Sunday, 16 October 2022

வழக்கமான சட்ட திரிப்புகளும் பதில்களும்

வழக்கமான சட்ட திரிப்புகளும் பதில்களும்

 ஆங்கிலேயர் பிராமண ஆதிக்கத்தை ஒழித்ததாக ஒரு பதிவு உலா வருகிறது அது பற்றி பார்ப்போம்.

 கீழே திரிக்கப்பட்ட பதிவை அப்படியே இட்டு அதில் இடையிடையே [ ] இந்த அடைப்புக் குறிக்குள் பதில் எழுதியுள்ளேன்.

அந்த பதிவு வருமாறு,

 ஆங்கிலேய அரசு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக இயற்றிய சட்டங்கள்
வியக்கவைக்கும் தினமணி கட்டுரை - 25.02.2007.
 பிரிட்டிஷார் Vs பிராமணர்கள்

[இப்படி ஒரு கட்டுரை தினமணியில் வரவே இல்லை]

பார்ப்பனர் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும், வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த, பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை, கிறிஸ்தவ பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், 1773 ஆம் ஆண்டு முதல் கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசு,  பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.

[1773 ஒழுங்குமுறை சட்டம் பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்திய கம்பனிக்கு விதித்த கட்டுப்பாடுகள் தொடர்பானது, இது 'சட்டம் அனைவருக்கும் சமம்' என்கிற நோக்கமெல்லாம் கிடையாது.
1773 இந்து சட்டம் என்பது ஒன்று வந்தது. அது அன்றைய வங்காளத்தின் சில சாதியினருக்கு மட்டுமானது]

 சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை, கிறிஸ்தவ வெள்ளையர்களால்  வழங்கப்பட்டது.
[1795 இல் எந்த சட்டமும் இயற்றப் படவில்லை] 

 1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை, கிறிஸ்தவ வெள்ளையரால்  வெளியிடப்பட்டது. 
[இதுவும் பொய் அப்படி எந்த சட்டமும் இயற்றப்படவில்லை]

 1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம், கிறிஸ்தவ வெள்ளையரால்  கொண்டுவரப்பட்டது.
[1813 இல் பட்டயச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் கிழக்கிந்திய கம்பனி உரிமம் நீட்டிக்கப்பட்டது,  ஆங்கிலக் கல்விக்கு ஒரு லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது, கிறித்துவ மதம் பரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. இதுதான் கொத்தடிமை ஒழிப்பாம்! 
உண்மையில் 1843 இல் தான் அடிமை ஒழிப்பு சட்டம் வந்தது. அன்று வட இந்தியாவில் 8 ல் ஒருவர் அடிமை. தமிழகத்தில் 100 ல் 4 பேர் அடிமை. பெரும்பாலும் பண்ணை அடிமைகள் ]

 பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன்  கொல்லப்பட வேண்டும் என்ற பிராமணர்கள் மனுசாஸ்திர  சட்டம் (VII 374, 375), கிறிஸ்தவ வெள்ளையர்களால் நீக்கப்பட்டது.
 ஒரு பிராமணன்,  காம ஆசை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால், அது பிணம் போன்றதே ஆகும்.(பிராமணர்  மனுசாஸ்திர சட்டம் IX 178). இந்த மனுசாஸ்திர சட்டத்தையும், கிறிஸ்தவ வெள்ளையர்களே நீக்கினர். 
[இதில் ஆண்டு கூட இல்லை, எப்போதுமே வழக்கத்தில் இல்லாத மனு ஸ்மிருதி ஆங்கிலேயர் காலத்தில் மட்டும் பின்பற்றப் பட்டிருக்குமா என்ன?! 
இந்து சட்டம் 1773 இல் மனுஸ்மிருதி அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. அதில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. (அதாவது கலாச்சாரம் தொடர்பான சட்டங்கள் ணாஸ்திரங்களை ஆராய்ந்து எழுதப்படன.  தண்டனை க்கான சட்டம் அல்ல) ஜோன்ஸ்  என்பவர் இந்தியர்களுக்கான சட்டத்தை இயற்ற மனு ஸ்மிருதியை ஆராய்ந்து 1794 இல் அதை மொழிபெயர்ப்பு செய்கிறார். அதுவரை மனு ஸ்மிருதி பற்றி யாருக்குமே தெரியாது. இப்படி பல்வேறு சாஸ்திரங்களை ஆராய்ந்து இந்துக்களுக்கான சட்டம் 1860 இல் வந்தது. மனு கூறும் சட்டத்தை நீக்குவதாக இதில் எங்கும் இல்லை] 

