Showing posts with label தூக்கு. Show all posts
Showing posts with label தூக்கு. Show all posts

Tuesday, 15 July 2025

ரிசானா நிமிஷா வேறுபாடு

 ரிசானா நிமிஷா வேறுபாடு

  ஏமனில் ஒரு மலையாள பிராடு !
அவளுடைய லோக்கல் கூட்டாளியை கொன்றுவிடுகிறாள்! 
 மரண தண்டனை அடைகிறாள்!
 அவளைப் பற்றி தெரிந்தும் 8.5 கோடி திரட்டி நட்ட ஈடு அளித்து அரும்பாடு பட்டு இன்று கடைசி நிமிடத்தில் மரண தண்டனையில் இருந்து அவரைக் காப்பாற்றிய மலையாளிகள் எங்கே?!

 17 வயது ஈழத்து சிறுமி ரிசானா!
 25 வயது என பொய் சொல்லி சவுதி க்கு வீட்டுவேலைக்கு போன இடத்தில் தவறுதலாக உணவு கொடுத்து ஒரு 4மாத கைக்குழந்தை இறந்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து 2013 இல் நடுத்தெருவில் தலையை வெட்டி கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்த நாம் எங்கே?! 

 

Saturday, 6 October 2018

கயவாளி கட்டபொம்மன் - 9

கயவாளி கட்டபொம்மன்

பகுதி - 9 (இறுதிப் பகுதி)

பதிவர்: ஆதி பேரொளி

"கட்டபொம்மனின் முடிவு"

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கிலேயப் படை முற்றுகையிட்டு இருக்க கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிவிட்டான்.

மறுநாள் அக்கோட்டை கைப்பற்றப்பட்டதும் கட்டபொம்மன் ஓடிவிட்டது பானர்மேனுக்கு தெரிகிறது.

ஏற்கனவே நடந்ததுபோல கட்டபொம்மன் ஆங்கிலேய தலைமை அலுவலகத்திற்கு போய் உயரதிகாரிகளை காக்கா பிடித்து தப்பிவிடுவான் என்று பானர்மேன் ஊகித்தான்.

உடனே சுற்றியுள்ள பாளையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினான்.
கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்போர் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்றும் அவனைக் கண்டதும் உயிருடனோ பிணமாகவோ பிடித்து ஆங்கிலப் படையிடம் ஒப்படைக்கும்படி அதில் எழுதியிருந்தது.

எட்டையபுரம் சென்று தமக்கு வழிகாட்ட உள்ளூர் விபரமறிந்த சிலரைப் பெற்றுக்கொண்டான்.

தனது படையில் ஒரு பகுதியை திருச்சி நோக்கியும் மற்றொரு பகுதியை வடக்கு நோக்கியும் போகுமாறு பணித்து
கட்டபொம்மன் திருச்சி அல்லது சென்னை அலுவலகத்தை அடையுமுன் எப்படியாவது துரத்தி பிடிக்கும்படி உத்தரவிட்டான்.

அப்போது லெப்டினண்ட் டல்லாஸ்  தலைமையில் சென்ற படைத்தொகுதி கட்டபொம்மனைத் துரத்திச் சென்று கோல்வார்ப்பட்டியில் கட்டபொம்மன் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து சுற்றிவளைத்தது.

கட்டபொம்மன் மற்றவர்களை அம்போ என்று விட்டுவிட்டு எப்படியோ தப்பிவிட்டான்.
கட்டபொம்மனுடைய கொள்ளைக் கூட்டணியில் இருந்த பயங்கர கொள்ளையன் 'நாகலாபுரம் சௌந்தரபாண்டிய நாயக்கன்' இதில் பிடிபட்டான்.
கட்டபொம்மனின் தம்பி இருவரும் அமைச்சர் தனாதிபதிப் பிள்ளையும் பிடிபட்டனர்.

கட்டபொம்மனின் குடும்ப பெண்கள் தூத்துக்குடி சென்று கட்டபொம்மனது ஆங்கிலேய நண்பன் டேவிசனிடம் சரண் புகுந்தனர்.
அவனோ தன்னால் எதுவும் செய்யமுடியாதென்று ஆங்கிலேயரிடமே அவர்களை ஒப்படைத்தான்.

