நேர்மையாக விவாதிப்போம்
நான் ஏன் பார்ப்பனர்களை வெறுக்கவேண்டும்?
ஒரே ஒரு உருப்படியான காரணத்தை கூறுங்கள்.
அதாவது தமிழகத்திற்குள் தமிழ் பேசும் பார்ப்பன சாதிகள் அப்படி என்ன பாவம் செய்துவிட்டார்கள் என்று அவர்களை அனைவரும் வெறுக்கிறீர்கள்?
நான் நன்றாக யோசித்து ஆராய்ந்து பார்த்துவிட்டேன் அவர்களை வெறுக்கும் அளவிற்கு அப்படி எதுவுமே அவர்கள் செய்யவில்லை.
ஆரிய கடடுக்கதைகள், திராவிட பொய் பிரச்சாரங்கள், சில பார்ப்பனர்களின் திமிர் பேச்சுகள், புராண கட்டுக்கதைகள், பாஜக ஆதரவு என்று அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து விட்டேன்.
பார்ப்பனர்களை குறிப்பிட்டு வெறுக்கும் அளவிற்கு ஒரு காரணம் கூட எனக்கு தென்படவில்லை.
தமிழகத்தில் நடந்த பார்ப்பனிய கொடுமைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிடவும் (தமிழகத்திற்கு வெளியே நடந்த எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது).
தமிழகத்தில் நடந்த இரண்டு விடயங்களை ஏற்கனவே அலசிவிட்டோம்.
1)சமணர்களை திருஞானசம்பந்தர் படுகொலை செய்தார் என்கிற கட்டுக்கதை. பலமுறை நன்கு விவாதித்து ஆராய்ந்து அது பொய் என்று நிறுவப்பட்டுவிட்டது.
(விரிவாக அறிய தேடுக :- சமணர் கழுவேற்றம் கற்பனை வேட்டொலி)
2) சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சிவாச்சாரியாரைத் தமிழ் பாட விடவில்லை என்கிற குற்றச்சாட்டு. அதாவது கருவறையில் தமிழ் ஒலிக்க தடையாக இருப்பதாகக் கூறுவது.
அதையும் ஆராய்ந்து பார்த்துவிட்டோம் சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் தமிழில்தான் வழிபாடு பூஜை என எல்லாவற்றையும் செய்கிறார்கள். அவர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி பாடுவதற்கு மட்டுமே தடையாக இருக்கிறார்கள். இது சாதிய பிரச்சனை மொழிவெறுப்பு என்று திரிக்கப்படுகிறது.
(மேலும் அறிய தேடுக :- தீட்சிதர்கள் தமிழ் நீசபாசை என்றனரா வேட்டொலி)
மேற்கண்ட இரண்டிலும் பார்ப்பனர் குற்றமிழைத்தனர் என்றே வைத்துக்கொண்டாலும் அது ஒட்டுமொத்த தமிழர்களையும் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் இல்லை.
கருவறையில் பிறரை நுழையவிடாமல் தடுப்பதை நான் வாழ்வாதார பிரச்சினையாகவே பார்க்கிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்யும்பொழுது வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர் அந்த தொழிலை செய்ய முன்வரும்போது எதிர்ப்பு எழத்தான் செய்யும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீனவரல்லாத சாதியைச் சேர்ந்தவர் மீன் பிடிக்க வந்தால் எதிர்க்கவே செய்வார்கள். அதிலும் தீட்சிதர்கள் மற்ற பார்ப்பனர்களைப் போல் கிடையாது அவர்கள் முழுக்க முழுக்க சிதம்பரம் கோவிலை மட்டுமே நம்பி பிழைப்பவர்கள். சிதம்பரம் கோவிலை சுற்றி மட்டுமே வாழ்பவர்கள். அவர்களுடைய முழு வாழ்வாதாரமும் அந்த கோவிலை நம்பி மட்டுமே உள்ளது.
இவை தவிர வேறு ஏதாவது உருப்படியான குற்றச்சாட்டு இருந்தால் கூறவும்.
ஏற்கனவே பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதை மறுபடியும் கிளைப்பிள்ளை போல ஒப்பிக்க வேண்டாம். அவர் கூறினார் இவர் எழுதியுள்ளார் என்று ஒருவரது தனிப்பட்ட கருத்தை பதிவு செய்யக்கூடாது. தனிப்பட்ட அனுபவக் கதைகள் வேண்டாம். கிரிக்கெட் டீம் என்று தயவுசெய்து ஆரம்பிக்க வேண்டாம்.
தமிழர்நாடு என்றுமே தனிநாடு. எனவே தமிழர்நிலத்துக்கு வெளியே நடத்த பிராமணீய கொடுமைகளுக்கு பார்ப்பனர் பொறுப்பாகமாட்டர்.
தமிழர் நிலத்தில் பார்ப்பனர்கள் தமிழுக்கோ தமிழருக்கோ இழைத்த கொடுமைகள் எதாவது இருந்தால் கூறவும். அதாவது அதில் பார்ப்பனர் பெரும்பங்கு வகித்திருக்கவேண்டும். அது பெரும்பான்மைத் தமிழர்களை வெகுவாக பாதித்திருக்க வேண்டும்.
(அதாவது ஈழத்தமிழருக்கு சிங்களவர் செய்த நேரடிக் கொடுமைகள் போல
அல்லது தமிழகத் தமிழரை ஆதிக்கம் செய்யும் நிலவுடைமை பெற்ற வந்தேறித் தெலுங்கர் செய்துவரும் அடக்குமுறை போல
அல்லது தமிழகத்திற்கு மத்திய அரசு செய்துவரும் உரிமை பறிப்புக் கொடுமைகள் போல
அல்லது குறைந்தபட்சம் தமிழர்களின் வணிகத்தை பறிக்கும் சேட்டுகளின் சட்டவிரோத செயல்பாடுகள் போல)
நினைவில் கொள்ளுங்கள்,
எங்கேயோ இருக்கும் கைபர் போலனில் தொடங்கும் ஆரிய கட்டுக்கதைகள் வேண்டாம்.
தமிழருக்குத் தொடர்பே இல்லாத மனுதர்மம் வேணனாம்.
ஆதரமற்ற திராவிட பொய்ப்பிரச்சாரங்கள் வேண்டாம்.
பாஜக ஆதரவு என்பதும் வேண்டாம்.
(ஏனென்றால் அனைத்து சாதியிலும் பாஜக இந்துத்துவ ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அதில் பார்ப்பனர்களைக் குறிப்பிட்டு குற்றம் சாட்ட எதுவுமில்லை)
சு.சாமி போன்ற சிலரின் திமிர் பேச்சுகள் வேண்டாம்.
தமிழர்கள் தெலுங்கரை, கன்னடரை, மலையாளிகளை, ஹிந்தியரை வெறுக்க பல காரணங்களை என்னால் கூறமுடியும்.
தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பிரச்சனைகள் பல நூறு உள்ளன. அதில் எதிலாவது பார்ப்பனரின் பங்கு இருந்தால் கூறவும்.
நீங்கள் பார்ப்பனர்கள் தமிழினத்தின் எதிரிகள் என்று நிறுவமுடியாத பட்சத்தில் நீங்கள் பார்ப்பன வெறுப்பைக் கைவிடவேண்டும் என்று நான் கூறமாட்டேன்.
அதே நேரத்தில் பார்ப்பனர்கள் தமிழினத்தின் எதிரிகள் என்று நீங்கள் நிறுவிவிட்டால் நான்
அவர்களை வெறுக்கத் தயாராக இருக்கிறேன்.
08/07/2021 அன்று முகநூல் பதிவாக இட்டது
No comments:
Post a Comment