முதலில் நாம் பேசுவது தேசியமா?
நாம் தற்போது தமிழ்தேசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்! உண்மையில் தேசியம் என்றால் என்ன என்கிற புரிதல் நம்மிடம் இல்லை.
தேயம் என்கிற தூய்மையான தமிழ்ச் சொல்லுக்கு "குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பு" என்று பொருள் (வேற்றினத்தார் வாழ்விடங்கள் "மொழிபெயர் தேஎம்" என்று இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது).
தற்போதைய தமிழ்நாடு (மாநிலம்) மட்டும்தான் நமது தேசம் என்பது தவறு!
(ஆதித்தனார் சிந்தனைப்படி) அண்டை மூன்று மாநிலங்களிடம் இழந்தவை, புதுச்சேரி மற்றும் ஈழம் ஆகியவற்றை சேர்த்தே இனி தேசியம் பேசவேண்டும்.
தமிழ்தேயம் தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தைப் போல் ஒன்றரை பங்கு வரும் (தமிழ்நாடு பரப்பளவு ஏறத்தாழ 1,30,000 ச.கி.மீ; தமிழ் தேச பரப்பளவு ஏறத்தாழ 2,20,000 ச.கீ.மி ஆகும்). தமிழ்தேயம் உலகில் கால்வாசியை ஆண்ட இங்கிலாந்து தேசத்தை விடப் பெரியது. ஏறத்தாழ தற்போதைய ஜெர்மனி பரப்பளவு வரும்.
நமது மாநிலத்திற்கு தமிழ்'நாடு' என்று நாம் பெயர் வைத்திருக்கிறோம். நாடு என்பது நிர்வாக அடிப்படையிலானது. அதாவது ராணுவ வேலி போடப்பட்ட நிலப்பரப்பு 'நாடு' என்றாகும்.
ஒரு நாட்டில் பல தேசங்கள் இருக்கலாம் (இந்தியாவைப் போல). ஒரு தேசத்தில் பல நாடுகளும் இருக்கலாம் (பழங்காலத்தில் தமிழ்தேயத்தில் பல நாடுகள் இருந்தன; இருந்தாலும் தமிழ்தேயம் எது என்கிற புரிதலும் சங்ககாலத்தில் இருந்தே நம்மிடம் இருந்து வந்துள்ளது). தமிழ்நாடு என்பது நில நிர்வாகம் மற்றும் காவல்படை கொண்ட நிர்வாக அமைப்பு ஆகும். இது 'நாடு' எனும் சொல்லுக்கு முழுமையான தகுதியற்றது.
(தமிழ்நாடு தாண்டிய) தமிழ்தேயம் தற்போதும் இருக்கிறது. ஆனால் இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் கீழ் உள்ளது. ஒரு தேசம் அந்நிய ஆட்சியில் எவ்வளவு காலம் இருந்தாலும் அது சுரண்டப்படலாம் ஆனால் சுருங்காது (எ.கா: பிரிட்டிஷ் இந்தியா).
அதுவே அந்நிய குடியேற்றம் நடந்தால் சுருங்கி வலுவிழந்து அழிந்துவிடும் (எ.கா: அமெரிக்கா). தமிழ் தேசமானது அந்நிய குடியேற்றங்களால் எல்லைகளை இழந்து சுருங்கிக்கொண்டும் வலுவிழந்தும் வருகிறது.
தேசியம் என்பது தேசத்தை (ஒற்றை) நாடாக்கி தன்வலுவில் ஆளும் கொள்கை ஆகும்.
தமிழ்தேசத்தை தனிநாடாக அமைக்க வேண்டும் என்பதால் அந்த அமையவுள்ள நாட்டை "தனித் தமிழர்நாடு" என்று அழைக்கிறோம்.
தேசம் எவ்வளவு பெரியது என்று தெரியாமல் தேசியம் பேசுவது அறிவுடைமை ஆகாது.
எப்போதுமே தேசத்தை நாடாக்குவது இனத்திற்கு பெரிய நன்மையில் முடியும்.
வளர்ந்து நிற்கும் ஐரோப்பிய நாடுகள் சான்று.
