Tuesday, 18 November 2025
பட்டியல்சாதி ஐயங்கார்
Wednesday, 20 September 2017
இடது - வலது குழப்பம்
இடது - வலது குழப்பம்
இப்படித்தான் புலிகள் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் கம்யூனிச இடதுசாரி சிந்தனை சில மேதாவிகளால் புகுத்தப்பட்டது.
ஆன்டன் பாலசிங்கம் அதில் முக்கியமானவர்.
அப்போது புலிகளின் தலைவர் முகுந்தன்.
புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் 5 பேரில் பிரபாகரன் தவிர மற்றவர்கள் இடதுசாரி சிந்தனைகளால் கவரப்பட்டனர்.
நம் தலைவர் பிரபாகரனுக்கோ கம்யூனிசம் இடதுசாரி போன்றவை தொடக்கத்திலேயே பிடிக்கவில்லை.
இது தமிழக விடுதலைக் குழுக்களுடன் புலிகள் கைகோர்க்காமைக்கு முக்கிய காரணம்.
சிவப்பு சிந்தனை முற்றி ஒரு கட்டத்தில் ஆயுதமெல்லாம் தேவையில்லை.
மக்களை திரட்டி புரட்சி செய்வதே சரி என்று பலர் இடது பக்கம் சாய,
தலைவர் மட்டும் அதை ஒத்துக்கொள்ளாமல் ஆயுதவழியில் அரசு அமைத்து பிறகு அதில் சோசலிசத்தைக் கொண்டுவருவதே தீர்வு என்று தொடர்ந்து வாதிட்டார்.
தலைவருடன் நின்றது பேபி சுப்பிரமணியம் ஒருவர் மட்டுமே.
கடைசியில் உங்களுக்குதான் ஆயுதம் தேவையில்லையே என்னிடம் அதைக் கொடுத்துவிடுங்கள் என்று தலைவர் கேட்க ஆயுதங்கள் அவரிடம் ஒப்படைப்பட்டன.
இப்போது இடதுசாரி பிரிவு மேலும் இரண்டாக உடைந்தது.
ஆயதமும் தேவை என்று ஒரு பிரிவு.
ஆயுதம் தேவையில்லை என்ற பிரிவு.
தலைவர் யாரென வாக்கெடுப்பு மூலம் முடிவுசெய்ய வாக்கெடுப்பும் நடந்தது.
அதிலும் பிரபாகரன் இரண்டாம் இடத்தையே பிடித்தார்.
அப்போது பிரபாகரன் ஒரு துணிச்சலான முடிவு எடுத்தார்.
எவரும் எக்கேடும் கெட்டுப்போங்கள் என்று ஆயுதங்களுடன் பேபி சுப்பிரமணியத்தை மட்டும் அழைத்துக்கொண்டு தனியே பிரிந்துபோய் தன் வழியில் தனியாக இயங்கினார்.
நாளடைவில் இடதுசாரி பிரிவு, பத்திரிக்கை பரப்புரை என்று ஜனநாயக வழிமுறைகளைத் தொடங்கி
மக்கள் புரட்சி புடலங்காய் என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு கடைசியில் வேறுவழியின்றி ஆயுதத்தை தூக்கி புளோட் இயக்கமாகி அதிலும் வலது இடது என்று குழம்பி
பிரபாகரனுடனும் மோதி கடைசியில் அனைவரும் காணாமல் போனார்கள் அல்லது செத்து போனார்கள்.
பிரபாகரன் முதலில் டெலோவுடன் சேர்ந்தார் (அப்போது அதற்கு பெயர் இல்லை)
குட்டிமணி ஜெகன் சிறையில் சிங்களவரால் கொல்லப்பட்ட பிறகு அந்த இயக்கமும் வலுவிழந்தது.
பிரபாகரன் வழிதான் சரியென்று ஆன்டன் பாலசிங்கம் உட்பட பலரும் அவரின் தலைமையின் கீழ் வந்துசேர ஆரம்பித்தனர்.
தலைவரும் டெலோவிலிருந்து விலகிவிட்டார்.
இவ்வாறாக விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைவர் கைக்கு வந்தது.
கடைசியில் டெலோ உட்பட அனைத்து குழுக்களும் இந்தியாவிற்கு ஆதரவாக மாற
தனியாக புலிகள் மட்டுமே உறுதியாக நின்றனர்.
அத்தனை போட்டிக் குழுக்களுடன் கூட்டணி அமைத்து இந்தியாவின் படை சிங்கள தளபதிகளையும் சேர்த்துக்கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்தது.
அனைத்துவகை கனரக தளவாடங்களுடன் ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்த அந்த பெரிய கூட்டணியை
வெறும் 2000 புலிகளையும் அன்று ஆயுதச் சந்தையில் புதிதாக அறிமுகமாயிருந்த அதிநவீன துப்பாக்கியையும் மட்டுமே வைத்துக்கொண்டு ஒற்றை ஆளாக எதிர்த்து களமாடி பிரபாகரன் தோற்றொடச் செய்தார்.
அதோடு டெலோவையும் இல்லாதொழித்தார்.
அனைத்து குழுக்களும் தலைமை அழிந்தபின் புலிகளிடம் வந்து சேர புலிகளின் ராணுவ எழுச்சி கம்யூனிசம் நூறாண்டுக்குப் பிறகு சாதிக்க இருந்ததை 20 ஆண்டுகளில் சாதித்தது.
தனி அரசாங்கம், முப்படை, உலகிலேயே பணக்கார ஆயுதக்குழு பட்டியலில் முதல் ஐந்து இடம், பாமரர் வரை அரசியல் விழிப்புணர்வு, மக்களுக்குக்கான ஆட்சி என புலிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து நின்றனர்.
வலது இடது குழப்பம் இருந்ததால் பத்தாண்டுகள் பின்னடைவு அடைந்தாலும் பிரபாகரன் எனும் ஒரு மனிதனின் உறுதி இதைச் சாதித்தது.
உலக கார்ப்பரேட் முதலாளிகள் மண்ணைச் சுரண்ட பெரும் தடையாக புலிகள் இருந்தனர்.
கடைசியில் கார்ப்பரேட்களுக்கு பணியாத சதாம் உசேன், கடாபி போல பிரபாகரன் உலக வல்லாதிக்கங்களால் ஒன்றுசேர்ந்து பெரும் முயற்சிக்குப் பிறகு வீழ்த்தப்பட்டார்.
புலிகள் வீழ ஒரே ஒரு காரணம் அவர்கள் தமிழ்த் தாய்நிலத்தின் ஒரு பகுதியான தமிழகத்தை அந்நிய நாடாகக் கருதியதே ஆகும்.
தேசியம் என்பது முழு தேசிய இனத்திற்கும் சேர்த்துதான் என்பதை புலிகள் உணராததே பெரிய தவறாகிவிட்டது.
ஈழத்தைப் போலவ 1980களில் இடதுசாரி தமிழகப் போராளிகளும், தமிழரசன் பொன்பரப்பி வங்கிக் கொள்ளையின்போது பொதுமக்கள் போல வேடமிட்ட உளவுத்துறையால் அடித்துக்கொல்லப்பட பெரும் பின்னடைவை சந்தித்தனர்.
தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) இரண்டாக உடைந்து அதில் இடது சுப.இளவரசன் தலைமையில் தனிக் குழு உருவானது.
மாறன் தலைமையிலான வலதுசாரி பிரிவு ஆயுதவழியில் வளர்ந்து நின்ற வீரப்பனாருடன் சேர்ந்து ராஜ்குமார் கடத்தல் உட்பட சில விடயங்களை சாதித்தனர்.
தமிழ்நாடு மீட்சிப் படைகள் (TNRT) புலிகளுடன் இணைப்பை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.
சுப.முத்துக்குமார் அதைச் செய்தார்.
அவரும் பிரபாகரனும் வீரப்பனும் மாறனும் இணைந்து கூட்டணி அமைக்கும் சூழல் 2000களில் வந்தது.
ஆனால் கொள்கை முரண்பாடுகளால் அது நடக்கவில்லை.
சுப.முத்துக்குமார் காவல்துறையில் பிடிபட்டார்.
வீரப்பனாரை 32 ஆண்டுகளுக்குப் பிறகு படாத பாடு பட்டு வீழ்த்தினார்கள்.
கடைசியாகப் பிரபாகரன் வீழ்த்தப்பட்டார்.
இப்படியாக தமிழினத்தின் ராணுவ எழுச்சி முற்றாக ஒழிக்கப்பட்டது.
தற்போது எந்த தடையுமின்றி தமிழர் மண் மீது முழுவீச்சில் சுரண்டல் நடக்கிறது.
நல்லவேளையாக சுப.முத்துக்குமார் வெளியேவந்து மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்படும் முன் நாம்தமிழரை ஆரம்பித்து சீமானிடம் கொடுத்துவிட்டார்.
இல்லையென்றால் சீமான் இடத்தில் வைகோ இருந்திருப்பார்.
சுரண்டலை எதிர்க்கும் இனம்சார்ந்த அந்த ஒரு கட்சியும் இல்லாது போயிருக்கும்.
அதாவது ஒரு தேசிய எழுச்சியை வலது இடது நட்டநடு என்று பிரிப்பது பெரும் பின்னடைவைத் தரும் என்பது இதிலிருந்து புரிகிறது.
நம் இனத்தில் என்றோ எவனோ எங்கேயோ தூக்கிய ஆயுதம்தான் இன்றுவரை நம்மை பல்வேறு வடிவங்களில் காப்பாற்றி வந்துள்ளது.
மக்களை அரசியல் மயமாக்குவோம்.
கிராமம் கிராமமாக பேசுவோம்.
மக்களைத் திரட்டி நாடுமுழுக்க ஒரே நேரத்தில் புரட்சி செய்வோம் என்பதெல்லாம்
கல்யாணத்திற்கு எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு தாலிகட்டும் அன்று பெண்தேடுவோம் என்பதுபோல முட்டாள்த்தனமானது.
தனிநாடுக்கான அத்தனை அடிப்படையும் நம்மிடம் உள்ளது.
தற்போது தேவை அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஆயுதவலு மட்டுமே.
உணவுக்கே வழியில்லாத நிலை வந்தால்தான் மக்கள் புரட்சி வெடிக்கும்.
அதுவரைக்கும் வல்லாதிக்கம் சுரண்டிக்கொள்ள அனுமதிப்பதே மேற்கண்ட மக்கட்புரட்சி சிந்தனை.
நாம் ஆயுதம் தூக்கவேண்டும்.
மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்கவேண்டும்.
மக்கள் தானாகவே நம்மைப் பற்றி அறிந்துகொள்வார்கள்.
மக்கள் ஆதரவுடன் மேலும் ஆயுதம் வாங்கி அதன்மூலம் பெற்ற ராணுவ வலிமையால் நமது தாய்நிலம் முழுவதையும் கைப்பற்றி தனிநாடு அமைக்கவேண்டும்.
இதுதான் விடுதலைக்கான ஒரே வழி. புலிகளின் வழி.
அதன்பிறகுதான் நாம் எந்த கொள்கையை பின்பற்றுவது என்று முடிவெடுக்கவேண்டும்.
இப்போதே குழம்பக்கூடாது.
குழப்புவோரை ஆதரிக்கவும் கூடாது.
Monday, 17 July 2017
எது தீர்வு தரும்?
எது தீர்வு தரும்?
தமிழக பொதுமக்களே!
ஓட்டுப்போட்டார்கள் ஓட்டுப்போட்டார்கள் என்று மக்களையே குற்றம் சாட்டாதீர்கள்.
இந்தியாவில் எது நேர்மையாக நடக்கிறது?!
நீங்கள் தேர்தல் முடிவுகளை எதைவைத்து நம்புகிறீர்கள்?!
உலகில் முன்னேறிய நாடுகள் அனைத்தும் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்தும்போது
50% பள்ளிகளுக்கு கழிவறை வசதி கூட செய்யமுடியாத வறுமைநாடு ஏன் இயந்திரத்தை வைத்துள்ளது?
நீங்கள் போடும் ஓட்டு அப்படியே பதிவாவதில்லை.
பாஜக வுக்கு தமிழகத்தில் ஆதரவில்லை என்பது கண்கூடு.
அதனால் அது தேர்தலில் வென்றதாகக் காட்டினால் குட்டு உடைந்துவிடும்.
மக்கள் மனநிலையை ஆராய்ந்து அதைப்பொறுத்து குறிப்பிட்ட சதவீதம் ஓட்டை மாற்றுவார்கள்.
நீங்கள் எப்படி மாற்றி வாக்களித்தாலும் 90% மக்கள் ஒரு கட்சிக்கு ஆதரவான மனநிலைக்கு வரும்வரை அந்த கட்சிக்கு 30% வாக்கு கிடைக்காது.
எனவே தேர்தலோ சட்டமோ போராட்டமோ எதுவும் உங்களுக்கு உதவாது.
கதிராமங்கலம் மக்களே!
நீங்கள் போராட்டம் என்று நடத்துவதெல்லாம் உங்களுக்கேதான் நஸ்டமாக முடியும்
அது கடையடைப்போ, மறியலோ, வழக்கோ, உண்ணாவிரதமோ எதுவானாலும் சரி.
பொதுமக்களின் அன்றாட வாழாக்கைதான் பாதிக்கப்படும்.
நீங்கள் அமைதிவழியில் போராடினாலும் தீவிரவாதி, நக்சலைட் என்றுதான் முத்திரை குத்தப்படுவீர்கள்.
ஒரு ஆயுதப் போராளியை எப்படி நடத்துவார்களோ அப்படிதான் உங்களை நடத்துவார்கள்.
இந்த அரசு வேற்றின அரசு என்பதுடன் இந்த அரசு மக்களுக்கான அரசும் கிடையாது!
நீங்கள் திருப்பியடிக்காத வரை யாரும் உங்களை புழு அளவு கூட மதிக்கமாட்டார்கள்.
நீங்கள் கையை ஓங்காதவரை உங்களுக்கு அடி விழத்தான் செய்யும்
திருப்பி அடியுங்கள்!
கதிராமங்கலம் இளைஞர்களே சட்டத்தைக் கையிலெடுங்கள்!
வன்முறையைக் தொடங்குங்கள்!
வன்முறைக்கு பதில் வன்முறைதான்!
வன்முறை மட்டுமே புரட்சியாகாது
ஆனால் வன்முறையின்றி புரட்சி இல்லை!
சோமாலியா போல பஞ்சம் பட்டினி வந்தபிறகு துப்பாக்கி தூக்கி எந்த பலனும் இல்லை.
இப்போதே ஆயுதம் தூக்குங்கள்!
அரசியல் கட்சிகள் உங்களை கூட்டமாகக் கூட்டிவைத்து அரசியல்தான் செய்வார்கள்!
அவர்களால் உங்களுக்கு எந்த தீர்வையும் வழங்கமுடியாது!
அறவழி அறவழி என்று ஆட்டுமந்தைகளாக அடிவாங்கி ஓடாதீர்கள்!
மனநலம் பாதிக்கப்பட்ட காவல்துறை குண்டர்களிடம் மிதிபட்டு சாகாதீர்கள்!
புலிகள் வழியில் போராடுங்கள்!
மக்கள் வலிமைக்கு முன்பு காவல்துறையும் ராணுவமும் முடிக்கு சமமானது என்று உலகிற்கு புரியவையுங்கள்!
தமிழகத்தைக் காப்பாற்றுங்கள் கதிராமங்கல இளைஞர்களே!
தமிழக மக்களின் உணவையும் தண்ணீரையும் தட்டிப்பறிக்க விடாதீர்கள்!
வருங்கால தமிழ் குழந்தைகள் தாய்ப்பாலோடு எண்ணெயை உறிஞ்சும் நிலையை இன்றே தடுத்து நிறுத்துங்கள்!
புரட்சிக்கான முதல் அடியை எடுத்துவையுங்கள்!
தமிழகம் உங்களைக் கைவிட்டுவிடாது!
நீங்கள் இறந்தாலும் தமிழர்களின் குலதெய்வம் ஆவீர்கள்!
முடிவெடுங்கள் இன்றே!
Sunday, 4 October 2015
கோழையே சுடு
கோழையே சுடு
----------------------------
1967 அக்டோபர் 8, மாலை மூன்றரை மணிக்கு பொலிவிய சேனையால் சே தமது 22 தோழர்களுடன் சுற்றிவளைக்கப்படுகிறார்.
சே காலில் குண்டு பாய்ந்திருந்தது சகதோழர் தூக்கிக்கொண்டு ஓடமுயன்றார் ஆனால் முடியவில்லை.
துப்பாக்கியை எடுக்கமுயன்ற சேவின் கை சுடப்பட்டது. குவப்ராடா டெல் யூரோ என்ற ஆற்றின்கரையில் இது நடந்தது
(இப்போது அது நினைவிடம்).
கை கால்கள் கட்டப்பட்டு தூக்கிச்செல்லப்படுகிறார் சே.
ஒரு பள்ளிக்கூடத்தின் தனி அறையில் அவர் கிடத்தப்பட்டார்.
சேவை என்ன செய்வது விசாரணைக்கு உட்படுத்தினால் உலகம் உற்றுப்பார்க்கும்.
பேசாமல் கொன்றுவிடலாம் மோதலில் இறந்ததாக அறிவித்துவிடலாம் கூடியிருந்த சி.ஐ.ஏ உளவாளிகளான கியூப நாட்டு இனத்துரோகிகள், பொலிவிய சேனைத் தளபதிகள், அமெரிக்க-பொலிவிய அரசை கலந்தாலோசித்து முடிவுக்கு வந்தனர்.
1967 செப்டம்பர் 9, காலை பத்துமணி சார்ஜண்ட்.டெர்ரன் என்பவரிடம் சேவை கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது.
அந்த அழுக்கான அறையில் அவர் நுழைந்தார்.
கிழிந்த அழுக்கான ஆடைகள், பல நாள் பட்டினியால் எலும்பும் தோலுமாக, காலில் பிய்ந்துபோன சப்பாத்துகளை அணிந்த எழக்கூட முடியாமல் கிடக்கிறாரே இவரா உலகவல்லரசுகள் நடுங்கும் சே?!
இவரா அர்ஜண்டினாவில் மருத்துவர் பட்டம் பெற்ற செல்வச்சீமான்?!
இவரா வெறும் 300போராளிகளை வைத்துக்கொண்டு விமானம் மற்றும் தாங்கி(tank)களுடன் நின்ற 7,000 படையினரைத் தோற்கடித்து ஹவானாவைக் கைப்பற்றிய மாவீரர்?!
இவரா க்யூபாவின் ரூபாய் நோட்டுகளில் கையெழுத்துப் போட்ட நிதித்தலைவர்?!
இவரா ஐ.நா சபையில் உரையாற்றிய மனிதர்?!
இவர்தானா சொற்பமான போராளிகளுடன் பதினோரு மாதங்கள் பொலிவியாவைக் கதறவைத்த கரந்தடிப் போராளி?!
நம்பமுடியவில்லை.
சே அந்தநிலையிலும் எழ முயன்றார்.
டெர்ரன் நடுங்கிப்போய் திரும்பிவிட்டார்.
பிறகு மேலாளர்களின் கண்டிப்பான உத்தரவுக்கு பணிந்து நிலைமறக்கும் அளவு குடித்துவிட்டு மறுபடி போனார்.
துப்பாக்கியை நீட்டினார்.
"கோழையே சுடு, நீ சுடுவது தனிமனிதனைத்தான்"
சேவின் குரல் ஒலித்த மறுநொடி கண்களை இறுக்க மூடி முகத்தை வேறுபக்கம் திருப்பியவாறு படபடவென்று சுட்டுவிட்டான்.
ஆம் சே மரணத்தை வென்றுவிட்டார்.
மாந்த உடலில் அடைபட்டிருந்த சே உலகம் முழுவதும் நிறைந்துவிட்டார்.
Saturday, 29 August 2015
வியட்நாம் பாண்டியன்
வியட்நாம் பாண்டியன்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான் !
அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன்.
அவனுடைய பெயர் ஸ்ரீமாறன்.
தமிழில் இதை திருமாறன் என்று
சொல்லலாம் .
வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது .
இந்தக் கல்வெட்டில் ஆட்சி , ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை .
கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது.
ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
வியட்னாமில் வோ- சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION ) இது செதுக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை ) கல்வெட்டு குறிப்பிடுகிறது .
பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன .
ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன.
சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன .
கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன.
கல்வெட்டின் சில வரிகள் :-
. . . . . .. . ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . . . . . . . . . . .
ஸ்ரீ மாற லோ. . . . . ன. . . .. . . . குலதந்தனேன
க்ராபதிம் ஸ்வகன. . .. .. ச . . . . . . . .. .. ..
இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும் , அசையா சொத்து (ஸ்தாவர , ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான்.
எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான் .
இது வீரனுக்கு தெரியட்டும் . . .. . . .. . . . . .. . .என்று பாதியில் முடிகிறது கல்வெட்டு.
