Monday, 8 March 2021

துப்பாக்கியால் பேசும் தி.மு.க

துப்பாக்கியால் பேசும் தி.மு.க

நவ 06, 2010
கள்ளிக்குடி : கள்ளிக்குடி அருகே இடப்பிரச்னை தொடர்பான விவகாரத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக தி.மு.க., பிரமுகர் மிசா செந்தில் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...

20 sep 2012
ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவரும், திமுக பிரமுகருமான ஜி.என்.ஆர். குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்...
தூத்துக்குடியில் கள்ளத் துப்பாக்கி வாங்கியது உள்ளிட்ட வழக்குகள் ஜி.என்.ஆர். குமார் மீது நிலுவையில் உள்ளன...

1 பிப்., 2014
மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரான எஸ்.ஆர் கோபியின் பண்ணை வீட்டில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் துப்பாக்கி, அரிவாள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஏப் 29, 2014
காங்கயம்: துப்பாக்கி முனையில் மகளை கடத்தியதாக கூறப்படும், தி.மு.க., பிரமுகரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

செப் 28, 2015
சென்னை : தி.மு.க.,வை சேர்ந்த துாத்துக்குடி தொகுதி முன்னாள் எம்.பி., ஜெபதுரையிடம், சென்னை விமானநிலையத்தில் ஒரு துப்பாக்கி, 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

17 oct 2015
கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின்போது, லாரியில் துப்பாக்கி கடத்திய வழக்கு தொடர்பாக, தி.மு.க.வைச் சேர்ந்த அட்டாக் பாண்டி, அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆக் 09, 2017
சென்னை: கள்ள துப்பாக்கி விற்க, போலீசாரிடம், ஐந்து லட்சம் ரூபாய்க்கு, 'டீலிங்' பேசிய, தி.மு.க., முன்னாள் நிர்வாகி உட்பட, நான்கு பேர், சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

5 ஆகஸ்ட், 2018
தி.மு.க பிரமுகர் வி.கே.குருசாமி கைது ..
கள்ள துப்பாக்கி வைத்திருந்தார்...

19 நவம்பர், 2018
துப்பாக்கி, தோட்டாக்களுடன் வந்த தி.மு.க முன்னாள் எம்.பி! - கோவை விமான நிலைய பரபரப்பு..

25 ஏப்ரல் 19
தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திமுக நிர்வாகி பில்லா ஜெகன் ...

Aug 27, 2019
நாமக்கலில் திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...

December 20, 2019
துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் திமுக எம்எல்ஏவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் ரூபாய் அபராதம்....

June 24, 2020
மதுரை: துப்பாக்கி காட்டி மிரட்டிய திமுக MLAவின் புகைப்படத்தை செருப்பால் அடித்த பாஜக மகளிர் அணி.!

21, May 2020
தி.மு.க வை சேர்ந்த ர.கோட்டி 20க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் வாலிபரின் தம்பி மற்றும் நண்பர்களை துப்பாக்கி வைத்து மிரட்டி இரவுக்குள் அந்த காதல் ஜோடியை கண்டுபிடித்துவிட்டனர்....

ஜூலை 12, 2020
திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., கைது! கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் துப்பாக்கிச்சூடு!

#கள்ளத்துப்பாக்கி_திமுக
#கள்ளத்துப்பாக்கிதிமுக
#கள்ளதுப்பாக்கிதிமுக

முகநூலில் 13.07.2021

அரேபிய கலாச்சாரம்

அரேபிய கலாச்சாரம்
------------

நாள்: 02.12.2047
நேரம்: இரவு 11 மணி...

பிரபாகரன் படம் பொறித்த அந்த கார் ஆள் அரவமற்ற சாலையில் சென்று கொண்டிருந்தது.

"வேகமா போங்களேம்ப்பா"

"ஏன்டா?...
கார் ஓட்டும்போது இளையராஜா பாட்டு கேக்குறது என்ன ஒரு சுகம்?!"

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்....

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்

கொத்தமல்லி வாசம் ....
கொத்துகொத்தா வீசும்...
அப்படித்தான் மாமா அத்தமக நேசம்....
வெண்ணயிலே மாமா நெய்வாசம்...
எந் திண்ணையிலே மாமா உன் வாசம்...
ஹேய்...
வாம் முனிம்...

"என்னப்பா நிறுத்திட்டீங்க?"

"இந்த பாட்டு இந்த வரி வரைக்கும்தான் இளையராஜா பாட்டு மாதிரி இருக்கும்.
அப்பறம் கானா பாட்டா மாறிடும்.
தேவா மேல எனக்கு இது ஒரு பெரிய வருத்தம்.
அப்டியே முழு பாட்டா வந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்?!"

