Tuesday, 16 December 2014

ஈழத்திற்கு பாலம் கட்டுவோம்

flevoland-ஐப் போல ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே செயற்கையான நிலப்பரப்பை அமைப்போம்.
கடல் வளங்கள், உயிர்கள் பாதிக்கப்படாத வகையிலும்
ஊடாக கால்வாய்கள் அமைத்து நீர்போக்குவரத்து இருக்கும் வகையிலும்
இடைவெளிகளை பாலங்கள் அமைத்தும்
ஈழத்திற்கும் தமிழகத்துக்குமான போக்குவரத்தை மேம்படுத்துவோம்.
நிலப்பரப்பு அமைக்கமுடியாவிட்டால் தரைவழிப் பாதைகளாவது அமைப்போம்.

Tuesday, 9 December 2014

இண்டியா கேட்

இண்டியா கேட்

/-/-/-/-/-/-/-/-/-/-/-/

இது ஆங்கிலேயர்கள் ஆண்டபோது தம் அரசுக்காக
உலகப்போர்களிலும் மற்றும் பல்வேறு நாட்டு விடுதலைப்படைகளை எதிர்த்தும்
போர்புரிந்து வீர(?)மரணம் அடைந்த அன்றைய இண்டியர்களுக்காக கட்டியது.
இதில் அவர்கள் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன.

சரி. 1947ல் இண்டியா ஹிந்தியா ஆனபிறகு தம் அரசுக்காக போர்புரிந்து மரணமடைந்த படைவீரர்களுக்கான நினைவிடம் எங்கேயுள்ளது?
அதுவும் இதுவேதானாம்.

ஆங்கிலேயனுக்கு இருந்த நன்றிகூட இல்லையேடா?!
இந்த நாட்டுக்காக(?) நீ ஏன் முட்டியளவு பனியில் காவல்புரியணும்.

ஏன்டா உனக்கு அவ்வளவு கடினம்.
இங்கே வா. நாம் நம் தமிழர்நாட்டைக் கட்டியமைப்போம்.

நீ எல்லையிலிருந்து வீட்டுக்கு வர மூன்றுநாட்கள் ஆகாது.

நீ வீரமரணமடைந்த பிறகும் ஒரு 'மாவீரர் துயிலும் இல்லத்தில்' இதமாக உறங்கலாம்.

(ஜன கன மன என்று ஆங்கிலேயனை வாழ்த்து
https://m.facebook.com/photo.php?fbid=374583592645300&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )

Monday, 8 December 2014

வீரப்பனார் திறமைகள்

வீரப்பனார் திறமைகள்
ஓஒஓஒஓஒஓஒஓஒஓஒஓ

வீரப்பனாருக்கு ஒயிலாட்டம் ஆடத்தெரியும்; நாடகங்கள், தெருக்கூத்துகளில் நடித்துள்ளார்; திரைப்படத்துறையில் கூட ஒருமுறை முயற்சி செய்தார்;
அதிரடி வேட்டைக்காரனாக இருந்தவர்; எந்த ஒரு மனிதர் போலவும் விலங்கு போலவும் குரலெழுப்பத் தெரியும்;
தியானம், சில யோகாசனங்கள் செய்வார்; மரக்கட்டைகளை நுட்பமாக செதுக்கி உருவங்களும் செதுக்குவார்; குறிதவாமல் துல்லியமாக சுடத் தெரியும்,கன்னி வைத்து விலங்குகளைப் பிடிக்கும் நுட்பங்கள் தெரிந்தவர்; பள்ளி பக்கமே போகாதவர் என்றாலும், தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்; விலங்குகள் பறவைகள் நடமாட்டத்தை வைத்தே வேற்றுமனிதர் நடமாட்டத்தையும், காலநிலையையும் கணித்துவிடுவார்;
சமையல் தெரியும்; நீச்சலிலும் வல்லவர்; மீன்பிடித்தல், மரமேறுதல், மலையேறுதல், திசையறிதல், எல்லாம் அத்துப்படி;
ஒரு நாளைக்கு குறைந்தது 20கிமீ நகர்ந்து கொண்டேயிருப்பவர்;
3000சகிமீ காட்டில் தனியரசு செலுத்தியவர்; வெடிகுண்டு, கையெறி குண்டு, கண்ணிவெடி எல்லாம் செய்யத்தெரிந்தவர்;
படைவியூகங்கள் வகுப்பது, படை நகர்வு, உளவு பார்ப்பது, மாறுவேடம் தரித்தல், நேரடி மோதல், தாக்குதல் தொடுப்பது, ஆயுதக் கொள்ளை என ஒரு படைத்தலைவருக்கான அத்தனை குணங்களும் அமையப்பெற்றவர்
(தொடர்பான பதிவு https://m.facebook.com/photo.php?fbid=340429839394009&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13&_rdr )
மூலிகை கண்டறிதல், மருந்து தயாரித்தல், பேச்சுத்திறமை, கமுக்கமான பணப் பரிமாற்றம், காட்டுவேளாண்மை, பொருள் கடத்தல், கமுக்கமான தகவல் தொடர்பு என அனைத்தையும் விரல்நுனியில் வைத்திருந்தவர்;