கட்டபொம்மன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டதால் இவர்கள் பற்றிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

கட்டபொம்மனை முதல் விடுதலை வீரன் என்று பலரும் கருத ஒரு காரணம் அவனே வெள்ளையரால் தூக்கில் போடப்பட்ட முதல் பாளையக்காரன் என்பதுதான்.
ஆனால் அவனுக்கு முன்பே பானர்மேன் உத்தரவின்பேரில் தனாதிபதிப் பிள்ளை தூக்கில் போடப்பட்டு இறந்தபிறகு தலை வெட்டப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் நட்டுவைக்கப்பட்டது.

அடுத்தது சௌந்தரபாண்டிய நாயக்கன் கோபாலபுரத்தில் தூக்கிலப்பட்டான்.

கட்டபொம்மன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பகலில் மறைந்தும் இரவில் கால்நடையாகவும் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தான்.
  சிவகங்கைச் சீமையின் ஆளியூரில் பதுங்கி மறுநாள் கலியபுரம் எனும் ஊரில் பதுங்கியிருந்தான்.

அப்பகுதி புதுக்கோட்டை மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட திருக்களம்பூர் எனும் பகுதியின் எல்லை.
அங்கே புதுக்கோட்டை அரசின் திருக்களம்பூர் தளபதியாக 'சர்தார் முத்துவைரவ அம்பலக்காரர்' என்பவன் இருந்தான்.

அவன் வெளியாட்கள் நடமாட்டத்தை அறிந்து அங்கே சென்று கட்டபொம்மனைப் பிடித்தான்.
சிறிதுநேரத்தில் ஆங்கிலேயரும் அங்கே வந்தடைந்தனர்.

கட்டபொம்மன் தன்னை பானர்மேன் தவிர வேறு வெள்ளையர் யாரிடமாவது ஒப்படைக்குமாறு அம்பலக்காரர் காலில் விழுந்து கெஞ்சி உயிர்பிச்சை கேட்டான்.

அந்த தளபதியோ மறவன். திருநெல்வேலி மறவர்களுக்கு கெட்டபொம்மு செய்த கொடுமைகளை மனதில் கொண்டு அந்த அம்பலக்காரர் கட்டபொம்மனை தரதரவென இழுத்து வந்து பானர்மேனின் படைமுன்பே கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டான்.

(புதுக்கோட்டை அரண்மனை கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்ததாகவும் பிறகு வெள்ளையரிடம் ஒப்படைத்ததாகவும் இந்த சம்பவம் திரித்து எழுதப்படுகிறது)

1799 அக்டோபர் 16 ஆம் தேதி கயத்தாறில் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டான்.
அனைத்து பாளையக்காரர்களும் வரவழைக்கபட்டனர்.

அனைவருமே கட்டபொம்மு மீது புகார்களை அடுக்கினர்.
பொதுமக்களும் சாட்சியம் அளித்தனர்.
வெள்ளைய அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

வேறுவழியில்லாத கட்டபொம்மன் அனைத்தையும் ஒப்புக்கொண்டான்.

இரண்டு வெள்ளையர்கள் சாவிற்கு காரணமான கட்டபொம்மனை மன்னிக்க ஆங்கில விசாரணைக் குழு தயாராக இல்லை.
எனவே கட்டபொம்மனுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது.

ஆங்கிலேயருக்கு மக்கள் ஆதரவும் நம்பிக்கையும் கிடைக்க மக்கள் அதிகம் வெறுக்கும் கட்டபொம்மனை பொதுவெளியில் தூக்கிலிட பானர்மேன் உத்தரவிட்டான்.

உடனடியாக கயத்தாறு முக்கிய சாலையில் ஒரு புளியமரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டு கட்டபொம்மன் கொல்லப்பட்டான்.

அங்கு வந்திருந்த பாளையக்காரர் அனைவரும் திகிலடைந்தனர்.

தமிழகத்தில் நன்கு காலூன்றிவிட்ட ஆங்கிலேயர் இனி யார் ஆதரவும் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
பாளையக்காரர், நவாபு, நிஜாம் என ஆதிக்கம் செலுத்தி வந்த அனைவரது அதிகாரங்களையும் பிடுங்கினர்.

இனி பாளையங்கள் செலுத்தும் சிற்றரசு ஆட்சி செல்லாதென்றும்  அனைத்து பாளையக்காரர்களும் தமது கோட்டைகளை இடித்துவிடுமாறும் உத்தரவிட்ட பானர்மேன்
அவர்களது நிலத்தில் வரிவசூல் செய்து ஆங்கிலேயருக்கு வரி கட்டும் நிலக்கிழார்களாக பாளையக்காரர்கள் தொடர்ந்து இருக்கலாம் என்றும் உத்தரவிட்டான்.