பிராமணன் தப்பு செய்தால் தண்டனை இல்லாமல் இருந்த நிலையில், பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை, 1817 ஆம் ஆண்டு கிறிஸ்தவ பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது
[இது வேடிக்கையாக இருக்கிறது. Murders Abroad Act 1817 என்பது பிரிட்டிஷ் பேரரசின் பல்வேறு பகுதிகளில் கொலைகளுக்கான பொதுத் தண்டனை பற்றியது]

  சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய 7 நாள்கள் கோவிலில்? இருக்க வேண்டும் என்ற கொடுமை, கிறிஸ்தவ பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. 
[1819 இல் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை]

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த பிராமண இனவெறி மனு சாஸ்திர  சட்டத்தை, 1835 ஆம் ஆண்டு கிறிஸ்த்தவரான Lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
[1835 இல் english education act ஆங்கில கல்வியைத் திணிக்க கொண்டுவந்த சட்டம் ஆகும்]

 சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொலைசெய்ய  வேண்டும்! 1835-ல் கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
[மனம் போன போக்கில் எழுதப்பட்டுள்ளது. குழந்தையைக் கொல்ல எந்த வேதம் சொல்லும்?! 1835 இல் அப்படியான அரசாணை எதுவும் வெளிவரவில்லை]

 1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கிறிஸ்தவ வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்டது.
[இதுவும் கட்டுக்கதை]

1868 ஆம் ஆண்டு கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசாங்கம், பிராமண மனுசாஸ்திர  சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது!
இவற்றின் மூலம் இந்துமக்களுக்கு கொடுமை இழைத்த பிராமணர் ஆதிக்க சட்டம் மாற்றப்பட்டது.
[1868 இல் Hindu law முழுமையான வடிவத்திற்கு வந்தது. அப்போது மனு உட்பட சாஸ்திரங்களைத் தழுவிய அதன் பழைய வடிவம் நீக்கப்பட்டது]
----------------

 அதாவது பார்ப்பன, சூத்திர என்கிற வார்த்தைகளைப் போட்டு எதாவது ஆண்டுகளை இடையில் சேர்த்து எதை எழுதினாலும் அப்படியே நம்பும் மனநிலையில் இருக்கிறோம்.

 திராவிட ஊதுகுழல்கள் இன்னமும் தமது குலதெய்வங்களான ஆங்கிலேயரை புனிதப்படுத்துவதை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
 
 சில ஆண்டுகள் முன் வந்த இப்பதிவு காணொளியாகவும் உலவுகிறது. மொழிகடந்து ஆங்கில கட்டுரையாகவும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

 மேற்கண்ட பதிவு முழுக்கவே பொய்கள் நிரம்பியது.

 இதை ஒரு அறிவுள்ள வக்கீலோ, ஐ.ஏ.எஸ். தேர்வாளரோ கூடவா கடந்து வரவில்லை?! 

 ஒரு குற்றச்சாட்டு என்றாலும் அது நேர்மையாக இருக்க வேண்டும்.

 எதிரியாகவே இருந்தாலும் அவர் மீது வைக்கப்படும் நேர்மையற்ற குற்றச்சாட்டைத் தட்டிக் கேட்கவும் வேண்டும். 

No comments:

Post a Comment