Monday, 17 October 2022

இந்தியை எதிர்த்த பார்ப்பனர்கள்

இந்தியை எதிர்த்த பார்ப்பனர்கள்

 நமது சமகாலத்தில் இந்தியை இந்தியர்கள் மத்தியில் எதிர்த்த மூன்று பார்ப்பனர்களைக் காட்டமுடியும்.

 இணைத்துள்ள காணொளியில் நான்கு நிகழ்ச்சிகள் உள்ளன.

 மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் R.மாதவனை அழைத்து  செயிப் அலிகான் மற்றும் ஷாருக்கான் ஆகிய முன்னணி கதாநாயகர்கள் R என்றால் என்னவென்று கேட்டு அதற்கு மாதவனை விளக்கம் அளிக்க விடாமல் அவர்களாக அர்த்தம் சொல்லிக்கொண்டிருக்க மாதவன் கோபம் ஆகிறார். அவர்கள் 'தமிழில் பேசுங்கள்' என்று கூற "போங்கடா கிறுக்கு கதாநாய்களா?" என்று திட்டுகிறார்
( 2010, 55 th film fare awards).

 இந்தியில் பேசிக்கொண்டிருந்த நவ்ஜோத் சிங் சித்துவிடம் இது எல்லாருக்கும் புரியாது எனவே ஆங்கிலத்தில் பேசும்படி கேட்க அதற்கு அவர் இந்திதான் எல்லாருக்கும் புரியும் என்று சொல்ல உடனே "நான் தமிழில் பேசினால் உனக்கு புரியுமாடா?" என்று சத்தம் போட ஆரம்பித்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்
(2013 ipl, sony channel).

 NDTV ஏற்பாடு செய்த இந்தியை ஆட்சிமொழி ஆக்குவது பற்றிய விவாதத்தில் சித்ராஜி என்பவர் இந்தியிலேயே பேச அதை எந்த மொழிக்காரரும் எதிர்க்காத சூழலில் எழுத்தாளர் ஞாநி சங்கரன் தமிழில் பதிலளித்துப் பேசி எதிர்க்கிறார். சித்ராஜி ஆங்கிலத்தில் பேச மறுக்க நெறியாளர் தான் மொழிபெயர்ப்பதாக சொல்கிறார். உடனே ஞாநி தமிழுக்கும் மொழிபெயர்ப்பாளர் கொடுங்கள் என்று குரல் கொடுக்கிறார்
(2014, ndtv, big fight over language).

 ஜல்லிக்கட்டு தடை தொடர்பான விவாதத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பாக்சிங் போன்ற போட்டிகளெல்லாம் நடக்கிறது எங்கள் பல ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஆங்கிலத்தில் கூறி பிறகு தமிழிலும் அதைக் கூறி நெறியாளரான zakka jacob என்பவரையும் 'நீயும் தமிழன்தானே' என்று கேட்டு தமிழில் பேச வைக்கிறார்
(2019, CNN news 18).

 வேறொரு இந்திய தொலைக்காட்சி விவாத்ததிலும் ஸ்ரீகாந்த் தமிழில் பாட்டுப்பாடி சல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்.

 பார்ப்பனர்கள் தமிழ் மொழி உணர்வுடனும் இன உணர்வுடனும் இப்போதும் எப்போதும் இருககின்றனர்.

 காணொளிகளுக்கு நன்றி: thug k thug (YouTube)

No comments:

Post a Comment