வீரப்பனார் சின்னாம்பதி சம்பவத்திற்கு கொடுத்த பதிலடி
(சித்தரிக்கப்பட்டது)
https://m.facebook.com/story.php?story_fbid=1151080341662284&id=100002809860739
Sunday, 11 February 2018
வீரப்பனார் சின்னாம்பதி சம்பவத்திற்கு கொடுத்த பதிலடி
Friday, 9 February 2018
கல்வெட்டுகளை அழிப்பதில் கன்னட, வடயிந்திய கூட்டு
ஆயிரக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
-------------------
மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்
வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி
பதிவு செய்த நாள்: பிப் 04,2018 01:08
சென்னை: மைசூரில் உள்ள, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆவணங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதால், தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கல்வெட்டு ஆய்வுகளில், இதுவரை, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், மை படிகளாகவும், எழுத்துப்படிகளாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
அவை, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவற்றை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களை, மத்திய அரசு நியமிக்கவில்லை.
அதனால், மிக முக்கிய ஆவணங்களான கல்வெட்டுப் படிகள், தமிழ் தெரியாத, தமிழ் கலாசாரத்தின் மீது வெறுப்பு உடைய அலுவலர்களால் அழிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:
மத்திய தொல்லியல் துறை சார்பில், மஹாராஷ்டிரா முதல் கன்னியாகுமரி வரை, கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள், நேரடியான எழுத்துப்படிகளாகவும், மை படிகளாகவும் சேகரிக்கப்பட்டன.
அவற்றை, ஜி.எஸ்.கை என்ற, தலைமை கல்வெட்டு ஆய்வாளர், 1967ல், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தின், கல்வெட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வாறு, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு சார்ந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டன.
அப்போது, கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பல, தற்போது இல்லை.
எங்களைப் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், மைசூருக்கு சென்று, கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய அனுமதி கேட்டால், அங்குள்ள வட இந்திய அலுவலர்கள், அனுமதி மறுக்கின்றனர்.
மேலும், எதைக்கேட்டாலும், அவை, ஏற்கனவே காணாமல் போய்விட்டன என்கின்றனர்.
தொல்லியல் துறை படியெடுத்த கல்வெட்டு செய்திகளை, புத்தகமாக பதிப்பித்து, தொல்லியல் துறை நுாலகத்தில் வைக்க வேண்டும்.
தமிழக ஆய்வாளர்கள் பார்க்க வசதியாக, சென்னையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவுக்கு, அந்த ஆவணங்களை அனுப்பி, பராமரிக்க வேண்டும்.
ஏற்கனவே, தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வு அறிக்கைகள் வெளிவராத நிலையில், இது போன்ற ஆவண அழிப்பில், துறை சார்ந்தோரே ஈடுபடுவதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி: தினமலர்
மேலும் அறிய,
search கர்நாடகா நாசமாக்கும் தமிழ் கல்வெட்டுகள் வேட்டொலி
Wednesday, 7 February 2018
தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக பேசிய டி.கே.ரங்கராஜன்
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.
என்னுடைய நண்பர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேசுகையில், “நீட்” தேர்வு குறித்துக் குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிவைத்த தீர்மானம் எப்படிக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது என்று விளக்கினார். அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் ஒருவர் சென்னை வந்திருந்தபோது, “நீட்” தேர்விற்கு ஓராண்டு காலத்திற்கு விலக்கு அளிக்க முயற்சிப்போம் என்று உறுதியளித்தார்.
தமிழ்நாடு என்றில்லை, நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும் கிராமப்புற மாணவர்கள் “நீட்” தேர்வை எழுத முடியாது.
தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை மற்றும் பாசனம் தொடர்பான பிரச்சனைகளை பலமுறை இந்த அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு, காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் தேவை. தொடர்ந்து இருந்து வரும் அரசாங்கங்கள் காவிரி ஆற்று நீரில் சட்டப்பூர்வமாக அளிக்க வேண்டிய உரிய பங்கைத் தமிழ்நாட்டிற்கு அளிப்பதற்கு இன்றுவரை தவறிவிட்டன. மத்திய அரசாங்கம், காவிரி மேலாண்மை வாரியத்தை இதுவரையிலும் அமைத்திடவில்லை.