ஐரோப்பிய இனங்கள் தமது தேயத்தை நாடு ஆக்கி தத்தம் தாய்மொழியில் நிர்வாகம் செய்கின்றன.
ஒரு இனம் தனது மண்ணின் மைந்தனை ஆட்சியில் அமரவைத்து தனது மொழியால் நிர்வாகத்தைக் கட்டமைத்து தன்னைத் தானே ஆளும்போது வெளிப் பிரச்சனைகளை எளிதாக எதிர்கொள்ளமுடியும் என்பதுடன் உச்சபட்ச தலைமையிலிருந்து கடைக்கோடி குடிமகன் வரையிலான இடைவெளியானது மிகவும் குறையும்.
தலைமை தவறானால் நீக்குவதும் எளிதாக இருக்கும்.
மிகப்பெரிய போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி ஒரு வாரம் கழித்துதான் இந்தி சேனல்களில் ஒரு வரிச் செய்தியே வருகிறது. பத்து நாட்களாக லட்சக் கணக்கில் திரண்டு போராடினால்தான் மத்திய அமைச்சர் நமக்கு பத்து நிமிடம் ஒதுக்கிறார்.
100 உயிர் போனால்தான் இந்தியா முழுக்க அந்த பிரச்சனை கவனம் பெறுகிறது.
சமீபத்தில் பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு நடத்திய மிக நீண்ட போராட்டம் பற்றி நாம் அறிவோம்.
வடமேற்கு இந்தியா முழுவதும் எல்லையற்ற ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாபியருக்கே இந்நிலை என்றால் கடைக்கோடியில் இருக்கும் நம் நிலை என்ன?
நம்மால் டெல்லியை முற்றுகை இடுவதை நினைத்துப் பார்க்க முடியுமா?
தொலைவு, மொழி, அரச்கட்டமைப்பு என நமக்கும் உச்ச அதிகாரத்திற்கும் இவ்வளவு இடைவெளி நியாயம்தானா?!
இதுவே நமது உச்ச அதிகாரம் சென்னை என்றால்? நம்மால் நினைத்ததை சாதிக்க முடியும்தானே?!
தற்போது தமிழ் உணர்வுடன் பேசினாலே தேசத் துரோகி என்றழைக்கும் போக்கும் இன்று உள்ளது.
தேசப்பிதா என்றழைக்கப்படும் காந்தியடிகள்தான் மொழிவாரியாக காங்கிரஸ் கட்சியை பிரித்துக் கட்டமைத்து மொழிவழி மாநிலங்களை அமைக்க முதல் வித்திட்டவர். அக்காலத்தில் மொழிவழி இனங்களுக்கான உரிமைகள் அளிப்பது பற்றிய வாக்குறுதிகள் எதுவும் இந்தியா விடுதலையான பிறகு நிறைவேற்றப்படவில்லை. சுருக்கமாகக் கூறினால் அன்று ஆங்கிலேயர் சமஸ்தானங்களுக்கு அளித்த உரிமைகள் கூட இன்று மாநிலங்களுக்கு நடுவணரசு அளிக்கவில்லை (புதுக்கோட்டை சமஸ்தானம் அம்மஞ்சல்லி எனும் தனி காசு வைத்திருந்தது).
தற்போதைய இந்தியா என்பது தமிழர்களின் ஒட்டுமொத்த குரலைக் கூட (தமிழ்நாடு அனைத்துக் கட்சித் தீர்மானம்) மதிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு சர்வாதிகாரம் பெற்று விளங்குகிறது.
அதாவது நம் முன்னோர்கள் கேட்ட (கூட்டரசு) இந்தியா வேறு!
இன்று இருக்கும் (ஏகாதிபத்திய) இந்தியா வேறு!
இருந்தும் விடுதலைக்கு பிறகு நம்முடைய முன்னோர் போராடி நமது இனத்தின் தாய்நிலத்தில் 65% நிலப்பரப்பை பகுதியளவு நிர்வாகம் செய்யவாவது வழிவகுத்தனர்.
இதுவே இன்றைய தமிழ்நாடு மாநில அதிகாரம்.