கட்டபொம்மன் போன்ற ஒரு கோழை வந்தேறித் தெலுங்கனை தமிழருக்காகப் போராடிய மபொசி ஏன் ஆதரிக்கவேண்டும்?!

அரசியல்தான் காரணம்.

காங்கிரஸ் ஆதரவாளரான மபொசி திராவிடத்தையும் அதில் தெலுங்கர் ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தார்.
சென்னையை ஆந்திரர் கேட்டபோது அவர்களை எதிர்த்து கடுமையாகப் போராடினார்.

இதனால் அவர் இனவெறியர் என்றும் தெலுங்கர்-எதிரி என்றும் நடுநிலை வேடமிடும் கயவர்களால் குற்றம்சாட்டப் பட்டார்.

இதைச் சமன்செய்யும் வகையில் அவர் தமிழகத்தின் உட்பகுதித் தெலுங்கு வந்தேறு குடிகளை ஆதரித்தார்.
ஆந்திராவின் அசல் தெலுங்கருக்கும் தமிழக வந்தேறித் தெலுங்கருக்கும் வேறுபாடு இருப்பதாகப் பேசினார்.

அவர்கள் தமிழர்களே என்றும் கூறத் துணிந்தார்.
கருணாநிதி தூய தமிழர் என்று கூறினார்.
ஆனால் கருணாநிதி ஆட்சியில் 'கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' போல தெலுங்கு வரலாறு தோண்டப்படுவதைத் தடுக்க ஆங்கிலேயர் கால ஆவணங்கள் சேமிக்கப்பட்டிருந்த எழும்பூர் ஆவணக் காப்பகம் எரிக்கப்பட்டு சான்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

இதன்பிறகு தெலுங்கரான பந்துலு கட்டபொம்மன் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தார்.
போலியான வரலாற்றைக் கூறிய இந்த திரைப்படம் வெளியாக உதவிய மபொசி அதை ஈடுகட்டும் வகையில் பந்துலுவை வைத்தே கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ.சி வாழ்க்கை வரலாற்றையும் திரைப்படமாக்கினார்.

ம.பொ.சி தமிழகத்தில் வாழ்ந்த தெலுங்கரில் ஒரு நாட்டுப்பற்றாளனைத் தேடி கட்டபொம்மனை கையிலெடுத்தார்.

உண்மை தெரிந்தபிறகு கைவிடமுயன்றார்.
ஆனால் மாற்றாக ஒரு வீரமான தமிழகத் தெலுங்கரின் வரலாறு தேவைப்பட்டது.

  ஆனால் அப்படி யாருமே கிடைக்கவில்லை.


Monday, 8 December 2014

வீரப்பனார் திறமைகள்

வீரப்பனார் திறமைகள்
ஓஒஓஒஓஒஓஒஓஒஓஒஓ

வீரப்பனாருக்கு ஒயிலாட்டம் ஆடத்தெரியும்; நாடகங்கள், தெருக்கூத்துகளில் நடித்துள்ளார்; திரைப்படத்துறையில் கூட ஒருமுறை முயற்சி செய்தார்;
அதிரடி வேட்டைக்காரனாக இருந்தவர்; எந்த ஒரு மனிதர் போலவும் விலங்கு போலவும் குரலெழுப்பத் தெரியும்;
தியானம், சில யோகாசனங்கள் செய்வார்; மரக்கட்டைகளை நுட்பமாக செதுக்கி உருவங்களும் செதுக்குவார்; குறிதவாமல் துல்லியமாக சுடத் தெரியும்,கன்னி வைத்து விலங்குகளைப் பிடிக்கும் நுட்பங்கள் தெரிந்தவர்; பள்ளி பக்கமே போகாதவர் என்றாலும், தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்; விலங்குகள் பறவைகள் நடமாட்டத்தை வைத்தே வேற்றுமனிதர் நடமாட்டத்தையும், காலநிலையையும் கணித்துவிடுவார்;
சமையல் தெரியும்; நீச்சலிலும் வல்லவர்; மீன்பிடித்தல், மரமேறுதல், மலையேறுதல், திசையறிதல், எல்லாம் அத்துப்படி;
ஒரு நாளைக்கு குறைந்தது 20கிமீ நகர்ந்து கொண்டேயிருப்பவர்;
3000சகிமீ காட்டில் தனியரசு செலுத்தியவர்; வெடிகுண்டு, கையெறி குண்டு, கண்ணிவெடி எல்லாம் செய்யத்தெரிந்தவர்;
படைவியூகங்கள் வகுப்பது, படை நகர்வு, உளவு பார்ப்பது, மாறுவேடம் தரித்தல், நேரடி மோதல், தாக்குதல் தொடுப்பது, ஆயுதக் கொள்ளை என ஒரு படைத்தலைவருக்கான அத்தனை குணங்களும் அமையப்பெற்றவர்
(தொடர்பான பதிவு https://m.facebook.com/photo.php?fbid=340429839394009&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13&_rdr )
மூலிகை கண்டறிதல், மருந்து தயாரித்தல், பேச்சுத்திறமை, கமுக்கமான பணப் பரிமாற்றம், காட்டுவேளாண்மை, பொருள் கடத்தல், கமுக்கமான தகவல் தொடர்பு என அனைத்தையும் விரல்நுனியில் வைத்திருந்தவர்;