திடீரென்று கார் நிறுப்படுகிறது.
அதன் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

"என்னாச்சுப்பா?!"

(மென்மையான குரலில்)
"முகில்! மெதுவா எறங்கி கொஞ்சம் பின்னாடி போய் புதர்ல ஒழிஞ்சிக்கோ!
இந்தா என் செல்போன்.
இதுல சக்திவேல் னு ஒரு அவசர நம்பர் இருக்கா?!
அதுக்கு நாம இருக்குற எடத்த சொல்லி. ஒடனே ஆட்களோட வரச்சொல்லு.
சைலன்ட்ல போட்டுக்கோ!"

"அப்.."

"எதுவும் பேசாதே! சீக்கிரம் போ"

சிறுவன் இறங்கிக்கொள்ள

கார் பத்தடி முன்னே செல்கிறது.
திடீரென்று ஒரு சிறியரக சரக்கு வண்டி மறைவிலேயே வெளியே வந்து  சாலையை மறித்தவாறு நிற்க கார் நிறுத்தப்படுகிறது.
ஏழு பேர் கொண்ட கும்பல் வண்டியை சுற்றிவளைக்கிறது.

அதில் இருவருக்கு வயது நாற்பதுக்கு மேல்.
மற்றவர்களுக்கு பதினெட்டு முதல் இருபது வயது.
அனைவரும் அரைக்குல்லா, கண்மை, கொத்து தாடி, ஜிப்பா, முழங்காலுக்கு மேல் வெள்ளை லுங்கி என்று ஒரே மாதிரி உடை அணிந்திருந்தனர்.

"டேய் ரவூப்! கீழ எறங்குடா"

"ரவுப் இல்லடா! தமிழ்ச் செல்வன்! த்தூ!"

வண்டியை விட்டு தமிழ்ச் செல்வன் கீழே இறங்குகிறார்.

"ஏ இவன பாருங்கடா! நெத்தில சாணிப்பொடி!  பளபளனு சட்ட! ஜரிக வேட்டி! கழுத்துல வேல் ! இவன பாக்க நம்மாளு மாதிரி இருக்கா?! இருந்த கொஞ்ச நஞ்ச இரக்கமும் போச்சு"

"வேற எப்படிப்பா இருக்கணும்?! அல் கொய்தா கமான்டர் மாதிரி இருக்கணுமா?!
இப்பிடி மாறுவேசம் போட்டு அலையவா மார்க்கம் சொல்லுது?!
நீங்க பின்பற்றுரது இஸ்லாத் இல்ல அரேபிய கலாச்சாரம்.
வடக்க திருநீறு பூசின ஒரு இந்துவ காட்டு பாப்போம்!
நா இப்பவும் முஸ்லிம்தான்"

"கழுத்துல என்ன வேல்?! ஓகோ முப்பாட்டன் முருகனா?! அல்லாவுக்கு எதையும் இணைவைக்கலாமா?!"

"கடவுள் ஒருத்தர்தான்
அதுக்காக அம்மா அப்பா தாத்தா பாட்டியை நன்றியோட நினைக்கக்கூடாதுனு இருக்கா?!
முருகன் எங்க முப்பாட்டன்.
குரானும் பைபிளும் சொல்ற இப்ராகிமும் நோவாவும் மாதிரி முருகன் நம்ம முன்னோர்.
அவர் கடவுளா இருக்கார்னு நாங்க சொல்லலயே!
பிரபாகரன் மாதிரி அவரும் நமக்கு ஒரு வழிகாட்டி"

"ச்சீ வாய மூடு! நமக்குனு சொல்லாத! நாங்க வேற"

"ஒன்னோட மொகரய பாத்தாலே தெரியுது! நீ நம்மாளுதான்.
உன்னோட வீடு எந்த தெரு, உன் அப்பன் தாத்தன் என்ன தொழில்னு சொல்லு நீ என்ன ஆளுகனு சொல்றேன்.
இதோ இந்த செவத்தவன் பேச்ச கேக்காத.
இவன் வெளில இருந்த வந்த வந்தேறி"

"டேய்! யாரப் பாத்துடா வந்தேறின்ன அவர் நம்ம சமூகத்துக்கு எவ்வளவு செஞ்சிருக்காரு.
பச்ச துரோகி நீயெல்லாம் அவரப்பத்தி பேசலாமா?!"

"யாரு?! நீ நம்ம தங்கப்பா பேரன்தானே?!
உன் தாத்தா முஸ்லீமா மாறியும் பேர மாத்தாம இருந்தவரு!
வாய்ல நுழையாத பேர வச்சாதான் அல்லா ஒத்துக்குவானானு கேப்பாரு!
நீயென்னடான்னா உன் பிள்ளைய தமிழ் படிக்க அனுப்பாம பள்ளிவாசல்ல உருது படிக்க அனுப்புற?!
நேத்து மதம் மாறின ஆட்கள்தான்டா ரொம்ப கொதிக்கிறீங்க!
நான் பரம்பரை முஸ்லீம்.
எங்க கட்சியோட துணைத்தலைவர் ஒரு மரைக்காயர்.
அவங்க ஆயிரம் வருசமா முஸ்லீம்.
அவர்ட்ட பேசுறியா?"

"யாரு முத்துமீரான சொல்றியா?!
அவனென்ன... உங்க பெரிய தலைவரே யாழ்ப்பாணத்துல இருந்து  எங்கள துரத்திதான விட்டாரு!
காத்தான்குடி கொலையை நாங்க மறக்கமாட்டோம்"

"என்னோட பெரிய தலைவன் அது பத்தி விளக்கம் கொடுத்து மன்னிப்பு கூட கேட்ருக்காரு.
எங்க அண்ணனும் பல தடவ வெளக்கம் சொல்லிட்டாரு.
சிங்கள பொதுமக்களயே கொல்லாத தலைவர் தன்னோட இனத்து முஸ்லீம்களையா கொல்வாரு.
எல்லாம் உங்கள மாதிரி மதவெறி பிடிச்ச ரவுடி கும்பல்களால வந்த வினை.
உங்களால இங்கயும் அதுதான் நடக்கும்.
உலகமே முஸ்லீம்கள கைவிட்டமாதிரி தமிழ்நாடும் கைவிடும்.
எங்கள மாதிரி தமிழ் கலாச்சாரத்துக்கு மாறிடுங்க.
நாலு சுவத்துக்குள்ள மதத்த வச்சிக்கோங்க.
எங்க அண்ணன்தான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு"

"பெரிய நொண்ணன்.
அந்த ஆமவாயன் பெரிய மாமா நீ சின்ன மாமா ரெண்டுபேரும் சேந்து கூட்டிக் கொடுக்குறீங்க.
இதோட எங்க பொண்ணுங்க நாலு பேர கைமாத்தி விட்ருக்க.
இப்ப கூட கூட்டிக்கொடுத்துட்டுதான வார.
இந்நேரம் ஒரு முஸ்லீம் ரத்தத்துல ஒரு சைத்தனோட விந்து கலந்திருக்கும்"

"ஹ... ஹ... என்னது ரத்தமா?! ரத்தத்துக்கும் மதத்துக்கும் என்னப்பா சம்பந்தம்.
உன்னோட ரத்தத்துல ஒன்னோட இனம் வேணா என்னனு பாக்கலாம்.
மதம் என்னனு பாக்கமுடியாது.
  ஆசப்பட்டவங்கள அவங்க பெத்தவங்க சம்மதத்தோட சேத்துவச்சேன்.
இதுல என்ன தப்பு?!
இதே நீங்க எத்தன பேருக்கு பொண்ணு கொடுத்து முஸ்லீமா மாத்திருக்கீங்க?!
எத்தன பொண்ணுகள மடக்கி மதம் மாத்தி கல்யாணம் பண்ணிருக்கீங்க?!
அதுக்கு பேரு என்ன?!
அதுக்கு கூலியா அல்லா சொர்க்கத்துல பொண்ணுங்கள.."

அதிலொரு இளைஞன் எறிந்த ஒரு பெரிய கல் தமிழ்ச் செல்வன் தலையில் விழ அவர் மயங்கி சரிகிறார்.

"டேய் உன்னாலதான்டா என் நிஷா எனக்கு கெடைக்காம போய்ட்டா?!
காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்துவந்தவன் கூட்டிட்டு போனானாம்.
ஒக்காலி சாவுடா! சாவுடா!"

என்றவாறு கத்தியால் வயிற்றில் பலமுறை குத்துகிறான்.

தூரத்தில் அதிவேகமாக கார் வரும் வெளிச்சம் தெரிகிறது.

ஒருவன் ஆடு வெட்டும் கத்தியால் தமிழ்ச் செல்வன் கழுத்தை வெட்டிவிட்டு தமிழ்ச் செல்வனது காரையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடுகின்றனர்.

பின்னால் வந்த ஆட்டோ அங்கே வந்து நிற்கவும் இவர்கள் புறப்படவும் சரியாக இருக்கிறது.

"டேய் என் தம்பிக்கு மட்டும் எதாவது ஆச்சு உங்க வம்சமே இருக்காதுடா.."

என்கிற குரல் தப்பிச் செல்பவர்களின் காதில் விழுந்தது.

தமிழ்ச் செல்வனை தூக்கிக் கொண்டு ஆட்டோ எதிர்திசையில் பயணமானது.

காருக்குள் யாருமே பேசவில்லை சிறிது நேரம் கழித்து ஒருவன் பிளேயரை ஆன் செய்தான்.

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்....

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்...

கொத்தமல்லி வாசம் ....
கொத்துகொத்தா வீசும்...
அப்படித்தான் மாமா அத்தமக நேசம்....

வெண்ணயிலே மாமா நெய்வாசம்...
எந் திண்ணையிலே மாமா உன் வாசம்...
ஹேய்... வாம் முனிம்மா வா...

"ச்ச எவ்வளவு நல்ல பாட்டுய்யா! இத அப்டியே முழுசா ஒரு பாட்டா போட்ருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்.
கெடுத்துட்டானுகளே..."

முகநூலில் 05.09.2021

இலங்கை கிரிக்கெட்டில் கண்துடைப்பு

கண்துடைப்பு

இலங்கை கிரிக்கெட் அணி தொடங்கியதில் தொடங்கியதில் இன்று இன்றுவரை அதன் தேசிய அணியில் ஏறத்தாழ 200 பேர் விளையாடியிருக்கிறார்கள்

இலங்கையில் 75% சிங்களவர் என்று வைத்துக்கொண்டாலும் இந்த 200 இல் 50 பேராவது தமிழர்கள் இருக்கவேண்டும்.

ஆனால் இலங்கை அணியில் விளையாடிய தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சரி எண்ணத் தொடங்குவோம்....

1) ரசல் அர்னால்ட்
2) ரோய் தியாஸ்
3) பிரதீப் ஜெயபிரகாஷ்தரன்
4) சிறிதரன் ஜெகநாதன்
5) வினோதன் ஜான்
6) ஏஞ்சலோ மேத்யூஸ்
7) முத்தையா முரளிதரன்
8)......?

சரி தமிழ் - சிங்கள கலப்பினத்தவரையும் சேர்த்துக் கொள்வோம்

9) ரவீந்திர புஷ்பகுமார
10) ரவி ரத்னயகே

அவ்வளவுதான்!
அவ்வளவேதான்!

எப்படி இலங்கை ராணுவம் 99% சிங்களவர், இலங்கை காவல்துறை 95% சிங்களவர் என்று ஒரே இனத்தால் நிரம்பி வழிகிறதோ?!

அப்படித்தான் இலங்கை கிரிக்கெட் அணியும்!

முத்தையா முரளிதரன் ஒரு கண்துடைப்பு அவ்வளவுதான்.

நாம் எதிர்க்கப்பட வேண்டிய ஒருவரைத்தான் எதிர்க்கிறோம்!
17.10.2021

பள்ளித் தேர்தல்

பள்ளித் தேர்தல்

பள்ளிகளை நவீனமாக்குவது பற்றி பேசும் நாம் பள்ளிகளை அரசியல் மயமாக்குவது பற்றியும் இனி பேசுவோம்.
5 ஆம் வகுப்புக்கு மேல் வகுப்புக்கு ஒரு தலைவர் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து வகுப்புத் தலைவர்களும் வாக்களித்து ஒரு பள்ளிக்கான மாணவத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவர் மாணவர் தேவைகளை பள்ளி நிர்வாகத்துடன் பேசி தீர்த்துவைக்க வேண்டும்.
தீர்வு கிடைக்காத நிலைவந்தால் இவர் அமைதியான முறையில் போராட்டம் செய்வார்.

இதேபோல அனைத்து பள்ளி மாணவத் தலைவர்களும் வாக்களித்து ஒரு மாவட்டத் தலைவரையும்
மாவட்டத் தலைவர்கள் ஒன்றுகூடி மாநிலத் தலைவரையும் வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த மாணவர்கள் கட்டமைப்பு ஒன்று முதல் 12 வரையான படிக்கும் பிள்ளைகள் மீதான பெற்றோர் மற்றும் ஆசிரியரின் அழுத்தங்களை மட்டுப்படுத்தும்.

இந்த தேர்தலில் கட்சி என்கிற கட்டமைப்பு இருக்காது்
பிரச்சாரம் என்று எதுவும் இருக்காது.
வாக்களிக்கும் முன் தேர்தலில் நிற்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நிமிடம் உரையாற்ற வைக்கலாம்.

பள்ளி நிர்வாகம் அல்லது கல்வித்துறையில் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவர் பிரச்சனைகளை பொதுத் தளத்திற்கு கொண்டுவர இது வழிவகுக்கும்.

இவர்களுக்கு எந்த பள்ளியிலும் சென்று ஆய்வுசெய்யும் உரிமையும் மாணவர்களைத் திரட்டி போராட்டம் செய்யும் உரிமையும் உண்டு.

கல்லாரி மாணவர்களும் இதுபோல ஒரு கட்டமைப்பு வைத்திருக்க வேண்டும்.
இவர்கள் அவ்வப்பகுதி பள்ளிகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

நம் காலத்தில் 18 வயதில் இருந்த அறிவு இந்த காலத்துப் பிள்ளைகளிடம் 10 வயதிலேயே இருக்கிறது.

இந்த அரசியல் மயமாக்கல் மூலம் நம் சனநாயகம் எப்படி இயங்குகிறது என்பதை பள்ளிப் பருவத்திலேயே தெரிந்துகொள்வது அனைவருக்கும் நன்மையாக முடியும்.
09.01.2021

திருநங்கை குடியேற்றம்

திருநங்கை குடியேற்றம்

தனித் தமிழர்நாடு புத்தகத்தில் சொல்லப்படாத ஒரு குடியேற்றம் இருக்கிறது என்றால் அது சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் திருநங்கையர் குடியேற்றம்.

இது அதிகம் கவலைப்பட வேண்டிய விடயம் இல்லைதான். இந்திய ஒன்றியத்தில் திருநங்கையர் மொத்தமே ஐந்து லட்சம் பேர்தான் என்றாலும் இவர்களது குடியேற்றம் ஏற்படுத்தும் விளைவுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

வழக்கம்போல தமிழர்கள் திருநங்கையர் விடயத்தில் மற்றவர்களை விட நல்லவர்களாக நடந்து கொள்கின்றனர்
(நல்லவனாக இருந்ததால்தானே நாம் நாசமாகப் போனோம்).
ஜெயலலிதா இவர்களுக்கு குடியிருப்பு, கல்வியில் சலுகை, ரேசன் மற்றும் பெண்களுக்கான சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி என்று நிறைய நல்லதுகளைச் செய்தார்.
நாம் தமிழர் கட்சி முதல்வர் வேட்பாளரை எதிர்த்து ஒரு திருநங்கையை நிறுத்தும் அளவுக்கு அங்கீகாரம் கொடுத்தது.

அது என்ன ராசியோ தெரியவில்லை. இதுவரையான மக்கட்தொகை கணக்கெடுப்பை உற்றுநோக்கினால் தென்னிந்தியாவில்  ஆந்திராவில் திருநங்கையர் மிக அதிகமான இருக்கிறார்கள் அதாவது மாநில ஆண், பெண் விகித்ததுடன் ஒப்பிடும்போது ஆந்திராவில் மிக அதிகமாகவும் கேரளாவில் மிகக் குறைவாகவும் இருக்கிறது.
ஆனால் பிற தென்னிந்திய மாநிலங்களை விட தமிழகமே இவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இதுவே தென்னிந்திய திருநங்கைகள் தமிழகத்திற்குப் படையெடுக்கக் காரணம்.
இயற்கையே சபித்துவிட்ட இவர்கள் வாலிபப் பருவத்தில் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். பிற திருநங்கையருடன் சேர்ந்துகொள்கின்றனர்.

இவர்களுக்கு என்று ஒரு கட்டமைப்பு இருக்கிறது. நகரங்களில் குழுவாக இருக்கும் இவர்கள் ஒரு வயதான திருநங்கையின் தலைமையில் ஒரு குடும்பம் போல இயங்குவார்கள். இப்படியான குழுக்கள் தங்களுக்குள் ஏரியா பிரித்துக்கொண்டு அதற்குள் இரவில் விபச்சாரம் மற்றும் பகலில் பிச்சையெடுத்தல் ஆகியவற்றைச் செய்கின்றனர்.

டீனேஜ் காலத்தில் பிச்சையெடுத்து சம்பாதித்து கொடுப்பார்கள். உணவு உடை மற்றும் 25 வயது வாக்கில் ஆணுறுப்பை நீக்கும் ஆபரேசனுக்கு குழு பணம் வழங்கும்.

மும்பையில் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் சட்ட விரோதமாக செய்யப்படும். மருத்துவமனையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை தவிர கோவில்களில் செய்யப்படும் பழங்கால முறையும் உண்டு.
(கோவில்களில் நிறைய சாராயம் கொடுத்து ஆணுறுப்பை கத்தியால் அறுத்து பஞ்சைவைத்து கட்டுப்போட்டு ஒரு குழியில் படுக்க வைப்பார்கள். அதிக ரத்தப் போக்கினால் உயிரிழந்துவிட்டால் அப்படியே புதைத்துவிடுவார்கள். உயிரிழக்க அதிக வாய்ப்பு உண்டு)

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு விபச்சார கூடங்களுக்கு ஏலம் விடுவார்கள். சில விபச்சாரக் கூடங்கள் அறுவைசிகிச்சை செலவைச் செய்து வாங்கிக் கொள்வார்கள். சில விபச்சாரக் கூடங்கள் பார்க்க பெண்போலவே இருப்பவர்களை இளம்வயதிலேயே வாங்கி அவர்கள் உடல் பெண்போலவே ஆக சுரப்பிகள் இயங்க ஊசி, மருந்து போட்டு அறுவை சிகிச்சையும் செய்து தொழிலில் விடுகிறார்கள்.

பிற விபச்சாரக் கூடங்கள் போலவே இங்கும் விபச்சாரத்தில் நேரடியாக ஈடுபடும் திருநங்கைக்கு பெரிய லாபம் எதுவும் இருக்காது. எல்லாமே இவர்கள் குழுத் தலைவி, போலீஸ், தரகர்கள், விடுதிகள் என போய்விடும்.
40 வயதுக்கு மேல் மறுபடி பிச்சை எடுப்பார்கள் இவர்களது குழு இவர்களுக்கு கடைசிவரை ஆதரவாக இருக்கும்.
திருமணம் எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.

41% திருநங்கையர் கணக்கெடுப்பில் தொழில் என்ற இடத்தில் மற்றவை என்றே கூறியுள்ளனர்.
அதாவது தற்போதைய நிலையில் திருநங்கைகளுக்கு விபச்சாரம் செய்வதைத் தவிர வேறுவழியில்லை. தமிழகத்தில் ஏற்கனவே தேவதாசி முறை இருந்த காலத்தில் இருந்தே கன்னட தெலுங்கர்களே விபச்சாரம் செய்துவருகின்றனர். தற்போது தமிழகத்தில் பெரிய நகரங்கள் முதல் சிறு டவுன்கள் வரை பிற மாநில திருநங்கைகள் குடியேறியுள்ளனர்.
குடியிருப்பும் பெண்களுக்கான சலுகை மூலம் ஸ்கூட்டியும் வாங்கிக் கொள்கின்றனர்.
இளம் வயது ஆண்களிடம் மிரட்டி 50 ரூபாய் வரை பிச்சைவாங்குவது பரவலாக நடக்கிறது. 
(வடயிந்தியாவில் அதுவும் ரயிலில் ஆண்களே மீசை தாடியை மழித்துக்கொண்டு சேலையைக் கட்டிக்கொண்டு பிச்சையெடுக்கிறார்கள் அந்த அளவு வருமானம்)
இரவில் பேருந்து நிலையங்களில் நின்று விபச்சாரத்திற்கு ஆள் பிடிக்கிறார்கள்.
அதனால்தான் இவர்களது குடியேற்றத்தால் விபச்சாரம் பெருகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கிறேன்.

மாநில அரசு இப்படியான பிற மாநிலத்தார் குடியேற்றங்களைத் தடுக்க வேண்டும்.
தனது மாநில திருநங்கைகளுக்கு கல்வி வழங்க போதிய ஏற்பாட்டைச் செய்யவேண்டும். பெற்றோரும் திருநங்கையரை விரட்டாமல் பிற பிள்ளைகள் போலவே வளர்க்கவும் வேண்டும்.
சமூகமும் இவர்களை சக மனிதர்களாக ஏற்க வேண்டும். அரசும் இவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடவொதுக்கீடு அளிக்கவேண்டும். அரசு சாரா நிறுவனங்களும் சிறு தொழிலகங்களும் திருநங்கையருக்கு வேலை வழங்க முன்வரவேண்டும்.

இதையெல்லாம் விட திருநங்கையர் விபச்சாரத்திற்குப் போகாமல் மற்றவர்கள் போல படித்து வேலைக்குச் செல்ல முயற்சிக்க வேண்டும்.

திருநங்கையரை பிறர் ஏளமாகப் பார்க்க முதல் காரணம் அவர்களது தோற்றம் அல்ல செய்யும் தொழிலும் நடந்துகொள்ளும் முறையும்தான்.

நாகரீகமாக உடையணிந்த படித்த வேலைக்குப் போகிற ஒரு திருநங்கையாக முயற்சி செய்வதே இதையெல்லாம் மாற்றும்.

18.01.2021

தமிழர் படைபல வீழ்ச்சிக்கு காரணம் யார்?

தமிழர் படைபல வீழ்ச்சிக்கு காரணம் யார்?

தமிழர் ஆட்சி என்றாலே மூவேந்தர் ஆட்சிதான்.
அதிலும் முக்கியமானவர்கள் சோழர் மற்றும் பாண்டியர்.
சோழர் வீழ்ந்து போனதற்கு பல  காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் மன்னர் குடும்பத்தில் இனக்கலப்பு.
இதுவே வாரிசில்லாதபோது சாளுக்கியர் ஆட்சியைப் பிடிக்க வழிவகுத்தது.
இரண்டாவது பாண்டியர் அரசு.
இது வீழ பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் பங்காளி சண்டை அதன்மூலம் வேற்றினத்தவர் ஊடுருவல்.

ஆக மன்னர் குடும்பங்களில் பிரச்சனை வந்து மன்னர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆனாலும் அதற்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகள், படைவீரர்கள் அதிகம் கொண்ட போர்க்குடிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு தத்தமது பகுதிகளை அந்நியரிடம் இருந்து காக்க முற்பட்டனர்.
இவர்களை வென்றுதான் அந்நியர் ஆட்சி தமிழகத்தில் பரவியது.

அப்படியான போர்க்குடிகளில் படைத் தொழிலையே விட்டுவிட்டு கோழைத்தனமாக வணிகத்திற்கு மாறிய போர்க்குடிகள் தமிழ் இனத்தின் இந்த பெரும் சறுக்கலுக்கு பொறுப்பு.

அப்படியானவர்கள் கைக்கோளர், செங்குந்தர் மற்றும் சேனைத்தலைவர் ஆகியோரே!
(இம்மூவரும் சங்க காலத் தமிழ்க் குடியான கோசர் வழிவந்த வம்சாவளிகள் என்பது பாவாணர் கருத்து)

இவர்களே அந்நிய ஆட்சிக்கு போர்த்தொழில் செய்ய மறுத்து வணிகத்திற்கு மாறினர்
(திரு. சேசாத்திரி சிறிதரன் அவர்கள் எழுதிய "கைக்கோளர் படை" பதிவில் இந்தப் படையினர் விலகலுக்கு சைவ மதம் காரணம் என்று கூறியுள்ளார். அதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களைக் கோழையாக்க சைவம் ஒன்றும் அகிம்சை மதம் இல்லை).

இவர்கள் செய்த தவறு பிற போர்க்குடிகள் செய்ததுபோல அந்நிய தலைமைக்கு அடங்கி போர்த்தொழில் செய்துகொண்டு வாய்ப்பு வரும்போது தமக்குள் கூட்டணி அமைத்து அந்நியரை தூக்கியெறியும் போக்கைக் கையாளாமல் மரபுத் தொழிலையே மாற்றியதுதான்.

இதில் கைக்கோளர் நெசவுத் தொழிலுக்கும் செங்குந்தர் ஆடை தொடர்பான (பருத்தி) விவசாயம் மற்றும் வணிகத்திற்கும் சேனைத்தலைவர் காய்கறி விவசாயம் மற்றும் வணிகத்திற்கு மாறினர்.

இதனாலேயே அதன் பிறகு எழுந்த தமிழ் சிற்றரசுகள் படைவலிமையைப் பெருக்க முடியாமல் தொடர்ந்து வீழ்ந்தன.

அன்று எல்லா சாதிகளிலும் படைவீரர்கள், தளபதிகள், அமைச்சர்கள் இருந்தனர்.
ஆனால் முழுக்க போர்செய்வதையே தொழிலாகக் கொண்ட சாதியினர் சிலரே!
அப்படியானவர்கள் முற்றாக விலகியது தமிழ் நில பாதுகாப்பிற்கு பேரிழப்பு!

