Showing posts with label மறையர். Show all posts
Showing posts with label மறையர். Show all posts

Monday, 24 July 2017

பறையருக்கு ஏன் பார்ப்பனர் மீது ஆசை?

பறையருக்கு ஏன் பார்ப்பனர் மீது ஆசை?

பறையர்தான் பார்ப்பனர் என்று இலக்கியத்தில் எந்த சான்றும் இல்லை.
இலக்கியத்தில் அதிகம் வருவது இரண்டு குலங்கள்.
பார்ப்பனர் மற்றும் பறையர்.

அதாவது சங்ககாலத்திலேயே பறையர் வேறு பார்ப்பனர் வேறு.

பறையூர் சாக்கையன் வேதம் அறிந்தோரின் ஊரான் என்றுதான் சிலப்பதிகாரத்தில் வருகிறது.
(பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்)

பறையூர் பறையரின் ஊர் என்றோ
பார்ப்பனர் மட்டும்தான் வேதம் படித்தனர் என்றோ கூறமுடியாது.

மேற்கண்ட சாக்கையன் சாக்கைக் கூத்து ஆடும் கூத்தன்.
பார்ப்பான் கிடையாது.

மனம்போன போக்கில் கதைவிடவேண்டியது.
ஆதாரம் கேட்டால் பதிலளிக்கத் துப்பில்லாமல் கேள்விகேட்டவனை அசிங்கமாகப் பேசவேண்டியது.

என்னையா உங்கள் மானங்கெட்ட பிழைப்பு?

சங்ககாலத்திலேயே பறையர் எந்த விதத்திலும் பார்ப்பனருக்குச் சளைத்தோர் கிடையாது.
இருவரும் தனித் தனிச் சிறப்புடையோர்.

பறையர் என்ற அடையாளத்தில் இல்லாத சிறப்பா பார்ப்பனர் என்பதில் உள்ளது?

ஏனையா அடுத்தவன் அடையாளத்தின் மீது வீணான ஆசை?

பார்ப்பன அடையாளத்தை வலிய தம்மீது திணித்துக்கொள்வதில் குறியாக இருக்கும் பறையரிய போராளிகளே!

இதிலேயே உங்கள் முழு நேரத்தையும் செலவளித்தால் என்றைக்குத்தான் தமிழ்தேசியத்திற்கு உழைப்பீர்கள்?

பறையரோ, பார்ப்பனரோ எவராயிருந்தாலும் சக தமிழனை விட எந்தவிதத்திலும் உயர்ந்தவன் கிடையாது.

தமிழன் என்ற அடையாளத்தின் பெருமைக்கும் பழமைக்கும் கால்தூசு பேறாது பறையர், பார்ப்பனர் என்ற அடையாளங்கள்.

Friday, 1 April 2016

பறைய"ர்"

பறைய"ர்"
○○○○○○○○
பறையர்களை எவ்வாறு அழைப்பது?

தலித் என்று அழைக்கலாமா?

ஓ அழைக்கலாமே!
சிறைக்கம்பிகளை எண்ணவேண்டும் என்ற ஆசை இருந்தால் தாராளமாக அழைக்கலாம்.

1. அரசாணை நிலை எண். 198,
சமூக நலத்துறை, நாள் 21-03-1981

2. அரசு கடிதம் எண். 24024/ஆதிந-2/1998-2 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 15-03-1999

3. அரசாணை (ப) எண் 69இ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 05-04-1999

ஆகிய ஆவணங்களின் படி
"தாழ்த்தப்பட்டோர்"
"தாழ்த்தப்பட்ட மக்கள்"
"தலித்"
"தலித்துகள்"
"தலித் மக்கள்"
"தலித் சாதி"
"தலித் சமுதாயம்"

போன்ற *இழிவுப் பெயர்களால்*  அழைக்கவோ, உச்சரிக்கவோ, எழுத்தால் எழுதவோ, ஆவணங்களில் பதிவு செய்யவோ கூடாது என்று அரசே ஆணை பிறப்பித்துள்ளது.

ஆக தலித், தாழ்த்தப்பட்டோர் போன்ற சொற்களை பயன்படுத்துதல் சட்டப்படி குற்றம் ஆகும்.

ஆதி திராவிடர் என்று அழைக்கலாமா?

1918 ல் திராவிட மகாஜன சபை ஆவணங்களில் பறையர், பஞ்சமர் போன்ற பெயர்களை நீக்கி 'ஆதி திராவிடர்' என்று குறிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது.

மூன்றாண்டுகள் பரப்புரையிலும் ஈடுபட்டது.

