தமிழன் ஸ்டிக்கர்ஸ்
இந்த படம் எடுக்கப்பட்டது பழைய கேரளா-தமிழ்நாடு எல்லையான பிராணூர் எனுமிடத்தில்.
(இதைத் தற்போதும் பார்டர் என்றே அழைக்கின்றனர்)
தமிழன் என்ற பெயரிடப்பட்டுள்ள இக்கடையின் உரிமையாளர் ஒரு இசுலாமியர் ஆவார்
(படத்தில் உட்கார்ந்திருப்பவர்).
சரி இந்த செங்கோட்டையை மலையாளிகளிடமிருந்து மீட்டு தமிழகத்துடன் இணைத்தது யார்?
ஒரு கிறித்தவரும் அவருடைய தளபதியான ஒரு இசுலாமியரும்தான்.
அன்று மார்சல் நேசமணியும் அப்துல் ரசாக்கும் போராடவில்லை என்றால் இன்று இப்பகுதிவரை கேரளா என்றாகியிருக்கும்.
அவர்கள் நினைத்திருந்தால் இந்த பகுதியை மீட்ட பிறகு மீட்கப்பட்ட மற்றொரு பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கியிருக்க முடியும்.
ஆனால் அவர்கள் இப்பகுதியை திருநெல்வேலிக்கே கொடுத்துவிட்டனர்.
இதை இந்நேரத்தில் பதிவிடுவது ஏனென்றால்,
எப்போதும் பொங்கல் விழாவினையொட்டி தெருவுக்கு தெரு விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.
கடந்த விநாயகர் சதுர்த்தியில் இந்து-முஸ்லீம் மதமோதல் நடந்த பிறகு இம்முறை அவ்விளையாட்டுகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் செங்கோட்டை முழுவதுமே பொங்கல் களையிழந்து காணப்பட்டது.
திருநெல்வேலி முழுக்க எத்தனையோ இந்து பண்டிகைகளும் இந்து மத ஊர்வலங்களும் ஆண்டு முழுவதும் நடக்கின்றன.
எப்போதும் எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை.
திருநெல்வேலியில் தமிழகத்திலேயே அதிகமான முஸ்லீம்கள் வாழும் கிராமமான பொட்டல்புதூர் தர்காவில் நடக்கும் கந்தூரி (அல்லது சந்தனக்கூடு) விழாவில் லட்சக்கணக்கான இந்து மற்றும் முஸ்லீம்கள் ஒன்றுகூடி ஒற்றுமையாக கொண்டாடுகின்றனர்.
இதுவரை எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை.
ஆனால் பத்து ரவுடிப்பயல்களை கூட்டி இந்து முன்னணி நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் மட்டும் எப்போதும் கலவரம் வரும் பதற்றம் இருக்கிறது.
இம்முறை செங்கோட்டையில் கலவரம் நடந்தேவிட்டது.
இனி செங்கோட்டை இந்து இளைஞர்கள் இசுலாமியரை நோக்கி விரல் நீட்டும் முன்,
கேரளாவின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எல்லைகடந்து தப்பி வந்து ஒற்றை ஆளாக தமிழகம் முழுவதும் சென்று ஆதரவு திரட்டி டெல்லி வரை சென்று பேசி செங்கோட்டை உட்பட 5 தாலுகாக்களை தமிழ்நாடு ஆக்கிய அப்துல் ரசாக்கை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அப்படியே மண்மீட்பு போராட்டத்தில் மலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 11 பேரில் பீர் முகமது என்கிற பெயரும் இருப்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
அப்படியே இந்த "தமிழன்" கடையையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.
திருந்த வேண்டியது அவர்கள் மட்டும் இல்லை.
இதே பார்டர் அருகில் "அரபி பாடசாலை" நிறுவி பிறமொழி வளர்க்கும் இசுலாமியரும்
பார்க்கவே அல்-கொய்தா தளபதி போல தாடி ஜிப்பாவுடன் அலையும் இசுலாமிய இளைஞர்களும்தான்.
20 ஜனவரி, பிற்பகல் 2:30 ·
தனியுரிமை: பொது