தமிழைப் பழித்த ஈ.வே.ரா
"தமிழ்த்தாய் பாலை கறந்து எடுத்து ரசாயனப் பரிசோதனை ஸ்தாபனத்தில் பரீட்சித்து பார்த்தால்,
உடலுக்கு உரம் ஊட்டும் சாதனம் அதில் என்னென்ன இருக்கின்றது கண்டுபிடித்து சொல்ல சொன்னால்
அப்போது தெரியும் தாய்ப்பால் யோக்கியதை!"
- ஈ.வே.ரா, தாய்ப் பால் பைத்தியம் (நூல்)
‘தமிழ் மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள்.
நானும் தமிழ் 'காட்டுமிராண்டி மொழி' என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகச் சொல்கிறேன்
-ஈ.வே.ரா, தாய்ப் பால் பைத்தியம் (நூல்)
தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது.
தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு,
அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார்.
- ஈ.வே.ரா, விடுதலை (27.11.1943)
"வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்.
எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள்.
நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால்
‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?' என்று பதில் கூறுவேன்"
-ஈ.வே.ரா, விடுதலை (1.6.1950)
உயர்தர படிப்புகளையெல்லாம் கல்லூரியிலும் கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்குகிறோம் என்றுதானே பொருள்?
இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்?
தமிழ் மொழியும் கெட்டு,
பாட விஷயமும் பொருளும் கெட்டு,
ஆங்கிலமும் கெடும்படி ஆவதால்
இது மூன்று கொலை செய்ததாகத்தானே முடியும்?
- ஈ.வே.ரா, விடுதலை (5.4.1967)
தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும்,
உடலெல்லாம் நோய்கொண்டும்,
வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப் படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.
- ஈ.வே.ரா, விடுதலை (28.7.1951)
"தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை.
தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும்
இந்தி படிக்கும்துளசிதாஸ் ராமாயணத்தாலோ,
வங்காள ராமாயணத்தாலோ,
வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி"
- ஈ.வே.ரா, விடுதலை (8.3.1965)
"தமிழ்கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை.
தமிழ்கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை.
புலவர்களே தமிழைக் கெடுத்துவிட்டார்கள்"
- ஈ.வே.ரா, விடுதலை (3.3.1965)
No comments:
Post a Comment