Showing posts with label சாக்கை. Show all posts
Showing posts with label சாக்கை. Show all posts

Monday, 24 July 2017

பறையருக்கு ஏன் பார்ப்பனர் மீது ஆசை?

பறையருக்கு ஏன் பார்ப்பனர் மீது ஆசை?

பறையர்தான் பார்ப்பனர் என்று இலக்கியத்தில் எந்த சான்றும் இல்லை.
இலக்கியத்தில் அதிகம் வருவது இரண்டு குலங்கள்.
பார்ப்பனர் மற்றும் பறையர்.

அதாவது சங்ககாலத்திலேயே பறையர் வேறு பார்ப்பனர் வேறு.

பறையூர் சாக்கையன் வேதம் அறிந்தோரின் ஊரான் என்றுதான் சிலப்பதிகாரத்தில் வருகிறது.
(பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்)

பறையூர் பறையரின் ஊர் என்றோ
பார்ப்பனர் மட்டும்தான் வேதம் படித்தனர் என்றோ கூறமுடியாது.

மேற்கண்ட சாக்கையன் சாக்கைக் கூத்து ஆடும் கூத்தன்.
பார்ப்பான் கிடையாது.

மனம்போன போக்கில் கதைவிடவேண்டியது.
ஆதாரம் கேட்டால் பதிலளிக்கத் துப்பில்லாமல் கேள்விகேட்டவனை அசிங்கமாகப் பேசவேண்டியது.

என்னையா உங்கள் மானங்கெட்ட பிழைப்பு?

சங்ககாலத்திலேயே பறையர் எந்த விதத்திலும் பார்ப்பனருக்குச் சளைத்தோர் கிடையாது.
இருவரும் தனித் தனிச் சிறப்புடையோர்.

பறையர் என்ற அடையாளத்தில் இல்லாத சிறப்பா பார்ப்பனர் என்பதில் உள்ளது?

ஏனையா அடுத்தவன் அடையாளத்தின் மீது வீணான ஆசை?

பார்ப்பன அடையாளத்தை வலிய தம்மீது திணித்துக்கொள்வதில் குறியாக இருக்கும் பறையரிய போராளிகளே!

இதிலேயே உங்கள் முழு நேரத்தையும் செலவளித்தால் என்றைக்குத்தான் தமிழ்தேசியத்திற்கு உழைப்பீர்கள்?

பறையரோ, பார்ப்பனரோ எவராயிருந்தாலும் சக தமிழனை விட எந்தவிதத்திலும் உயர்ந்தவன் கிடையாது.

தமிழன் என்ற அடையாளத்தின் பெருமைக்கும் பழமைக்கும் கால்தூசு பேறாது பறையர், பார்ப்பனர் என்ற அடையாளங்கள்.