Thursday 20 November 2014

தெலுங்கு கடற்படைத் தாக்குதல்

தெலுங்கு கடற்படைத் தாக்குதல்

0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

சலிப்பாக இல்லையா?

எத்தனை நாட்களுக்குத்தான் ராமேஸ்வரம் மீனவர்கள் சிங்களவர்களால் சுடப்பட்டு சாவதையும் அதன்பிறகு அவர்கள் நடத்தும் (மானங்கெட்ட) ஒருநாள் வேலைநிறுத்தத்தையும் படிப்பது?

சென்னை மீனவன் அடிவாங்கும் கதையைச் சொல்லவா?

12,ஏப்ரல்,2014 .

100க்கும் மேற்பட்ட படகுகளில் 2000க்கும்(!!) மேற்பட்ட தெலுங்கர்கள் திடீரென தமிழக எல்லைக்குள் இருக்கும் 'சின்ன மாங்கோடு'  குப்பம் நோக்கி ஈட்டி, கத்தி, அரிவாள், கையெறி குண்டு, பெட்ரோல் குண்டுகளோடு கடல்வழி வந்து இறங்கி கண்ணில்பட்டத் தமிழனையெல்லாம் தாக்கத்தொடங்கினர்.
பீதியடைந்த தமிழக மீனவமக்கள் போட்டது போட்டபடி அருகேயிருந்த  தேவங்கோடு குப்பம் நோக்கி ஓட ஆரம்பித்தனர்.
ஏற்கனவே தகராறு நடைபெற்று வந்ததால் அங்கே பாதுகாப்புக்காக காவல்துறையினர் கொஞ்சம் இருந்தனர். ஆனால், இத்தனை பெரிய தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
வந்தவர்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்த
ஏ.டி.எஸ்.பி.ஸ்டாலின்,
இன்ஸ்பெக்டர்.ராஜா ராபர்ட்,
எஸ்.ஐ.காமராஜ் உட்பட அங்கிருந்த காவலர்களை சரமாரியாகத் தாக்கினர். இதில் 6காவலர்கள் வலுத்த காயமடைந்தனர்.
கண்ணில் பட்டவர்களை அடித்து உதைத்தவாறு அங்கே இருந்த குடியிருப்புகளில் பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்தனர்.
அங்கே இருந்த மீனவப் படகுகள் அத்தனையும் நாசமாக்கினர். உடைத்து நொறுக்கியது போக கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பினர்.
சின்னமாங்கோடு, பெரிய மாங்கோடு, பொன்னேரி ஆகிய இடங்களில் இருந்த தமிழ் மீனவர்கள் வெளியேறி ஆங்காங்கே அடைக்கலம் தேடிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
( http://dinakaran.com/News_Detail.asp?Nid=87349
http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=54966
http://www.dinamani.com/tamilnadu/2014/04/16/சின்னமாங்கோடு-கலவரம்-13-தமிழக-/article2171086.ece?service=print )

இந்த நிகழ்வுக்கு மூலகாரணம் தெலுங்கர்களின் அத்துமீறல்தான்.
தமது பகுதியில் மீன்வளம் இருந்தும் தெலுங்கர்கள் பெருமளவில் எல்லைதாண்டி தமிழக எல்லைப்பகுதிகளில் வந்து மீன்பிடித்துவந்தனர். தமிழக மீனவர்கள் தட்டிக்கேட்டால் தாக்கவும் செய்தனர். இதனால் அடிக்கடி அங்கே மோதல்கள் நடந்துவந்தன.
கடற்கொள்ளையர்கள் போலக் குழுவாக சேர்ந்துகொண்டு ஆயுதங்களை வைத்துக்கொண்டு தனியாக வரும் தமிழக படகுகளை நிறுத்தி கொள்ளையடிப்பது, தமது படகில் வேலைகள் எதாவது செய்துதரச் சொல்வது, ஆள்கடத்தல் செய்து ஆந்திராவுக்குள் அழைத்துச்சென்று மறைத்து பணம் பெற்றபிறகு விடுவிப்பது என்று அட்டூழியங்கள் கடந்த 4ஆண்டுகளாக அதிகரித்துவவருகின்றன.
( http://www.dinamalar.com/news_detail.asp?id=791776&Print=1
http://m.oneindia.in/tamil/news/2008/06/03/tn-100-kasimedu-fishermen-kidnapped-by-ap.html
http://m.oneindia.in/tamil/news/2008/08/28/tn-168-kasimedu-fishermen-rescued-from-ap.html )