இத்தகைய திறமைகள் இருந்ததால்தான் அவரால் 32வருடங்கள், இரு மாநிலக் காவல்துறை மற்றும் வனத்துறை, மத்திய ரிசர்வு படை,உள்நாட்டு வான்கண்கானிப்பு, காட்டுக் கொள்ளையர்கள், அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் அனைவரையும் எதிர்த்து புலிகள் ஆண்ட வன்னி அளவு பெரிய காட்டை ஆளமுடிந்தது;
1990களிலேயே வீரப்பனார் பற்றித் தகவல் தருவோருக்கு நாற்பத்தி நூறாயிரம்(40லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது;
கர்நாடக அரசு வீரப்பனாரோடு போராட 70கோடி செலவளித்துள்ளது; தமிழகம் 40கோடி செலவளித்துள்ளது;

இரு மாநிலங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 15,000 காவல் மற்றும் வனத்துறையினரை ஈடுபடுத்தி வந்தது; இத்தனைக்கும் வீரப்பனாரிடம் எப்போதுமய் 150பேருக்கு மேல் இருந்ததில்லை.

:::::::::::::::::::::::::::::
வீரப்பனாரின் கூட்டாளிகள் நால்வர் கர்நாடகாவில் பெல்காம் சிறையில் தூக்கில்போடப்படவுள்ளனர்;
இது தமிழர்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ள பல செய்திகளில் ஒன்று;
வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் பல நூறு மக்களை கொன்று கற்பழித்து கொடுமைப்படுத்திய அதிரடிப்படையும் அதன் அதிகாரிகளும் பணமும் பதவியும் பெற்று சுகமாக வாழ்கின்றனர்;
1993ல் வீரப்பனார் கன்னிவெடி வைத்து வெறியாட்டம் போட்டுவந்த அதிரடிப் படையின் தமிழக,கர்நாடக காவலர்கள் 22பேரைக் கொன்ற வழக்கில் மேற்கண்ட நால்வர் தண்டனை பெற்றுள்ளனர்;
ஆனால் 1994ல் ஜூன் 11 சின்னாம்பதி என்ற சிற்றூரை ஆயுதமுனையில் சுற்றிவளைத்து அந்த ஊரிலிருந்த அத்தனை இளம்பெண்களையும் கூட்டமாக கற்பழித்த அதிரடிப்படையினர் மீதான விசாரணை என்னவானது என்று யாருக்கும் கவலையில்லை;
அவர்களெல்லாம் சுகபோகமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர்;இதில் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் நூறுபேரை வீரப்பனார் தம்மோடு காட்டுக்குள் வைத்து கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தார்;
அது தொடர்பான பதிவு https://m.facebook.com/photo.php?fbid=346582148778778&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=42&refid=17
தமிழகத்தின் பி.யூ.சி.எல் அமைப்பின் தலைவர் எஸ்.பாலமுருகன் என்பவர்தான் இவர்களுக்காக போராடிவருகிறார்;
இவர்களின் கருணைமனு நமது இன எதிரிகளில் ஒருவனான பிரணாப் முகர்ஜியால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிராகரிக்கப்பட்டது.

https://m.facebook.com/photo.php?fbid=407860715984254&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

தலைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

தலைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எனக்கு அரசியல் பிடிக்காது என்பவர்களுக்கு நான் கூறுவது, 
அரசியல் பிடிக்காது என்பதன் நேரடிப் பொருள் உங்களுக்கு மக்களைப் பற்றிக் கவலையில்லை; 
மக்களைப்பற்றிக் கவலையில்லை என்பதன் நேரடிப்பொருள் உங்களுக்கு மாந்தநேயம் இல்லை;
  மாந்தநேயம் இல்லை என்பதன் நேரடிப்பொருள் நீங்கள் ஒரு தன்னலவாதி; 
தன்னலவாதி என்பதன் நேரடிப்பொருள் உங்களை நீங்களே காறித்துப்பும் ஒருநாள் வந்தேதீரும்.

