Monday 8 March 2021

பள்ளித் தேர்தல்

பள்ளித் தேர்தல்

பள்ளிகளை நவீனமாக்குவது பற்றி பேசும் நாம் பள்ளிகளை அரசியல் மயமாக்குவது பற்றியும் இனி பேசுவோம்.
5 ஆம் வகுப்புக்கு மேல் வகுப்புக்கு ஒரு தலைவர் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து வகுப்புத் தலைவர்களும் வாக்களித்து ஒரு பள்ளிக்கான மாணவத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவர் மாணவர் தேவைகளை பள்ளி நிர்வாகத்துடன் பேசி தீர்த்துவைக்க வேண்டும்.
தீர்வு கிடைக்காத நிலைவந்தால் இவர் அமைதியான முறையில் போராட்டம் செய்வார்.

இதேபோல அனைத்து பள்ளி மாணவத் தலைவர்களும் வாக்களித்து ஒரு மாவட்டத் தலைவரையும்
மாவட்டத் தலைவர்கள் ஒன்றுகூடி மாநிலத் தலைவரையும் வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த மாணவர்கள் கட்டமைப்பு ஒன்று முதல் 12 வரையான படிக்கும் பிள்ளைகள் மீதான பெற்றோர் மற்றும் ஆசிரியரின் அழுத்தங்களை மட்டுப்படுத்தும்.

இந்த தேர்தலில் கட்சி என்கிற கட்டமைப்பு இருக்காது்
பிரச்சாரம் என்று எதுவும் இருக்காது.
வாக்களிக்கும் முன் தேர்தலில் நிற்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நிமிடம் உரையாற்ற வைக்கலாம்.

பள்ளி நிர்வாகம் அல்லது கல்வித்துறையில் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவர் பிரச்சனைகளை பொதுத் தளத்திற்கு கொண்டுவர இது வழிவகுக்கும்.

இவர்களுக்கு எந்த பள்ளியிலும் சென்று ஆய்வுசெய்யும் உரிமையும் மாணவர்களைத் திரட்டி போராட்டம் செய்யும் உரிமையும் உண்டு.

கல்லாரி மாணவர்களும் இதுபோல ஒரு கட்டமைப்பு வைத்திருக்க வேண்டும்.
இவர்கள் அவ்வப்பகுதி பள்ளிகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

நம் காலத்தில் 18 வயதில் இருந்த அறிவு இந்த காலத்துப் பிள்ளைகளிடம் 10 வயதிலேயே இருக்கிறது.

இந்த அரசியல் மயமாக்கல் மூலம் நம் சனநாயகம் எப்படி இயங்குகிறது என்பதை பள்ளிப் பருவத்திலேயே தெரிந்துகொள்வது அனைவருக்கும் நன்மையாக முடியும்.
09.01.2021

No comments:

Post a Comment