Sunday 20 December 2015

முகம் சிதைந்த கண்ணகி சிலை

முகம் சிதைந்த கண்ணகி சிலை

எச்சரிக்கை:
இப்பதிவைப் படிப்போருக்கு இனவெறி வர வாய்ப்புள்ளது.

சமண மதத்தைச் சேர்ந்த கண்ணகி ,
சோழநாட்டில் பிறந்து
பாண்டிநாட்டில் வழக்காடி
சேரநாட்டில் தெய்வமானாள்.

தமிழ் மூவேந்தர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டார்கள் என்றும் தமிழர் இனவுணர்வு இல்லாமல் பாண்டிநாட்டான்,சோழநாட்டான், சேரநாட்டான் என்ற நாட்டு உணர்வுடன் இருந்தனர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

தமிழர்கள் என்றும் தமிழர்களாகத்தான் இருந்தனர் என்பதற்கான சான்றுதான் மூவேந்தரும் சமமாகப் போற்றப்பட்டு எழுதப்பட்ட சிலப்பதிகாரமும் இன்றும் தொடரும் கண்ணகி வழிபாடும்.

என்றால் ஈழம் விடுபடுகிறதே?
இல்லை, ஈழத்தான் மட்டும் சளைத்தவனா?
இன்று தமிழகத்தை விட அதிகமான கண்ணகிகோவில்கள் ஈழத்திலே உள்ளன.

கண்டியில் உள்ள புத்தர்கோயிலில் பத்தினி வழிபாடு பத்தினித்தெய்யோ என்ற பெயரில் திருவிழாவாகச் சிங்களவரால்  கொண்டாடப்பட்டு வருகிறது.
இது பத்தினித் தெய்வம் வழிபாட்டின் திரிபேயாகும்.
(இது கண்ணகி வழிபாடு கிடையாது).

சேரன் செங்குட்டுவன் இமயம் சென்று கல் எடுத்துவந்து கண்ணகிக்குக் கோயில் எழுப்பியதும் தமிழ் மன்னர்கள் அனைவரும் அப்பத்தினிக்குக் கோவில்கள் எழுப்பினர்.
ஈழத்திலும் அதேகாலகட்டத்தில் கண்ணகிக்கோவில்கள் கட்டப்பட்டன.
ஆக கண்ணகி வழிபாடு
மதம், நாடு தாண்டிய தமிழ் இன உணர்ச்சியின் அடையாளம் ஆகும்.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையானதும் சேரன் கட்டியதுமான அந்தக் கோவில் இன்று மங்கலதேவி கண்ணகிக் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
மங்கல தேவி என்பது யார் என்ற கேள்விக்கு தமிழ்ப்பார்ப்பனர் உ.வே.சா வின் விளக்கமானது,
கண்ணகிக்கு வஞ்சிக்காண்டம் வரந்தரு காதையில்:
"மங்கலமடந்தை கோட்டத் தாங்கண்
வெங்கோட்டுயர் வரைச் சேனுயர் சிலம்பில்"
என்று குறிப்பு உள்ளது. மங்கல மடந்தை என்பதற்குப் பொருள் மங்கல தேவி என்றும் அது கண்ணகியைக்குறிக்கும் சொல்லாகும்
என்கிறார் தமிழ்த்தாத்தா.

தமிழ் நிலத்தை கிட்டத்தட்ட 1500ச.கி.மீ ஆக்கிரமித்து இன்று 38,863சகீமி பரப்பளவுகொண்ட கேரள மாநிலம் இன்னமும் மண்வெறி பிடித்து அலைகிறது.

தமிழக எல்லைக்குள் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் 4380 அடி உயர சிகரத்தில் உள்ளது கண்ணகிகோயில்.
1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை.
அதன்பிறகு சிறிய சிறிய பிரச்சனைகளைச் செய்யத்தொடங்கியது.

