உள்நாட்டுப் போர் முடிந்தது
ஆண்டு: 2117
மாதம்: 05
நாள்: 21
பேச்சுவார்த்தை நடந்தது.
படை திரட்டி தாய்நிலத்தை மீட்டாயிற்று.
தற்போது தாய்நிலத்தை இரண்டு நாடுகளாக பிரிக்கவேண்டும் என்று தென்திசை தளபதி கேட்டார்.
இதற்கு காரணம் தெற்கே தாய்நிலம் மக்கட்தொகை குறைவாக உள்ளது.
வடக்கே மக்கட்தொகை மிக அதிகம்.
ஆக ஒரு கோடி மக்களை தெற்கில் பரவலாக குடியமர்த்தும் திட்டத்தை தலைவர் முன்வைத்ததுதான்.
தெற்கு தளபதி இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
வரலாற்றில் தனிநாடாக நெடுங்காலம் இருந்தோம்
நில அமைவும் வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரிந்திருந்தது.
தெற்கேதான் முதலில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது.
ஆக தெற்கு தனிநாடு என்பது தென்திசை தளபதியின் வாதம்.
நிலம் இரண்டாக பிரியும் முன்பே இருபுறமும் இனம் வாழ்ந்துவருகிறது.
இரு புறமும் ஒரே ஆட்சியில் இருந்ததும் உண்டு.
இருபுறத்திலும் மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஒரே போலத்தான் உள்ளன.
ஆக இரண்டாக பிரிந்த தாய்நிலத்தை பாலம் கட்டி இணைத்து ஒரே நாடாக ஆக்கவேண்டும் என்பது தலைவரின் வாதம்.
விவாதம் முற்றி தென்திசை மக்கள் போரால் வடக்கே வந்தபோது சரியாக நடத்தவில்லை என்று தளபதி குற்றம் சாட்டினார்.
தெற்கே விடுதலைப்போர் ஆரம்பித்தது முதல் அது தோல்வியில் முடிந்தவரை வடக்கு மக்கள் உதவிய அனைத்தையும் தலைவர் பட்டியலிட்டார்.
வடக்கை விடுத்த தனியாக போராடியதால்தான் தெற்கு தோல்வியடைந்ததாக அவர் விவாதித்தார்.
தெற்கே வாக்கெடுப்பு நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.
ஆனால் தெற்கு தளபதி மறுத்துவிட்டார்.
மக்கள் வெற்றிக்களிப்பிலும் இனவுணர்விலும் இருக்கும் காலகட்டம் அது.
வாக்கெடுப்பின் முடிவு எப்படியும் ஒரே நாடாக இருப்பதாகத்தான் இருக்கும் என்பதை அவர் கணித்தார்.
தலைவருக்கும் ஒரு வேளை தெற்கு மக்கள் தனிநாடாக வாக்களிப்பார்களோ என்ற ஐயம் சிறிதளவு இருந்தது.
20 ஆண்டு கழித்து வாக்கெடுப்பு நடத்தலாம் என்று ஒரு தளபதி கூறினார்.
அதுவரை மக்களிடம் இருதரப்பினரும் பிரச்சாரம் செய்யலாம் என்றும் கூறினார்.
தலைவரும் தளபதியும் உடனடியாக மறுத்துவிட்டனர்.
மேற்கண்ட முடிவு தளபதிக்கு சாதகமாக முடியலாம்.
ஆனால் தளபதி இராணுவ நடவடிக்கை பற்றி அறிந்தவர்.
தலைவருக்கு அடுத்த போரியல் வல்லுநர் அவர்தான்.
சனநாயக அரசியல் அவருக்கு புரிவதில்லை.
தலைவரின் நிலையும் அவ்வாறே.
அவருக்கு அலங்காரமாக பேசவோ உணர்ச்சியோடு உரையாற்றவோ தெரியாது.
எழுதமட்டும் வரும்.
அதுவும் அத்தனை சிறப்பாக அவரால் முடியாது.
அதாவது அவர்களது இனத்தின் பண்பை அவர்கள் அப்படியே கொண்டிருந்தனர்.