அதையும் திராவிடம் என்கிற பெயரில் சதிசெய்து வேற்றினத்தார் கைப்பற்றிக் கொண்டுள்ளனர்.
"தமிழ் வளர்ச்சிதான் இன வளர்ச்சி" என்றும் "சாதியை ஒழிப்பதே இனத்தை ஒருங்கிணைக்கும்" என்றும் நம்மை மூளைச் சலவை செய்து தமது (வேற்று) மொழியையும் தமது (வேற்றின) சாதி அடையாளத்தையும் மறைத்துக்கொண்டு தமிழராக நடித்து நம் தலைமேல் ஏறி உட்கார்ந்துகொண்டு இனத்தையும் மண்ணையும் அழிக்கும் வேலையைச் செய்துகொண்டுள்ளனர். இவர்கள் தமிழில் பேசுவதால் சாதியை வைத்தே அடையாளம் காண முடியும் எனும் நிலையில் இனவுணர்வு கொண்டோரை "சாதியை ஆராயும் வெறியன்" என்றழைக்கும் போக்கு இவர்களிடம் உள்ளது.
அண்டை மாநிலங்கள் தமது மண்ணையும் மக்களையும் காப்பதில் குறியாக இருக்கும்போது இங்கே திராவிடம் அதைச் செய்வதில்லை. இதனால் நமது ஆற்று மணலும் மலையும் கொள்ளை போகிறது. ஒரு மலையாளிக்கு பக்கத்தில் ஒரு ஆற்றில் மணல் அள்ளுவதை விட காவிரியில் வந்து மணல் அள்ளுவது கடினமில்லை. பணம் செலவளித்து தமிழக எல்லையில் வந்து குப்பை கொட்டுகிறார்கள். ஏனென்றால் இயற்கை வளங்களைக் காக்க அம்மாநிலங்களில் கடுமையான சட்டங்கள் உள்ளன.
தற்போது கேரளாவில் அதானி துறைமுகம் அமைக்க தமிழக மலைகளைக் குடைந்து கணக்கு வழக்கில்லாமல் கொண்டு செல்கிறார்கள்.
ஏன் கேரளாவில் மலைகளே இல்லையா?!
அந்த எல்லைப் பகுதிகளில் பாஜக வேகமாக வளர்ந்துவருகிறது ஏனென்றால் பின்னணியில் அதானி இருக்கிறார்!
காவிரிப் பிரச்சனையும் இதே பின்னணிதான் அளவுக்கதிகமாக கர்நாடகா தண்ணீர் சேர்த்துவைத்து அதை தொழிற்சாலைகளுக்குத் தருகிறது. தமிழகத்தில் தண்ணீர் இல்லாத ஆற்றில் மணல் அள்ளுகிறார்கள். மொத்த தமிழகமும் ஆந்திராவிடம் அரிசி வாங்குகிறது என்றால் அது மிகையில்லை. இதனால் திராவிட கட்சிகளுக்கு அண்டை மாநில பணக்காரர்கள் நிதியுதவி செய்கின்றனர். இப்படி தமிழக அரசியல்வாதிகளுக்கு நல்ல வருமானம் வருகிறது என்பதால் அவர்கள் மதம், சாதி என்று மக்களை மடைமாற்றியே காலம் கழிக்கின்றனர். இந்த நாடகத்திற்கு பாஜக உடந்தையாக போலிச் சண்டை போடுகிறது. ஆந்திராவில் சுங்கச்சாவடியில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டபோது மக்களை மடைமாற்ற கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்தை பெரிதாக்கி தீவிரவாதம் மதவாதம் என்று திராவிட மற்றும் இந்துத்துவ அரசியல்வாதிகள் அரசியல் செய்தது சிறந்த எடுத்துக்காட்டு.
வேலைவாய்ப்பு பறிப்பும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. காங்கிரஸோ அல்லது பாஜகவோ ஆளும் மாநிலங்கள் அனைத்தும் தமது மண்ணின் மைந்தருக்கே வேலை என்று சட்டம் போட்டுள்ளன. தற்போது ஓசூரில் டாடா நிறுவனத்திற்கு தனி ரயிலில் 800 பெண்கள் வந்து இறங்கியபோது எழுந்த எதிர்ப்புக்கு அந்த நிர்வாகம் கூறிய காரணம் இங்கு 'மண்ணின் மைந்தருக்கு வேலை' என்று சட்டம் இல்லை என்பதே!
