Monday 8 March 2021

தமிழர் படைபல வீழ்ச்சிக்கு காரணம் யார்?

தமிழர் படைபல வீழ்ச்சிக்கு காரணம் யார்?

தமிழர் ஆட்சி என்றாலே மூவேந்தர் ஆட்சிதான்.
அதிலும் முக்கியமானவர்கள் சோழர் மற்றும் பாண்டியர்.
சோழர் வீழ்ந்து போனதற்கு பல  காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் மன்னர் குடும்பத்தில் இனக்கலப்பு.
இதுவே வாரிசில்லாதபோது சாளுக்கியர் ஆட்சியைப் பிடிக்க வழிவகுத்தது.
இரண்டாவது பாண்டியர் அரசு.
இது வீழ பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் பங்காளி சண்டை அதன்மூலம் வேற்றினத்தவர் ஊடுருவல்.

ஆக மன்னர் குடும்பங்களில் பிரச்சனை வந்து மன்னர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆனாலும் அதற்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகள், படைவீரர்கள் அதிகம் கொண்ட போர்க்குடிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு தத்தமது பகுதிகளை அந்நியரிடம் இருந்து காக்க முற்பட்டனர்.
இவர்களை வென்றுதான் அந்நியர் ஆட்சி தமிழகத்தில் பரவியது.

அப்படியான போர்க்குடிகளில் படைத் தொழிலையே விட்டுவிட்டு கோழைத்தனமாக வணிகத்திற்கு மாறிய போர்க்குடிகள் தமிழ் இனத்தின் இந்த பெரும் சறுக்கலுக்கு பொறுப்பு.

அப்படியானவர்கள் கைக்கோளர், செங்குந்தர் மற்றும் சேனைத்தலைவர் ஆகியோரே!
(இம்மூவரும் சங்க காலத் தமிழ்க் குடியான கோசர் வழிவந்த வம்சாவளிகள் என்பது பாவாணர் கருத்து)

இவர்களே அந்நிய ஆட்சிக்கு போர்த்தொழில் செய்ய மறுத்து வணிகத்திற்கு மாறினர்
(திரு. சேசாத்திரி சிறிதரன் அவர்கள் எழுதிய "கைக்கோளர் படை" பதிவில் இந்தப் படையினர் விலகலுக்கு சைவ மதம் காரணம் என்று கூறியுள்ளார். அதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களைக் கோழையாக்க சைவம் ஒன்றும் அகிம்சை மதம் இல்லை).

இவர்கள் செய்த தவறு பிற போர்க்குடிகள் செய்ததுபோல அந்நிய தலைமைக்கு அடங்கி போர்த்தொழில் செய்துகொண்டு வாய்ப்பு வரும்போது தமக்குள் கூட்டணி அமைத்து அந்நியரை தூக்கியெறியும் போக்கைக் கையாளாமல் மரபுத் தொழிலையே மாற்றியதுதான்.

இதில் கைக்கோளர் நெசவுத் தொழிலுக்கும் செங்குந்தர் ஆடை தொடர்பான (பருத்தி) விவசாயம் மற்றும் வணிகத்திற்கும் சேனைத்தலைவர் காய்கறி விவசாயம் மற்றும் வணிகத்திற்கு மாறினர்.

இதனாலேயே அதன் பிறகு எழுந்த தமிழ் சிற்றரசுகள் படைவலிமையைப் பெருக்க முடியாமல் தொடர்ந்து வீழ்ந்தன.

அன்று எல்லா சாதிகளிலும் படைவீரர்கள், தளபதிகள், அமைச்சர்கள் இருந்தனர்.
ஆனால் முழுக்க போர்செய்வதையே தொழிலாகக் கொண்ட சாதியினர் சிலரே!
அப்படியானவர்கள் முற்றாக விலகியது தமிழ் நில பாதுகாப்பிற்கு பேரிழப்பு!

இந்த விடயத்தில் பாராட்டபட வேண்டியவர்கள் மறவர்களே!
கள்ளர்களையும் பாராட்டலாம்!
(வெள்ளாளர்கள் கூட அந்நிய எதிர்ப்பு வணிகக் கூட்டணி ஒன்றை வைத்திருந்தனர்)

இவ்விரு சாதியினரும் ஆங்கிலேயர் காலம் வரைக்கும்கூட தாக்குப்பிடித்துள்ளனர்.

தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம் சோழ, பாண்டிய குடும்ப வாரிசுகள் செய்த தவறு முதல் காரணம் என்றால் தம் கடமையிலிருந்து விலகிய கைக்கோளர், செங்குத்தர் மற்றும் சேனைத்தலைவர் ஆகியோர் செய்த துரோகம் இரண்டாவது காரணம்.

இன்றைய நிலையில் மூவேந்தர் மறைந்துவிட்டனர்!
அதனால் மேற்கண்ட மூவரும் தமிழர் வீழ்ச்சிக்கு முதற்காரணம்!
(இந்த குற்றவுணர்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் மூவரும் நாங்கள் போர்க்குடி, ஆண்ட சாதி என்று பெருமை பேசுவதேயில்லை போலும்!)

ஆக இவர்களே இனி தமிழர்தேசியத்தை முன்னெடுக்க வேண்டிய முதல் பொறுப்பாளிகள்!

செங்குந்த முதலியாரான பாரதிதாசன் தமிழர் விடுதலைக் கருத்தியலுக்கு குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்துள்ளார்.
இந்த தலைமுறை பேச்சோடு நிற்காமல் செயலில் இறங்கவேண்டும்.
தமிழர் சேனை ஒன்றைக் கட்டவேண்டியது இம்மூவரின் பொறுப்பு!

தொண்டை மற்றும் கொங்குநாடுகள் அந்நிய நிலத்திற்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பு அதிகம் கிடையாது என்று கொண்டு அப்பகுதி போர்க்குடிகளை மன்னித்து விடலாம்.

ஆனால் சோழ மற்றும் பாண்டிய நாடுகள் நில அமைப்பின்படி இரும்புக் கோட்டை போன்றவை.
அதிலும் பாண்டிய நாட்டு போர்க்குடிகள் கடமை தவறியதை மன்னிக்கவே முடியாது.

சோழ நாட்டு அகமுடையார்களையும் கடமை தவறிய இம்மூவருடன் நான்காவதாக சேர்க்கலாம்தான். ஆனால் அவர்கள் முழுமையான போர்க்குடிகள் கிடையாது.
அவர்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டுமே (அதாவது போலீஸ் போன்ற தொழில்) அதனால் மன்னிக்கலாம்.

நாடார்களில் சாணார் மட்டுமே போர்க்குடி இவர்களையும் ஐந்தாவதாக சேர்க்கலாம்தான்.
ஆனால் மண்மீட்பின் போது குமரி மற்றும் சென்னையை மீட்டுக் கொடுத்து தம் தவறுக்கு சிறிய பிராயச்சித்தம் செய்துள்ளனர்.

இதிலும் சேனைத்தலைவர் மிகச் சிறுபான்மை (தமிழக மக்கட்தொகையில் 0.5%) அவர்களைக் கூட மன்னித்துவிடலாம்.

[சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் வணிகத்திற்கு மாறிய பிறகும் தமது போர்த்தாகத்தைத் தணிக்க வழி தெரியாமல் வந்தேறிகளின் கீழ் படையில் இணையவும் மனமில்லாமல் தம்மை ஆறுதல் படுத்திக்கொள்ள மூத்த தமிழனான முருகனுக்கு போர்த் தொழில் செய்வதாக தம் மீது கற்பனைக் கதைகளை எழுதிக்கொண்டனர்.
  பிற்கால புராணங்களில் வரும் முருகனின் தளபதியான வீரபாகு என்கிற கற்பனையான கதாபாத்திரத்தைத் தத்தெடுத்துக் கொண்டனர்.
வீர+பாகு இரண்டுமே தமிழ்ச்சொல் இல்லை]

இனி வரும் காலங்களில் தமிழினத்தை அடிமைச் சங்கிலியிலிருந்து விடுவித்து மேற்கண்ட  மூன்று போர்க்குடிகளும் அதிலும் குறிப்பாக பாண்டிநாட்டு (தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள்) கைக்கோள மற்றும் செங்குந்தர் சாதிகள் தமது வரலாற்றுத் தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்!

-  ஆதிமூலப்பெருமாள் மூப்பனார் சேனைத்தலைவன்

(தொடர்புடைய பதிவு :- தமிழர் சேனை ஆளெடுப்பு - வேட்டொலி)

16.01.2021

No comments:

Post a Comment