அந்த இனம் ஒரு ராணுவ இனம்.
சிந்தனையும் திறமையும் கொண்ட இனம்.
நேரடியாக மோதுவதுதான் அவர்களுக்கு வரும்.
ஏமாற்றத் தெரியாது. அதனால் அவர்களுக்கு அரசியல் பாதையில் எதற்குமே தீர்வு தேட தெரியவில்லை.
இருவரும் இராணுவ வழியில் தீர்க்கவேண்டும் என்றே விரும்பினர்.
ஆனால் பெரியதொரு உள்நாட்டுப் போரை விரும்பவில்லை.
தலைவர் ஒரு தீர்வை முன்வைத்தார்.
இரண்டாக பிரிந்துள்ள தாய்நிலத்தில் நடுவே ஒரு தீவு உண்டு.
அதை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்கள் வென்றதாக ஆகும்.
வென்றவரே அதன்பிறகு தாய்நிலம் முழுவதற்கும் இனத்திற்கும் தலைவர்.
அவர் என்ன விரும்புகிறாரோ அது நடக்கும்.
விதிமுறைகள் வகுக்கப்பட்டன
* ஏழு நாட்களுக்கு மேல் போர் தொடரக்கூடாது.
ஏழாவது நாளில் யார் தீவின் நிலத்தை அதிகம் பிடித்துள்ளனரோ அவர்கள் வென்றனர்.
* போர் தொடங்கும் முன் தீவில் எந்த முன்னேற்பாடும் செய்திருக்ககூடாது
* தீவின் நிலத்தை 100% யார் முதலில் கைப்பற்றுகின்றனரோ அவர்கள் வென்றனர்.
* இரு கரையிலிருந்து எத்தனை தடவாளங்களை வேண்டுமானாலும் அனுப்பிக்கொள்ளலாம்.
அக்கரையை மட்டும் தாக்கக்கூடாது.
பேச்சுவார்த்தை முடியும்போது தலைவர் சொன்னார் ஆறுநாட்களில் போர் முடியும் என்று.
இருதரப்பும் படை திரட்டியது.
விடுதலை போர்களிலேயே மிகவும் விறுவிறுப்பானது இந்த குட்டிப் போர்தான்.
தலைவரின் படை பெரும்பாலும் மனவலிமையையும் தனிமனித செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவது.
தளபதியின் படை பயிற்சியையும் கீழ்படிதலையும் அடிப்படையாகக் கொண்டது.
தலைவரின் படையில் எந்த கட்டுப்பாடும் கிடையாது.
அவர்கள் போர்க்களத்தில் மனம்போன போக்கில் இயங்குவார்கள்.
தளபதி படை அப்படியில்லை.
கட்டுக்கோப்பானவர்கள்.
தலைமை வழிநடத்த அதற்கு அப்படியே கீழ்படிவார்கள்.
தற்கொலைத் தாக்குதல் நடத்துவார்கள்.
கடுமையான பயிற்சியும் வலுவான உடற்கட்டும் கொண்டவர்கள்.
தலைவரின் படை 95% ஆண்களை மட்டுமே கொண்டது.
தளபதி படையை விட 8 மடங்கு பெரியது.
ஆனால் தளவாடங்கள் குறைவு.
தளபதி படை 35% பெண்களைக் கொண்டது.
நவீனமானது.
விமானப் படையும் நீர்மூழ்கிகளும் கொண்டது.
இரண்டு நாள் கழித்து காலை 10 மணிக்கு போர் தொடங்கியது.
இருபுறத்தில் இருந்தும் படைகள் புறப்பட்டன.
தீவுக்கு அருகே இருப்பதால் தென்படை முதலில் தீவை அடைந்தது.
அவர்கள் முழுமையாக தரையிறங்கவும் மறுமுனையில் தலைவர் படை இறங்கியது.
இருவரும் முன்னேறினார்கள்.
தலைவர்படை கால்வாசி தீவை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் அவர்களை மூன்றுபுறம் சூழ்ந்தவாறு முக்கால்வாசி தீவை தளபதி படை அதைவிரைவாக கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது.
