Friday 18 December 2015

தமிழர் படைத்த ஆகமம் சாதிவெறியை தடுக்கும் கேடயம்

தமிழர் படைத்த ஆகமம்
சாதிவெறியை தடுக்கும் கேடயம்

யயயயயயயயயயயயயயயயயய

ஆகம விதிகளின்படி அர்ச்சகராகும் உரிமை யாருக்கு உள்ளது எனக் காண்போம்.

சைவக் கோயில்கள்:-

’சிவாகமத்தில் பூசை செய்பவர்கள் 'சிவ தீட்சை' பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இக் கோயில்களில் பூசை முதலிய பணிகளைச் செய்வோர் ஆச்சாரியார், அர்ச்சகர், ஸ்தானிகர், பாசகர், பரிசாரகர் என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.//

கௌசிகர், காசியபர், பரத்வாஜர், கௌதமர், அகத்தியர்ஆகிய ஐந்து ரிக்ஷிகளுக்கும் சிவபெருமான் இந்த ஆகமங்களை உபதேசித்தார்.
இவர்களுள்,
கௌசிகர் - சத்திரியர் குலத்தைச் சேர்ந்தவர்
காசியபர் - கொல்லர் குலத்தைச் சேர்ந்தவர்
பரத்வாஜர் - பார்ப்பனர் குலத்தைச் சேர்ந்தவர்
கௌதமர் - நாவிதர் குலத்தைச் சேர்ந்தவர்
அகத்தியர் - வேட்டுவர் குலத்தைச் சேர்ந்தவர்

-இந்த ஐந்து கோத்திரங்கள்தான் சிவாச்சாரியாரின் கோத்திரங்கள் ஆகும்.

ஆகவே, சிவாச்சாரியார் என்பார்கள் பார்ப்பனர் மட்டு மல்லாமல் சத்திரியர், நாவிதர், கொல்லர், வேட்டுவர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவரும்தான் எனக் கருத வேண்டும்.

இவர்கள் தவிர சிவாகமங்கள் அறிந்த (சிவதீட்சை பெற்ற) அனைவரும் அர்ச்சக ராகலாம் என்பதே கருத்து.
(TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY,
PUBLISHED BY AUTHORITY/
CHENNAI,
MONDAY, DECEMBER 1, 2008/
Part II-Section 1/ ð‚ - 11-12)

வைணவக் கோயில்கள்:-

’வைணவத்தில் சாதி என்பதே இல்லை.
எந்தச் சாதி என்று கேட்பதே பாவம் ஆகும்.
ஆகவே, வைணவக் கோயில்களில் எந்தச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.’

(மேலது ஆவணம் / பக் -13)

தமிழர் 'ஆகம விதிகள்' இந்தளவு சாதியத்திற்கு எதிரானவை தான் என்பதை உணர வேண்டும்.

ஆகமங்கள் (இந்தியாவில்) *தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை* என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றும் கோயில்களில் அர்ச்சகராக உள்ள அனைவருமே ஆரிய பார்ப்பனர் அல்லர்.
தமிழக ஆகமக் கோயில் அர்ச்சகர்கள் தமிழர் குலங்களும் பார்ப்பனக் குலமும் கலந்த நிலையில் உருவானவர்களாகவோ, தனித்த தமிழ்க் குலத்தவராகவோதான் இருப்பரே தவிர,

*முழு ஆரிய பார்ப்பனராக இருப்பதற்கான வாய்ப்புகள் அரிதினும் அரிது*

நன்றி: தமிழர் மரபும் “திராவிட” அவதூறும் _ம.செந்தமிழன்

No comments:

Post a Comment