையாளி மொழிவழி மாநில அமைப்பின்போது தமிழகத்துடன் சேரப் போராடிய தமிழர்களை வன்முறையால் அடக்கி ஒடுக்குகிறான்.
( பழனி மாணிக்கம், திருவலங்காடு கோவிந்தசாமி சிறையிலேயே  அடித்துக் கொல்லப்பட்டனர்; 7பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்; 10,000பேருக்கு மேல் காணாமல் போயினர்)

அன்றைய தமிழ்த் தலைவர்களான மார்சல் நேசமணி,நத்தானியேல்,பி.எஸ்.மணி ஆகியோர் தமிழகத்தலைவர்களிடம் கேரளாவில் இருக்கும் 9தமிழ்வட்டங்களைத் (தாலுகா) தமிழகத்துடன் இணைக்க உதவி கோரினர்.
காமராசர் (தற்போதும் கேரளாவில் தமிழர் 90%வசிக்கும்) தேவிகுளம், பீர்மேட்டை இணைக்க அவர்கள் கோரியபோது 'குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாதான்' என்றுவிட்டார்.
ஈ.வே.ரா உதவிகேட்டு வந்தவர்களை முடியாது என்றுகூறி திருப்பியனுப்பினார்.
ம.பொ.சி,ஜீவானந்தம் ஆகியோர் உதவினர்.

9வட்டங்களில் 4வட்டங்கள் தமிழகத்துடன் இணைந்தது அதில் கன்னியாகுமரி, செங்கோட்டை, கல்குளம்,பிளவன்கோடு, அகஸ்தீஸ்வரம், தோவாளை, குற்றாலம், நாகர்கோவில் போன்ற முக்கிய இடங்கள் மீட்கப்பட்டன.

மீதி 5வட்டங்கள் பறிபோயின.
இதில் திருவனந்தபுரம், ஆனைமலைக் குன்று, பாலக்காடு, முல்லைப்பெரியாறு அணைக்கட்டு, தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி, தேக்கடி,பரம்பிக்குளம் நீர்நிலை, கொல்லங்கோடு, நெய்யாறு நீர்நிலை, பொன்முடி போன்ற முக்கியமான பகுதிகள் பறிபோயின.
பறிபோன திருவனந்தபுரம் தற்போதைய கேரளத் தலைநகரம் தமிழர் மண்ணேயாகும்.
காந்தளூர் சாலை என்று  இராசராசசோழன்  கல்வெட்டுகளில் வருவது அனந்தப்பபுரமே ஆகும்.அங்கே தமிழ்ப் பல்கலைகழகம்கூட இருந்தது.
அதற்கு மூவேந்தர்களும் கொடை கொடுத்திருந்தனர்.
திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் தற்போதும் தமிழரே வாழ்கின்றனர். அலங்கோட்டு ஆசான் என்பவர் தலைமையேற்க தொல்காப்பிய அரங்கேற்றப்பட்டது.
அந்த அலங்கோடுதான் திருவலங்கோடு அதைத்தான் திருவாங்கோர் (travangore) என்று திரித்துள்ளனர்.
வேணாட்டு அரசரின் மலையாள வாரிசுகள் கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு தலைநகரை மாற்றுகின்றனர்.
திருவனந்தபுரம் சேரநாட்டில் எப்போதும் இருந்ததில்லை.அது (தமிழக)நாஞ்சில் நாட்டின் பகுதியாகத்தான் இருந்தது.
திருவனந்தபுரத்தின் உட்பகுதியிலும், நகருக்கு வெளியே சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வாழ்வோர் தமிழரே.

நம் அப்பனும் தாத்தனும் கொஞ்சம் சூடு சுரணை உள்ள பிறவிகளாக இருந்திருந்தால் திருவனந்தபுரம் நம்மிடம் இருந்திருக்கும்.
முல்லைப்பெரியாறு நம்மிடம் இருந்திருக்கும்.
45% கேரளா நம்மிடம் இருந்திருக்கும்.

பத்மநாபசாமி கோயில் சொத்து
http://m.youtube.com/watch?v=CUznor_kPgo&itct=CB0QpDAYCCITCIWuwOi5w8ECFQQJywoddTIA91Iw4K6V4K-B4K6k4K-N4K6k4K-B4K6V4K-N4K6V4K6w4K6j4K6Z4K-N4K6V4K6z4K-N&hl=en-GB&gl=IN&client=mv-google
https://m.facebook.com/photo.php?fbid=505955586174766&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment