Showing posts with label வாஜ்பாய். Show all posts
Showing posts with label வாஜ்பாய். Show all posts

Friday, 17 August 2018

வாஜ்பாய் கூறிய பொக்ரான் பொய்

வாஜ்பாய் கூறிய பொக்ரான் பொய்

வாஜ்பாய் இரண்டாவது பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி வெற்றிபெற்றதாக கூறப்படுவது பொய்.

  ஒரு தமிழரான அப்துல் கலாம் இதைச் சாதித்தது பெருமை என்றும் கூறப்படுகிறது.

அப்துல் கலாம் என்ற ஒரு ராக்கெட் விஞ்ஞானியை தலைவராக வைத்துக்கொண்டு அணு விஞ்ஞானத்தில் எப்படி வாஜ்பாய் சாதித்தார் என்பது விடை வராத கேள்வி.

அந்த ப்ராஜெக்ட்டில் அப்துல் கலாமுக்கு அடுத்த தலைவர் டாக்டர்.டி.சிதம்பரம்.
இவரும் ஒரு தமிழர்தான்.

அதற்கு அடுத்தநிலை தலைவரான கே.சந்தானம் என்பவரும் தமிழர்.

இந்த சந்தானம் துணிச்சலாக வெளியே கூறிவிட்டார்.

"நாங்கள் செய்த பொக்ரான் அணுகுண்டு சோதனை தோல்வியில் முடிந்தது" என்று.

போர் வந்தால் இந்தியா அணுகுண்டு போடும் என்று எண்ணும் அப்பாவிகள் உண்மை அறிக.

http://m.oneindia. in/tamil/news/2009/09/18/india-santhanam-favours-probe-into-pokhran-ii.html

http://www.archive. inneram. com/200908261857/pokhran-2-not-successful-report

http://articles.timesofindia. indiatimes. com/2009-08-27/india/28210828_1_thermonuclear-device-pokhran-ii-ctbt

வாஜ்பாய் சிங்களவருக்கு காலத்தால் செய்த பேருதவி

வாஜ்பாய் சிங்களவருக்கு காலத்தால் செய்த பேருதவி

2000 ஆம் ஆண்டு,
புலிகள் 40,000 சிங்கள ராணுவத்தினரை முற்றுகை போட்டிருந்த சமயம்.
யாழ்ப்பாணம் புலிகள் கைக்கு எட்டும் தூரம்.

அலறியடித்துக் கொண்டு வாஜ்பாயிடம் ஓடிய இலங்கை அமைச்சர் லக்‌ஷ்மண் கதிர்காமர் கெஞ்சிக் கேட்க
உடனடியாக ஹிந்திய விமானப்படைத் தலைவர் டிப்னிசை இலங்கைக்கு அனுப்பினார் வாஜ்பாய்.

அது மட்டுமில்லை முதன்முதலாக இலங்கைக்கு நிதியுதவி செய்த பிரதமரும் அவரே!

அது அப்போது இலங்கைக்கு காலத்தால் செய்த பேருதவியாகும்.
எவ்வளவு தெரியுமா 100 மில்லியன் டாலர்.

இதுவே இன்றுவரை இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த மிகப்பெரிய நிதியுதவி ஆகும்.

(இந்திய ராணுவத்தை அனுப்பியிருப்பார்,
ஆனால் அமைதிப்படை புலிகளிடம் வாங்கிய அடி கண்முன்னே வந்து போனதால் பணமாக கொடுத்துவிட்டார்)

புலிகளும் சூழல் அறிந்து மேற்கொண்டு முன்னேறாமல் விட்டுவிட்டனர்.

வாஜ்பாய் அரசு ஜஸ்வந்த் சிங் மூலம் இலங்கையைத் தூண்டாடுவதை இந்தியா அனுமதிக்காது" என்று அறிவிக்கிறது.

15.06.2000 அன்று சென்னை வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை உறுதிசெய்கிறார்.

அடுத்த இரண்டு மாதங்களில் 90 கோடி மதிப்புள்ள INS சரயு என்ற போர்க் கப்பலை இலங்கைக்கு இந்தியா வழங்குகிறது.

மூன்று செடக் ஹெலிகாப்டர்களையும் வழங்குகிறது.

இலங்கைக்கு கணக்கே பார்க்காமல் கடனுக்கு இராணுவ தளவாடங்கள் வழங்கும் ஒப்பந்தம் போடப்படுகிறது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் 200 சிங்கள ராணுவத்தினரை அழைத்து வந்து சிறப்பு பயிற்சியும் அளிக்கிறது வாஜ்பாய் அரசு.

இது அத்தனைக்கும் பாஜக கூட்டணியில் இருந்த வைகோ உடந்தை.

தகவல்களுக்கு நன்றி: பாக்கியராசன் சே
படம்: வாஜ்பாய் ஆங்கிலேயருக்கு எழுதிக் கொடுத்த மன்னிப்பு கடிதம்

Thursday, 14 January 2016

தோல்வியில் முடிந்த பொக்ரான் சோதனை

இந்தியாவின் உச்சக்கட்ட வலிமையாகப் பார்க்கப்படுவது அதன் அணுவாயுத வலிமை,
ஆனால் அது செய்த அணுகுண்டு சோதனையே வெற்றிபெறவில்லை என்பது வெளிவுலகுக்கு மறைக்கப்பட்ட ஒன்று.

இப்போது சொல்லுங்கள் தமிழர் வீரத்துக்கு முன் இந்தியாவெல்லாம் ஒரு பொருட்டா ?!!!!!!!!!

http://m.oneindia.in/tamil/news/2009/09/18/india-santhanam-favours-probe-into-pokhran-ii.html

http://www.archive.inneram.com/200908261857/pokhran-2-not-successful-report

http://articles.timesofindia.indiatimes.com/2009-08-27/india/28210828_1_thermonuclear-device-pokhran-ii-ctbt