Showing posts with label பாட்டாளி மக்கள் கட்சி. Show all posts
Showing posts with label பாட்டாளி மக்கள் கட்சி. Show all posts

Sunday, 27 March 2016

பா.ம.க - சில மறைக்கப்பட்ட தகவல்கள்

பா.ம.க - சில மறைக்கப்பட்ட தகவல்கள்

*துணைராணுவம் வந்து 21 பேரைச் சுட்டுக்கொல்லும் அளவுக்கு தீவிரமாக நடந்த இடவொதுக்கீடு போராட்டம்

* பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே சிறை என்ற நிலையில் 1992 ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு.

*பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் ஜான் பாண்டியனை (பள்ளர்) வைத்து அழகு பார்த்தார் இராமதாஸ்.

* பசுபதி பாண்டியனுக்கு(பள்ளர்)  பொருளாளர் பதவியை கொடுத்தார் இராமதாஸ் ஐயா.

*1998 ஆம் ஆண்டு பா.ம.க விற்கு கிடைத்த நடுவண் அமைச்சர் பதவியை எழில்மலை (பறையர்) அவர்களுக்கு கொடுத்து பட்டியல் சாதி மக்களை (SC/ST) பெருமை படுத்தினார் இராமதாஸ் ஐயா.
பொன்னுசாமி என்ற பறையரையும் அமைச்சராக்கியுள்ளார்.

*முருகவேல்ராஜன், சிவகாமி வின்சென்ட், கிருஷ்ணன், போன்ற பட்டியல் சாதியினரை
MLA ஆக்கியுள்ளார் இராமதாஸ் ஐயா.

*தென் மாவட்டங்களில் ஒரேநாளில் 9 அம்பேத்கர் சிலைகள் வைத்தவர் இராமதாஸ் ஐயா.

*கொடியன்குளம் (பள்ளர் பெரும்பான்மை) ஊரில் 1995 ல் ஜெயலலிதா ஏவிவிட்ட காவல்துறை வன்முறைச் சம்பவம் நடந்தபோது,
அரசு தடையை மீறி பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூறி ஆயிரக்கணக்கான பா.ம.க வினருடன் சென்று கவர்னரிடம் கொடியன்குளம் பிரச்னையை தீர்க்க மனு கொடுத்தார் ராமதாஸ் ஐயா.
இழப்பீடும் தரச்செய்தார்.

*வடிவேல் இராவணன் (பள்ளர்) அவர்களுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளார்கள்.
பொதுச்செயலாளர் பதவி பட்டியல் சாதியினருக்கே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

*கவனிப்பின்றி இருந்த இமானுவேல் சேகரன் (பள்ளர்) கல்லறையை தூய்மை படுத்தி 47 லட்சம் செலவு செய்து மணிமண்டபம் கட்டினார் ராமதாஸ் ஐயா

*தமிழகத்தில் மீனவர் மக்கள் திருவள்ளுர் முதல் கன்னியாகுமரி வரை இருந்தாலும்,
அவர்களில் ஒருவர் கூட M.P ஆனதில்லை.
முதல் முறையாக பா.ம.க தான் மீனவர் சமுகத்தை சேர்ந்த பேராசிரியர் ராமதாஸ் என்பவரை புதுச்சேரியில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்தார் ராமதாசு ஐயா

*அருந்ததியர் (தெலுங்கு சக்கிலியர்) சமூகத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியிலும் மாவட்ட செயலாளர் கிடையாது,
நாமக்கல் மாவட்ட செயலாளராய் முதன்முதலாக ஒரு அருந்ததியரை நியமித்தார் இராமதாசு ஐயா

*M.P தேர்தலில் அருந்ததியினரை வேட்பாளாராக கூட எந்த கட்சியும் நிறுத்தியது இல்லை.
இராமதாஸ் ஐயா முதன்முதலாக அச்சமூகத்து பெண் ஒருவரை ராசிபுரம் தொகுதியில் வேட்பாளாராய் நிறத்தினார்.

*பல சாதிகளைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.

