Thursday 17 December 2015

மீட்கப்பட்ட சோழர் ஓவியங்கள்

மீட்கப்பட்ட சோழர் ஓவியங்கள்
÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
விஜயராகவ நாயக்கர் (1645-1673)
என்ற நாயக்க மன்னனைத் தெரியுமா?

இவன்தான் கி.பி.1050களில் சோழர் வரைந்த ஓவியங்களை முழுவதுமாக மறைத்து அவற்றின் மேலேயே வேறு ஓவியங்களை வரைந்தவன்.

1930ல் எஸ்.கே.கோவிந்தசாமி என்ற பேராசிரியர் (அண்ணாமலைப் பல்கலை.) இதை கண்டறிந்து கூறினார்.
பல்கலைக்கழக ஆவணத்திலும் இதை பதிப்பித்தார்.

1960ல் சுப்பராமன் என்பவர் மேலேயுள்ள வரைபடத்தை சேதமில்லாமல் உரித்தெடுக்கும் ஒரு முறையைக் கண்டறிந்து அரசுக்கு பரிந்துரைத்தார்.
1980களின் பிற்பகுதியில் பணி தொடங்கப்பட்டது.

2002ல்தான் அந்த ஓவியங்கள் மீட்கப்பட்டன.
இந்துத்துவத்துடன் தொடர்பில்லாது இருந்தால் இது இன்னமும் தாமதமாக நடந்திருக்கும்.

இங்கே குறிப்படவேண்டிய ஒன்று,
தனது நண்பனான 'சேர' மன்னனுக்கு சுந்தரமூர்த்தி நாயனார் சொர்க்கத்தில் இடம்பெற்றுத் தந்ததை சோழர்கள் வரைந்துள்ளமை.

நன்றி creative. sulekha. com /the-legacy-of- chitrasutra-seven-brihadishvara_383647_blog

No comments:

Post a Comment