Saturday, 26 March 2016

தமிழர்(?) முன்னேற்றப் படை

கி.வீரலட்சுமி தெலுங்கு (சக்கிலியர்) குடும்பத்தில் பிறந்தவர் என்றும்
இவரது 'தமிழர் முன்னேற்றப்படை' யின் பழைய பெயர்
'பெரியார் படை' என்றும் கூறுகிறார்கள்.

உண்மையா?

படம்: திராவிட விருது வாங்கியுள்ள அவ்வம்மணியின் புகைப்படம்

Friday, 25 March 2016

பரிசம் - தமிழர் பெருமை

பரிசம் -தமிழர் பெருமை

திருமணச்சீர் அதாவது வரதட்சணை தமிழர் வழக்கமா?
ஆம். ஆனால் மணமகன் கொடுக்க மணமகள் வீட்டார் பொன்னும் பொருளும் வாங்குவதுதான் தமிழ்முறை.

அதாவது இன்றைய நிலைக்கு அப்படியே தலைகீழ்.

அதாவது மாப்பிள்ளை வீட்டார் பரிசம்(பரிசு) கொடுத்து பெண்ணை அழைத்து வருவதே தமிழர் பண்பாடு.

இதற்கு சான்றாக மூன்று பாடல்களைக் காட்டமுடியும்.

புறநானூறு 343

மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன,
நலம்சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத்
தந்தையும் கொடாஅன்

இதன் எளிய பொருளாவது,
சேரமன்னன் (செங்)குட்டுவன் மக்களுக்கு பலவகைப் பொருட்களை வாரிவழங்குவது போல
பெருமளவு செல்வத்தை பணிவோடு வந்து கொடுத்தாலும்
தகுதியான ஒருவனைத் தவிர மற்றோரை இவள் ஏற்கமாட்டாள் அதனால்
இவளது தந்தையும் கட்டிக்கொடுக்க மாட்டான்.

இதில் பெண்ணின் விருப்பமே முதலில் சொல்லப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
----------------------------
கலித்தொகை,103; 71-73

சங்க இலக்கியமான கலித்தொகை  அதில் முல்லைக் கலி என்ற பகுதியில் ஏறு தழுவல் பற்றி அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதில்

"விலைவேண்டார் எம்இனத்து ஆயர் மகளிர் கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின் முலையிடைப் போலப் புகின் ஆங்கு"

இதன் பொருள் எம்மினத்து ஆயர் (இடையர்) பரிசம் வேண்ட மாட்டார்கள்.
ஆனால் கொல்லும் ஏற்றின் கொம்புகளைத்
தாம் காதலிக்கும் பெண்களின் கொங்கைகளைப் போலக் கருதி,
ஆர்வமுடன் பாய்ந்து தழுவினால் அவனையே தம் மகளுக்கு ஏற்றவனாகக் கருதுவார்கள்.

அதாவது மணமகன் ஏறுதழுவும் வீரனாயிருந்தால்
அவனிடம் சீர் வாங்கமலே பெண் தருவார்களாம் ஆயர் குலத் தாய்மார்கள்.
-----------------------------
அகநானூறு 90

கடுங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறுமெனக் கொள்ளுநர் அல்லர்
தறுநுதல் அரிவை பரிசிழை விலையே

இதன் எளிய பொருள்:
(கோசரின்) நிறைவான வருவாய் உடைய நியமம் எனும் ஊரையே (சீதனமாகத்) தந்தால்கூட,
பெண்ணின் தந்தை வாங்கிக் கொள்ள மாட்டாராம்.
அதற்கும் மேலே தந்தால்தான் சம்மதிப்பாராம்.
----------------------------------
ஆக மணமகளிடம் திருமணச்சீர் வாங்குதல் தமிழர் வழக்கம் இல்லை.