சுரணை வந்தவர் மேற்கொண்டு படியுங்கள்;  சரி.அரசியலில் பங்கேற்க நீங்கள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுப்பது முதல்படி; உங்கள் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களைப் பட்டியலிடுங்கள்;  அவற்றின் தொடக்கம் எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் அதை சரியாக உங்களுக்கு அடையாளம் காட்டுபவர்தான் தலைவர்; 

தலைவர் என்பவர் எப்படியிருப்பார்;  1)அவர் அஞ்சாத நெஞ்சமும் தன்னம்பிக்கையும் படைத்தவராக இருப்பார்; 
2)தற்காலத்திற்கு முந்தைய வரலாற்றை நன்கு அறிந்திருப்பார் அதில் குறைந்தது 50ஆண்டு பிற்பாடுவரையான வரலாற்றைக் கரைத்துக் குடித்திருப்பார்; 
3)தான் பிறந்த காலத்திலிருந்து 30வருடங்கள் பின்னோக்கி சென்று பிறந்தவர்போல் சிந்திப்பார்; 
4)500வருடங்கள் முன்னோக்கும் தொலைநோக்குப் பார்வையுடனும் 30ஆண்டுகளில் என்னென்ன நடக்கலாம் என்று யூகிப்பவராகவும் இருப்பார்;
  5) வார்த்தைகளைச் சரியாக பயன்படுத்துவார்;
  6)மக்களிடம் போய்ச்சேர பிரபலமாகவேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார்;
7)இரக்ககுணம் கொண்டவராக இருப்பார்; 
8)பல்வேறு துறைகளில் ஆழமற்ற ஆனால் பரந்த அறிவைக் கொண்டிருப்பார்;
9)நவீன மாற்றங்களை உடனுக்குடன் ஏற்றுக்கொள்வார்;
10)ஏழையாக இருந்திருப்பார் அல்லது தாய், தந்தை மூலம் குறிப்பிட்ட கொள்கை ஊட்டப்பட்டிருப்பார்;
10)தியாகங்கள் பல செய்திருப்பார்;
11)அவரது சிறிய சிறிய தவறுகளும் பெரிதாக பேசப்படும்.  சரி.

சிறந்த தலைவர் எப்படி இருப்பார்;
1)அவர் எந்தக்கொள்கையை வலியுறுத்துவாரோ அதன்மீதே எதிராளியை விட பெரிய விமர்சனம் வைத்திருப்பார்;
2) நேர்மைக்காக எதையும் செய்வார்;
3)எந்த கொள்கையை வலியுறுத்துகிறாரோ அதில் வெறிபிடித்தவராக இருப்பார் ஆனால் அதை மறைமுகமாக உணர்த்துவார்;
4) பலவருடங்கள் தோல்வியடைந்தவராக இருப்பார்;
5) மக்களை ஒருங்கிணைப்பதில் மும்முரமாக இருப்பார்;
6)எதிரிகள் அவரை கொஞ்சமும் சரியானவர் என்று ஏற்கமாட்டர்;
7) தாம் வாழும்காலத்திற்குப் பிறகும் தமது கொள்கைகள் நிலைத்திருக்க ஆவன செய்வார்; 
8)போராடும் உணர்வைத் தூண்டுவார்;
9)எளிமையாக இருப்பார்;
10) குடும்பத்தை முன்னிறுத்தமாட்டார்;
11) எல்லாக் கொள்கைகளையும் உள்வாங்கி தமது கொள்கைக்கு ஏற்றவாறு வளைத்து அதன்மூலம் கோட்பாடுகளை உருவாக்குவார்;
12) கடவுள் நம்பிக்கை இல்லாதவராக அல்லது மட்டுப்பட்ட அளவு கடவுளை நம்புபவராகவோ இருப்பார்;
13) எதை ஆதரிக்கவேண்டும் என்பதில் தடுமாறினாலும் எதை ஒழிக்கவேண்டும் என்று தெளிவாக இருப்பார்; 

