நரபலி பக்ரீத்
• • • • • • • • • •
பைபிளிலும் குரானிலும் வரும் ஒரு கதை,
இன்றைக்கு சற்றேறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த இப்ராஹிம்(ஆபிரகாம்) தன்னுடைய தள்ளாதவயதிலும்(85) தனது அடிமைப்பெண்(பணிப்பெண்) ஹாஜிராவுடன் செய்த லீலைகளின் காரணமாக "இஸ்மாயில்" என்ற மகனை பெற்றெடுக்கிறார்.
குழந்தைப்பேறு இல்லாத இப்ராஹிமின் வயதான மனைவி சாராவினால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தனது சக்களத்தி ஹாஜிராவையும் இஸ்மாயிலையும் வெறுக்கிறார் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்ற நினைக்கிறார்.
அதற்கேற்றவாறே, ஹாஜிராவையும் பச்சிளங்குழந்தை இஸ்மாயிலையும் ஆளரவமற்ற பாலைவன வெயிலில் விட்டுவிடுமாறு கடவுள் இப்ராஹிமிடம் கட்டளையிடுகிறான்.
ஹாஜிராவையும் இஸ்மாயிலையும் சில உணவுப் பொருட்களுடன் அரேபியப் பாலைவனத்தில் ஸபா, மர்வா எனும் இரண்டு குன்றுகளுக்கு அருகில் தன்னந்தனியே விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் ஓடிவந்துவிடுகிறார்.
கைவசமிருந்த உணவும் குடிநீரும் தீர்ந்ததும் பிரச்சனை துவங்குகிறது.
தாகத்தாலும் பசியாலும் வீறிட்டு அழும் குழந்தைக்காக உதவிதேடி அங்குமிங்குமாக அலைமோதுகிறார் ஹாஜிரா.
நாதியற்றுப்போன தங்களுக்கு உதவிசெய்ய வழிப்போக்கர்கள் யாரேனும் தென்படமாட்டார்களா? என அங்குமிங்குமாக அலைபாய்கிறார்.
அப்பொழுது ஒரு வானவர் குழந்தையின் அருகே தோன்றி தன் கையிலிருக்கும் தடியினாலோ அல்லது தன்னுடைய சிறகினாலோ தரையை தட்டுகிறார்.
உடன் அந்த இடத்திலிருந்து(அல்லது குழந்தை இஸ்மாயீல் காலால் அழுது உராய்ந்த இடத்திலிருந்து) நீர் பீறிட்டுக் கிளம்பியதாகவும் அந்நீரைக் குடித்து பாலைவனத்திலிருந்து தப்பிப்பிழைக்கிறார்கள்.
(மீண்டும் இப்ராஹீமையே வந்தடைகின்றனர்);
(இன்று பசியில் சாகும் மக்கள் காலால் உராய்ந்தால் தண்ணீர் வருமா?)
இதே நேரத்தில் இப்ராஹிமின் முதல் மனைவி மாதவிடாய் அறவே நின்றுபோன மூதாட்டி சாரா, "இஸ்ஹாக்" (கடவுளின் அருளால்(?))என்ற மகனைப் பெற்றெடுக்கிறார்.
முதலில் கூறிய இஸ்மாயில் வழி வந்தவர்கள் அராபியர் என்றும் இரண்டாவதாகக் கூறிய இஸ்ஹாக் வழி வந்தவர்கள் யூதர்கள் என்று நம்பப்படுகிறது;
இன்றுவரை அந்தப் பங்காளிச் சண்டை தொடர்கிறது.
பிறகு கடவுள் இப்ராஹிமிடம் தனக்கு அவரது மகனை நரபலி இடக் கட்டளையிடுகிறார்; அவரும் பலியிட முடிவு செய்து தன் மகனின் கழுத்தை வாளால் அறுக்கிறார்; ஆனால் அறுபடவில்லை; உடனே கடவுள் அங்கே தோன்றி இப்ராஹிமை சோதித்ததாகவும் அதில் அவர் தேறிவிட்டதாகவும் கூறி பாராட்டி மகனுக்குப் பதில் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிடுகிறார்.
இதிலும் இவர்கள் அடித்துக்கொள்ளத் தவறவில்லை; பலியிடக் கொண்டுசெல்லப்பட்ட மகன் இஸ்மாயில்தான் என்று இசுலாமியரும், இல்லையில்லை அது இஸ்ஹாக்தான் என்று யூதரும் கூறுகிறார்கள்.
அந்த பலி முயற்சி நடந்த நாள்தான் இப்போது ஈகை(தியாகத்) திருநாளாக இசுலாமியர் கொண்டாடுகின்றனர்.
நான் கேட்பது எல்லாம் இதில் என்ன ஈகை உள்ளது?
கடவுள் சொன்னார் என்பதற்காக வைப்பாட்டியையும் பச்சிளம் குழந்தையையும் பாலைவனத்தில் விடுவதும், மகனையே கொல்லத்துணிவதும் ஈகையா?
அதாவது கடவுள் பெயரைச் சொன்னால் எதையும் யோசிக்காமல் கொலைகூடச் செய்யவேண்டும் என்ற வெறித்தனமான போதனையா?
இதில் கொண்டாட என்ன இருக்கிறது?
சிவனுக்குப் பிள்ளைக்கறி கொடுத்த சிறுதொண்டர் நினைவு வருகிறதே?!
மதங்கள் எல்லாம் அழிவுக்கேயன்றி வேறெதற்காக?
மேலும் அறிய,
எது தியாகம்?
http://nallurmuzhakkam.wordpress.com/2011/11/06/
இறைமறுப்பாளன்
https://m.facebook.com/photo.php?fbid=479366048833720&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
நோன்பு பித்தலாட்டம்
http://vaettoli.blogspot.com.es/2014/08/blog-post_86.html?m=1
No comments:
Post a Comment