Showing posts with label வேணாடு. Show all posts
Showing posts with label வேணாடு. Show all posts

Friday, 17 March 2017

திருவனந்தபுரம் தமிழர் நகரம்

திருவனந்தபுரம் தமிழர் நகரம்

1750 வரை திருவனந்தபுரம் மலையாளிகள் கைக்குப் போகவில்லை

இதைக் கைப்பற்றிய மார்த்தாண்ட வர்மா தமிழ் அரச பரம்பரையான வேணாடு அரசர் குலத்தவன்.
அதாவது முழுத் தமிழன் இல்லையென்றாலும் அவனை மலையாளி என்று கூறமுடியாது.

இந்த வேணாட்டு அரசர்கள் காலங்காலமாக பாண்டிய நாட்டின் கீழ் ஆண்டு வந்தனர்.
சேரநாட்டின் பகுதியாகக் கூட என்றுமே இருந்ததில்லை.

  1950 களில் மார்சல் நேசமணி திருவனந்தபுரம் இருக்கும் நெய்யாற்றின்கரை தாலுகாவில் தமிழர் பெரும்பான்மையை சான்றுகளோடு நிறுவி அப்பகுதியை தமிழகத்துடன் இணைக்க எவ்வளவோ போராடினார்.

30 தமிழர்கள் சுடப்பட்டு இறந்தனர்.
400 பேர் வரை கைதானார்கள்.
3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.

  நேசமணி திருவனந்தபுரம் கிடைக்க தமிழர்கள் 60% வரை வாழ்ந்த நெடுமங்காடு தாலுகாவை விட்டுக்கொடுக்கவும் செய்தார்.

ஆனால் அவரால் கன்னியாகுமரியை மட்டுமே மீட்கமுடிந்தது.
(கேட்டதில் பாதிக்கும் குறைவு)

மலையாள மொழியானது 500 ஆண்டுகளுக்கு முன்னே உருவாகிய மொழி ஆகும்.

1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல்
அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு)

1650 எழுத்தச்சன் பச்சமலையாளம் என்ற மொழி உருவாக்கினார். இது செந்தமிழே.
1860 முதல் மலையாள இலக்கண நூல் எழுதப்பட்டது.
1900 வரை மலையாளிகள் தமிழும் படித்தனர்.
(பாவாணர், திராவிடத்தாய் நூலில்)

எடக்கல் எனுமிடத்தில் பழைய தமிழ் (பிராமி) எழுத்தில் 'ஓ பழமி' என்று எழுதியிருந்ததை மலையாளிகள் 'இ பழம' என்று மலையாளத்தில் எழுதியிருப்பதாக எவ்வளவோ திரிக்க முயன்றனர்.
இதற்கு ஐராவதம் மகாதேவன் உடந்தையாக இருந்தார்.

நல்லவேளையாக நடன காசிநாதன் அது தமிழே என்றும் அது தமிழ் தெய்வம் பழையோள் என்றும் நிறுவினார்.

ஆக மலையாளிகள் எந்த வகையிலும் தமிழரிடமுள்ள சான்றுகளுடன் போட்டி போட முடியாது.

Sunday, 12 June 2016

குமரிக்கண்டமும் நேசமணியும்

குமரிக்கண்டமும் நேசமணியும்

மூழ்கிப்போன கண்டமொன்று இருந்தாக மேலைநாட்டு அறிஞர்கள் கூறியபோது,
தமிழ் இலக்கியங்களுடன் அதைப் பொருத்திப்பார்த்து
குமரிக்கண்டத்தை மீண்டும் மக்கள் அறியச் செய்தவர்,
ஈழத்தமிழரும்,
தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவருமான கனகசபை ஆவார்.

ஆனால் குமரிமுனை மலையாளிகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது.

அதை மீட்டு அங்கிருந்த மக்கள் வணங்கிவந்த (கன்னி) குமரியம்மன் பெயராலும்,
மூழ்கிய குமரிக்கண்டத்தின் நினைவாகவும்,
"கன்னியாகுமரி" என்று பெயர் வைத்தவர் (கிறித்தவரான) நேசமணி ஆவார்.

இதற்கு பின்னணிக் காரணம் 'குமரிக் கண்டத்து வழக்கறிஞர்' என்றழைக்கப்படும் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை ஆவார்.

தந்தை செல்வாவுக்கு இருபது ஆண்டுகள் முன்பே அதிரடி அரசியல் செய்து,
காமராசரின் ஆதரவு இல்லாமல் போனாலும்,
ஈ.வே.ரா ஆதரவு தர மறுத்து திருப்பி அனுப்பினாலும்,
திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளாது போனாலும்,

தன் அறுபத்தைந்து வயதிலும் தளராது போராடி,
பாதியளவு மண்ணையாவது தமிழகத்துக்கு மீட்டுத்தந்த தமிழர் தந்தைதான் நேசமணி அவர்கள்.

சாதியாகவும் மதமாகவும் ஏன் மொழியாலும் பிரிந்து கிடந்த தமிழினத்தினை ஒன்றுதிரட்டி மண்மீட்பில் வெற்றிபெற்ற முதல் தமிழ்தேசியவாதியும் அன்னாரே ஆவார்.

தமிழியத் தலைவர் மார்சல்.நேசமணியை தமிழினம் வரமாய் பெற்ற நாள் இன்று (12-06-1895).