மேற்கண்டவாறு சில தலைவர்கள் இருப்பார்கள் அவர்களைப் பற்றி ஓரளவு அலசுங்கள்.  தலைவர் உங்களிடம் என்ன சொல்வார்;

1)உங்களில் ஒருவன் என்பார்;
2)தான் வலியுறுத்தும் கொள்கையை தாய்க்கு நிகராக வற்புறுத்துவார்;
3)தமக்குத் தோதுவானவற்றை வரலாற்றிலிருந்து உருவித் தருவார்;
4)உலகமே உங்களைக் கைவிட்டுவிட்டதாகக் கூறுவார்;
5) நீங்கள் முட்டாளக்கப்பட்டுள்ளதாக கூறுவார்;
6)உங்களிடம் ஒற்றுமை இல்லை உணர்வு போதவில்லை என்று குற்றம்சாட்டுவார்;
7)வாழ்ந்துகாட்டிய ஒரு முன்னாள் தலைவனை முன்வைப்பார்;
8)நீங்கள் நெடுநாள் ஆழமாக நம்பும் விடயங்களைக் கைவிடச்சொல்வார்;
9)கடந்தகாலப் பெருமைகளைக் கூறி நீங்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர் என்று நம்பச் செய்வார்;
  10)வேறுஒரு பிரிவினர் வாழ்வாங்கு வாழ்வதாகக் காட்டி அவர்கள் மீது பொறாமை ஏற்படுத்துவார்;
11)உங்களின் அன்றாடப் பிரச்சனைக்கான தீர்வு தன்னிடம் இருப்பதாக நம்பவைப்பார்.

இந்த பதினொரு வாதங்களிலும் ஒவ்வொரு தலைவனையும் பொருத்திப் பாருங்கள்;  நன்கு யோசியுங்கள் பிறகு அவரது கொள்கைகளை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுங்கள்;
மாந்தநேயம், தாய்ப்பாசம், தன்மானம், தியாக உணர்வு என்று எல்லாரிடமும் எடுபடுகின்ற சராசரியானக் கொள்கைகளுக்குப் பின் ஓடாதீர்கள்;
அவை விலங்குகளுக்குக் கூட உண்டு; பிரபலமானவர்களையே தேடாதீர்கள்; உங்கள் தேடல் கொஞ்சம் ஆழமானதாக இருக்கவேண்டும்;
ஓரிரு குறைகளைக் காட்டிவிட்டு கையாலாகாமல் இருக்காதீர்கள்;  மனிதனாய்ப்  பிறந்தால் பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் எதாவது செய்யவேண்டும் அதை உணருங்கள்;
நீங்கள் நடக்கும் சாலை நேர்மையான ஒருவனால் போடப்பட்டதென்றால் அதில் நேர்மையற்ற ஒருவனால் குண்டும் குழியும் ஏற்படுத்தப்படுகிறது என்பதை உணருங்கள்;
சுற்றியுள்ள நான்கு பேரிடம் கொண்டுசென்று துரும்பையாவது நகர்த்துங்கள்;
எல்லாருக்கும் நல்லவனாயிருப்பதில் யாதொரு விறுவிறுப்போ சிறப்போ கிடையாது;
உங்கள்  அன்றாடப் பிரச்சனைகளுக்காகவாவது நீங்களே தீர்வுகாண முற்படுங்கள்;

முதல்படியில் அடியெடுத்து வையுங்கள் போகப் போக தெளிவு பிறக்கும்; எல்லாவற்றுக்கும் மேலாக குரல் உயர்த்தினால் அடிவிழுமோ என்று பயந்து சாகாமல் இருங்கள்.

https://m.facebook.com/photo.php?fbid=409062199197439&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

எம்பொறுப்பு முடிஞ்சது

எம்பொறுப்பு முடிஞ்சது.

முத்துக்குமாரை நம் கையாலாகாத்தனத்தால் கொன்றுவிட்ட மானமுள்ள தமிழினம் இன்றாவது அவனை நினைத்துப்பார்த்து பொறுப்பை தீர்ப்போம்;

'என் கல்லறையில் ஏற்றிய மெழுகுவர்த்தியை அணைத்துவிடுங்கள் எனக்கு அழுவது பிடிக்காது'
என்று எழுதிய முத்துக்குமாருக்கு கல்லறை போன்று ஒரு மார்பளவு சிலை திறப்பதற்கே அல்லாடும் வக்கற்ற இந்த ஈன இனத்தில் பிறந்து தொலைத்த பாவத்திற்காக முகநூலில் அவன் படத்தை முகப்பில் வைத்து 'ஜனவரி 29' என்ற முத்துக்குமார் பற்றிய ஆவணப்படத்தையும் பகிர்ந்துள்ளேன்;

என் பொறுப்பு தீர்ந்தது.