பிற மாநிலங்களில் நமக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. நமது மாநில அரசு வேலைவாய்ப்பும் நமது மாநிலத்தினுள் மத்திய அரசு வேலைகளும் முழுக்க வடவர் கைக்குப் போகிறது.
மத்திய அரசு பழைய ஆங்கிலேய அரசை விட மோசமாக மாநில வருவாயைக் கொள்ளையடிக்கிறது (ஒரு ரூபாய் வாங்கிவிட்டு 30 பைசா கொடுக்கிறது). அத்துடன் வடவரையும் இந்தியையும் முழுமூச்சாகத் திணிக்கிறது.
கல்வி அதிகாரம் மாநில வரம்பிலிருந்து எமர்ஜென்சி காலத்தில் பறிக்கப்பட்டது இன்றுவரை தொடர்கிறது. இதன் விளைவே நீட் தேர்வு மற்றும் மாணவர் மரணங்கள். உயர்கல்வி மாணவர் சேர்க்கையும் இவ்வாறே தமிழரல்லாதவர் கைக்குப் போகிறது.
தப்பித் தவறி வாய்ப்பு கிடைத்து வெளிமாநிலங்களில் உயர்கல்வி படிக்கப்போன தமிழக மாணவர்கள் 10 பேர் வரை மர்மமாக இறந்துள்ளனர்.
காங்கிரசை விட பாஜக அரசு மாநிலங்களை நசுக்குவதிலும் இந்தி, இந்தியரைத் திணிப்பதிலும் வெளிப்படையாக மிகத் தீவிரமாக இருக்கிறது.
நமது மூல குடியான குறவர் பழங்குடி இடவொதுக்கீடு கிடைக்காமல் தாழ்த்தப்பட்ட (SC) ஒதுக்கீட்டில் இருக்க மத்திய அரசு ஆதரவினால் மராத்திய வந்தேறிகளான நாடோடி நரிக்காரர்கள் பழங்குடி இடவொதுக்கீடு (ST) பெற்றுவிட்டனர். இதைக் கண்டித்து ஆறுநாள் உண்ணாவிரதம் இருந்த இரணியன் அவர்களை நிற்கவைத்து பேசி அனுப்பினார் தி.மு.க தலைவர். தமிழர்களை நசுக்குவதில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இது நல்லவொரு சான்று.
மோடி அரசு தமிழக நிதியை தராமல் இழுத்தடிப்பதுடன் தமிழக மீனவரை ஐந்துமுறை சுட்டுள்ளது.
இது 'வாயைத் திறந்தால் தமிழர்கள் மீது இனப்படுகொலை நடத்தப்படும்' என்கிற முன்னெச்சரிக்கையே!
எல்லாம் புரிந்தும் நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லை. ஏனென்றால் நம் மாநில அதிகாரத்தில் இருக்கும் வேற்றினத்தார் நம்மைத் தொடர்ந்து திசைதிருப்பி குழப்புவதை திட்டமிட்டு அட்டவணை போட்டு செய்கின்றனர். சாதி, மதம், திரைப்படம், சாராயம், பாலியல் என பலவாறான திசைதிருப்பல்கள் நடக்கின்றன.
தப்பித் தவறி ஒரு தமிழர் (அவரும் அதிகார அடிவருடிதான்) ஆட்சிக்கு வந்தபோதுதான் இந்த தமிழ்நாடு நாள் அறிவிப்பும் வந்தது. இதையும் குழப்ப திராவிட கட்சியினர் தவறவில்லை. ம.பொ.சி அவர்கள் போராடி "மதராஸ் மாகாணம்" என்று இருந்ததை "தமிழ்நாடு" என்று பெயர்மாற்றம் செய்யவைத்தார். அதை அறிவித்தது மட்டுமே அதிகாரத்தில் இருந்த அண்ணாதுரை. அப்படி அறிவித்தபோதும் ம.பொ.சி க்கே நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு என்று பெயரிட்டதே அண்ணாதுரைதான் என்றும் அந்த அறிவிப்பு வந்த நாளைக் கொண்டாடவேண்டும் என்று திராவிடவாதிகள் குழப்பி வருகின்றனர்.
