Thursday 16 October 2014

நாக்கைப் பிடுங்கிக்கொண்டேன்

நாக்கைப் பிடுங்கிக்கொண்டேன்

¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢

நான் இருக்கும் இடத்திற்கு 4கி.மீ
தூரத்தில் 'சாத்ரோட்' என்ற சிற்றூர்
உள்ளது; பல சாதி மக்கள் சேர்ந்துவாழும்
சிற்றூர்தான்;
இங்கே ஐந்து நாட்களுக்கு முன்
தண்ணீர்த்தொட்டிக்கு அடிக்கல் நாட்ட
முதலமைச்சர் 'உபேந்தர் உட்டா'
வந்துகொண்டிருந்தார்; முதலமைச்சர்
வருகிறார் என்றால் எத்தனை பெரிய
காவல்படை அங்கே குவிந்திருக்கும்?!

அப்போது கூடிவந்த பொதுமக்கள் அந்த
காவல்துறையினரைத் சரமாரியாகக் கற்களாலும்
தடிகளாலும் தாக்கி நான்கு காவலர்கள்
மண்டை மூடியை திறந்து அடித்து விரட்டியது மட்டுமன்றி அத்தனை காவலுந்துகளையும
் தாக்கி கண்ணாடியை உடைத்து மூன்று உந்துகளை சொக்கப்பனை கொளுத்திவிட்டனர
்(மேலே படம்);
இதை கேள்விப்பட்ட முதல்வர்
சுற்றுவழி மூலம் ஓடிப்போய்விட்டார்;
தண்ணீர்தொட்டி திறக்கவந்தததற்கு ஏன்
கலவரம் என்று விசாரித்தேன்;
அதாவது அந்த
சிற்றூரின் 'க்ராம பஞ்சாயத்' க்கு சொந்தமான
பொதுவான திடலில்
ஒரு சிறுபகுதியை 'நகராட்சிகு கழகத்துக்கு'
தண்ணீர்தொட்டி அமைக்கக் கொடுத்துள்ளனர்;
நகராட்சி அதிகாரிகள் முதல்வர்
வந்து அடிக்கல் நாட்டுவார் என்றதும், அந்த
திடல் முழுவதையும் நகராட்சிக்குக்
கீழுள்ளதுபோல் பதிவு செய்து விழாவையும்
அந்த திடலில் ஏற்பாடு செய்துள்ளனர்;

சிற்றூர் மக்கள் அந்த
திடலை பொதுஇடமாகவும், ஆடு,மாடுகள்
அடைத்துவைக்கும் திறந்த பட்டியாகவோ,
விளையாட்டுக்கோ அனைவருமாகப்
பயன்படுத்தி வந்தனர்;
நகராட்சி அதை ஆக்கிரமித்ததும்
எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்
முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாக
கூறியிருந்தனர்; அப்படி செய்யக்கூடாது என
காவல்துறை மிரட்டியுள்ளது; கொதிப்படைந்த
பொதுமக்கள் ஒன்றாகச்
சேர்ந்து காவல்துறையையும்
அரசு அதிகாரிகளையும் அடிநொறுக்கிவிட்
டனர்;
தற்போது பொதுநிலத்தை ஆக்கிரமித்து தண்ணீர்தொட்டி அமைக்கும்
திட்டமே கைவிடப்பட்டு விசாரணைத்
தொடங்கப்படவுள்ளதாகக் கூறுகின்றனர்;
சூடு சுரணை உள்ள இந்த ஹரியான்வி இனத்தில்
பிறந்த ஒவ்வொருவனும் மார்தட்டும் செயல்
இது;
நான் தமிழனாக நாக்கைப் பிடுங்கிக்கொண்டேன்.
https://m.facebook.com/photo.php?fbid=412225855547740&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment