Tuesday, 18 November 2025

பட்டியல்சாதி ஐயங்கார்

பட்டியல்சாதி ஐயங்கார்

 அந்த ஐயங்காரின் பெயர் மானாமதுரை கிருஷ்ணசாமி. பெரிய வக்கீல். 
காந்தியின் சீடர்.  
ராஜாஜியின் நண்பர். 
காமராஜருக்கு ஆலோசகர்.  
மதுரை வைத்திய நாத ஐய்யருடன் திருக்குலத்தார் மீனாட்சி ஆலய பிரவேசம் செய்ய உடன் நின்றவர். 
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கோயில்களை சர்.சி.பி ராமாசமி ஐயர் எல்லோருக்கும் திறந்து விட்ட பின், தன் ஊரில் இருந்து திருக்குலத்தாரை தன் சொந்த செலவில் அங்கு சென்று ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தவர். 
மானாமதுரையில் ஹோட்டல்களில் எல்லோரும் சென்று சாப்பிட போராடி வழி செய்தவர். 
சுதந்திர இந்தியாவில், முதல் தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக (MLA) இருந்தவர். 
தன்னிடம் கொடுக்கப்பட்ட காரை விற்று அரிஜன சேவைக்கு பயன் படுத்தியவர். 
கோயில் தர்ம கர்த்தாக்கள் நியமனத்தில் திருக்குலத்தாரையும் சேர்க்க பாடுபட்டவர். அவர்களுக்கு அர்ச்சகர் பதவி கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர். 
அரசியலில் பணம் ஏதும் சம்பாதிக்காதவர். அதனால் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வழியில்லாமல் இருந்தவர். 
 அவரது மகன் ஒரு அதிகாரியாகி அவரைப் பார்க்க வருகிறார்.
இவர்  திருக்குலத்தில் பிறந்தவர். 
இவரை ஐயங்கார் சிறு வயதிலேயே தன்வீட்டில் சேர்த்துக் கொண்டு, ஊரைப் பகைத்துக் கொண்டு, பள்ளிக் கூடத்தில் சேர்த்து, ராஜாஜியின் உதவியுடன் கல்லூரியில் சேர்த்து ஆளாக்கி மத்திய அரசில் பெரிய பதவியில் உட்கார செய்தார். 
அவரின் திருமணத்தையும் தானே முன் நின்று நடத்தி வைத்தார். 
அந்த தத்து புத்திரன் தான் தற்போது பெரிய அதிகாரி. அவர்  பெயர் சம்பந்தம். 
திரு் சம்பந்தம் தன்னை ஆளாக்கிய தந்தையைப் பற்றி எழுதிய பழைய நூலை வைத்து கன்யூட்ராஜ் என்பவர் எழுதிய புனைவிலக்கியம் (நாவல்) தான் 'அரிஜன ஐங்கார்" எனும் படைப்பு. 
இவரைப் போன்றோருக்கு சிலை ஒன்று அவர் ஊரில் கூட இல்லை!
அவர் போட்டோவை இணையத்தில் தேடினேன். 
இல்லை. 

பதிவர்:- Ganesh Lakshminarayanan

No comments:

Post a Comment