வேலைவாய்ப்பு குறித்தும் ஏராளமாகக் கூறியிருக்கிறீர்கள். 2015-16 வேலையின்மை ஆய்வறிக்கையின்படி, நாட்டில் உள்ள தொழிலாளர்களில் கிட்டத்தட்ட சரிபாதிப்பேர் – அதாவது 46.6 சதவீதத்தினர் – சுய வேலை பார்ப்பவர்கள். சுய வேலைபார்ப்பது என்பது மோசமான ஒன்று என்று நான் பார்க்கவில்லை. ஆனால் அவர்களை “பக்கோடா விற்பவர்கள்” என்று சொல்ல மாட்டேன். சுய வேலை பார்ப்பவர்களின் வருமானம் மாதத்திற்கு 6 ஆயிரம் ரூபாய். ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கும் குறைவு.
முறையான வேலைவாய்ப்பு கிடைக்காததால் மக்கள் சுய வேலை செய்பவர்களாக மாறுகிறார்கள். இன்றைய தினம், ஆட்டோரிக்சா ஓட்டுநர்களில் பி.ஏ., எம்.ஏ., படித்தவர்கள் பலரை நீங்கள் பார்க்க முடியும். நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவால் வேலைவாய்ப்பை உருவாக்காத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. குறைந்த ஊதியத்திலான முறைசாரா தொழிலாளர்களையும், முறைசார்ந்த தொழில்களில் ஒப்பந்த ஊழியர்களையும் தான் இதுஉருவாக்கி இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியர்கள் கூட இப்போது ஒப்பந்த அடிப்படையில்தான். பொருளாதார மந்தமும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் வேலை வாய்ப்புகளையே அழித்து ஒழித்துவிட்டது. கிராமப்புற வேலைவாய்ப்புகள் சுருங்கி இருப்பதும் நிலைமையை மோசமாக்கி இருக்கின்றன. இத்தகு பின்னணியில், வேலைவாய்ப்பு தொடர்பாக அரசு அளித்துள்ள விவரங்களுக்கும் உண்மை நிலைக்கும் வெகுதூரமாகும்.
குடியரசுத் தலைவர், தன்னுடைய உரையைத்தொடங்கும்போது, “வாசுதைவ குடும்பகம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது வேறொன்றுமில்லை. நாம் கூறும், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதுதான். ஆனால் பர்மாவிலிருந்து அகதிகளாக வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை திருப்பித் துரத்தி அனுப்புகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும், நாம் ரோஹிங்யா பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒருபங்களிப்பினைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்பிரச்சனையில் மவுனம் சாதிக்கிறது. பிரச்சனையை எதிர்கொள்ள மறுத்து, திரும்பிக்கொள்கிறது. ஏன்? போப், தாக்காவிற்குப் போகிறார்.
குடியரசுத்தலைவர் உரையில் ஏழைகளிலும் ஏழைகளாக உள்ளவர்களின் வளர்ச்சிகுறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், 2017இல் இந்திய மக்கள் தொகையில் 1 சதவீதமாக இருப்பவர்கள் 73 சதவீத செல்வத்தையும், 99 சதவீதமாக இருப்பவர்கள் மீதம் உள்ள 47 சதவீதத்தைப்பங்கு போட்டுக்கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கிறார்கள். உலகில் பட்டினி கிடப்போர் அட்டவணையில் இந்தியா மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. ஆனால் இது குறித்து குடியரசுத்தலைவர் உரை மவுனம் சாதிக்கிறது. அதேபோன்று ஊட்டச்சத்துக் குறைவும் மிக மோசமான அளவில்இருக்கிறது. நாட்டில் 14.6 சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவின் காரணமாக நோய்க்கொடுமைகளுக்கு ஆளாகி இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.
நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதால் தமிழ்நாடு தொடர்பாக ஒருசிலவற்றைக் குறிப்பிட வேண்டிய நிலையில் இருக்கிறேன். மதுரை அருகே கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் தொடர்ந்து ஒரு சதவீத வேலைகூட செய்யப்படவில்லை. அங்கே தொடர்ந்து 2018இல் அகழ்வாராய்ச்சிப்பணியைத் தொடர மத்திய அரசால் அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்வதற்கு மத்திய அரசு அனுமதியை அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பட்டாசுத் தயாரிப்புக்குத் தடை விதிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தமிழ்நாட்டில் சிவகாசி, விருதுநகர் போன்ற இடங்களில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள எட்டு லட்சம் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி இருக்கின்றன. அங்கே சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியஅதே சமயத்தில் எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் நாம் உதாசீனம் செய்துவிட முடியாது. பண்டிகைக் காலங்களில், 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்திட முன்வர வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
நிறைவாக ஆனால் மிக முக்கியமான ஒன்று. நாம் நம் நாட்டில் தேசியப் பறவை, தேசிய மலர் என்று அறிவித்திருப்பதுபோல மதிப்பு மிக்க கருத்துக் கருவூலங்களையும் மனிதகுல முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் முறையிலும் அமைந்துள்ள தமிழர்களின் புனித நூலான திருக்குறளை, தேசியப் நூலாக அறிவிக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருவள்ளுவரின் சிலையை நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நிறுவிடவும் இந்த அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழில்: ச.வீரமணி
Saturday, 3 February 2018
ஆட்சிமொழி ஆகக்கூடிய தமிழ் வழக்காடு மொழியாகக்கூட இல்லையே?!
ஆட்சிமொழி ஆகக்கூடிய தமிழ் வழக்காடு மொழியாகக்கூட இல்லையே?!
ஜனநாயகப் படுகொலையாளர்கள் பாதுகாப்பாக ஒழிந்துகொள்ள ஒரு இடம் இருக்கிறது என்றால் அது அம்பேத்கர் எனும் மாய பிம்பம்.
"ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில மொழியைத்தான் உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த முடிவெடுத்தால் அப்புறம் உச்சநீதிமன்றத்தை மூடிவிட்டு போகவேண்டியதுதான்"
என்று 1948ல் மொழிவாரி மாநில அமைப்பின் வாரியத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் அம்பேத்கரே சொல்லிவிட்டாராம்.
அது என்ன "அம்பேத்கரே" ?!
அவரென்ன கடவுளா?
எல்லா ஹிந்தியனும் எப்படி சுற்றிவளைத்தாலும் இறுதியில் தமிழனுக்கு எதிராகவே வந்து நிற்கிறான்.
எங்கள் மாநிலத்தில் எங்கள் உயர்நீதிமன்றத்தில் எங்கள் மொழியில் வழக்காட உரிமை கொடுக்காத இந்த அராஜக நாடும் அதன் கையாலாகாத உச்ச நீதிமன்றமும் எங்களுக்குத் தேவையில்லை.
எங்கள் மாநிலத்தை நாடாக்குவோம்!
எங்கள் மொழி ஆட்சிமொழி ஆகும்!
பிறகு எங்கள் உயர்நீதிமன்றமே உச்சநீதிமன்றம் ஆகும்.
அதற்குமேல் ஐ.நா சபை அல்லது போர் என்ற நிலையை உருவாகும்.
Friday, 2 February 2018
234 ல் 39 வந்தேறிகள்
சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரல்லாதவர்கள் ..
