Saturday 8 November 2014

பூலித் தமிழனும் கெட்டி வடுகனும்

பூலித் தமிழனும்
கெட்டி வடுகனும்

கட்டபொம்மன் ஆன கெட்டிபொம்மு நாய்க்கென்:

கெட்டிபொம்மு நாய்க்கெனின் முப்பாட்டன் ஜெகவீர கெட்டிபொம்மு நாய்க்கென் என்ற தெலுங்கன் பெல்லாரி என்ற இடத்திலிருந்து வந்தவன். இவன் குறுக்குவழியில் பாஞ்சாலங்குறிச்சி அரசைக் கைப்பற்றினான்.
வந்தேறிகள் அப்போது தமிழர்களை வரைமுறையில்லாமல் சுரண்டிக்கொண்டிருந்த காலம்.
ஆங்கிலேயரை எதிர்த்து முதன்முதலாக வீரப்போரைத் தொடங்கிய பூலித்தேவன் மற்றும் பெரிய காலாடி, சின்னக்காலாடி, வாண்டாயத்தேவன் கூட்டணிக்கு எதிராக கெட்டிபொம்முவின் தாத்தா (அவர் பெயரும் கெட்டிபொம்மு) ஆங்கிலேயருடன் இணைந்து போர்நடத்தினார்.
பூலித்தேவன் வீரமரணமடைந்து (1767) இருபத்தி மூன்று ஆண்டுகள் கழித்துதான் 1790ல் கட்டபொம்மன் என்றழைக்கப்படும் கெட்டிபொம்மு ஆட்சிக்கு வருகிறான். தாத்தா காலத்திலிருந்து வெள்ளையனுக்கு ஆதரவாக இருந்தவன் அடாவடியாக வரிகொடுக்க மறுக்கிறான்.
கலெக்டர் ஆலன்துரை கெட்டிபொம்மு மீது படையெடுக்கிறான். ஆனால், கெட்டிபொம்முவைத் தோற்கடிக்கமுடியவில்லை. பொம்மு தன் ஆட்சியின் கீழுள்ள மக்களைக் கொடுமைப்படுத்தி கொடுங்கோலாட்சி புரிகிறான்.பக்கத்து பாளையமான எட்டயபுரத்தைப் பலமுறைக் கொள்ளையடிக்கிறான். இதுகுறித்து எட்டையபுர மன்னர் ஆங்கிலேயரிடம் முறையிடுகிறார். அப்போது புதிதாக வந்த மாவட்ட கலெக்டர் ஜாக்சன்  கெட்டிபொம்முவை எச்சரிக்கிறான். வரியோடு வந்து தன்னை நேரில் சந்திக்குமாறு உத்தரவிடுகிறான்.
வரியோடு வந்த கெட்டிபொம்முவுக்கு பாடம் கற்பிக்கும்வகையில் 23நாட்கள் அவனை ஒவ்வொரு இடமாக அலைக்கழித்து இராமநாதபுரம் வரை வரவைக்கிறான். இந்த சந்திப்பின்போது ஜாக்சனுக்கும் கெட்டிபொம்முவுக்கு வாக்குவாதம் வந்து அங்கிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கெட்டிபொம்மு தப்பிவிடுகிறான். உடனே பானர்மேன் தலைமையில் ஆங்கிலேயர்கள் கெட்டிபொம்முவை தோற்கடித்து, தப்பியோடிய அவனை புதுக்கோட்டை மன்னன் உதவியுடன் சிறைபிடித்து தூக்கிலிடுகின்றனர்.
இதற்கெல்லாம் கெட்டிபொம்மு மீது எட்டையபுர மன்னர் அளித்த புகார்கள் இன்றும் சான்றாக உள்ளன. எட்டப்பன் கெட்டிபொம்முவைக் காட்டிக்கொடுத்ததாக எந்த சான்றும் இதுவரை இல்லை.
கெட்டிபொம்முவால் மக்களுக்கு நன்மை நடந்ததாக எந்த செய்தியும் இல்லை. ஆங்கிலேயருக்கும் நாயக்கர்களுக்கும்  மக்களைச் சுரண்டுவதில் ஏற்பட்ட போட்டியே இது.
ஆனால், இவனை வெள்ளையரை முதன்முதலாக எதிர்த்தவன் என்று திரிக்கின்றனர்.