இவர்களுக்கு வழிகாட்டி சிங்கள மீனவர்கள்.
தமிழக மீனவர்கள் கச்சத்தீவையே நெருங்கமுடியாத போது சிங்க மீனவர்கள் வசதியாக முழுதமிழகத்தையும் தாண்டி ஆந்திராவரை வந்து மீன்பிடிக்கிறார்கள். தட்டிக்கேட்க யாருமே கிடையாது. அப்படியே பெயருக்கு சிறைபிடிக்கப்பட்டாலும் 'மாப்பிள்ளை'போல சென்னை ஆட்சித்தலைவர் முன்னிறுத்தப்பட்டு 'மறுவீடு' செல்வதுபோல புழல்சிறையில் ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு விடுதலையாகிவிடுகிறார்கள்.
அதிலும் இந்த சிங்கள மீனவர்களிடம் ஹிந்திய கடற்படைக்கு இருக்கும் காதலை விவரிக்க எழுத்தாளர் சாண்டியல்யனால்கூட முடியாது.

ஆந்திரா அருகே சிங்களரைக் கண்டதும் இந்தியக் கடற்படையினர் ஓடிஞ்சென்று கைகுலுக்கி ராஜபக்சவின் நலம் விசாரித்துவிட்டு வருவார்கள். எப்போதாவது பெயருக்கு கைது(?) செய்து ஆந்திராவுக்குக் கொண்டுபோகாமல் தமிழகத்துக்குக் கொண்டுவருவார்கள்.
ஏன் தெரியுமா? ஆந்திர அரசிடம் ஒப்படைத்தால் நூறாயிரம் (ஒரு லக்சம்) ரூபாய் வரை தண்டம் விதிப்பார்கள். இதை ஹிந்தியர்களின் மனம் தாங்குமோ?!
தமிழன் இளிச்சவாயன் தானே! இட்டளி சாம்பாரோடு விருந்து கவனித்து வீட்டுக்கு அனுப்ப தமிழகமே சிறந்த இடமன்றோ!

ஹிந்தியன்தான் தமிழக மீனவன் நடமாட்டத்தை சிங்களவனுக்கு காட்டிக்கொடுப்பான் உடனே சிங்கள கடற்படை வந்து சுடும், தமிழக மீனவனை விரட்டிவிட்டபிறகு சிங்கள மீனவன் வந்து மீன் அள்ளிப்போக வசதியாக இருக்கும்.
இதோடு நில்லாமல் சிங்களவருக்காகத் தமிழக மீனவனை தாக்கக்கூட செய்துள்ளது ஹிந்திய கடற்படை.
( http://m.oneindia.in/tamil/news/2013/08/02/tamilnadu-indian-navy-attacks-karaikal-fisher-180421.html )

ஹிந்தியனும், தெலுங்கனும், சிங்களனும் கூட்டுச்சேர்ந்து தமிழனைக் கொள்ளையடித்துவருகின்றனர். அதன் ஒரு வடிவம் இந்த கடல் கூட்டணி.
கூடிய விரைவில் மலையாளியும் இக்கூட்டணியில் இணைவனாக.

ஹிட்லர் சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.
"ராணுவமில்லாத இனம் அனாதை இனமே".

நல்லவேளையாக எல்லாத் தமிழனும் சுரணையற்றவன் என்ற முடிவுக்கு வரவிடாமல் சில நிகழ்வுகள் தடுக்கின்றன.

தாக்கிய சிங்களரைத் துரத்திப் பிடித்த காசிமேடு மீனவர்கள்
http://m.oneindia.in/tamil/news/2008/04/12/tn-10-lankan-fishermen-nabbed-by-chennai-fishermen.html
மீனவர் தாக்குதலுக்குப் பதிலடியாக எழும்பூர் புத்த மடாலயம் தாக்குதல்
http://www.yarl.com/forum3/index.php?/topic/81280-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/

No comments:

Post a Comment