தீவைச் சுற்றிய நீர்ப்பகுதியும் இதே நிலையில் இருந்தது.
நான்கு நாட்கள் இருவரும் கடுமையான சமர் புரிந்தனர்.
ஆனால் கட்டுப்பாட்டு பகுதியில் பெரிய முன்னேற்றம் இல்லை.
ஐந்தாவது நாள் தலைவரின் கடற்படையை முறியடித்து தளபதி முழுதீவையும் சூழ்ந்தார்.
இந்நிலையில் தலைவர்படை நிலத்தில் சிறிது முன்னேறியது.
ஆறாவது நாளில் தலைவர் படை முழுபலத்துடன் முன்னேறியது.
தளபதி அனுப்பிய விமானங்கள் வான்வழித் தாக்குதல் செய்தன.
அன்று மாலை மிக கண்மூடித்தனமாக போரிட்டு மிக மூர்க்கமாகத் தாக்கியபடி அதிவிரைவாக கூர்மையாக முன்னேறிய தலைவர் படை மறுகரையை அடைந்து தளபதி படையை குறுக்காக இரண்டாகப் பிளந்தது.
இது தலைவர் கடைசிக்கட்டத்தில் கையில் எடுக்கும் போர்த்தந்திரமாகும்.
தளபதியின் படை தற்கொலைத் தாக்குதலில் இறங்கி தலைவர் படைக்கு பலத்த சேதத்தை வழங்கியது.
ஆறாவது நாள் இரவுக்குள் தலைவர்படை பிளந்தவாறு இருபுறமும் சமமாக முன்னேறி ஒரு புறத்தில் முழுவெற்றி கண்டது.
மறுபக்கத்தை இரண்டாக பிளந்து ஒருபக்கத்தை வென்றது.
தீவின் ஒரு முனையில் தளபதி படை தாக்குப்பிடித்து நின்றது.
தளபதி மேலும் படைகளை அனுப்பி அப்படைக்கு வலு சேர்த்தார்.
வான்வழித் தாக்குதலுக்கு வந்த தளபதியின் விமானங்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர் தலைவர் படையினர்.
பின்புறமாக கரையேற முயன்ற தளபதி கடற்படையும் கரையேறவிடாமல் தடுக்கப்பட்டது.
தலைவர் படை சரணடையுமாறு எச்சரித்தது.
தளபதி படையினர் மறுத்துவிட்டனர்.
ஏழாம் நாள் விடியுமுன் தளபதி படை முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
தீவு முழுக்க தலைவர் கட்டுப்பாட்டில் வந்தது.
தன்காலத்தில் தனது இனத்தின் தலைவன் தான்தான் என்பதை மீண்டுமொருமுறை அழுத்தந்திருத்தமாகத் தலைவர் நிரூபித்தார்.
அதன்பிறகு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தளபதி நேர்மையாக தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
வடக்கில் இருந்து பரதரப்பட்ட சாதி, மதத்தைச் சேர்ந்த ஒரு கோடி மக்கள் தெற்கு முழுவதும் பலதரப்பட்ட குடிமக்கள் மத்தியில் பரவலாக குடியமர்த்தப்பட்டனர்.
தெற்கில் மக்கட்தொகை செறிவான ஒரு குறிப்பிட்ட நகரப் பகுதியிலிருந்து வடக்கின் காலிசெய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஐந்து லட்சம்பேர் செறிவாக ஒரே இடத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
தலைவருக்கு எதிரான வேற்றினத்தார் இதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திரித்து எழுதினர்.
தெற்கின் மீது வடக்கின் ஆதிக்கம் என்றவாறும் தேர்தலை நடத்தாமல் போர்மூலம் அடக்கினார் என்றும் தமக்கு போட்டியாக உருவானவரை ஒழித்தார் என்றும் எழுதினர்.
உண்மை என்னவென்றால் பெரும்பான்மை படைபலம் உள்ள தலைவர் எதையெல்லாம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டதோ அதையெல்லாம் தளபதிதான் செய்தார்.
