Thursday, 17 November 2016

இனவெறிக்கு இலக்கணம் வரையும் மலையாளிகள்

இனவெறிக்கு இலக்கணம் வரையும் மலையாளிகள்

"தேவிகுளம் பீர்மேடு பகுதி கி.பி.1889 வரை திருவிதாங்கூர் நாட்டைச் சேர்ந்த பகுதியல்ல.
திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்தில் திரு.நடராஜபிள்ளை தனது அறிக்கையில் பூஞ்சார் ராஜா பாண்டிய மரபினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் திரு-கொச்சியின் வரலாற்று ஆசிரியர்கள் பூஞ்சார் மன்னன் பாண்டிய மரபினன் என்றும், அவன் 'மீனாட்சி சுந்தரம்' என்றே ஒப்பமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பூஞ்சார் மன்னரின் பற்றுச் சீட்டுகள் அனைத்திலும் 'மதுரை மீனாட்சி துணை' என்ற முத்திரை காணப்படுகிறது.
பாண்டிய மன்னரின் கீழ் மதுரை நாயக்கர் ஆண்ட காலத்தில் அவர்களுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவே தேவிகுளம், பீர்மேடு இருந்து வந்துள்ளது.
1889வரை திருவிதாங்கூரின் பகுதியே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகும்.
கண்ணன் தேவன் மலை விளைபொருள் உற்பத்திக் கம்பெனியாரின் முன்னோடிகள் முதலில் 1879இல் பூஞ்சார் இராஜாவுடன் தான் உடன்படிக்கை செய்தனர்.
1889இல் பெரியாறு நீர்த்தேக்கத் திட்டத்தினைச் செயல்படுத்திய போது இந்திய அரசின் செயலாளர் திருவிதாங்கூர் மன்னருடன் ஒப்பந்தம் மேற்கொண்டார்.
இந்த மாற்றம் 1879 முதல் 1889 வரையிலான இடைப்பட்ட காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது.
அக்கால கட்டத்தில் பூஞ்சார் இராஜாவிடமிருந்து குத்தகை அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னர் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இவ்வாறிருக்க, 1935ம் ஆண்டு வரை தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்குத் திருவிதாங்கூரிலிருந்து சென்று சேர பாதையே இல்லை.
இவ்விவரம் 1951இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தின் வழியாக தேவாரம், குமுளி, போடி நாயக்கனூர், கம்பம் மற்றும் சிறுமலைக் கணவாய் வழியாகத்தான் தேவிகுளம் பீர்மேட்டிற்குச் செல்ல முடியும்.
மாநில எல்லை ஆணைக்குழுவானது அப்பகுதியின் மக்கள் 'குடியேறிவர்கள்' என்றும், 'வந்து சென்று போகக் கூடியவர்கள்' என்றும் ஆதாரமற்ற வகையில் தகவல் கூறப்பட்டுள்ளது"

மார்சல் நேசமணி அவர்களின் நாடாளுமன்ற உரை (1955, டிசம்பர் 14,15,16)

ஆக முல்லைப் பெரியாறு அமைந்துள்ள மாவட்டமே தமிழர் பகுதி ஆகும்.
மலையாளிகள் அங்கே சென்றுவர பாதையே 1935ல் தான் போடப்பட்டது.
பூஞ்சார் அரசிடமிருந்து திருவிதாங்கூர் அரசின் கைக்கு முல்லைப்பெரியாறு பகுதி எப்படி மாறியது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஆங்கிலேயர் பூஞ்சார் ராஜாவிடம் போகாமல் தவறுதலாக திருவிதாங்கூருடன் ஒப்பந்தம் போட்டதாகவும் ஊகிக்கலாம்.

தற்போது முல்லைப்பெரியாறு அணை கேரள எல்லைக்குள் இருந்தாலும் அணை தமிழகத்திற்கு சொந்தமாக இருக்கிறது.

முல்லைப்பெரியாறு தமிழர்கள் கையில் இருப்பதைக் காணச்சகியாய மலையாளிகள் ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்து கூடுதல் குத்தகைப் பணமும் நிர்ணயித்துக்கொண்டனர்.
1896 முதல் 1970 வரை தமிழகம் கேரள அரசுக்கு ஏக்கருக்கு 5ரூபாய் என 8100 ஏக்கருக்கு ரூ.40500 கொடுத்துவந்துள்ளது.
1970 ல் ஏக்கருக்கு 30 ரூபாயாக உயர்த்திக்கொண்டது.
ஆங்கிலேயர் காலத்தில் போட்ட 999 ஆண்டுக்கான ஒப்பந்தம் இப்போது செல்லாது என்று மழுப்பும் மலையாளிகள் 1970ல் அவ்வொப்பந்தத்தை தாங்கள் புதுப்பித்ததை மறந்துவிட்டனர்.

ஆக 100 வெள்ளையர்கள் உட்பட 422 பேர் உயிரிழந்து பல இன்னல்களைத் தாங்கி பென்னிகுக் தமிழர்களுக்காக தமிழரை வைத்து தமிழ்பகுதியில் கட்டிய அணைக்கு மலையாளிகள் கப்பம் வாங்குகிறார்கள்.

1976ல் இடுக்கியில் அணையின் நீர் ஓட்டத்திலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதற்கு போதுமான தண்ணீர் வரவில்லை.
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு போகும் தண்ணீரை தடுத்து கடலில் விட்டு அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாம் என்று மலையாளிகள் நினைக்கிறார்கள்.

மலையாள மனோரமாவில்  1978 ல் முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் வந்ததாக பொய்யான செய்தி வெளியிடப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை பலவீனமான இருப்பதாகவும் அது உடைந்தால் பல ஊர்கள் அழியும் என்றும் வதந்தியைப் பரப்பினர்.
பிறகு 1979ல் அணையின் தேக்கும் அளவை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கவைத்தனர்.
அங்கே மலையாள போலீசை காவலுக்கு நிறுத்தி அவர்களுக்கு தமிழகமே சம்பளம் கொடுக்குமாறு செய்தனர்.

தமிழக அரசு 18 கோடி செலவளித்து அணையை பலப்படுத்தும் பணியைத் தொடங்கியது.
மலையாளிகளின் பல்வேறு குடைச்சல்களுக்கு மத்தியில் 1994ல் பலப்படுத்தும் பணி முடிவடைந்தது.

அணை பலமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்ததும் மீண்டும் மலையாளிகள் தமது பழைய பொய்பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.
அணை நீர்மட்டத்தை உயர்த்துவதை எதிர்த்தனர்.
தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
2000 ம் ஆண்டு உச்சநீதி மன்றம் அணையை ஆராய ஒரு வல்லுநர் குழு அமைத்தது.
வல்லுநர் குழு அணையை நன்கு ஆராய்ந்து அது பலமாக இருப்பதாக கூறியது.
2006ல் அணை பலமாக இருப்பதாகவும் அணை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளித்தது.

அணை உடைந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை உண்மை.
ஏனென்றால் 8 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் அந்த நீர் 70 டி.எம்.சி பிடிக்கும் பெரிய இடுக்கி அணைக்கே தண்ணீர் வந்து சேரும்.
இடையில் மக்கள் வாழும் பகுதி எதுவுமே இல்லை.

அரசியல் சட்டத்தின் 262ஆம் பிரிவுப்படி, இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
இந்த அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் தமது மாநிலத்திற்கு தனியாக “கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006”, என்ற சட்டத்தை இயற்றினர்.

டேம்999 என்று திரைப்படம் கூட எடுத்து ஊரே வெள்ளத்தில் போவதுபோலக் காட்டினார்கள்.

இடுக்கி தமிழர்களையும் அங்கே வேலைக்கு வரும் தமிழகப் பெண்களையும் கீழ்த்தரமாக நடத்தினர்.
தமிழ்நாடு வாகனங்கள் தாக்கப்பட்டன.
500 தமிழ்ப் பெண்களை சிறைபிடித்து வைத்துக்கொண்டனர்.
தேனி மக்கள் சாலை மறியல் செய்ததும் 'கட்டப்பன' பகுதி இன்ஸ்பெக்டர் ஜிஜிமோன் தமிழ் பெண்களை கொண்டுவந்து  ஒப்படைத்தார்.

கேரள எல்லையில்  2011 டிசம்பரில் அரங்கேறிய அராஜகத்தை நேரில் சென்று விசாரித்துத் திரும்பிய 'எவிடன்ஸ்’ அமைப்பின் தலைவர் கதிர், ''ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் மீது ஒரு பெரிய வன்முறை நடத்தப்பட்டு இருக்கிறது.
உயிர் பயம், அவமானம் தரும் அச்சுறுத்தல் எல்லாவற்றையும் தாண்டி எங்களிடம் 37 பேர் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள். கொள்கைகள், சித்தாந்தம் என்றெல்லாம் பேசும் கம்யூனிஸ்டுகளும் காந்தியம் பேசும் காங்கிரஸ்காரர்களுமே இவ்வளவு அக்கிரமங்களையும் செய்திருக்கிறார்கள்.
கேரளக் காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

தாக்கப்பட்ட பெண்கள் தேனிக்கு தஞ்சம் வந்தனர்.
அவர்களை தேவாரம் எனுமிடத்தில் தங்கவைத்தனர் தேனி மக்கள்.

தேனி மாவட்டமே முல்லைப்பெரியாறை நம்பி இருக்கிறது.
5 மாவட்டங்களில் 2 லட்சத்து 8,144 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
30 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் அந்த ஆறை நம்பி இருக்கிறது.

தமிழரின் பஞ்சம் போக்க தன் சொத்துக்களை விற்று அணை கட்டிய மாமனிதர் பென்னி குக் அவர்களுக்கு மண்டபம் கட்டி விழா எடுக்கும் தேனி மக்கள், தன் பிள்ளைகளுக்கு பென்னிகுக் என்ற பெயரைவைக்கும் தேனி தமிழர்கள்,
கேரள அரசின் நடவடிக்கைகளைப் பொறுக்கமுடியாமல் 2011 டிசம்பரில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு கேரளாவில் நுழைந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் மலையாள கட்டிடங்கள் தாக்கப்பட்டன.

தமிழக போலீஸ் ஐ.ஜி ராஜேஸ் தாஸ் மற்றும் தமிழக போலீஸ் துணை தலைமை இயக்குனர் ஜார்ஜ் ஆகிய மலையாளிகள் தமிழ் மக்களை கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றனர்.
பல இடங்களில் தடியடி நடத்தி கலைத்தனர்.
4000 தமிழக காவலர்கள் எல்லையில் நிறுத்தப்பட்டு மலையாளிகளைப் பாதுகாத்தனர்.
அங்கே பார்வையிட வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அடித்து விரட்டினர் மக்கள்.
இடுக்கி தமிழர்களும் பெரிய அளவில் திரண்டு தமிழகத்துடன் இணைய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மலையாளிகள் 2012 சனவரியில் சபரிமலைக்கு போன சாந்தவேலு என்ற தமிழர்மீது வெந்நீர் ஊற்றிக் கொன்றனர்.

தமிழக அரசு தொடுத்த வழக்கில் 136 அடியில் இருந்து முதல்கட்டமாக 142 அடியாகவும், பின்னர் 152 அடியாகவும் உயர்த்தி கொள்ள தமிழகத்துக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதை உம்மன்சாண்டி நடக்கவிடவில்லை.
பிணராய் விஜயன் விடுவேன் என்றார்.
ஆனால் பதவிக்கு வந்ததும் மாற்றிப்பேசுகிறார்.
ஆக மலையாளிகள் நீதிமன்றத்தை மதிப்பதேயில்லை.

முல்லைப்பெரியாறின் கதை இவ்வாறிருக்க 1981ல் தமிழகத்தின் எல்லைக்குள் புகுந்து செண்பகவல்லி அணையை உடைத்துவிட்டுச் சென்றது மலையாள வனத்துறை.

சிவகிரி விவசாயிகள் சங்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு 8 வார காலத்திற்குள் அணைகட்டித் தர 03.08.2006 அன்று உத்தரவிடப்பட்டது.
பத்து ஆண்டுகளாக அந்த தீர்ப்பை மதிக்கவில்லை மலையாள
அரசு.
உச்சநீதிமன்றமும் ஒன்றும் செய்யவில்லை.
தமிழக திராவிட அரசுகள் என்ன செய்தன தெரியுமா?

செண்பகவல்லி அணை 1773ல் சிவகிரி ஜமீனால் கட்டப்பட்ட அணை ஆகும்.
  கேரள வனத்துறை தமிழக எல்லைக்குள் வந்து அணையை உடைத்துவிட்டு போனபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் இதைத் தட்டிக்கேட்கவில்லை.
எப்படி கேட்பார்?

அவர் ஒரு மலையாளி.
முல்லைப் பெரியாறு பிரச்சனையிலேயே அவர் கேரளாவுக்கு சாதகமாகத்தான் நடந்துகொண்டார்.

25.11.1979ல் முல்லைப் பெரியாறு பிரச்சனையைப் பேச தமிழகத்திலிருந்து 47 பேரும் கேரளாவிலிருந்து 47 பேரும் சென்றனர்.
இதில் தமிழகக் குழுவில் 46 மலையாளிகளும் 1 தமிழரும் இடம்பெற்றிருந்தனர்.
அந்த தமிழர் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜா முகமது.
அவர் அணை மட்டத்தைக் குறைப்பதை கடுமையாக எதிர்த்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.
94ல் 93பேர் ஆதரவுடன் முல்லைப்பெரியாறு அணையின் மட்டம் குறைக்கப்பட்டது.
அது அதன்பிறகு உயர்த்தப்படவில்லை.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தெலுங்கரான கருணாநிதி 1987-1991 வரை மலையாளிகளை கெஞ்சிக்கொண்டிருந்தார்.
உடைத்த செண்பகவல்லி அணையை நீங்களே கட்டித்தாருங்கள் என்று.

அதன்பிறகு ஆட்சிக்கு வந்த கன்னடவரான ஜெயலலிதா 5,50,000 ரூபாய் பணம் கொடுத்து கெஞ்சினார்.
பணத்தையும் வாங்கிக்கொண்டு செண்பகவல்லி அணையைக் கட்டித்தரவும் இல்லை மலையாள அரசு.
வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள், சிவகிரி பகுதியில் 33 குளங்கள் நிரம்ப நீராதாரமாகவும்,
சங்கரன்கோயில் வட்டத்தில் 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு மக்களுக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை இன்று இல்லை.
2016 மே மாதம் அணையின் மீதமிருந்த தடுப்புச் சுவரையும் இடித்தது மலையாள அரசு.

இதே போல நெய்யாறு பிரச்சனையும்.
நெய்யாறு தண்ணீரைத் திறந்துவிடவேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று கேட்டது கேரளா.
1999ல் நெய்யாறு கேரளாவுக்கு மட்டுமானது இருமாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல என்று அறிக்கவித்தது.
மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இப்பிரச்சனையில் மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறும் தேவைப்பட்டால் மத்திய நீர் ஆணையத்திடம் உதவி கோருமாறும் கூறி 2003ல் நழுவிக்கொண்டது.

2004 லிருந்து ஒரு சொட்டு தண்ணீரை கூட கேரளா திறந்துவிடவில்லை.

2007 ல் கேரளா மீண்டும் பணம் தந்தால் திறந்துவிடுவதாக கூறியது.
நெய்யாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் 12.90 சதுர கி.மீ தமிழகத்தில் இருக்கிறது.
எனவே இது இருமாநில நதிதான் என்று வாதிட்ட தமிழக அரசு ஒரு புதிய ஒப்பந்தத்தை தயாரித்து 19.05.2009 அன்று  கேரள அரசுக்கு அனுப்பியது.
  கேரள அரசு பணம் கேட்டு 11.01.2010 அன்று வேறு ஓர் ஒப்பந்தத்தை தயாரித்து தமிழகத்துக்கு அனுப்பியது.
தமிழக அரசு அதை நிராகரித்தது.
பிறகு இருமாநில அதிகாரிகளும் 06.05.2011அன்று திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கேரளா பணம் தராமல் தண்ணீர் தரமுடியாது என்று மறுத்துவிட்டது.
தமிழக அரசு 30.05.2012 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தது.
இன்றுவரை இழுபறி தொடர்கிறது.
அபரிமிதமான நெய்யாற்றுத் தண்ணீர் திருவனந்தபுரத்தை அடுத்த பூவாறு எனும் ஊரில் அரபிக் கடலில் வீணாகக் கலக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.

மலையாளிகளின் இனவெறிப்போக்கு இதோடு முடியவில்லை.
கோவை மற்றும் திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனம் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் (பி.ஆர்.பி) மூலம் வரும் நீரை நம்பியுள்ளது.
இந்த திட்டம் வீணாகக் கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு திருப்பிவிட 1958ல் போடப்பட்டது.
இத்திட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய அணைகள் கேரளாவுக்குள் உள்ளன.
(இவ்வணைகள் இருக்கும் பகுதி அனைத்தும் தமிழகம் இழந்த எல்லைப் பகுதி ஆகும்)
இவ்வணைகளைக் கட்டியது தமிழக அரசே ஆகும்.
இதனை பராமரிக்கும் பொறுப்பு தமிழக அரசிடம் உள்ளது.
  தமிழகத்தின் கட்டுப்பாட்டில் கேரளாவிற்குள் இருக்கும் பரம்பிக்குளம் அணைக்கு பராமரிப்பு பணிக்காகச் செல்லும் தமிழக ஊழியர்களை அவமானப்படுத்துவது சிறைபிடித்து வைப்பது திருப்பியனுப்புவது என கேரள அரசு செய்யும் அட்டூழியம் சொல்லிமாளாது.


40 ஆறுகள் ஓடும் கேரளாவில் பஞ்சமோ தண்ணீர் பற்றாக்குறையோ இல்லை.
8% தண்ணீர் மட்டுமே மலையாள மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

உச்சநீதி மன்றத்தை மதிக்காத,  அப்பாவி தமிழ் மக்களின் உணவையும் தண்ணீரையும்
பிடுங்கும் மலையாள அரசு,  இதன் மூலம் தமிழர்கள் மீது கொண்டுள்ள இனப்பகையைத்தான் காட்டுகிறது.

  மலையாளிகளின் உணவுத்தேவை 90% தமிழகத்தை நம்பி உள்ளது.
ஒரு வாரம் உணவு செல்வதைத் தடுத்தால் கேரளா பணிந்துவிடும்.

தமிழக முதல்வர் நினைத்தால் இது முடியும்.
ஆனால் தமிழகத்தை தமிழர் ஒருவர் ஆளவே முடிவதில்லையே!

No comments:

Post a Comment