Showing posts with label அணுகுண்டு சோதனை. Show all posts
Showing posts with label அணுகுண்டு சோதனை. Show all posts

Friday, 17 August 2018

வாஜ்பாய் கூறிய பொக்ரான் பொய்

வாஜ்பாய் கூறிய பொக்ரான் பொய்

வாஜ்பாய் இரண்டாவது பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி வெற்றிபெற்றதாக கூறப்படுவது பொய்.

  ஒரு தமிழரான அப்துல் கலாம் இதைச் சாதித்தது பெருமை என்றும் கூறப்படுகிறது.

அப்துல் கலாம் என்ற ஒரு ராக்கெட் விஞ்ஞானியை தலைவராக வைத்துக்கொண்டு அணு விஞ்ஞானத்தில் எப்படி வாஜ்பாய் சாதித்தார் என்பது விடை வராத கேள்வி.

அந்த ப்ராஜெக்ட்டில் அப்துல் கலாமுக்கு அடுத்த தலைவர் டாக்டர்.டி.சிதம்பரம்.
இவரும் ஒரு தமிழர்தான்.

அதற்கு அடுத்தநிலை தலைவரான கே.சந்தானம் என்பவரும் தமிழர்.

இந்த சந்தானம் துணிச்சலாக வெளியே கூறிவிட்டார்.

"நாங்கள் செய்த பொக்ரான் அணுகுண்டு சோதனை தோல்வியில் முடிந்தது" என்று.

போர் வந்தால் இந்தியா அணுகுண்டு போடும் என்று எண்ணும் அப்பாவிகள் உண்மை அறிக.

http://m.oneindia. in/tamil/news/2009/09/18/india-santhanam-favours-probe-into-pokhran-ii.html

http://www.archive. inneram. com/200908261857/pokhran-2-not-successful-report

http://articles.timesofindia. indiatimes. com/2009-08-27/india/28210828_1_thermonuclear-device-pokhran-ii-ctbt

Thursday, 9 June 2016

அணுவுலையும் அப்துல் கலாமும்

அணுவுலையும் அப்துல் கலாமும்

கலாம் தமிழின துரோகியா என்றால் ஆமாம் அவர் துரோகிதான்.

முதலில் கலாம் ஒரு ராக்கெட் விஞ்ஞானி அவருக்கு அணுவுலை பற்றி எப்படி தெரியும்?

அவர் முதலில் விஞ்ஞானியே கிடையாது.

வெளிநாட்டிலிருந்து வரும் ஏவுகணை பாகங்களை ஒன்றாக இணைத்து அதில் ஹிந்தியாவின் கொடியை ஒட்டி வானில் ஏவுவதுதான் இஸ்ரோ வின் வேலை.

சொந்த நாட்டுத் தயாரிப்பு என்று கலாம் காலத்தில் ராக்கெட்டுக்கு அடித்த பெயிண்ட் கூட இல்லை.

அவர் அணுகுண்டு சோதனை நடத்தினார் என்கிறார்கள்.

முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அணுகுண்டு சோதனை தோல்வியில் முடிந்தது.

இதை அக்குழுவின் தலைவர் சந்தானம் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

கூடங்குளம் அணுவுலையின் உலையினுடைய சுற்றுச்சுவரை சுத்திப்பார்த்து அது கதிரியக்கத்தைத் தாங்குமா என்று ஆராய்ந்து சொல்லவே இரண்டு மாதம் ஆகும்.

கலாம் வந்தார்.
ஒருமணிநேரம் கண்காட்சி போல சுற்றிபார்த்துவிட்டு அணுவுலை நன்றாக இருக்கிறது என்று அறிக்கை விட்டார்.

இதுதானா அவரது ஆய்வு?!

முதலில் கலாம் பெயரில் கூட்டம் சேர்ப்பது சங்கம் அமைப்பது போன்றவற்றை நிறுத்துங்கள்.

விஞ்ஞானி என்றால் உருப்படியாக எதாவது கண்டுபிடிக்கவேண்டும்.

கலாம் உருப்படியாக கண்டுபிடித்தது ஒன்றுமே கிடையாது.

அவர் தமிழர் என்பதற்காக அவரை ரோல்மாடல் ஆக்கவேண்டாம்.

அவர் பிறந்த ராமேஸ்வரத்து மீனவர் பிரச்சனைக்கோ
எழுவர் தூக்குக்கான கருணை மனுவிலோ
கூடங்குளத்திலோ
அந்த ஆள் தமிழர் மீதான பாசத்தைக் காட்டவில்லை.

நமது ராமானுஜன், சி.வி.ராமன், போன்றவர்கள்தான் உண்மையான அறிவியலாளர்கள்.

வெளிநாட்டில் போய் அப்துல் கலாம் எங்கள் ஹிந்திய நாட்டு தலைசிறந்த விஞ்ஞானி என்று கூறிவிடாதீர்கள்.

காறி துப்பிவிடுவான்.

அணுவுலை பற்றி கூறவேண்டுமானால்

யானை விலை கொடுத்து எலியை வாங்கிவருவது போன்றது

பல கோடி செலவில் அந்த உலையை நிறுவினால் அது தரும் மின்சாரம் மிகவும் குறைவு.

இன்றுவரை ஹிந்தியாவின் ஒட்டுமொத்த மின்தேவையின் 15%தான் அணுவுலைகள் முக்கி முக்கி ஈடு செய்கின்றன.

மீதி 85% மின் உற்பத்திக்கு ஆகும் செலவை விட இதற்கு அதிக செலவு.

ஆபத்து என்று பார்த்தால் உள்ளதிலேயே அதிக ஆபத்து.

ஆபத்து என்றால் சிலிண்டர் பயன்படுத்தமுடியாது
கரண்ட் கூட பயன்படுத்தமுடியாது
வாகனம் ஓட்டமுடியாது என்கிறார்கள்.

அதுவாவது விபத்து நடந்தால் சில உயிர்சேதத்துடன் அன்றே முடிந்துவிடும்.

ஆனால் அணுவுலை கால காலத்திற்கும் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

கால்வாசி தமிழ்நாடு சுடுகாடாகும்.
புல் பூண்டு முளைக்காது.

இதுவும் விபத்தும் ஒன்றா?
இது விபத்தில்லை பேரழிவு.

அணுவுலைக் கழிவையும் அணுகுண்டு போல பாதுகாக்கவேண்டும்.
அணுக்கழிவை அழிக்கும் தொழில்நுட்பம் இதுவரை கண்டறியப்படவில்லை.

40 ஆண்டுகளுக்கு மேல் அணுவுலை காலாவதி ஆகிவிடும்.
அதன்பிறகு அதயும் அணுகுண்டு போல ராணுவப் பாதுகாப்புடன் வைத்திருக்கவேண்டும்.

அமெரிக்காகாரனே 50 ஆண்டுகளாக அணுவுலை திறக்கவில்லை.

மற்ற நாடுகள் அணுவுலைகளை மூடுவதைப் பற்றி திட்டமிடுகின்றன.

3 மாதம் வெயிலடிக்கும் நாடுகளெல்லாம் அதை சோலார் பேனல் மூலம் மின்சாரம் தயாரிக்கின்றன.

நாம் 12 மாதமும் கொளுத்தும் வெயிலை விட்டுவிட்டு

காற்று வீசும் கரிசல் காடுகளில் காற்றாலைகளை வைப்பதை மறந்துவிட்டு
கடல் அலை ஆற்றல்
அணை தேக்க ஆற்றல்
போன்றவற்றையும் செய்யாமல் அணுவுலை மடியில் கட்டி மின்சாரமெடுத்து
30% பிச்சையாக எடுத்துக்கொண்டு மீதியை நமக்கு தண்ணியே தராத கன்னடனுக்கும் தெலுங்கனுக்கும் மலையாளிக்கும் கொடுத்துவிடுகிறோம்.

தமிழகத்தில் இருக்கும் குண்டு பல்புகளை மாற்றிவிட்டு சி.எப்.எல் மாட்டினாலே அணுவுலைகளை மூடிவிடலாம்.
அந்த அளவு மின்சாரம் மிச்சமாகும்.

டிரான்பார்மர் மூலம் வீட்டுக்கு கரண்ட் வந்து சேரவே 40% வீணாகிறது.
அந்த அழகில் மின்துறை செயல்படுகிறது.

இதில் அணுவுலை வந்துதான் தூக்கிநிறுத்தவேண்டும் என்போருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

Thursday, 14 January 2016

தோல்வியில் முடிந்த பொக்ரான் சோதனை

இந்தியாவின் உச்சக்கட்ட வலிமையாகப் பார்க்கப்படுவது அதன் அணுவாயுத வலிமை,
ஆனால் அது செய்த அணுகுண்டு சோதனையே வெற்றிபெறவில்லை என்பது வெளிவுலகுக்கு மறைக்கப்பட்ட ஒன்று.

இப்போது சொல்லுங்கள் தமிழர் வீரத்துக்கு முன் இந்தியாவெல்லாம் ஒரு பொருட்டா ?!!!!!!!!!

http://m.oneindia.in/tamil/news/2009/09/18/india-santhanam-favours-probe-into-pokhran-ii.html

http://www.archive.inneram.com/200908261857/pokhran-2-not-successful-report

http://articles.timesofindia.indiatimes.com/2009-08-27/india/28210828_1_thermonuclear-device-pokhran-ii-ctbt