காத்தப்ப பூலித்தேவனார்:

1755ல் மாபூஸ்கான்(ஆற்காடு நவாப் பரம்பரை) கர்னல் ஹீரான்(ஆங்கிலேயர்) கான்சாகிப் (மருதநாயகம்) ஆகியோர் கூட்டணி அமைத்து பாளையங்களாகச் சிதறிக்கிடந்த தமிழகத்தை கைப்பற்றத் தொடங்கினார்கள். பல பாளையங்கள் அடிபணிந்தன. முதன்முதலாக அந்த பெரிய நவீனமான படையை எதிர்த்து போர்புரிந்தவர் பூலித்தேவனே ஆவார்.
பக்கத்தில் இருந்த பாளையங்களுடன் கூட்டணி அமைத்து ஆங்கிலேயர் படையை 1755ல் தோற்கடிக்கிறார். 12மாதங்கள் கழித்து1756ல் மீண்டும் பெரிய படையோடு வந்தவர்களை திருநெல்வேலியில் மீண்டும் தோற்கடிக்கிறார்.
1759ல் மீண்டும் கான்சாகிப் தலைமையில் நாகப்பட்டினத்தில் இருந்து படை, திருச்சியில் இருந்து படை, தூத்துக்குடியில் இருந்து படை, பாளையங்கோட்டையில் இருந்து படை, மதுரையில் இருந்து படை, திருவனந்தபுரத்தில் இருந்து படை என பெரிய படையைத் திரட்டிக்கொண்டுவந்து போரிட்டனர்.
ஆனால், பூலித்தேவரிடம் எதுவும் பலிக்கவில்லை, போரில் பூலித்தேவர் மாபெரும் வெற்றிபெற்றார்.
ஆற்காடு நவாப் மாபூஸ்கான் உட்பட பலர் பூலித்தேவர் வீரத்தைப் பார்த்து வியந்து அவருடன் சேர்ந்துகொள்கின்றனர்.
1760ல் மீண்டும் கான்சாகிப் படையெடுத்துவந்தான். இம்முறையும் நான்காவது முறையாகப் பூலித்தேவனார் அவனைத் தோற்கடித்தார்.
1761ல் மீண்டும் பெரிய படையுடன் கான்சாகிப் ஆங்கிலேயர் ஆதரவுடனும் போரிட்டான். இம்முறை பூலியார் தோற்றுவிட்டார்.
(தோற்கடித்த கான்சாகிப் அதாவது மருதநாயகம் ஒரு தமிழன் என்பதை நினைவில் கொள்க. இவனே வெள்ளையருக்கு பெரும்சவாலாக விளங்கிய ஹைதர் அலியையும் தோற்கடித்தவன், பிற்காலத்தில் ஆங்கிலேயருடன் முரண்பட்டு மதுரையைத் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். ஆங்கிலேயர் சூழ்ச்சிசெய்து தொழுகையின்போது இவனைக் கைது செய்து பின் தூக்கிலிட்டனர்)

பூலியார் நற்செயல்கள்:

சங்கரன்கோவில் கோவிலுக்கு சபாபதி மண்டபம் கட்டியுள்ளார், தெப்பக்குளமும் வெட்டியுள்ளார்.
கரிவலம் வந்தநல்லூர் பால்வண்ணநாதர் ஆலயத்துக்கு முன்மண்டபம் கட்டியுள்ளார், ஆலயத்துக்குத் திருத்தேரும் வெள்ளி ஆசனங்களும் செய்தளித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்க நகைகள், வைரஅட்டிகைகள் செய்துதந்துள்ளார்.
தாருகாபுரத்தில் 16 கால் மண்டபத்தைக் கட்டி அன்னதானம் செய்தவந்தார். அதுமட்டுமல்ல, சீவலப்பேரி மருகால்தலையில் பூலுடையார் கோவில் மண்டபம் கட்டியவரும் அவரே.
நெல்லையில் வாகையம்மன் கோவிலை கட்டியவர் பூலித்தேவரே.