Thursday, 24 March 2016

2004ல் சீமான் அண்ணன்

2004ல் சீமான் அண்ணன்

2004 ல் புலிகள் வெளியிட்ட தலைவர் பிரபாகரனின் 50வது பிறந்தநாள் காணொளியில் சீமான் அண்ணன் பேசிய பகுதி
https://mobile.facebook.com/story.php?story_fbid=675707329199590&id=100002809860739&refid=17&_rdr

Wednesday, 23 March 2016

தமிழர்களின் அரசியல் சாணக்கியம்

தமிழர்களின் அரசியல் சாணக்கியம்

அவர்கள் எத்தனையோ திராவிடத் தலைவர்கள் இருக்க
கருணாநிதியையும்
ஜெயலலிதாவையும்
விஜயகாந்தையும்
அரியணை ஏற்றி வைத்திருப்பதில் தெரிகிறது

புரியவில்லையா?

vaettoli.blogspot.in/2015/07/blog-post_81.html?m=1

திருப்பதி முருகனுடையது வலுவான சான்று

திருப்பதி முருகனுடையது
வலுவான சான்று

வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை
-வெற்றி (பொருந்திய) *வேலி*னையுடைய திரையனது வேங்கடமெனும் நீண்ட மலையில்...
(அகநானூறு 199)

Sunday, 20 March 2016

தமிழகத்தில் தமிழர் தேர்தலில் வெல்லமுடியாதா?

தமிழகத்தில் தமிழர் தேர்தலில் வெல்லமுடியாதா?

தமிழகத்தில் தமிழர்களை விட தெலுங்கர்/கன்னடர் மிகுதியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்
1) விளாத்திகுளம்= தூத்துக்குடி மாவட்டம்
2) ஓசூர் = கிருஷ்ணகிரி மாவட்டம்
3) மேட்டுப்பாளையம்= கோயம்புத்தூர் மாவட்டம்
4) உதகமண்டலம்= நீலகிரி மாவட்டம்

அதாவது தமிழகத்தில் தமிழரல்லாத எம்.எல்.ஏ க்கள் நால்வர்தான் இருக்கவேண்டும்.
மீதி 230 இடங்களில் தமிழரே பெரும்பான்மை.
ஆனால் இங்கே முதலமைச்சரே  தமிழரல்லாத ஒருவர்தான்.

Saturday, 19 March 2016

பாவணரின் திராவிட எதிர்ப்பு கட்டுரையில் "பார்ப்பனத் தமிழன்" என்ற சொல்

பாவணரின் திராவிட எதிர்ப்பு கட்டுரையில் "பார்ப்பனத் தமிழன்" என்ற சொல்

?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!

"பல திராவிட இனத்தார் தமிழ்நாட்டிலிருத்தலின்,
தமிழ் நாட்டையே திராவிட நாடாகத் துவக்கலாமெனின்,
அது தமிழுக்கும் உலை வைப்பதாகும்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சியும் தமிழனுணர்ச்சியும் குன்றியுள்ளன.

நீதிக்கட்சியாட்சியிலாவது
காங்கிரசு ஆட்சியிலாவது
*பார்ப்பனத் தமிழனும்* எத்துறையிலும் தலைமைப் பதவிக்கு வந்ததில்லை.

தமிழ்நாடு தமிழ் நாடாயிருக்கும் போதே இந்நிலைமை யெனின், திராவிட நாடாகிவிடின்,
தெலுங்கரும், கன்னடரும், மலையாளியரும் வரம்பின்றித் தமிழ்நாடு புகுந்து
தமிழரெல்லாம் வாழ்வுக்கே இடமின்றித் தவிக்கவேண்டியதுதான்!

தமிழ் நாட்டிலுள்ள பல திராவிட இனத்தாரையும் தமிழர் என்னும் சொல் தழுவாமையால்
அவரையெல்லாம் திராவிடரென்றே அழைத்தல் தகுதி எனின்,
எந்நாட்டிலும் பல இனத்தார் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆயின், பெரும்பான்மை பற்றியுமே
பழங்குடி மக்கள் பற்றியுமே ஒரு நாடு பெயர் பெறும்.

இங்கிலாந்தில் ஏனை நாட்டு மக்கள் இல்லாமலில்லை.
ஆயின், அதுபற்றி அது ஆங்கில நாடு என்னும் பெயரை இழந்துவிடாது.
ஆதலால், தமிழ்நாடு பல திராவிட இனத்தார் வாழ்வதாயினும் தமிழ் நாடே."

-பாவாணர்.

('முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் நடாத்திய "தமிழர் நாடு" ஏட்டில் பாவாணர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும்.
15.5.1951)

நன்றி: kathir nilavan
==========================

பார்ப்பனர் தமிழரே என்று சொல்லிப்பார்!
திராவிடத்தின் ஆணிவேரே நடுங்கும் பார்!