ஏற்கனவே தமிழ்ப் புத்தாண்டை இவ்வாறே குழப்பியுள்ளனர்.
இன்று தமிழ்நாடு நாள் அரசு விழாவாகக் கொண்டாடுகிறோம் என்றால் அது முழு வெற்றியல்ல!
ஒரு வீடு கட்ட நிலம் வாங்கியதைப் போன்றதுதான். நிலத்தை வேலியிட்டு, அடித்தளம் இட்டு, சுவர் எழுப்பி, கூரை அமைத்து, வீடு கட்டி முடித்தால்தான் முழு வெற்றி.
அதாவது முழு தமிழ்தேயத்தையும் தனிநாடு ஆக்கி உலகில் மற்ற இனங்கள் போல நாம் தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதே தமிழ்தேசியத்தின் இலக்கு!
பிற நாடுகளைப் போல நியாயமாக அமைந்திருக்க வேண்டிய "தமிழர் நாடு" வரைபடம் இங்கே தரப்பட்டுள்ளது.
இதற்கான சான்றுகளும் "தனித் தமிழர்நாடு" எனும் நூலாக 2021 இல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தற்கால நிலையைக் கருத்தில் கொள்ளாமல் இலக்கியம், கல்வெட்டு, ஆவணங்கள் அடிப்படையில் பூர்வீக தாய்நிலம் வரையப்பட்டுள்ளது.
நெல்லூர், திருப்பதி, பெங்களூர், மைசூர், பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம், அனுராதபுரம், கதிர்காமம் என (தமிழக மற்றும் ஈழ வரைபடத்தில் இடம்பெறாத) நமக்குச் சொந்தமான பெரும் நிலப்பரப்பை சான்றுகளுடன் உரிமை கோரும் நூலாக உள்ளது (நம் தேசததில் 65% தான் தற்போதைய தமிழகம்).
மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது (வரலாற்றை கருத்தில் கொள்ளாமல்) தமிழர் பெரும்பான்மை அடிப்படையில் கோரப்பட்ட "தமிழ்நாடு" வரைபடமும் தரப்பட்டுள்ளது.
இதிலும் தமிழருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பல பகுதிகள் அண்டை மாநிலங்களிடம் பறிபோய்விட்டதை அறியலாம் (இதனால் நமக்கு ஏறத்தாழ ஐம்பது தேர்தல் தொகுதிகளும் அதற்கான பதவிகளும் கிடைக்காமல் போயின).
உலகில் தமிழர்கள் பத்து கோடிப் பேர் இருக்கிறோம்.
இத்தனை பெரிய இனத்திற்கு மாநில உரிமைகள் போதவே போதாது என்றாலும் நம்மிடம் இருக்கின்ற ஒரே துருப்புச் சீட்டு நமது மாநில அதிகாரம் மட்டுமே!
இந்த அதிகாரமும் தமிழர் கையில் இல்லாததால் வேலி இல்லாமல் திறத்துகிடக்கும் தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடாக இருக்கிறது. அதிலும் தற்போது வடவர் குடியேற்றம் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
நிலைபெற்ற ராணுவப் படை முகாமைக் கூட அப்புறப்படுத்தி விடலாம். ஆனால் வேற்றினத்தார் ஒரு குடும்பம் குடியேறினாலும் நம்மால் எதுவும் செய்யமுடியாது. அவர்களை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றரை கோடி வடயிந்தியர் குடிவந்துள்ளனர் என்கிறார் பெ.மணியரசன் அவர்கள்.