பூலித்தேவனார் கெட்டிபொம்மு ஒப்பீடு:

புலித்தேவன் படையில் காலாடிப்பள்ளர்கள் இருந்தது போல கெட்டிபொம்முவின் (கொள்ளையடிக்கும்)படையில குடும்பப்பள்ளர்கள் இருந்ததையும் ஒப்பிட்டு இருவரும் ஒரே சிந்தனையைக் கொண்டவர்களாகப் பொய்யுரைக்கிறார்கள்.
'ஆப்பநாட்டு கொண்டயங்கோட்டை மறவனான' புலித்தேவன் தன் நண்பன் காலாடிக்கு நடுகல் நட்டு பெருமைப்படுத்தினான். புலித்தேவன் சிந்தில் காலாடி, ஒண்டிவீரன் உட்பட அனைவரைப் பற்றிய பாடல்களும் உண்டு.
கெட்டிபொம்மு குடும்பப் பள்ளருக்கு நடுகல் நட்டானா? சிந்து பாட வைத்தானா? இல்லை புலித்தேவன் காலாடிப் பள்ளன் வீரமரணம் அடைந்தபோது தன் மடியில் கிடத்தி ஊர்கூட்டி ஒப்பாரி வைத்தது போல் குடும்பனை மடியில் கிடத்தி ஒப்பாரி வைத்தானா?
பூலித்தேவனார் வீரம்கண்டு வியந்த மிடேமியா என்ற இசுலாமியர் ஆற்காட்டு நவாபிடமிருந்து வெளியேறி பூலியாருடன் சேர்ந்தவர்களில் ஒருவர். அவர் மார்பில் குண்டுவாங்கி பூலியார் மடியில் உயிர்விட்டவர். அவருக்கும்கூட நடுகல் நட்டுள்ளார் பூலித்தேவனார்.
வாசுதேவநல்லூரில்
அல்லா தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. இங்கேதான்  மாபூஸ்கானும் அவரது இசுலாமிய வீரர்களும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பூலியார் அவர்களுக்கு பள்ளிவாசலும் கட்டிக்கொடுத்தார். அவர்களுக்கு முன்பே பூலியார் படையில் பீர்முகமது சாயபு என்ற இசுலாமியத் தளபதி இருந்துள்ளார்.
கெட்டிபொம்மு எப்படி இவருக்கு ஈடாவான்?

இன்று:
வந்தேறிகள் ஆட்சியில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படமானது தெலுங்கரான பந்துலு என்பவரால் பணம்போட்டு இயக்கி வெளியிடப்பட்டு தமிழக மக்களை முட்டாளாக்கிவைத்துள்ளது.
பூலியார் பற்றிய ஒரு குறும்படம் கூட இல்லை.
கெட்டிபொம்முவின் இடிந்த கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டு உள்ளே தொல்பொருள்(?!)ஆய்வுமையமும் உள்ளது.
இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கிவருகிறது.
தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன.
அவன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் நினைவிடமும், நினைவுத்தூணும், கல்வெட்டும், உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளன.
பூலித்தேவனுக்கு நெற்கட்டும்செவலில் ஒரேயொரு நினைவு மண்டபமும் அவரது பெயரில் திருமண(?!)மண்டபமும் உள்ளது. அதன்வாசலில் ஒரேயொரு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கெட்டபொம்முபயன்படுத்திய ஆயுதங்கள், அவன் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு 'அரசு அருங்காட்சியகத்தில்' பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவனுக்கு அஞ்சல் தலைகூட வெளிவந்துள்ளது.
பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு அவரது நினைவுமண்படத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
அவை எந்த அரசுத்துறையின்கீழும் இல்லை. ஆய்வுகள் எதுவும் நடைபெறவும் இல்லை.

வந்தேறிகள் வரலாற்றையே வளைத்துவிட்டனர். செந்தில், கருணாஸ், அருண்பாண்டியன், கார்த்திக் போன்ற நடிகர்களை அழைத்துவந்து ஒரு சாதிக்கூட்டம் பூலியாருக்கு விழா எடுக்கிறது.
புலியாரும் பூலியாரும் வரலாற்றின் சில பக்கங்களை பிச்சைகேட்டு நிற்கும் நிலை இனியும் தொடருமா?

https://m.facebook.com/photo.php?fbid=511482995622025&id=100002809860739

1 comment:

  1. //பூலித்தேவன் வீரமரணமடைந்து (1797) இருபத்தி மூன்று ஆண்டுகள் கழித்துதான் 1790ல் கட்டபொம்மன் என்றழைக்கப்படும் கெட்டிபொம்மு ஆட்சிக்கு வருகிறான்.//
    திரு.ஆதி , இந்த பத்தி சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது . பூலித்தேவன் வீரமரணமடைந்து (1797) இருபத்துமூன்றாண்டுகளுக்குப் பிறகு 1790 என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் . அதைத் திருத்தி சரியான ஆண்டைக் குறிப்பிடவும் . நன்றி !

    ReplyDelete