இதில் முக்கியமான சொற்கள் “ஸ்ரீமாற ராஜகுல ” என்பதாகும் .
இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது .
ஆனால் வியட்னாம் , லாவோஸ் , கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது .
திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN ) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY ) சீனாவை ஆண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘ சம்பா ’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர் .
சம்பா (CHAMPA ) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும் .
மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU ) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN ) என்றும் எழுதிவைத்துள்ளனர் .
இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO ) புதல்வன் என்றும் தெரிகிறது .
தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர் .
கி .பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது .
ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது .
ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி ’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை .
எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN ) என்று முடிவதால் இதை ‘ வர்மன்” என்று முடிவுசெய்துள்ளனர் .
ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘ வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது .
இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் "ஸ்ரீமாறன்", "வர்மன்" என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன .
இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் "மூலவர்மன்" என்ற மன்னனின் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் 800 க்கும் அதிகமான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய ’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.
ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு ) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன :-
(1 ) இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன் .
அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர் .
இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம் .
(2 ) வேள்விக்குடி செப்பேடும் திருமாறன் என்ற மன்னனைக் குறிப்பிடுகிறது .
அதே செப்பேட்டில் மாறவர்மன் (அவனி சூளாமணி ),
ஸ்ரீமாறவர்மன்(அரிகேசரி )
ஸ்ரீ மாறன்(ராஜசிம்மன்) என்ற பெயர்களையும் காணலாம் .
பாண்டிய வம்ச மன்னர்கள் மாறன், சடையன் என்ற பெயர்களை மாறி மாறிப் பயன்படுத்துவர்.
(3 ) தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க காலமன்னன் "நிலந்தரு திருவில் பாண்டியன்" என்று பனம்பாரனாரின் பாயிரம் கூறுகிறது .
பல நாடுகளை வென்று தந்ததால் “நிலந்தரு” “ திரு பாண்டியன்” (ஸ்ரீமாறன்) என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் .
(4 ) சங்க இலக்கியப் பாடல்களிலும் அடிக்குறிப்பிலும் குறைந்தது பத்துமுறை ‘ மாறன்’ என்ற மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இடைச்சங்ககால மன்னன் "முடித்திருமாறன்" .
நற்றிணை 105 , 228 ஆகிய 2 பாடல்களை இயற்றியவன் .
(5 ) தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன .
அகத்தியர் “ கடலைக் குடித்த ” கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன .
முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “ கடலைக் குடித்தார் ” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர் .
வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “ குல குரு ” என்றும் கூறுகிறது .
(6 ) இந்திய இலக்கியகர்த்தாக்களின் முக்கிய இடத்தை வகிக்கும் மாபெரும் வடமொழிக் கவிஞன் காளிதாசன் ,
பாண்டியர்களையும் அகத்தியரையும் தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான் (ரகு வம்சம் 6–61 )
(7 ) புறநானூற்றுப் பாடல் (புறம் 182 ) பாடிய ஒரு பாண்டிய மன்னன் பெயர் “ கடலுள் மாய்ந்த” இளம்பெருவழுதி .
இவன் வெளிநாடு செல்லும்போதோ , வெளிநாடுகளை வென்று திரும்பும் போதோ கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்.
(8 ) டாலமி , பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி .பி . முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர் .
(9 ) தென் இந்தியாவை கி .மு இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது .
(10 ) தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன .
(11 ) ‘ மிலிந்த பன்ன ’ என்ற கி . மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம் , குஜராத் , சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது .
(12 ) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது.
தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.
மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன .
அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன .
ரோம் (இத்தாலி ) வரை சென்ற தமிழனுக்கு, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வியட்னாமுக்குச் செல்வது எளிது தானே !
Reference :
(1 ) R. C . MAJUMDAR - CHAMPA : HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI –
REPRINT 1985 .
(2 ) SANGAM LITERATURE –
ETTUTHOKAI & PATHUPPATTU
(3 ) பாண்டியர் செபேடுகள் பத்து – PUBLISHED BY THE TAMIL
VARALATRU KAZHAGAM ,
MADRAS 1967.
நன்றி : லண்டன் சத் சங்கம் செய்தி மடல் .
- ச . சுவாமிநாதன்
www.eegarai.net/t108461-topic