இந்த விடயத்தில் பாராட்டபட வேண்டியவர்கள் மறவர்களே!
கள்ளர்களையும் பாராட்டலாம்!
(வெள்ளாளர்கள் கூட அந்நிய எதிர்ப்பு வணிகக் கூட்டணி ஒன்றை வைத்திருந்தனர்)

இவ்விரு சாதியினரும் ஆங்கிலேயர் காலம் வரைக்கும்கூட தாக்குப்பிடித்துள்ளனர்.

தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம் சோழ, பாண்டிய குடும்ப வாரிசுகள் செய்த தவறு முதல் காரணம் என்றால் தம் கடமையிலிருந்து விலகிய கைக்கோளர், செங்குத்தர் மற்றும் சேனைத்தலைவர் ஆகியோர் செய்த துரோகம் இரண்டாவது காரணம்.

இன்றைய நிலையில் மூவேந்தர் மறைந்துவிட்டனர்!
அதனால் மேற்கண்ட மூவரும் தமிழர் வீழ்ச்சிக்கு முதற்காரணம்!
(இந்த குற்றவுணர்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் மூவரும் நாங்கள் போர்க்குடி, ஆண்ட சாதி என்று பெருமை பேசுவதேயில்லை போலும்!)

ஆக இவர்களே இனி தமிழர்தேசியத்தை முன்னெடுக்க வேண்டிய முதல் பொறுப்பாளிகள்!

செங்குந்த முதலியாரான பாரதிதாசன் தமிழர் விடுதலைக் கருத்தியலுக்கு குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்துள்ளார்.
இந்த தலைமுறை பேச்சோடு நிற்காமல் செயலில் இறங்கவேண்டும்.
தமிழர் சேனை ஒன்றைக் கட்டவேண்டியது இம்மூவரின் பொறுப்பு!

தொண்டை மற்றும் கொங்குநாடுகள் அந்நிய நிலத்திற்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பு அதிகம் கிடையாது என்று கொண்டு அப்பகுதி போர்க்குடிகளை மன்னித்து விடலாம்.

ஆனால் சோழ மற்றும் பாண்டிய நாடுகள் நில அமைப்பின்படி இரும்புக் கோட்டை போன்றவை.
அதிலும் பாண்டிய நாட்டு போர்க்குடிகள் கடமை தவறியதை மன்னிக்கவே முடியாது.

சோழ நாட்டு அகமுடையார்களையும் கடமை தவறிய இம்மூவருடன் நான்காவதாக சேர்க்கலாம்தான். ஆனால் அவர்கள் முழுமையான போர்க்குடிகள் கிடையாது.
அவர்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டுமே (அதாவது போலீஸ் போன்ற தொழில்) அதனால் மன்னிக்கலாம்.

நாடார்களில் சாணார் மட்டுமே போர்க்குடி இவர்களையும் ஐந்தாவதாக சேர்க்கலாம்தான்.
ஆனால் மண்மீட்பின் போது குமரி மற்றும் சென்னையை மீட்டுக் கொடுத்து தம் தவறுக்கு சிறிய பிராயச்சித்தம் செய்துள்ளனர்.

இதிலும் சேனைத்தலைவர் மிகச் சிறுபான்மை (தமிழக மக்கட்தொகையில் 0.5%) அவர்களைக் கூட மன்னித்துவிடலாம்.

[சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் வணிகத்திற்கு மாறிய பிறகும் தமது போர்த்தாகத்தைத் தணிக்க வழி தெரியாமல் வந்தேறிகளின் கீழ் படையில் இணையவும் மனமில்லாமல் தம்மை ஆறுதல் படுத்திக்கொள்ள மூத்த தமிழனான முருகனுக்கு போர்த் தொழில் செய்வதாக தம் மீது கற்பனைக் கதைகளை எழுதிக்கொண்டனர்.
  பிற்கால புராணங்களில் வரும் முருகனின் தளபதியான வீரபாகு என்கிற கற்பனையான கதாபாத்திரத்தைத் தத்தெடுத்துக் கொண்டனர்.
வீர+பாகு இரண்டுமே தமிழ்ச்சொல் இல்லை]

இனி வரும் காலங்களில் தமிழினத்தை அடிமைச் சங்கிலியிலிருந்து விடுவித்து மேற்கண்ட  மூன்று போர்க்குடிகளும் அதிலும் குறிப்பாக பாண்டிநாட்டு (தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள்) கைக்கோள மற்றும் செங்குந்தர் சாதிகள் தமது வரலாற்றுத் தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்!

-  ஆதிமூலப்பெருமாள் மூப்பனார் சேனைத்தலைவன்

(தொடர்புடைய பதிவு :- தமிழர் சேனை ஆளெடுப்பு - வேட்டொலி)

16.01.2021