Showing posts with label குறிஞ்சாக்குளம். Show all posts
Showing posts with label குறிஞ்சாக்குளம். Show all posts

Sunday, 29 October 2017

குறிஞ்சாக்குளம் காந்தாரி

குறிஞ்சாக்குளம் காந்தாரி

மகாபாரதத்தில் வரும் காந்தாரி
காந்தாரா(Ghandhara) நாட்டைச் சேர்ந்தவள்.
இது காஸ்மீரை ஒட்டிய இன்றைய பாகிஸ்தானின் வடபகுதி.

இன்றைய ஆப்கானிஸ்தானின் கந்தஹார்(kandahar).
இதன் பழையபெயர் இஸ்கந்தரியா(iskandariya).

ஈரான் நாட்டின் தென்பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி குறிஞ்ச்(kurinch) என்ற ஊரும் உள்ளது.

(25 ஜனவரி 2016 அன்று முகநூல் பதிவாக இட்டது)

Monday, 31 July 2017

பறையருக்கு எதிரி யார்?

பறையருக்கு எதிரி யார்?

என்னை பறையருக்கு எதிரி என்பவர்களுக்கு...

நான் பறையர் பார்ப்பனர் இல்லை என்றுதான் கூறினேன்.
பறையர்தான் பார்ப்பனர் என்றால் இன்றைய பார்ப்பனர் வந்தேறி என்றாகிறது.
இது திராவிடத்தின் ஆணிவேருக்கு பலம் சேர்க்கிறது.

அதனால்தான் பார்ப்பனர் யார் என்பதை விளக்கவேண்டியது அவசியமாகிறது.

பிராமணர் வேறு பார்ப்பனர் வேறு பறையர் வேறு என்று தெளிவாக சான்றுகளுடன் பதிவிட்டு வருகிறேன்.

என்னை சாதிவெறியன் என்று கூறும் பறையரிய சூரர்களே!
நான் பிறந்த சாதியை விமர்சிப்பதன் மூலம் நீங்கள் பதிலடி கொடுத்ததாக ஆகிவிடாது.
அதற்கு பதிலடி கொடுக்க என் சாதி பற்றி எனக்கு ஒரு எழவும் தெரியாது.

2012, 2013 களில் பெரும்பான்மை பறையர்கள் தங்கள் பெருமை தெரியாது தலித்திய விரலை சூப்பிக்கொண்டிருந்த போது,
நான் பறையடிப்பவர்தான் பறையர் என்று நினைக்கும் கத்துக்குட்டியாக இருந்தபோதும்
இலக்கியங்களை ஆராய்ந்து பறை பல இடங்களில் பேசப்படுவதையும்
அது சாவுக்கு மட்டும் அடிப்பதல்ல என்றும்
பல சான்றுகளைப் போட்டு
பறை ஒரு உயர்ந்த இசைக்கருவி என்றும் அதை வாசிப்போர் எப்படி கீழ்சாதி என்றும் வாதாடிக்கொண்டிருந்தேன்.

ஆண்டாள் எனும் பார்ப்பாத்தி பல இடங்களில் பறை பற்றிப் பேசுவதை பதிவாகப் போட்டதுண்டு.

பறையடிக்கும் கோவில் சிற்பங்களை எல்லாம் பகிர்ந்ததுண்டு.

இறைமறுப்பாளனான நான் அன்வர் அண்ணன் நடத்தவிருந்த குறிஞ்சாக்குளம் காந்தாரியம்மன் சிலைநிறுவல் போராட்டத்திற்கு முகநூலில் ஆதரவு திரட்டினேன்.

அந்த போராட்டத்திற்கு எந்த பறையர் அமைப்பும் வரவில்லை.
இன்று பறையர் பறையர் வாய்கிழிய கத்திய எவரும் வரவில்லை.
(ஆனால் தகவலறிந்த இமானுவேல் சேகரனார் மகள் வருவதாகத் தெரிவித்திருந்தார்).

எந்த போராட்டத்துக்கும் கட்சிக்கும் போகாத நான் குறிஞ்சாக்குளம் பறையர்களுக்காக டெல்லியில் இருந்து விடுமுறை எடுத்து நேரில் போனேன்

என் தம்பியும் நானும் பாதிவழிவரை இருசக்கரவாகனத்தில் போய்க்கொண்டிருந்தபோது அலைபேசி வந்தது.
அன்வர் இரவிலேயே கைது செய்யப்பட்டு அடுத்து தலைமை தாங்க இருந்தவர் சரியாக திட்டமிடாததால் போராட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.

பிறகு போராட்ட குழுவில் எஞ்சியோரை இலஞ்சியில் போய் சந்தித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

உண்மையில் எனக்கு இன்றுவரை வயிற்றெரிச்சல் தீரவில்லை.
அந்த போராட்டம் மட்டும் நடந்திருந்தால் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கும்.

இந்த பதிவை படிக்கும் பறையர்களே!

பறையர் தலைமை தாங்கி நடத்தும் கட்சி இயக்கம் என எதையும் நம்பாதீர்கள்.

தமிழ்நிலம் முழுவதும் பரவி வாழும் தமிழரில்பெரும்பான்மைச் சமூகமான நீங்கள் தமிழ்தேசியத்தை கையில் எடுத்தால் நல்லதொரு பெரிய மாற்றம் நடைபெறும்.

உங்களை பார்ப்பனர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
பௌத்தன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல் உங்களின் உண்மையான அடையாளமான தமிழன் என்றே அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்தேசியம்தான் உங்களை உயர்த்தும்!
தமிழர் அனைவரையும் உயர்த்தும்!

நான் உட்பட முகநூல் போராளிகளை யாரையும் நம்பாதீர்கள்.

நீங்களே சிந்தித்து செயல்படுங்கள்!

முகநூல் பறையரிய போராளிகள் இனத்துரோகி திருமாவை அவர் செய்யும் அடிமைத்தனமான அரசியலுக்காக விமர்சித்தனர்.
அவர் நேரில் சந்தித்து ஒருமுறை முதுகைத் தட்டிக்கொடுத்ததும் அப்படியே அவருக்கு ஆதரவாக மாறியவர்கள்.

கபாலி படம் வந்தபோது 'ரஞ்சித் ரஞ்சித் பறையன் பறையன்' என்று ஒருநாளைக்கு 100 பதிவு போட்டவர்கள்.

தமிழனை மூத்திரக்குடி என்று திட்டும் வெறி பிடித்த சாக்கிய பறையர்கள் இவர்களை விட ஆபத்தானவர்கள்.

நீங்கள் இல்லாமல் தமிழ்தேசிய எழுச்சி கடினமானதுதான்,
ஆனால் எழமுடியாது என்று மட்டும் நினைக்கவேண்டாம்.

அதேநேரத்தில் உங்கள் பலத்தோடு தமிழ்தேசியம் மிகவேகமாக இலகுவாக எழமுடியும்.

பறையர்கள் நீங்கள் நினைத்தால் தமிழ்தேசியத்திற்கு தலைமையேற்க கூட முடியும்.

நீங்களே முடிவெடுங்கள்!

இந்த பதிவைப் படிக்கும் நீங்கள் பறையர் என்றால்
உங்கள் சமூகத்தின் மீது உண்மையில் அக்கறை இருந்தால்
நீங்கள் தனிமனிதனாக தமிழ்தேசியத்திற்கு திரும்புங்கள்.

தமிழ்தேசியத்தை இப்போதே கையிலெடுங்கள்!
தமிழ்தேசியத்தைக் கையிலெடுக்கதோருக்கு இனி வருங்காலமில்லை.

வேறுவழியின்றி கடைசிநேரத்தில் வந்து தமிழ்தேசியத்துடன் ஒட்டிக்கொண்டால் உங்களுக்கு முன்னேற்றமும் கடைசியாகத்தான் கிடைக்கும்.

முடிவு உங்கள் கையில்!

Saturday, 23 January 2016

தலித் என்பதன் பொருள் என்ன?

பிராமணரல்லாதோர் அனைவரும் 'தலித்'

-இதுதான் அம்பேத்கரின் வரையறை.

குறிஞ்சாக்குளத்திற்கு தமிழர்கள் வந்தால் போதும்.

தலித்துகள் வரவேண்டிய அவசியம் இல்லை.

Wednesday, 13 January 2016

குறிஞ்சாக்குளம் அவலம் (காணொளி)

https://m.facebook.com/story.php?story_fbid=649200845183572&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.649200845183572%3Atl_objid.649200845183572%3Athid.100002809860739%3A306061129499414%3A54%3A0%3A1454313599%3A4864061701390205874

(முழு காணொளி
குறிஞ்சாக்குளம் ஒரு இனத்தின் வலி
https://m.youtube.com/watch?v=7pYZTlRx
l3I&feature=share )

Friday, 25 December 2015

வேற்றின ஆட்சியில் தமிழகத்தில் நடந்த வன்கொடுமைகள்

வேற்றின ஆட்சியில் தமிழகத்தில் நடந்த வன்கொடுமைகள்

1920 பெருங்காமநல்லூர் படுகொலை
ஒரு பெண் உட்பட 17பேர் சுட்டுக்கொலை

1939 மொழிப்போர் வீரர்கள் 2பேர் காவலில் வைத்திருந்து கொலை

1948 கேரள அரசால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை

1953 இந்தி எதிர்ப்பு தொடர்வண்டி மறியலில் காவலரால் 2 பேர் கொலை

1954 தமிழகத்துடன் இணைய போராடிய குமரித் தமிழர்கள் 11 பேர் சுட்டுக்கொலை

1957 கீழத்தூவல் படுகொலை 5பேர் போலீசாரால் சுட்டுக்கொலை

1965 மொழிப்போரில் துணைராணுவத்துடன் மோதலில் 70பேர் கொலை

1968 கீழவெண்மணி 44பேர் எரித்துக்கொலை

1982 மொழியுரிமைக்காகப் போராடிய 18தமிழர் கன்னடரால் கொலை

1987 இடவொதுக்கீடு போராட்டம் துணைராணுவத்தால் 21பேர் கொலை

1989 கண்டமனூர் துப்பாக்கிச்சூடு 3குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக்கொலை

1991 காவிரி கலவரம் கன்னடரால் பலர் கொலை

1992 வாச்சாத்தி படுகொலை 34மரணம்
18பெண்கள் வல்லுறவு

1992 குறிஞ்சாக்குளம் படுகொலை 4பேர் வெட்டிக்கொலை

1994 வீரப்பனார் தேடுதல் படையினரால் அத்தனை சின்னாம்பதி ஊரில் பெண்களும் வல்லுறவு

1999 ல் மாஞ்சோலைத் தொழிலாளர் போராட்டத்தில் தடியடி நடத்தி 18பேரை ஆற்றில் தள்ளிக் கொன்ற தாமிரபரணி படுகொலை

2011 பரமகுடி 7பேர் சுட்டுக்கொலை

2015 ஆந்திர காவல்துறையால் செம்மரம் கடத்துவதாக போலி வழக்கில் 20 தமிழர்கள் படுகொலை

ஆக வேற்றினத்தாரின் அரச வன்முறைக்கு பலியானோர் அனைத்து சாதியிலும் உண்டு.