இனியும் ஒரு முத்துக்குமார் எரியவிடாமல் சீக்கிரம் அழிந்து தொலைவோம்.
https://m.facebook.com/photo.php?fbid=411426042294388&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
ஜனவரி 29 : ஆவணப்படம்
http://m.youtube.com/watch?v=_yywSmBz6BM&gl=IN&client=mv-google&guid=&hl=en-GB

http://news.lankasri.com/show-RUmpyBQVkGQbf.html

http://www.eelamhomeland.com/index.php?start_from=4&ucat=2&subaction=showfull&id=1284907037&archive=1285891205&

Sunday, 7 December 2014

ஹிந்தியும் ஆங்கிலமும்

இந்தி படிக்க
பொன்.ராதாக்ருஷ்ணன் வலியுறுத்தல்.

நேரே யூட்யூப் செல்லுங்கள்.
தற்போதைய ஹிந்திபடம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்ததாக ஒன்றை தரவிறக்கிப் பாருங்கள்.

உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமென்றால் படம் அப்படியே புரியும்.

நமக்கு ஆங்கிலமொழி முதலாளி என்றால்
ஹிந்தி பேசுபவனுக்கு அம்மொழி கடவுள்.
ஆங்கிலம் பேசினால் காலிலேயே விழுந்துவிடுவான்.

ஹிந்தியாவிலேயே ஹிந்தி கற்பிக்காத ஒரே மாநிலம் தமிழகம்.

முன்பு ஹிந்திபடிக்காவிட்டால் ஹிந்தியாவில் மாநிலம்தாண்டி வேலைகிடைக்காது என்றார்கள்.
இன்று ஹிந்தியன் தமிழகத்துக்கு பிழைக்கவரும் நிலை.
இப்போது ஹிந்தி படிக்காவிட்டால் அவனை வைத்து வேலைவாங்கமுடியாது என்று கூறுகிறார்கள்.

இன்று ஹிந்தியா மார்தட்டிவரும் சந்திராயனை ஏவிய குழுவில் 8ல் மூவர் தமிழர்.
தமிழன் அறிவுவேண்டும் ஆனால் அது இந்தியில் இருக்கவேண்டுமா?

தன்மொழி மீது பற்றில்லாமல் இந்திவழிக் கல்வியில் படிக்கும் ஹிந்தியன்,
வரலாறு தெரியாமல் செத்தமொழியான சமஸ்க்ருத மொழியை இன்னமும் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கும் ஹிந்தியன்,
மெத்தப் படித்தவன்தான் ஆங்கிலம் பேசமுடியும் என்ற அளவுக்கு ஹிந்தியை பரவவிட்ட ஹிந்தியன்,
தன்மொழி கலை இலக்கியங்களை குழிதோண்டி மூடிவிட்டு ஹிந்திப் படங்களையே கலையாக பார்க்கும் ஹிந்தியன்,
சே குவேரா என்றால் யார் என்று கேட்கும் அறிவாளி ஹிந்தியன்,
மகாபாரத ராமாயணக்கதைகளை வரலாறு என்று நம்பிவரும் ஹிந்தியன்

ஆங்கிலத்தை அண்ணாந்து பார்க்காமல் இருந்தால்தான் வியப்பு.

பிறப்பால் ஆங்கிலேயர்கள் அதாவது ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட பூர்வீக இங்கிலாந்து மக்கள் தமிழர்களை விடவும் குறைவு.
அவர்கள் மொழி உலகம் முழுவதும் பரவி இன்று ஆட்டிப்படைக்கிறது என்றால் அதற்கு அவர்கள் தன்தாய்மொழி மீது வைத்திருந்த பற்றே காரணம்.

நீ கடல்கடந்து போய் அவன் நாட்டில் அவன் மொழியைப் பேசினால் அவன் உன்னை மதிப்பானா?
அல்லது தன்னைப் பெருமையாக நினைப்பானா?