1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை 'ஆதி திராவிடர்கள்' என்று சொல்லிக்கொண்டு,
குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர்.

ஆனால் 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி,
சென்னை மாகாணத்தில் SC/ST பிரிவினரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும்.
இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர்.

அதாவது ஆயிரத்தில் ஒருவர் கூற 'ஆதி திராவிடர்' என்று பதியவில்லை.

இது, தமிழ்நாட்டு பட்டியல் சாதியாரும் பிறமாநிலத்தாரைப் போல ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது.

ஆக ஆதிதிராவிடர் எனும் பெயர் அவர்கள் விரும்பிய ஒன்று அல்ல.
திணிக்கப்பட்ட ஒன்று.

பறையர்களை பலமுறை சாதிவெறியுடன் கேவலமாகப் பேசியுள்ள ஈ.வே.ரா இதுபற்றி என்ன கூறியுள்ளார்.

( விடுதலை- ஞாயிறு மலர் 21.8.1994
ஆசிரியர் கேள்வி- பதில் பகுதி)

கேள்வி: திராவிடநாடு திராவிடருக்கானால் ஆதி திராவிடர்களுக்கு என்ன லாபம்?

பெரியார்: லாபம் இல்லை. நட்டம் தான். ஆதி என்ற இரண்டு எழுத்துகளை வெட்டியெறிந்து விடுவோம்.

அதாவது அவர்கள் திராவிடர்களாக இருந்தால் போதுமாம்.
ஆதிகுடிகளாக இருக்கக்கூடாதாம்.

ஆகவே பறையர் பெருமக்களை அவர்களின் சமூகத்தைக் கொண்டு குறிக்க பறைய'ர்' என்று மரியாதையாக அழைப்பதே முறை.

அனைத்துப் பிரிவினரையும் சமூகத்தால் குறிப்பிட இங்ஙனம் அழைப்பதே சரி.

அவமானப்படுத்தும் வகையில் சாதிப்பெயரைக் குறிப்பிடுவதும் தண்டனைக்குரிய குற்றமே ஆகும்.

Sunday, 7 February 2016

பறையும் ஆண்டாளின் இறைவனும்

பறையும் ஆண்டாளின் இறைவனும்

---------------------------------------------------------
1. நாராயணனே நமக்கே "பறை " தருவான்
(தி:1 - மார்கழித் திங்கள்)

2. பாவாய் எழுந்திராய், பாடிப் "பறை " கொண்டு
(தி:8 - கீழ்வானம் வெள்ளென்று)

3. போற்றப் "பறை " தரும் புண்ணியனால்
(தி:10 - நோற்றுச் சுவர்க்கம்)

4. அறை "பறை " மாயன் மணிவண்ணன்
(தி:16 - நாயகனாய் நின்று)

5. வேல் போற்றி! உன் சேவகமே ஏத்திப் "பறை " கொள்வாம்
(தி:24 - அன்று இவ்வுலகம்)

6. உன்னை அருத்தித்து வந்தோம் "பறை " தருதியாகில்
(தி:25 - ஒருத்தி மகனாய்)

7. சாலப்பெரும் "பறை "யே பல்லாண்டு இசைப்பாரே
(தி:26 - மாலே மணிவண்ணா)

8. பாடிப் "பறை "கொண்டு யாம்பெறும் சம்மானம்
(தி:27 - கூடாரை வெல்லும்சீர்)

9. இறைவா நீ தாராய் "பறை "யேலோ ரெம்பாவாய்
(தி:28 - கறவைகள் பின்சென்று)

10. இற்றைப் "பறை " கொள்வாம், அன்று காண்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
(தி:29 - சிற்றஞ் சிறுகாலே)

11. அங்கு அப்"பறை " கொண்ட ஆற்றை,
பட்டர்பிரான் கோதை சொன்ன
(தி:30 - வங்கக் கடல்கடைந்த)

நன்றி: ஆண்டாள் எனும் "பறை"ச்சி (மாதவிப் பந்தல்)

Wednesday, 13 January 2016

குறிஞ்சாக்குளம் அவலம் (காணொளி)

https://m.facebook.com/story.php?story_fbid=649200845183572&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.649200845183572%3Atl_objid.649200845183572%3Athid.100002809860739%3A306061129499414%3A54%3A0%3A1454313599%3A4864061701390205874

(முழு காணொளி
குறிஞ்சாக்குளம் ஒரு இனத்தின் வலி
https://m.youtube.com/watch?v=7pYZTlRx
l3I&feature=share )