பிரச்சனையைத் தீர்க்க 1976ல் தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும் கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப்பகுதியில் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதற்கிடையில், கூடலூரில் சில தமிழார்வலர்கள் 'மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு'  என்று ஒன்றைத் தொடங்கி கோவிலைப் புதுப்பிக்க திட்டமிட்டனர்.

1976ல் இந்த சீரமைப்புக்குழு,
அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது.
கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதியில் கூடலூர் பனியங்குழி வழியாக 6 கி.மீ சாலையை போடுவதற்காக ரூ.20 லட்சம்நிதி ஒதுக்கப்பட்டது.
இதிலும் மலையாள அரசு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டது.
இந்தநிலையில் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது.
இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.

இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 1976ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக மலையாள அரசு 16 கி.மீ பாதை ஒன்றை அமைத்தது.
இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாக தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்லத்தொடங்கினர்.
தற்போது இந்த
சாலையை வைத்துக் கேரள
அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச்
சொந்தமானது என்று உரிமை
கொண்டாடுகிறது.

சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் ஒருவாரம் சிறப்பு வழிபாடுகள் செய்து வந்தனர்.
மலையாளிகள் இதை மூன்று நாட்களாக்குதான் அனுமதிக்கமுடியும் என்று மூன்றுநாளாக்கினர்.
அதன்பிறகு ஒரே ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கினர்.
அதுவும் இப்போது காலை, 9மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே
என்று ஆக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மலையாள அதிகாரிகளைச் சந்தித்து கெஞ்சிக்கூத்தாடி அனுமதி வாங்குவதும், மலையாளிகள் அவர்கள் மனம்போன போக்கில் விதிமுறைகளை விதிப்பதும் தொடர்கதை ஆகிவிட்டது.

மற்ற நாட்களில்
தமிழர்கள் இங்கு செல்ல
அனுமதி அளிக்கப்படுவதில்லை.
மலையாள காவல்துறை நடமாட்டம் எப்போதும் உள்ளது.
இதனால் கோயில் பராமரிப்பின்றி பாழடைந்த மண்டபம் போல ஆகிவிட்டது.
கோவிலின் பல பகுதிகள்
சிதைந்து போய்விட்டன.கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன.
கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
(இரு கல்வெட்டுகள் மிகமுக்கியமானவை.
முதலாம் இராசராச சோழனின் கல்வெட்டு ஒன்றும், பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் மேலும் பல கல்வெட்டுகளும் இக்கோவிலில் உள்ளன).
இவையும் விரைவில் அழியவுள்ளன.

5-5-82இல் சித்திரை பெளர்ணமி அன்று கண்ணகி கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்ளச்சென்ற தமிழர்களை
கேரள அரசு கைது செய்தது. அதுபற்றி பேசச்சென்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.டி. கோபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கம்பம் நடராசன் ஆகியோரை
மலையாளிகள் மரியாதையின்றி நடத்தினர்.
இதை தமிழக முதலமைச்சரிடம் அவர்கள் முறையிட,  இதைச் சுட்டிக்காட்டி கேரள ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் தந்தி அனுப்பினார்.
அதற்குக் கேரள அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

பிறகு அக்கோவில் மலையாளிகளின் துர்கா கோவில் என்று கூறிக்கொண்டு 15.3.1983ம் அன்று கண்ணகி கோவிலுக்குள் துர்க்கா தேவி சிலையை இ.சி. சுகுமாரன் என்பவர் மலையாள தாசில்தார் உதவியுடன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் கேரள போலீஸ் அதிகாரிகளுடன் வந்து கோவிலுக்குள்  நிறுவினார்.