1.கும்மிடிப்பூண்டி -கே.எஸ்.விசயகுமார்
அதிமுக - நாயுடு
2.பொன்னேரி பி.பலராமன் (தனி)
அதிமுக (உறுதிபடுத்தனும்)
3.மதுரவாயல் பி.பெஞ்சமின்
அதிமுக - தலித் (உறுதிபடுத்தனும்)
4.ஆர்.கே.நகர் செயா
அதிமுக - பிராமணர் (இப்போ இடம் காலி )
5.கொளத்தூர் மு,க.ஸ்டாலின்
திமுக - சின்னமேளம்
6.வில்லிவாக்கம் ப.ரெங்கநாதன்
திமுக - நாயுடு
7.துறைமுகம் சேகர்பாபு
திமுக - நாயுடு
8.அண்ணா நகர் எம்.கே.மோகன்
திமுக - நாயுடு
9.தியாகராய நகர் சத்யநாராயணன்
அதிமுக - நாயுடு
10.மயிலாப்பூர் ஆர்.நடராஜ்
அதிமுக - பிராமணர்
11.தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா
திமுக - ரெட்டி
12.செங்கல்பட்டு வரலட்சுமி
திமுக - நாயுடு
13.ராணிப்பேட்டை ஆர்.காந்தி
திமுக - நாயுடு
14.ஆற்காடு கே.எல்.ஈஸ்வரப்பன்
திமுக - நாயுடு
15.ஆம்பூர் ஆர்.பாலசுப்பிரமணியன்
அதிமுக - நாயுடு
16. ஓசூர் பாலகிருஷ்ணா
அதிமுக - ரெட்டி
(கால்நடைத்துறை அமைச்சர், தமிழ் எழுத படிக்க தெரியாது என்பது கூடுதல் செய்தி)
17.தளி ஒய்.பிரகாஷ்
திமுக - கௌடா
18.திருவண்ணாமலை எ.வ.வேலு
திமுக - நாயுடு
19.கீழ பெண்ணாத்தூர் கு.பிச்சாண்டி
திமுக - நாயுடு
20.உதகமண்டலம் ஆர்.கணேஷ்
காங்கிரசு - படுகர்
21.குன்னூர் ஏ.ராமு
அதிமுக - படுகர்
22.உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன்
தெலுங்கு - செட்டி
23.மேட்டுப்பாளையம் ஒ.கே.சின்னராசு
அதிமுக - ஒக்கலிக்கா கௌடா
24.கோவை வடக்கு அருண்குமார்
அதிமுக - நாயுடு
25.சிங்காநல்லூர் கார்த்திக்
திமுக - நாயுடு
26.பொள்ளாச்சி செயராமன்
அதிமுக - தெலுங்கு செட்டி
27.வேடசந்தூர் பரமசிவம்
அதிமுக - ஒ.கௌடா
28.குளித்தலை ராமர்
திமுக - ரெட்டி
29.திருச்சி மேற்கு கே.என்.நேரு
திமுக - ரெட்டி
30.திருவாரூர் வ.போ.உ. கருணாநிதி
திமுக - சின்னமேளம்
31.கும்பகோணம் அன்பழகன்
திமுக - நாயுடு
32.பேராவுறுணி கோவிந்தராசன்
அதிமுக - முத்திரையர் (உறுதிபடுத்தனும்)
33.மதுரை தெற்கு எஸ்.எஸ்.சரவணன்
அதிமுக - சௌரா
34.எஸ். டி. கே. ஜக்கையன் கம்பம்
அதிமுக - கௌடா
35.விருதுநகர் சீனிவாசன்
அதிமுக - நாயுடு
36.அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்
திமுக - ரெட்டி
37.விளாத்திகுளம் உமா மகேஸ்வரி
அதிமுக - நாயுடு
38.கோவில்பட்டி கடம்பூர் ராஜு
அதிமுக - நாயுடு
39.அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார்
திமுக - நாயுடு
இதில் நான்கு முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர்கள் விபரம் ஆய்வுக்கு உட்படுத்தனும்..
அடுத்து தனித்தொகுதியில் (43) தமிழர்களை எத்தனை தொகுதியில் நிறுத்தியுள்ளனர் என்று தெரியவில்லை
அமைச்சர்களில்
1.கடம்பூர் ராசு நாயுடு
2 .பாலகிருஷ்ணா ரெட்டி
3.உடுமலை ராதாகிருஷ்ணன் தெலுங்கு செட்டி
# ராமசாமி நாயுடு மண்ணுடா..!!
நன்பர்களே,
இது மேலாகச்சேகரித்ததுதான்,
நோண்டினால் எவ்வளவு வருமோ?????
என் கேள்வி என்னவென்றால் இவர்கள் தமிழக நலனுக்காகப்பேசுவார்களா?
இல்லையென்பதற்குச்சாட்சி நம் கண்முன்னேயிருக்கிறது.
நீட், கதிராமங்கலம், நியூட்ரினோ, சாகர்மாலா, ஒக்கிப்புயல் கழுத்தருப்பு இன்னும்பல...
