Friday, 28 February 2025

அப்டா

அப்டா 

  இருக்கையில் அமர்ந்து மேசையில் பின் அடித்து போடப்பட்டு இருந்த துண்டுசீட்டு கட்டை எடுத்து எழுத்து கூட்டி படிக்கத் தொடங்குகிறார் அப்டா!
 
"சரி அரசியல் ஆலோசகர் செட்யூல் போட்டு தந்த படி போய்ட்ருக்கா பாப்போம் ..!
 இருந்தாலும் இவனுக்கு அழுற காசு அதிகம்தான்!
ம்...!
காளியம்மாளை விலக வைச்சு சீமான் இமேஜை டேமேஜ் பண்ணுக!
அத சரியா பண்ணியாச்சு!
என்ன...! காளி கொஞ்சம் அவனை தாக்கி பேசிருக்கலாம்!
 இடைல இந்த கொளத்தூரான் பெட்ரோல் குண்டு வீச பாத்ததை நல்லவேளை தடுத்துட்டோம்!
 இல்லைனா மறுபடி சீமான் மேல கரிசனம் வந்திருக்கும்!
 இழுவையப் போட்டா முழுசாப் போட்டுட்டு சொருவிக்க வேண்டியதானே?! 
 அரபோதைல நாய்ங்க எவளும் கிடைக்காத எரிச்சல்ல குண்டு போடுறேன் குசு போடுறேன்னு பப்ளிக்ல சலம்பிக்கிட்டு...!

அடுத்து என்ன...?!
ஓ..! பெங்களூர் அயிட்டடத்தை அடுத்த ரவுன்ட் கூட்டிட்டு வரணுமா?!
 பழைய ப்ளான்! எனக்கே போரடிக்குது! சரி இந்த தடவ ஸ்லீவ்லெஸ் போட்டுட்டு வரச் சொல்லுவோம்!

 இத எப்டி செய்யணுமாம்...?!
ம்....! 
 சீமான் வீட்டுக்கு முன் பெரிய சம்மன் ஒட்டணும்! 
அப்பதான் சீமான் பொம்பள பொறுக்கினு எல்லாரும் நினைப்பாங்க!
சரி இத பண்ணிரலாம்!

சீமான் வீட்ல துப்பாக்கி வச்சிருக்குற ஆள் இருக்கான்.
அவன வம்புக்கு இழுத்து தீவிரவாத முத்திரை குத்தணும் னு போட்ருக்கு!
 சரி காக்கி நாய்ங்களை ஏவி விடுவோம்!"

போனை எடுக்கிறார்!
"டேய்! உதவாக்கர நாய்ங்களா! போன் எடுக்க ஏன்டா இவ்வளவு நேரம்?"
 "கன்னுக்குட்டிக்கு குண்டி கழுவிவிட்டுட்டு இருந்தோம்"
"நல்லா கழுவுனியா?! படியளக்குற சாமிடா அவன்"
 
அப்டா குரலைத் தாழ்த்தி ரகசியமாக திட்டத்தை சொல்கிறார்! 

சிறிது நேரம் கழித்து....

 "யோவ் என்னைய்யா ஆச்சு! ப்ளான் சக்சஸ்தானே!?"

"ஆமாங்கைய்யா! சம்மனை வீட்ல உள்ளவங்க கிட்ட குடுக்காம வாசல்ல ஒட்டிட்டோம்! எதிர்பாத்த படி அத கிழிச்சிட்டாங்க! ஒடனே நாங்க போய் அந்த மிலிட்ரிகாரனை நாலு காட்டு காட்டுனோம்! 
 ஆனா அவன் எதிர்த்து பேசவோ அடிக்கவோ இல்ல!"

"கொல்றாங்க கொல்றாங்க னு கத்தல?!"

"இல்லையா அவன் நாடார் மாதிரி தெரியுது"

"அவன்ட்ட ஜாதி வேற கேட்டீங்களா?! அட முட்டாபீசுகளா! அப்பறம் என்னாச்சு"

 "நாங்களே அவன் துப்பாக்கிய புடுங்கி அவனை தீவிரவாதி மாதிரி அரெஸ்ட் பண்ணி அவன் மேல ஆயுத கேஸ் போட்டுட்டோம்! கோவமான சீமானும் ஆஜராக முடியாதுனு பேட்டி குடுத்துட்டாப்ல!"
 
 "சூப்பர்டா! உனக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு எலும்புத் துண்டு துப்பி வச்சிருக்கேன் வந்து கவ்விட்டு போ"

 "அப்டா ஐயா! ஒரு சின்ன மிஸ்டேக் ஆகிப்போச்சு!"

"என்னையா?! உன் அராஜகத்தை நிறைய பொதுமக்கள் பாத்துட்டாங்களா? பரவால்ல விடுய்யா! பாத்துக்கலாம்"

"ஒட்டினது வளசரவாக்கம் போலீஸ்! ரெண்டாவது போனது நீ்லாங்கரை போலிஸ்! அவசரத்துல யூனிபாம் வேற போடல! அந்த ஆளு வச்சிருந்தது லைசன்ஸ் உள்ள இலகு ரக துப்பாக்கியாம்!"

 "என்னைய்யா சொதப்பிட்டியே! சரி விடு எவனுக்கு தெரியப்போவுது?! சமாளிச்சரலாம். உனக்கு ஒரு எலும்புத் துண்டு கட்" 

  "அப்பறம் ஐயா ஒரு சின்ன பிரச்சனை! உள்ள ஏற்கனவே மீடியா இருந்தாங்க எல்லாத்தயும் துல்லியமா வீடியோ எடுத்துட்டாங்க!"
 
"யோவ்....! என்னைய்யா சொல்ற?"

"ஆமாங்கைய்யா நாங்க மொதல்ல கவனிக்கல அப்பறமா கவனிச்சோம்! அவங்கட்ட வீடியோ பறிமுதல் பண்ண மறந்துட்டோம்!"

 "தேவுடாஆஆஆஆஆஆ......! என் பொருளை வச்சு என்னையே போட்டுட்டானே சீமான்!"
 

Monday, 24 February 2025

சீனர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது

சீனர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது!
  சீனாவை படையெடுத்து வென்று பிறகு குடியேறி 270 ஆண்டுகளாக அடக்கி ஆண்டு வந்த சிறுபான்மை வந்தேறி இனமான மஞ்சூ மக்களை 1911 இல் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்து தன் தாய்நிலத்தை விடுவித்தனர் சீனர்!
 இந்த மஞ்சூ வந்தேறிகளை 1850 லேயே தாய்ப்பிங் கிளர்ச்சியின் போது முக்கால்வாசி கொன்றுவிட்டனர். 
 ஆனால் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி கிளர்ச்சியை அடக்கிய மஞ்சூக்கள் அடுத்த இரண்டு கிளர்ச்சிகளையும் ஆரம்பத்திலேயே அடக்கினர்.
 ஆனால் சன் யாட் சன் தலைமையிலான கிளர்ச்சியின் போது மீண்டும் மிகப்பெரிய இனப்படுகொலையை செய்து மஞ்சூ ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர் சீனர்.
  இன்று மன்ச்சூ இனத்தின் தாய்நிலமான மஞ்சூரியாவை முழுமையாகவும் தனது பிடியில் வைத்துள்ளனர் சீனர்! 
 
 

Tuesday, 18 February 2025

1920 இல் இந்தியெதிர்ப்பு

1920 இல் இந்தியெதிர்ப்பு

 இந்தியை முதலில் எதிர்த்து போராடியவர் ஈழத்தமிழரான ஈழத்தடிகள் என்று அறிவோம்! 
 அதன்பிறகு அவருடன் இணைந்து சோமசுந்தர பாரதியார் மற்றும் மறைமலையடிகள் ஆகியோர் இணைந்து போராடி இந்தியெதிர்ப்பு போரை நடத்தி வெற்றி கண்டனர்.
 அதில் கடைசியாக வந்து ஒட்டிக்கொண்டது தான் திராவிடம்! 
 ஆனால் இவர்களுக்கு முன்பே (ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் நடுவே இருக்கும் பாம்பன் இல் வாழ்ந்த) பாம்பன் சுவாமிகள் 1899 ஆம் ஆண்டிலிருந்தே இந்தி திணிக்கப்படும் என்று உணர்ந்து அதை எதிர்த்து பேசிவந்துள்ளார்.
 சைவ அடியாரான இவர் எழுதிய நூல் 1920 இல் அச்சேறிய பிரதி உள்ளது.
 "இந்தி முதலிய வேறு பாடைகளை 
இந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும்
வடநாடரது சுயநலத்தினை ஆதரித்தல் தமிழர்
கடன்மை யன்று"
-திருப்பா, நூன்முகம், பக்.17

 அதாவது தமிழகத்தில் இந்தி திணிக்கப்படும் அதை தமிழர்கள் ஆதரித்தல் கூடாது தெளிவாகவே கூறியுள்ளார்.

நன்றி: கதிர் நிலவன்

Monday, 17 February 2025

தமிழை ஒழிக்கும் மும்மொழி கொள்கை

 தமிழை ஒழிக்கும் மும்மொழி கொள்கை 

 மத்திய அரசு என்ன மாதிரியான கல்விக் கொள்கையைக் கொண்டுவர நினைக்கிறது என்பதை ஏற்கனவே மத்திய அரசு சார்பில்  தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைக் கவனித்தால் விளங்கும்.
 தமிழகத்தில் 49 கேந்திரிய பள்ளிகள் இயங்குகின்றன.
 இதில் 109 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்களும், 0 தமிழ் ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.
 
 ஆம்! இந்த கேந்திரிய பள்ளிகளில் தமிழ் பாடமோ, தமிழ் ஆசிரியர்களோ கிடையாது!
சமஸ்கிருதம் கட்டாயம்!
 
 28.01.2021 தேதியின்படி பெறப்பட்ட தகவலில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை இந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாய மொழி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழி பாடம் கட்டாயம் இல்லை என்றும், தமிழ்நாட்டில் 49 பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாய மொழியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக தமிழ் மொழியை கொண்டு கற்பிக்கும் ஒரு பள்ளி கூட இல்லை எனவும், சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழை தேர்வு செய்ய முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 தமிழ் மொழியே இல்லாத பள்ளிக்கு எதற்கு தமிழ் ஆசிரியர்கள் என்பது போன்று, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே கிடையாது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 109 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என தகவல் இடம்பெற்றுள்ளது.

 (இதுபற்றி திமுக எம்.எல்.ஏ எழிலன் நாகநாதன் ஆதரத்துடன் பேசியுள்ளார்.

 திமுக-வின் ஐடிவிங்க் இதற்கான தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது)

 மும்மொழி என்பது மூன்றாவதாக ஏதாவது ஒரு இந்திய மொழி என்கிற போர்வையில் இந்தியைத் திணிக்கும் நோக்கம் கொண்டது!
 
 2020 இல் இதைக் கட்டாயமாக்கிய போது திமுக போதுமான எதிர்ப்பையும் காட்டவில்லை!
 அதன் பிறகும் சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை!
 இப்போது கல்வி நிதியை தரமுடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய பிறகு தூங்கிக் கொண்டிருந்த திமுக விழித்துக்கொண்டு அறிக்கை போர் நடத்துகிறது!
 

Sunday, 16 February 2025

10ரூ வரி வாங்கி 2ரூ ஒதுக்கும் ஹிந்தியா

வரிகள் மூலம் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு கொடுத்தது ரூ.8.04 லட்சம் கோடி ஒன்றிய அரசு திருப்பி தந்தது ரூ.1.58 லட்சம் கோடி: புள்ளி விவரத்தில் அதிர்ச்சித் தகவல்

12:16 am Feb 12, 2024 |

புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து கடந்த 2018-19 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ரூ.4,03,982 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர, தனிநபர், நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூலாக தமிழ்நாட்டில் இருந்து ரூ.4,00,672 கோடி கிடைத்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு ரூ.8.04 லட்சம் கோடி கிடைத்துள்ளது. ஆனால், இதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வரிப்பகிர்வாக ரூ.1,58,145.62 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து மாநிலங்களின் வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால், அனைத்துத் திட்டங்களுக்கும் நிதித் தேவைக்கு ஒன்றிய அரசிடம் கையேந்த வேண்டிய நிலை மாநில அரசுகளுக்கு ஏற்பட்டு விட்டது. ஜிஎஸ்டியால் வரி வருவாய் மொத்தமாக முடங்கி விட்டபோதிலும், ஒன்றிய அரசு தர வேண்டிய வரிப்பகிர்வு போதுமானதாக இல்லை என மாநிலங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதிலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி தருவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு கடந்த 2018-19 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை மாநிலங்கள் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வசூல், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூல் மற்றும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளித்த வரிப்பகிர்வு விவரங்கள் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி மேற்கண்ட 2018-19 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ரூ.4,03,982.61 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர, தனிநபர், நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூலாக தமிழ்நாட்டில் இருந்து ரூ.4,00,672 கோடி என ெமாத்தம் ஒன்றிய அரசுக்கு ரூ.8.04 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இதில், ஒன்றிய அரசு இதே காலக்கட்டத்தில் ரூ.1,58,145.62 கோடியை தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், மேற்கண்ட காலக்கட்டத்தில் பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிக வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, உத்தர பிரதேச மாநிலத்துக்கு மொத்த வரிப்பகிர்வாக ரூ.1,69,745.3 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இந்த மாநிலம் மூலம் ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் ரூ.3,48,159.87 கோடி கோடி மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், மேற்கண்ட 5 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் இருந்து நேரடி வரி வசூல் ரூ.37,983.05 கோடி மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Saturday, 15 February 2025

நீ எவனுக்கு அப்பா

நீ எவனுக்கு அப்பா?!

 பெற்றவனைத் தவிர தமிழர்கள் யாரையும் "அப்பா" என்று அழைப்பதில்லை!
 அதனால்தான் பெரியப்பா, சித்தப்பா போன்ற சொற்கள் தோன்றின! 
 பெரியமாமா சின்னமாமா என்று முறைகள் கிடையாது!
 ஏனென்றால் ஒரு குழந்தைக்கு எத்தனை மாமாக்கள் வேண்டுமானும் இருக்கலாம்!
ஆனால் அப்பா ஒருவன்தான்!
இதுவே ஆண்பாலுக்கும் பொருந்தும்! 
அதாவது சித்தி, பெரியம்மா உண்டு!
சின்னத்தை, பெரியத்தை கிடையாது!
ஆனால் சிலரை பின்னொட்டாக "ம்மா" என்று மரியாதையாக அழைக்கும் வழக்கம் உள்ளது! 
 வாங்கம்மா போங்கம்மா என்றோ டீச்சரம்மா, கலெக்டரம்மா என்றோ கூட அழைக்கலாம்.
அதேபோலத்தான் "ப்பா" என்பதும்.
 (இந்த "அம்மா" வேறு என்று தொல்காப்பியம் கூறுகிறது). 
 நேரடியாக "அம்மா" என்றோ "அப்பா" என்றோ பெற்றோரைத் தவிர எவரையும் அழைப்பது தமிழர் வழக்கம் இல்லை! 
 
 

Monday, 10 February 2025

பறையர் இனி எவ்வழி

பறையர் இனி எவ்வழி?

 சாதி என்கிற அளவுகோலின் படி மட்டுமே பார்த்தால் 
பள்ளர் பறையர் இருவருமே தொடங்கிய இடம் ஏறத்தாழ ஒன்றுதான்!

 பள்ளர் எவரையும் நம்பாமல் தம்மை மட்டுமே நம்பி தமது குடி அடையாளத்துடன் தமக்கான மள்ளரியம் என்ற கருத்தியலை உருவாக்கி தாம் தாழ்ந்தவர் என்ற மனப்பான்மையை விட்டொழித்து தமிழ்தேசியத்தையும் அரவணைத்தபடி தம் கையூன்றி மேலெழுந்து தேவேந்திரர் என்று பெயர்பெற்று பட்டியல் சலுகையைத் தூக்கியெறியும் தன்னம்பிக்கையுடன் களத்திலும் பிற சாதிகளுக்கு வெட்டுக்கு வெட்டு கொடுக்கும் துணிச்சலுடன் நிற்கின்றனர்.
 அவர்கள் கடந்த வந்த பாதையில் பிழைகளும் சமரசங்களும் இருக்கலாம்!
 ஆனால் இன்று தேவேந்திர தலைவர்களும் மக்களும் பிறர் மதிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.
  
 அதேநேரத்தில் பறையர் தலித்தியத்தின் பின்னால் போனார்கள்!
தம்மைத் தாமே தாழ்த்திக்கொண்டு தலித்திய இயக்கத்தை வளர்த்த மலைச்சாமி தேவேந்திரரை வீழ்த்தி அந்த இயக்கத்தை அபகரித்து கட்சியாக்கி திராவிடத்தை துணைகொண்டு பிற சாதிப் பெண்களைத் துரத்தி பல்வேறு சாதிக் கொடுமைகளுக்கும் அவப்பெயருக்கும் ஆளாகி சிறிது தமிழ்தேசியத்தின் மீதும் சவாரி செய்து வளர்ந்து கடைசியில் திராவிடத்திடம் விலைபோய் மண்டியிட்டு கடைசியில் தன் குடிநீரில் தானே மலம் கழித்துவிட்டு நிற்கின்றனர்! 

 பறைத் தமிழர்கள் இனியும் பிதுக்கப்பட்ட புராணத்தை பாடிக்கொண்டு திராவிடத்தின் செருப்பின் கீழ் தலித்திய அசிங்கத்தில் ஒட்டிக் கிடக்கப் போகிறார்களா?! 
 அல்லது தேவேந்திரத் தமிழர்களைப் போல தேசியத்தை அரவணைக்கும் குடிவழி அரசியலைப் பிடிக்கொண்டு மேலெழும்பி வரப் போகிறார்களா?!
 

Monday, 3 February 2025

அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை வென்ற ஆதித்தனார்

அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை வென்ற ஆதித்தனார்

  அண்ணாதுரைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸை வென்றவர் ஆதித்தனார்!
 ஆம். 1967 இல் அண்ணாதுரை கூட்டணி அமைத்து காங்கிரசை வீழ்த்தியதை பெரும் சாதனையாகத் திராவிடவாதிகள் கூறுவர்.
 ஆனால் 1952 லேயே காங்கிரஸ் 153 இடங்களில் வென்றது. காங்கிரசை எதிர்த்து கூட்டணி அமைத்து 166 இடங்களில் வென்று காட்டினார் ஆதித்தனார்.
(1937 லிருந்தே தமிழருக்குத் தனிநாடு கோரிவந்தவர் ஆதித்தனார்)
 ஆனால் அன்றைய கவர்னர் ஸ்ரீபிரகாசா கூட்டணியை ஒரே கட்சியாகக் கணக்கில் கொள்ளமுடியாது என்று கூறி காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். 
 (இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும்.
சமீபத்தில் சசிகலா பெரும்பான்மை பலத்துடன் இருக்கும்போது ஆட்சியமைக்க அழைக்காமல் ஜனநாயகப் படுகொலை நடந்தது போல!)

 அப்போது ராஜாஜி ஆதித்தனாரின் 'ஐக்கிய கூட்டணி' யிலிருந்து மாணிக்கவேலர் என்பவரை பதவி ஆசை காட்டி கட்சி மாறச் செய்தார். தான் முதலமைச்சர் ஆகி ஆட்சியும் அமைத்தார்.
 அப்போது அவர் கொண்டுவந்த கல்வித் திட்டம் அன்று பெரும்பான்மை பலத்துடன் இருந்த ஆதித்தனார் கூட்டணியால்தான் தோற்கடிக்கப்பட்டது (இந்த திட்டமே குலக் கல்வித் திட்டம் என்று அவதூறு பரப்பப்பட்டது).

 1957 லும் ஆதித்தனார் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முயன்றார். ஆனால் முடியவில்லை.
 இருந்தாலும் அக்கட்சி பலவீனமடைந்தது.

 1958 இல் சுதந்திரத் தமிழ்நாடு கோரி மிகப்பெரிய மாநாடு ஒன்றை ஆதித்தனார் நடத்தினார். இதில்தான் இந்திய வரைபட எரிப்பு போராட்டம் பற்றி முடிவெடுக்கப்பட்டது. 

 1960 இல் ஈ.வே.ரா வுடன் இணைந்து (தமிழகம் நீங்கலாக) இந்திய வரைடத்தை எதிர்க்கும் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். ஆனால் போராட்டம் தொடங்கும் முன்பே இரு தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் மக்கள் தடையை மீறி மிகப் பெரிய அளவில் வரைபடத்தை எரித்தனர். 4000 பேர் இதற்காகக் கைது செய்யபட்டனர். மும்பை தமிழர்களும் இப்போராட்டத்தை நடத்தினர். அதிலும் சிதம்பரத்தில் வி.கே.சாமித்துரை என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி தந்தது. காங்கிரசு பரவலான மக்கள் எதிர்ப்பைப் பெற்றது.

 அதே 1960 இல் ஆகஸ்ட் மாதம் இந்தி திணிப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்ததுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற ஆதித்தனார் மற்றும் அவரது 'நாம் தமிழர்' கட்சியினர் 126 பேர் கைது செய்யப்படனர். வெளிவந்த பிறகும் அக்டோபரில் ஆதித்தனார் 'தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மாத சிறைவாசத்தில் 12 கிலோ உடல் எடை குறைந்து வெளிவந்தார். அப்போதும் காங்கிரஸ் மீது இளைஞர்களுக்கு பலத்த அதிருப்தி ஏற்பட்டது.

 1965 மொழிப்போரை மாணவர்கள் முன்னெடுத்தபோது ஈ.வே.ரா காங்கிரசுடன் சேர்ந்துகொண்டார். அப்போது மாணவர்களை வழிநடத்தியது அண்ணாதுரையும் ஆதித்தனாரும். அண்ணாதுரை பாதியில் விலகிக் கொள்ள நாம் தமிழர் கட்சி கடைசிவரை உறுதியாக நின்றது.

 1967 இல் அண்ணாதுரை காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க ஆதித்தனார் மிக முக்கியமான காரணம். அன்று திருநெல்வேலி காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. அண்ணாதுரை ஆதித்தனாரிடம் அத்தொகுதிப் பணியை ஒப்படைத்தார். 1962 இல் அதன் 19 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 1967 ல் ஆதித்தனார் 14 தொகுதிகளில் தி.மு.க வை வெல்லவைத்தார். 5 தொகுதிகளே காங்கிரசுக்குக் கிடைத்தது. 
தேர்தலுக்குப் பின் காங்கிரஸின் தோல்வியில் கால்வாசி பங்கு தினத்தந்தி க்குரியது என்று கூறினார் ராஜாஜி. 

 அண்ணாதுரைக்கு கிடைக்கும் புகழ் உண்மையில் ஆதித்தனாருக்குக் கிடைக்க வேண்டியது ஆகும்.
 
19.09.2022 அன்றைய பதிவு
அன்றைய தலைப்பு : திராவிடத்திற்கு முன்பே காங்கிரசை வீழ்த்திய தமிழ்தேசியம் 

Saturday, 1 February 2025

ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே!

 ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே!

 நீங்கள் ஒரு நொடி சிந்திப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் பெரும்பான்மையான துன்பங்கள் தீரும் என்பதை அறிவீர்களா?!
 உங்கள் வாழ்வில் பெரும்பாலான துன்பங்கள் தவறான வேட்பாளருக்கு வாக்களித்ததினால் மட்டுமே வந்தடைந்தன என்பது தெரியுமா?
  நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 கடந்த பல ஆண்டுகளாக மக்களை ஆண்டு வரும் கட்சிகள் மாறி மாறி கொள்ளையடித்ததை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்பதை குழந்தை கூட அறியும்!
 ஜனநாயக மணிமகுடம் ஆள்பவர் தலையிலிருந்து தேர்தல் காலத்தில் சில நாட்கள் மட்டும் வாக்காளர் தலைக்கு மாறிவிடுகிறது.
 இப்போது கிரீடம் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் தலையில் அமர்ந்துள்ளது.
 நீங்கள் வாக்களித்த மறுநொடி அதுவும் அதன் சக்தியும் கைமாறிவிடும்.
 பிறகு தலைக்கு வர சில ஆண்டுகள் ஆகும். அதுவரை ஆள்பவன் செருப்பு உங்கள் தலையை அழுத்தியபடி இருக்கும்.

எனவே வாக்களிக்கும் முன் ஒரு நொடி சிந்தியுங்கள்!
உங்களுடைய மற்றும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அதாவது கல்வி, வருமானம், வாழ்க்கைத் தரம், பிற வசதிகள் என அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான முடிவு இது!

 அதுவரை நீங்கள் ஜனநாயக குடிமகனாக பல தவறுகள் செய்திருக்கலாம்! லஞ்சம் கொடுத்திருக்கலாம், வரி ஏய்ப்பு செய்திருக்கலாம், சாலை விதிகளை மீறியிருக்கலாம், ஓட்டுக்குப் பணம் வாங்கியிருக்கலாம்! 
பரவாயில்லை! போனது போகட்டும்!

 வேட்பாளர் பட்டியலைப் பாருங்கள்! அதில் நல்லவர் அல்லது குறைந்தபட்ச கெட்டவரைத் தேர்ந்தெடுங்கள்! அவர் கண்டிப்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வேட்பாளராக நிச்சயம் இருக்கமாட்டார்! ஒன்று சுயேட்சையாக இருப்பார்! அல்லது நாதக போன்ற சிறிய கட்சி வேட்பாளராக இருப்பார்.
 
 உங்களுக்கு முதல்வன் அர்ஜுன் போன்றோ, சர்கார் விஜய் போன்றோ, ஆய்த எழுத்து சூர்யா மாதிரியோ எவரும் வரப்போவதில்லை. இருப்பதில் சிறந்தவரைத் தேர்ந்தெடுங்கள். அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பரவாயில்லை.
 100% திருடன் என்று தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை விட இவன் திருடனா இல்லையா என்று சந்தேகம் இருக்கும் ஒருவருக்கு வாக்களியுங்கள்.
 ஓட்டு வீணாகும் என்று நினைக்க வேண்டாம். இந்த ஒரு தவறான சிந்தனைதான் நாடே நாசமாக காரணம். எல்லாரும் இப்படி நினைத்துதான் நாட்டை வீணாக்கி வைத்துள்ளாம். நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு ஓட்டு வீணாவது பெரிய இழப்பில்லை.

 ஒரு உண்மையைக் கூறவா? மக்கள் மாற்று சக்திகளுக்கு வாக்களித்தே வந்துள்ளனர்! ஆனால் அது குறைத்து காட்டப்பட்டு வருகிறது. இந்த நாட்டில் எது நேர்மையாக நடக்கிறது? தேர்தல் முடிவுகள் மட்டும் நேர்மையாக வெளிவருமா? இருந்தாலும் பெரும்பாலான வாக்குகள் கட்சிமாறினால் அதை மறைக்க முடியாது. 

 நான் நா.த.க அடிப்படை உறுப்பினர். நாம் தமிழர் வந்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறமாட்டேன். அவர்கள் வந்தால் இந்த அளவுக்கு மோசமாக இருக்கமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. நீங்களும் அப்படியே நம்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நான் சீமான் அவர்களுக்கு வாக்களிக்கத் தொடங்கியதில் இருந்து நாட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண்டால்  'இதற்கு நான் காரணமில்லை' என்கிற ஆறுதல் கிடைத்துவிட்டது. நீங்கள் வாக்களித்தால் குறைந்தபட்சம் குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்கலாம் என்று கருதுகிறேன். வேட்பாளர் நல்லவர் ஆனால் கட்சித் தலைமை சரியில்லை என்றாலும் அவரைத் தேர்ந்தெடுக்க  வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதனால் நாம் தமிழருக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்ப்பது சரியாக இருக்கும் என்பது என் பரிந்துரை. இதை யோசித்துப் பார்ப்பது உங்கள் விருப்பம்.

 வாக்களிக்கும் முன் நீங்கள் மதம், சாதி, இனம், கட்சி, பாலினம், பொருளாதாரம் என எந்த பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அந்த நொடி உங்கள் தலையில் ஜனநாயக கிரீடம் இருக்கும் போதே உடனடியாக உங்கள் மனசாட்சியை செயல்பட விடுங்கள்! உங்கள் முடிவு பல லட்சம் பேர் வருங்காலத்தை ஏன் பல ஆயிரம் உயிர்களை பாதிக்கும் முடிவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

 கொள்கை, கோட்பாடு என்று கூட சிந்திக்க வேண்டாம். இதுவரை பிரதான கட்சிகள் கடந்து வந்த பாதையை நினைத்துப் பாருங்கள். வேட்பாளர் பட்டியலில் உள்ளவரில் கெட்டவர் என்று நன்கு தெரிந்தவரை விட்டுவிட்டு பிறருக்கு வாக்களியுங்கள்.
 நோட்டாவை அழுத்துவதால் பலன் எதுவும் இல்லை.  எல்லா ஓட்டும் நோட்டாவுக்கு விழுந்து ஒரே ஒரு ஓட்டு ஒருவருக்கு விழுந்தாலும் அதைப் பெற்றவர் வெற்றி பெறுவார். அந்த முட்டாள்த் தனத்துக்கு வாக்களிக்காதீர்கள். அதற்கு பேசாமல் வீட்டிலியே இருக்கலாம்.
 
 வாக்காளர் என்றில்லை வேட்பாளர்களுக்கும் இதைக் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கே வாக்களிக்கு முன்  உங்கள் மனசாட்சியை ஒருமுறை கேளுங்கள். உங்களை விட சிறந்த வேட்பாளர் ஒருவர் இருந்தால் அவருக்கு ஓட்டு போடுங்கள்.  

 ஒரு வேட்பாளர் ஏற்கனவே  பதவியில் இருந்தவர் என்றால் செய்த நன்மைகள் தீமைகளைப் பட்டியலிட்டு நன்மைகள் அதிகம் இருப்பவரைத் தேர்ந்தெடுங்கள். தீமைகள் அதிகம் என்றால் அவர் எவ்வளவு நெருக்கமானவர் என்றாலும் விட்டுவிடுங்கள். 

 கெட்டவர்கள் செய்த சில நன்மைகளை நினைத்துப் பார்ப்பது அறிவாளித்தனம் இல்லை. சிலரது ஒப்பீடு மிகவும் தவறு. பீகாரை விட நாம் முன்னேறியிருக்கிறோம் என்றால் சோமாலியாவை விட பீகார் முன்னேறி இருக்கிறது!
 இது எப்படி இருக்கிறது என்றால் "நான் நினைத்தால் உன்னை அதிகம் சீரழித்திருப்பேன். குறைவாக சீரழித்தமைக்காக எனக்கு மறுபடி வாய்ப்பு கொடு" என்று மிரட்டி கேட்பது போல இருக்கிறது.

 வெள்ளைக்காரன் காலத்திலேயே நாம் அதிக வரி கட்டி வந்த முன்னேறிய மாநிலம். நாம் முன்னேறியிருக்க  பொதுமக்களாகிய நாமே காரணம்.
 காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என இதுவரை ஆண்ட அனைவரும் நாம் உழைத்து முன்னேறுவதைத் தடுத்து கொள்ளையடித்தே வந்துள்ளனர்.
 எல்லா கட்சிகாரர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து விட்டனர். பத்து தலைமுறைக்கு சேர்த்துவிட்டு பதினொராவது தலைமுறைக்கு தற்போது வியாபாரத்தைத் தொடங்கிவிட்டனர். 
 அவர்களிடமிருந்து ஒரு பைசாவை கூட நம்மால் திருப்பி வாங்க முடியாது என்பதே உண்மை.
 எனவே அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை விட்டுவிட்டு மூன்றாவது நபருக்கு வாய்ப்பு கொடுக்கும் தருணத்தில் இருக்கிறோம்.

 இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஒருமுறை வாய்ப்பு கேட்டு அமர்ந்தவர்கள்தான். ஒருமுறை பதவியில் அமர்ந்தவர்களை நம்மால் அசைக்க முடியாது. ஒருமுறை தேர்ந்தெடுத்தவர் சரியில்லை என்றால் வேறொருவரை மாற்றுவதே புத்திசாலித்தனம். அப்படிப் பார்த்தால் திமுக, அதிமுக கட்சிகளை நாம் என்றைக்கோ மாற்றியிருக்க வேண்டும். அந்த வகையில் நாம் அடிமுட்டாள்களாக இருந்துள்ளோம். இனியாவது அறிவாளிகளாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்! 

 ஒருவருக்கு வாக்களிப்பதால் உங்களுக்கு தனிப்பட்ட நன்மை கிடைக்கலாம். ஆனால் வாக்களிக்கும் அந்த நொடி சுயநலத்தை விடுத்து மனசாட்சியை தட்டிக் கேளுங்கள்!  
 மேலே சொன்ன எல்லா கணக்குகளையும் மனசாட்சி ஒரு நொடியில் போட்டு விடையைக் கூறிவிடும்.

 ஒரு நொடி உங்கள் மனசாட்சிக்கு அதிகாரம் கொடுங்கள். அது யாரைச் சொல்கிறதோ கண்ணை மூடிக்கொண்டு அழுத்திவிடுங்கள்!  இதுவே புரட்சி! ஒவ்வொருவரும் தத்தமது கடமையை சரியாக செய்துவிட்டால் பெரிய புரட்சியெல்லாம் தேவைப்படாது என்பது தலைவர் பிரபாகரன் கூறியது! தவறான நபர்களைப் பதவியில் அமர்த்தி விட்டு பிறகு அதிகாரத்திற்கு எதிராக திரைப்படங்களில் கதாநாயகர்கள் செய்யும் புரட்சியை ரசிப்பது வேடிக்கையானது!  மாற்றி சிந்திப்பதே புரட்சி! இந்த தைரியமான முடிவு ஆயுதப் புரட்சிக்கு சற்றும் குறைந்தது அல்ல! ஜனநாயக மாற்றம் வராதபோதுதானே ஆயுதப் புரட்சி அவசியம்! அதை முன்னரே அதாவது இப்போதே செய்துவிட்டால்...

முடிவை மாற்றுங்கள்!
மனசாட்சியைக் கேட்போம்!
மாற்றிப் பார்ப்போம்! 

19.02.2023