இதுவாவது பரவாயில்லை.
அதன்பிறகு கண்ணகிசிலையை முகத்தை உடைத்து சிதைத்தனர்.
வேறுவழியின்றி  தற்போது சித்திரை முழுநிலவு நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

9மணிக்கு அனுமதிக்கப்படும் தமிழர்கள் வெறும் 8மணிநேரத்திற்குள் விழாவை நடத்திமுடித்து இடத்தைக் காலிசெய்தாகவேண்டும்.
வழிபாட்டு நேரத்தில் அங்கே இருக்கும் மலையாள காவல்துறை தமிழர்களை அடிப்பதும் திட்டுவதும் இஷ்டப்படி விதிமுறைகளை விதிப்பதும் வழிபாட்டில் முடிந்த அளவு இடைஞ்சல் செய்வதும் கண்கூடாகக் காணலாம்.
நான்கரை மணிக்குமேல் அடித்துவிரட்டத் தொடங்கிவிடுவார்கள்.

நம் எல்லைக்குள் நமக்கு தடை விதித்து மண்ணைக் கைப்பற்றிக்கொண்டு ஆண்டுக்கொருமுறை வரும் நம்மை தமது ராணுவமான காவல்துறையை அனுப்பி அப்பாவி மக்கள்மீது இனவெறியைத் தீர்த்துக்கொள்கிறான் மலையாளி.

தமிழ் ஆர்வலர்கள் சிலர் "மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை"என்ற
ஒரு அமைப்பு நிறுவியுள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகிகோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் உட்பட பல உதவிகள் செய்து வருகிறது.
இந்த அமைப்பு தமிழ்நாட்டின்.கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகிகோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் போராடிவருகிறது.

மலையாளிகளின் அராஜகத்தைப் பொறுக்கமுடியாமல் தமிழர் ஒருவர் கோயிலுக்குப் போகும்வழியில் தனக்கு சொந்தமான இடத்தில் ஒரு கண்ணகிகோவில் கட்டி அங்கே வழிபாடு நடத்த வழிசெய்துள்ளார்.
கண்ணகி கோயிலில் அவமானப்பட்ட தமிழர்கள் மறுமுறை அங்கே போகமனமில்லாதவர்கள் இங்கே அதேபோல வழிபாடு நடத்துகின்றனர்.

நாதியற்ற தமிழினம் செய்யமுடிந்தவை இவைதான்.

இத்தனை கெடுபிடிகளிலும் தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் இப்போதும் சென்றுவருகின்றனர்.
ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும்,.தங்குவதற்கும் என்று, எந்த வசதிகளும் செய்யப்படாத நிலையில் பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு குறையாத தமிழக மக்கள் மனக்குமுறலுடன் மலையாள இனவெறியையும் தமிழக வந்தேறி அரசுகளின் பாரமுகத்தையும் சகித்துக்கொண்டு வழிபாட்டைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
பழமையான, பாரம்பரியமான,  பல்வேறு தமிழ்கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நாம் விரைந்து எதாவது செய்யவேண்டும். கோவிலை எப்பாடுபட்டேனும் தமிழர்கள் மீட்டு எடுக்க வேண்டும்.

என்னதான் கேவலப்பட்டாலும் உணவுக்கு தமிழகத்தை நம்பியிருக்கும் வெறும் ஒன்றரை கோடி மலையாளிகள் ஏறிமிதிக்கும் கேவலமான இனமாக நாம் இருப்பது கொஞ்சம்கூட நியாயமே இல்லை.

&&&&&&&&&&&&&&&&&

நன்றி:
http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=768:2014-10-17-09-03-53&catid=31:thenseide&Itemid=27

ஈழ-ஈழவர் தொடர்பு
https://sivasinnapodi.wordpress.com/2012/08/25/மலையாள-அதிகார-வர்க்கம்-ஈ/

1 comment:

  1. எனக்கு கண்ணீர் மட்டும் தான் பொத்துக்கொண்டு வருகிறது.எளியவர்கள் நாங்கள் என்ன செய்ய இயலும்? அரசியல் அதிகாரம் பெற்று சரி செய்யலாம் என்றாலும் பணம் விளையாடுகிறது. நாம் அழிந்துகொண்டு இருக்கிறோம். தடுக்க முடியவில்லை.

    ReplyDelete