நன்றி: மேகநாதன் முனுசாமி
Thursday, 1 February 2018
வெறியாடும் முருகனுக்கு கிடாய் விருந்து
வெறியாடும் முருகனுக்கு கிடாய் விருந்து
சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக்கொடியொடு வயிற்பட நிறீஇ
[சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பரப்பி,
ஆட்டுக் கிடாயை அறுத்து,
கோழிக் கொடியை அதற்குரிய இடத்தில் நிறுத்தி]
ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
[ஊர்தோறும் கொண்டாடப்படும் பெருமையுடைய விழாவிலும்,
அன்புடைய பக்தர்கள் வழிபட்டு போற்றும் பொருத்தமான இடத்திலும்]
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
[வேலன் மிக்க மகிழ்ச்சியுடன் ஆடும் 'வெறியாடு' களத்திலும், காட்டிலும், சோலையிலும், அழகான (தீவு போன்ற) ஆற்றிடைக்குறையிலும்,
ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும், வேறு பல இடங்களிலும்]
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
[நான்கு தெருக்கள் சந்திக்கும் சதுக்கத்திலும், மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தியிலும், புதுமலர்களை உடைய கடம்பு மரத்தினடியிலும், ஊரின் நடுவில் உள்ள மரத்தினடியிலும், அம்பலத்திலும், கந்து நடப்பட்டுள்ள இடத்திலும்]
மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐதுஉரைத்து
[சிறப்பான முதன்மை பொருந்திய கோழிக் கொடியைப் பொருத்தமாக நிறுத்தி,
நெய்யுடன் வெண்மையான சிறு கடுகினைக் கலந்து அப்பி,
(முருகனின் பெயரை) மென்மையாக உரைத்து]
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுஉடன் உடீஇ
செந்நூல் யாத்து வெண்பொறி சிதறி
[இரு கைகளையும் கூப்பி வணங்கி,
வளம் பொருந்திய செழுமையான மலர்களைத் தூவி,
வெவ்வேறு நிறமுடைய இரு ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்து,
கையில் சிவப்பு நூல் (காப்பு நூலாக) கட்டப்பெற்று,
வெண்மையான பொரியைத் தூவி]
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ
[வலிமை வாய்ந்த ஆட்டு கிடாயின் இரத்தம் கலந்த தூய வெண்மையான பிரப்பு அரிசியை பலி அமுதாக பல இடங்களில் வைந்து]
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி
[சிறு பசுமஞ்சளையும் நல்ல நறுமணப் பொருள்களையும் பல இடங்களில் தூவித் தெளித்து,
செவ்வரளி மலரால் ஆகிய மாலையை சீராக நறுக்கி கோயிலைச் சுற்றித் தொங்கவிட்டு]
நளிமலைச் சிலம்பில் நல்நகர் வர்த்திதம்
நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி
இமிழ்இசை அருவியொடு இன்இயம் கறங்க
[செறிவான மலைப் பக்கங்களிலுள்ள ஊர் வாசிகள் அனைவரும் (முருகனை) வாழ்த்திப் பாடுகின்றனர்,
மணப் புகையை எடுத்து ஆராதனை செய்கின்றனர்,
குறிஞ்சிப் பண்ணில் இயற்றப்பெற்ற பாடல்களைப் பாடுகின்றனர்,
மலை மீதிருந்து விழும் அருவியின் ஓசைக்கேற்ப இசைக் கருவிகளை ஒலிக்கின்றனர்]
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினைப் பரப்பி குறமகள்
முருகுஇயம் நிறுத்து முரணினர் உட்க
முருகுஆற்றுப்படுத்த உருகெழு வியல்நகர்
[பல்வேறு வடிவமுடைய அழகான பூக்களைத் தூவுகின்றனர்,
காண்பவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் இரத்தத்தோடு கலந்த தினை அரிசியைப் பரப்பி வைத்துள்ளனர்,
முருகனுக்கு விருப்பமான இசைக் கருவிகளைக் குறமகள் இயக்குகிறாள்,
மாறுபட்ட உள்ளம் உடையவர்களும் அஞ்சுமாறு அந்த சூழ்நிலை அமைகிறது,
இவ்வாறு இருந்தது அந்த அகன்ற ஊர்]
- திருமுருகாற்றுப்படை (218 - 244)
நன்றி: kaumaram .com






















