காலில் விழாததுதான் குறை
ஒரு மாநில முதல்வர்,
இன்னொரு மாநில முதல்வரை
(நேரம் ஒதுக்கிக் கேட்டு) நேரில் போய் சந்திப்பது வரலாற்றில் நடக்காத கேவலம்.
முதலில் இந்த மரபை உடைத்து தன்மானத்தை விட்டு தானே நேரில் போய் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அற்ப மனிதர் பன்னீர்செல்வம்.
(அப்படி செய்தும் நியாயமாக நமக்குத் தரவேண்டிய தண்ணீர் வரவில்லை.
ஏதோ பிச்சை கிடைத்தது)
இப்போது எடப்பாடி பழனிச்சாமி இந்த அவமானகரமான செயலை செய்யவுள்ளார்.
இந்திய ஜனநாயகத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வழியில்லைதான்.
அதற்காக இப்படியா?!
முதுகெழும்பில்லாத பிராணிகளை அரியணையில் ஏற்றினால் இப்படித்தான் மானத்தை வாங்குவார்கள்.
இனியாவது (கெட்டவனாக இருந்தாலும்) கொஞ்சமாவது நெஞ்சுரம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவோம்.
Tuesday, 30 January 2018
காலில் விழாததுதான் குறை
Tuesday, 19 September 2017
தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி
தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி
இந்த மூன்றுபேருமே கெட்டவர்கள்தான் என்றாலும்,
இதில் அறவே புறக்கணிப்படவேண்டிய இரண்டு நம்பிக்கை துரோகிகள் பன்னீர் மற்றும் எடப்பாடி ஆவர்.
மற்ற அரசியல் விமர்சனங்களை விடுவோம்.
எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி நன்றிகெட்டவன் என்று தன்னை நிரூபித்தார்.
ஆக மூவரில் மிக மோசமான நம்பிக்கை துரோகி இவரே.
பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார்.
அதன்பிறகு முடிவை மாற்றிக்கொண்டு கட்சியை உடைக்க முயன்று ஒட்டுமொத்த கட்சிக்கே துரோகம் செய்தவர்.
அதிலும் உறுதியாக இல்லாமல் கிடைக்கும் பதவியைப் பெற்றுக்கொண்டு மீண்டும் இணைந்தவர்.
அதாவது சந்தர்ப்பவாதி, நிறம் மாறும் பச்சோந்தி.
(ஆனால் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தார்)
இவர் எடப்பாடிக்கு அடுத்த நம்பிக்கை துரோகி.
மேலும் மேற்கண்ட இருவருமே முதுகெலும்பு இல்லாதவர்கள்.
(இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள்தான்)
ஆனால்,
தினகரன் ஓரளவு வளைந்துகொடுத்து போனாலும் முதுகெலும்புள்ளவர்,
நம்பிக்கை துரோகம் செய்யாதவர்.
சிலநேரம் பணிந்தும் சிலநேரம் பணியாமலும் மத்திய மாநில அரசுகளை ஒற்றை மனிதனாக எதிர்த்துக் களமாடுபவர்.
(சசிகலாவும் இதைப் போன்றவர்தான்)
அரசியலில் நல்லவர்களை விட வல்லவர்களே நிலைப்பார்கள்.
இந்த மூவரில் நான் சசிகலா/தினகரன் அணியை ஆதரிக்கிறேன்.
(ஒரு தெலுங்கரை முதல்வராக முன்வைக்கிறார் அதுதான் ஒரு பெரிய குறை).
மற்றபடி எனக்கு அதிமுக சிதைந்து அழிந்துபோவதே முதல் விருப்பம்.
தினகரன் நடக்கும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் திராவிடர் எனும் அடையாளத்தை விட்டுவிட்டு தமிழர் எனும் பெயரில் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மையாக முடியும்.
தமிழக மக்கள் கட்டாயம் பெரிய அளவில் ஆதரிப்பார்கள்.
(புகைப்படத்திற்கு நன்றி: உமாமகேஸ்வரன் அதங்குடியான்)
Wednesday, 15 February 2017
இனத்தால் தமிழரே! எடப்பாடி பழனிச்சாமியாரே!
இனத்தால் தமிழரே!
எடப்பாடி பழனிச்சாமியாரே!
அ.இ.அ.தி.மு.க-வை
அ.இ.த.மு.க என்று மாற்றி
கட்சியில் இருக்கும் தெலுங்கு, கன்னட, மலையாளிகளை நீக்கிவிட்டு
"இது திராவிடக் கட்சி கிடையாது, இனி இது தமிழர் கட்சி"
"தமிழனைத் தமிழனே ஆளவேண்டும்" என்று உரக்கச் சொல்லுங்கள்.
வரும் தேர்தலில் நீங்கள்தான் முதலமைச்சர்.
----------------------------
பேரறிவாளன், சாந்தன், முருகனை (தூக்குதண்டனை விலக்கி) விடுதலை செய்து,
ஈழமக்களுக்கு குடியுரிமை வழங்கி,
மீனவருக்கு சிறப்பு பாதுகாப்புப் படை ஒன்றை நிறுவி,
"தமிழருக்கு தமிழனான நான் இருக்கிறேன்" என்று உறுதியாக கூறுங்கள்.
நீங்கள்தான் அடுத்தடுத்து முதலமைச்சர்.
-----------------------------
அப்படியே தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை முடக்கி,
தமிழை மாநில ஆட்சிமொழியாக்கி,
தமிழகத்தில் உள்ள வேற்றின கா(வி)லி பயல்களை உள்ளே தள்ளி நொங்கைப்பிதுக்கி விட்டீர்களானால்,
50 ஆண்டுகளுக்கு நீங்கள்தான் முதலமைச்சர்.
-------------------------------
அப்படியே நதிநீர் உரிமைக்காக மக்களைப் போராட அனுமதித்தால்,
அண்டைமாநிலங்கள் செய்யும் அட்டூழியத்தை அப்படியே திருப்பி அவர்களுக்கு செய்தால்,
நீங்கள்தான் நிரந்தர முதலமைச்சர்.
-------------------------------