ஜெர்மனிக்கோ இத்தாலிக்கோ பிரான்சுக்கோ போய் ஆங்கிலத்தில் பேசுங்கள்.
அவன் ஆங்கிலம் தெரியாது என்று கூறுவான்.
கூறுவான் என்பது முக்கியமல்ல.
பெருமையாகக் கூறுவான்.
ஒன்று தெரியாது என்பதை வெட்கப்பட்டுத்தான் கூறவேண்டும்.
ஆனால் வேற்றொரு மொழியைத் தெரியாது என்பதைப் பெருமையுடன் கூறுவேண்டும்.
ஆங்கிலம் தெரியாது என்று கூறும் ஜப்பானியனும் சீனனும் இரஷ்யனும் சாதிக்காததையா ஆங்கிலம் திணிக்கப்பட்ட நம்மைப்போன்றவர்கள் சாதித்துவிட்டார்கள்?

ஹிந்தியாவுக்குள் இருக்கும்வரை ஹிந்தி தமிழை கற்பழித்துக்கொண்டுதான் இருக்கும்.

விளக்குப் பிடிப்பதை விட்டுவிட்டு விடுதலையைப் பற்றி சிந்திப்பீர் தமிழரே.

தமிழகம் இழந்த பகுதிகள் -3

விவகாரங்களிலாவத
ு அரசியல் கட்சிகள் சில
போராட்டங்களை நடத்தின.
அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம்
நாம்
இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக்
கொடுத்ததற்கு சமம்.
காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால்,
குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும்.
பழந்தமிழில் குடக்கு என்றால்,
மேற்கு என்று பொருள்.
அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க்
மொழி.
சுமார்முக்கால்
நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும்
கூர்க்
மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக்
கொண்டிருந்தார்கள். அதனால்,
மொழிவாரி மாநிலப்
பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள்,
‘நாங்கள்
எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின்
அடிப்படையாக
இருக்கும்
தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’
என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள்,
கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய
அளவில்
போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண்
காட்டி இருந்தால்கூட அவர்கள்
ஓடி வந்து ஒட்டிக்
கொண்டிருப்பார்கள்.
அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால்,
காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி,
தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள்.
நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.
கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால்
முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய
பெங்களூரு,
மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார்
தங்கவயல்
பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.
பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள
கர்நாடகத்தினர்
காய் நகர்த்திய விதம், அவர்கள்
எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக்
காட்டுகிறது.
ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட
வேண்டும்
என்றால் முதலில் நிலத் தொடர்பு,
அடுத்து மொழித்
தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி.
ஓசூரில்
அப்போது தெலுங்கு பேசுவோர் 39
சதவிகிதமும்
அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும்
இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம்
இருந்தாலும்
ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற
காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது.
அன்று அது வறண்ட
பூமி என்பது வெளியே சொல்லப்படாத
காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத
பட்சத்தில்
கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால்,
அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க
வேண்டும்.
ஆனால்-
பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட
மக்கள் அதிகம்
இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக்
தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம்
பேசும்
மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம்
இருந்தாலும்
நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம்
என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.
தமிழகம் அதற்கு உரிமையான
நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில்
அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத-
வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.
இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609
சதுர
கிலோமீட்டர்கள் தமிழகம்
அண்டை மாநிலங்களிடம் இழந்த
நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர
கிலோமீட்டர்கள். இவையும்
நம்மோடு இருந்திருந்தால்
தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய
மாநிலமாக
இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட
சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும்
என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய
மாநிலங்களைவிட வளமான மாநிலமாக
இருந்திருக்கும்
நன்றி: அசுஆ சுந்தர் (Asa sundar)

Saturday, 6 December 2014

தமிழகம் இழந்த பகுதிகள் -2

பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை.
அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது.
அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.
ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?
வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர்.
ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர்.
ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன்,
‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லாபகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.
வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர்.
இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.
ஆனாலும் தமிழத்தின் தேசிய
திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன்வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப்பகுதியில் திருத்தணி, வள்ளிமலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.
1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது.
சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது.
ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது.
திருப்பதி பறிபோனது.
காளஹஸ்தி போனது.
நந்தி மலை போனது.
நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால்
பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.
சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள்.
பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.
இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல்கட்சிகள்