Friday 4 November 2016

பலிக்காத கனவு

பலிக்காத கனவு

கண்விழிக்காமல் அருகில் தடவி பார்த்தேன்.
படுக்கையில் அருகில் அவள் இல்லை.
குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்டது.
எழுந்து போய் பூட்டாமலிருந்த கதவை திறந்தேன்.

பூந்தூறலில் நனைந்துகொண்டு இருந்த அவளை நோக்கி இரு கைகளையும் நீட்டிவாறு நடந்துபோனேன்.

விறுவிறுவென்று முன்னேவந்து என்னை நிறுத்தினாள் "இங்கே நில்லுமா நனஞ்சிரப்போற!".

அவள் ஈர உடலை அணைத்துக்கொண்டேன்.
அவள் தோளில் சாய்ந்துகொண்டேன்.
"வா தூங்கலாம்" அவளை அழைத்தேன்.

"ஆ சரி" கூறிவிட்டு துண்டை எட்டி எடுத்து தன் உடலை மூட முயன்றாள்.

நான் துண்டைப் பிடுங்கி தரையில் எறிந்தேன்.
"அதெல்லாம் வேண்டாம். நீ வா".

"சரி" பக்கவாட்டில் அணைத்தபடி அழைத்துச் சென்று மெத்தையில் படுக்கவைத்தாள்.
நனைந்த என் உடைகளை கலைந்துவிட்டாள்.

என் அருகில் படுத்துக்கொண்டாள்.
அவள் மீது புரண்டுபடுத்தேன்.
பிறகு விலகிக்கொண்டேன் "ஓ முடி ஈரமாருக்கு".

அவள் போர்வையை எடுத்து மார்பை துடைத்துக்கொண்டாள் "வாம்மா நெஞ்சுல படுத்துக்கோ".

அவள் மார்பில் அணைந்து இதமாக தூங்கினேன்.

சிறிது நேரம் கழிந்தது.
அருகில் துழாவினேன்.
அவள் இல்லை.
என் உடைகளும் நனைந்திருக்கவில்லை.
குளியலறையில் தண்ணீர்  சத்தமும் கேட்கவில்லை.

இருந்தாலும் விறுவிறுவென்று எழுந்தோடிப்போய் பார்த்தேன்.

அங்கே அவள் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.

"என்னவிட்டு நீ எங்க போன...." நான் கதறியழுதது யார் காதிலும் விழவில்லை.

No comments:

Post a Comment