தலைவர் தனது உளவுத்துறை மூலம் தளபதியின் நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிந்து முறியடித்ததாக பலர் எண்ணினர்.
தெற்கு படையில் வடக்கைச் சேர்ந்த யாருமே இருந்ததில்லை.
ஆனால் தெற்கே முதல் விடுதலைப்போர் நடந்தபோது அகதிகளாக வடக்கே குடியேறிய 5 லட்சம் பேர் மற்றும் அவர்களின் குழந்தைகள் பலர் தலைவரின் படையில் இருந்தனர்.
ஆக உளவு பார்க்கவும் தளபதிக்குதான் சாதகமான சூழல் இருந்தது.
தலைவர் தனது படையையும் தளவாடங்களையும் தீவுக்கு அனுப்பியதோடு சரி அதன்பிறகு அவர்களுக்கு எந்த உதவியும் அனுப்பவில்லை.
தலைவர் படை கொண்டுசென்ற உணவையும் தளவாடங்களையும் மற்றும் எதிர்த்தரப்பிடமிருந்து கைப்பற்றியவற்றையும் வைத்துக்கொண்டு போரிட்டது.
ஆனால் தளபதி ஆட்களையும் தளவாடங்களையும் அனுப்பிக்கொண்டேயிருந்தார்.
தலைவர் கள நிலவரங்களை கேட்டுக்கொண்டாரே தவிர அவர்களை வழிநடத்தவில்லை.
தளபதி அவரது படை 24 மணிநேரமும் தானே இயக்கிக்கொண்டிருந்தார்.
அதாவது தலைவர் மேற்கண்டபோரில் வெற்றியைபெரிதாக நினைக்கவில்லை.
தான் வென்றாலும் தளபதி வென்றாலும் தாய்நிலம் ஒற்றையாட்சியில் இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தார்.
அதனால்தான் சிறுபகுதியைக் கேட்ட தளபதிக்கு முழு தாய்நிலத்துக்கும் தலைவனாகும் வாய்ப்பை அளித்தார்.
தலைவர் நினைத்திருந்தால் ஒரே நாளில் போரை வென்றிருக்கமுடியும்.
ஆனால் தன் இனத்தின் ஒரு பிரிவினர்க்கு மோசமான தோல்வியை வழங்க அவர் விரும்பவில்லை.
ஆக தெற்கு மக்களுக்கு தோல்வி உணர்வு வரவில்லை.
குடியேற்றம் நடந்தபிறகும் எங்கும் கலவரமோ பூசலோ நடக்கவேயில்லை.
இருதரப்பினரும் ஒருவரையொருவர் அந்நியராக நினைத்ததேயில்லை.
ஆக ஒருதாய்ப் பிள்ளைகளை கூறுபோட நினைத்த தென்தளபதிதான் வாக்கெடுப்பு நடந்திருந்தாலும் தோற்றிருப்பார்.
தளபதியை தலைவர் தண்டிக்கவுமில்லை.
தளபதி மீண்டும் ஒரு தளபதியாகவே வடக்கில் ஒரு பகுதிக்கு நியமிக்கப்பட்டார்.
வடக்கில் பிறந்து வளர்ந்த ஒரு தெற்கு குடும்ப வாரிசை அவர் தளபதியாக தென்பகுதிக்கு நியமித்தார்.
தெற்குக்கு ஒரு தலைநகரை அமைத்து அதை துணைத்தலைநகர் என்று அழைக்குமாறு கட்டளையிட்டார்.
தாய்நிலத்தின் இரு துண்டுகளை நிலத்தொடர்பு ஏற்படுத்தி இணைக்கும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கினார்.
தலைவர் எடுத்த முடிவுகள் எதிர்மறையான தாக்கங்களை சிறிய அளவில் வருங்காலத்தில் ஏற்படுத்தலாம்.
ஆனால் நேர்மறையான ஆழமான நல்லதொரு தாக்கத்தை இனத்தின் மீது ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இனத்தின் தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தலைவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.