ஆகவே இருக்கின்ற மாநில அதிகாரத்தை தமிழர் கைப்பற்ற வேண்டும். குடியேற்றத்தைத் தடுக்கவேண்டும். புதிய வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும். பழைய வந்தேறிகள் திராவிட ஆட்சியின் பயனாக அடைந்த அனைத்தையும் பறிமுதல் செய்து தமிழருக்கு வழங்க வேண்டும். ஜனநாயக வழியில் நாம் நமது மாநிலத்திற்குள் எல்லா மட்டத்திலும் நமது இனத்தின் ஆதிக்கத்தை உறுதிசெய்ய வேண்டும். மாநிலத்தினுள் மத்திய மற்றும் மாநில வேலைவாய்ப்புகளை தமிழருக்கே வழங்கவேண்டும். மாநில இடவொதுக்கீடு ST, BC, MBC, SC என்று பொதுவாக இல்லாமல் அந்த அந்த சாதியின் பெயரிலேயே அந்த அந்த சாதிகளின் சதவீதத்திற்கு ஏற்ப இடவொதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பெயருக்குப் பின்னால் குடிப்பட்டம் சேர்த்துக்கொள்ள வலியுறுத்த வேண்டும் (வேலைவாய்ப்பிலும் உயர்கல்வியிலும் வடவர் ஊடுறுவல் அவர்களது குடிப் பெயர்களை வைத்தே கண்டறியப்பட்டது).
மத்திய அரசின் வரிக் கொள்ளையை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி இலிருந்து தமிழ்நாடு விலக வேண்டும். முடியாத பட்சத்தில் மாநில வருவாயைக் கணக்கில் காட்டாமல் கையாள வேண்டும். நம் இனத்தில் பெரும் பணக்காரர்களை உருவாக்க வேண்டும்.
தங்கம் கடத்தி முத்தூட், ஆலுக்காஸ் போன்ற நிறுவனங்களை கேரளா உருவாக்கியது போல் கடற்கரையைத் தாரைவார்த்து அதானியை குஜராத் உருவாக்கியது போல் நாமும் செய்ய வேண்டும்.
அதாவது பிற மாநிலங்கள் போல செயல்பட வேண்டும்.
நமது இனமான ஈழத்தமிழர் குடியுரிமை பெறவேண்டும். எம்.ஜி.ஆர் காலத்தில் புலிகளுக்கு உதவியது போல ஈழப் போராளிகளை மீண்டும் உருவாக்க வேண்டும்.
இழந்த எல்லைப் பகுதிகளை ஜனநாயக வழியில் அதாவது வழக்கு போடுதல், எல்லைக்கு இருபுறமும் ஆர்ப்பாட்டம், மாநிலம் தழுவிய போராட்டம், எல்லைப் பகுதி மாநில அலுவலகங்கள் முற்றுகை, பெரும் தொகையில் எல்லைதாண்டுதல், கொடுக்கல் வாங்கல் முறிப்பு, வேற்றினத்தார் வெளியேற்றம், வேற்றின நிறுவனங்கள் மூடல், அண்டைமாநில பொருட்களுக்குத் தடை, எல்லைப் பகுதிகளை வரைபடத்தில் சேர்த்தல் மற்றும் குடும்ப அட்டை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மீட்க முயல வேண்டும்.
வீரப்பன் போன்ற போராளிகளை உருவாக்கி அண்டை மாநிலத்தினுள் தமிழரைக் காக்கவும் வேண்டும்.
ஜனநாயக வழியில் நாம் வெற்றி பெற வாய்ப்பு குறைவு. அப்படி ஜனநாயக போராட்டம் தோல்வியில் முடிந்தால் தமிழர் மீது அடக்குமுறை மேலும் இறுக்கமானால் செண்பக ராமன் மற்றும் அவரது சீடர் நேதாஜி வழியில் பிரபாகரன், தமிழரசன், வீரப்பன் போல ஆயுதம் தூக்கி நம் தேசத்தை நாமே விடுதலை செய்யவும் தயாராக வேண்டும்.
இந்த தமிழ்நாடு நாளில் இருப்பதை காப்பதுடன் இழந்ததை மீட்கும் உறுதி மொழி எடுப்போம்!
இனி உண்மையான தமிழ்தேசியம் பேசுவோம்!
தனித் தமிழர்நாடு அமைப்போம்!
நன்றி!