இத்தகைய திறமைகள் இருந்ததால்தான் அவரால் 32வருடங்கள், இரு மாநிலக் காவல்துறை மற்றும் வனத்துறை, மத்திய ரிசர்வு படை,உள்நாட்டு வான்கண்கானிப்பு, காட்டுக் கொள்ளையர்கள், அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் அனைவரையும் எதிர்த்து புலிகள் ஆண்ட வன்னி அளவு பெரிய காட்டை ஆளமுடிந்தது;
1990களிலேயே வீரப்பனார் பற்றித் தகவல் தருவோருக்கு நாற்பத்தி நூறாயிரம்(40லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது;
கர்நாடக அரசு வீரப்பனாரோடு போராட 70கோடி செலவளித்துள்ளது; தமிழகம் 40கோடி செலவளித்துள்ளது;

இரு மாநிலங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 15,000 காவல் மற்றும் வனத்துறையினரை ஈடுபடுத்தி வந்தது; இத்தனைக்கும் வீரப்பனாரிடம் எப்போதுமய் 150பேருக்கு மேல் இருந்ததில்லை.

:::::::::::::::::::::::::::::
வீரப்பனாரின் கூட்டாளிகள் நால்வர் கர்நாடகாவில் பெல்காம் சிறையில் தூக்கில்போடப்படவுள்ளனர்;
இது தமிழர்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ள பல செய்திகளில் ஒன்று;
வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் பல நூறு மக்களை கொன்று கற்பழித்து கொடுமைப்படுத்திய அதிரடிப்படையும் அதன் அதிகாரிகளும் பணமும் பதவியும் பெற்று சுகமாக வாழ்கின்றனர்;
1993ல் வீரப்பனார் கன்னிவெடி வைத்து வெறியாட்டம் போட்டுவந்த அதிரடிப் படையின் தமிழக,கர்நாடக காவலர்கள் 22பேரைக் கொன்ற வழக்கில் மேற்கண்ட நால்வர் தண்டனை பெற்றுள்ளனர்;
ஆனால் 1994ல் ஜூன் 11 சின்னாம்பதி என்ற சிற்றூரை ஆயுதமுனையில் சுற்றிவளைத்து அந்த ஊரிலிருந்த அத்தனை இளம்பெண்களையும் கூட்டமாக கற்பழித்த அதிரடிப்படையினர் மீதான விசாரணை என்னவானது என்று யாருக்கும் கவலையில்லை;
அவர்களெல்லாம் சுகபோகமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர்;இதில் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் நூறுபேரை வீரப்பனார் தம்மோடு காட்டுக்குள் வைத்து கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தார்;
அது தொடர்பான பதிவு https://m.facebook.com/photo.php?fbid=346582148778778&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=42&refid=17
தமிழகத்தின் பி.யூ.சி.எல் அமைப்பின் தலைவர் எஸ்.பாலமுருகன் என்பவர்தான் இவர்களுக்காக போராடிவருகிறார்;
இவர்களின் கருணைமனு நமது இன எதிரிகளில் ஒருவனான பிரணாப் முகர்ஜியால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிராகரிக்கப்பட்டது.

https://m.facebook.com/photo.php?fbid=407860715984254&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739