#பாமக வின் விழுப்புரம் மாவட்டத் தலைமை வானூர் சங்கர் (பறையர்)

# பாமக வின் பொருளாளர் அக்பர் அலி சையத்

#திருப்பூர் மாவட்ட செயலாளர் ஒரு அருந்ததியர் (சக்கிலியர்)

#குடந்தை நால்ரோடு செயலாளர் பன்னீர் (பறையர்)

#மாநில இளைஞர் சங்க துணை பொது செயலாளர் விடியல் ஜகந்நாதன் உப்பிலிய நாயக்கர்.

#ஈரோடு மாநில துணை தலைவர் வடிவேல் ராமன் (அருந்ததியர்)

#தெலுங்கு கன்னட சாதிகள் உட்பட பலரும் மாவட்டசெயலாளராக உள்ளனர்

*AIMS மருத்துவமனையில் SC/ST இடஒதுக்கீட்டை உறுதி செய்தவர் முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி இராமதாசு அவர்கள்.

*சென்னையில் உள்ள சித்தமருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் பண்டிதர் அயோத்தி  தாசர் (பறையர்) சிலையை திறந்தார் அன்புமணி.
இதற்காக பட்டியலின தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை அழைத்துவந்தார் அன்புமணி இராமதாசு.

*பசுமைதாயகம் அமைப்பு சார்பில் ஐ.நா மன்றத்தில் அன்புமனி அவர்கள் கலந்துகொண்டு இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என ஆணித்தரமாக வாதிட்டார்.

*தொலைக்காட்சி மூலம் செய்து வரும் தமிழ்த் தொண்டு

*பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வு இரத்து போராட்டம்

* இலாட்டரி சீட்டு ஒழிப்பு போராட்டம்

* மது ஒழிப்பு போராட்டம்

* சமச்சீர் கல்விக்கான போராட்டம்

* தமிழகம் முழுவதும் அகல இரயில்பாதை கொண்டுவரப் போராட்டம்

* மத்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு

*தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளில் இடவொதுக்கீடு கொண்டுவந்தது

*அரியலூரில் இரட்டைக்குவளை முறை ஒழிப்பு

*70 இருளர் இன மக்கள் குடும்பங்பளுக்கு போராடி வீட்டுமனை பட்டா வாங்கி கொடுத்தது

* 108 அவசர ஊர்தி சேவை திட்டம் அமலாக்கம்

* பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடைச்சட்டம் ஏற்படுத்தியது

* புகை, மது போன்ற பொருட்களில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்தது

* தமிழக்த்தில் 2000 அரசு மதுபான கடைகளை மூட நீதிமன்றம் வரை போராடி வென்றது.

*இசுலாமியருக்காக கோவை கோட்டை மேடு செக் போஸ்ட் எதிர்ப்பு போராட்டம்.

*இஸ்லாமியர்களுக்கு எதிரான.தடா சட்டத்தை எதிர்த்து போராடி சிறை சென்றது.
இஸ்லாமியர்கள் கூட்டம் நடத்த பரவலாக தடை விதிக்கப்பட்ட சூழலில் தடையை மீறி கூட்டங்கள் நடத்தி இஸ்லாமியர்கள் மீதான தடாவை விலக்கிக்கொள்ள வைத்தது.

*குறிஞ்சாகுளம் காந்தாரி அம்மன் கோயில் (பறையர்) போராட்டத்தை முதன்முதலில் முன்னெடுத்தது,
அப்போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமியின் (பள்ளர்) மீது தாக்குதல் நடந்த பொழுது சம்பவ இடத்திற்கே சென்று போராட்டத்தை வீரியமாக்கினார் இராமதாஸ் ஐயா.

*குடிதாங்கி என்ற ஊரில் பறையர் பிணத்தை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்த வன்னியரை அடக்கி தாமே அதை எடுத்துச் சென்றார் இராமதாசு ஐயா.
(தமிழ்க் குடிதாங்கி என்ற பட்டம் திருமாவளவனால் (பறையர்) வழங்கப்பட்டது)

*வீரப்பனார் (படையாச்சி) பற்றிய தொடர்

*காவிரி கலவரத்தின்போது துணிச்சலான அறிக்கை

இதுபோக
ரஜினியை (மராத்தியர்) கதறவிட்டது, கருணாநிதியைக் (தெலுங்கர்) கதறவிட்டது, ஸ்டாலினை (தெலுங்கர்) தெறிக்கவிட்டது என மேலும் பல