நெரிசல் மரணங்கள் நெஞ்சில் எழும் கேள்விகள்
சென்றமுறை விஜய் வேண்டுமென்றே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பீக் அவரில் மெதுவாக ரோட் ஷோ நடத்தியது அவரது கூட்டத்தை அதிகமாக்கும் நோக்கம் இருப்பதை காட்டுகிறதே?!
மனசாட்சி இல்லாமல் 7 மணிநேரம் தாமதமாக வந்துள்ளாரே?!
தனக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு போதுமான உணவு தண்ணீர் இருக்கைகள் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவில்லையே?!
தன்னைப் பார்த்துவிட்டால் மக்கள் கலைந்து சென்றுவிடுவார்கள் என்று வாகன ஜன்னல்களை மூடிய படி பயணித்து ரசிகர்களை தொடர்ந்து வரும்படி செய்ததாகச் சொல்கிறார்களே?!
கூட்டத்தில் 30 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது கூட தெரியாமல் அல்லது கவலைப்படாமல் உடனடியாக பிளைட் ஏறியது எப்படி?! அப்போது களத்தில் ஒரு நிர்வாகி கூடவா இல்லை?!
இந்தமுறை பேசும்போது நிறைய உளறல் மற்றும் பதற்றம். இப்படி நடக்கவுள்ளதை விஜய் ஏற்கனவே அறிந்திருந்தாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?!
சம்பவம் தெரிந்த பிறகும் களத்திற்கு கிளம்பி வராதது மற்றும் நிர்வாகிகளை அனுப்பாதது சந்தேகம் வரவைக்கிறதே?!
நாளை காலையாவது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து களத்துக்கு வந்து தனது தரப்பு நியாயத்தை சொல்வாரா? அப்படி சொல்லவில்லை என்றால் சந்தேகம் அதிகமாகுமே?!
சென்ற கூட்டங்களில் கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை தெரிந்திருந்தும் ஏன் குறுகலான இடத்தை ஒதுக்கியது அரசு?!
சவுக்கு சங்கர் 'வீபரீதம் நடக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது' என்று முன்பே கூறியிருந்ததை இங்கே பொருத்திப் பார்க்கலாமா?!
டேக் டைவர்ஸன் திட்டம் என ஏற்கனவே விஜய் கூட்டத்தை அலைக்களிக்கும் ப்ளானை செந்தில் பாலாஜி வைத்திருந்ததாக முன்பே கூறிய பத்திரிக்கை செய்தியும் இங்கே கவனத்தில் வருகிறதே?!
ஏற்கனவே எடப்பாடியார் கூட்டங்களில் பலமுறை ஆம்புலன்சை விட்டு நெருக்கடி ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது. அது இம்மாதிரி மரணங்களை ஏற்படுத்தவா எனும் சத்தேகம் எழுகிறதே?!
சரியாக நெரிசல் ஏற்பட்ட நேரம் மின்தடை ஏற்பட்டதும் சந்தேகம் வரச் செய்கிறதே?!
கும்பமேளா நெரிசல் மரணங்களுக்கு பாஜக அரசு பொறுப்பு என்று கூறிய உதயநிதி இப்போது அதுபோலக் கூறுவாரா?!
மக்கட்பணி செய்யாமல் துணை முதலமைச்சர் துபாயில் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?!
மக்கள் பணத்தில் இருந்து 10 லட்சம் வாரிக் கொடுப்பது சரியா?!
கள்ளச் சாராயத்திற்கும் சினிமா மோகத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?!
ஏற்கனவே பதாகை வைக்கையில் ஒரு ரசிகர் இறந்த போது விஜய் ஆறுதலோ நிவாரணமோ வழங்கவில்லை! இப்போதாவது ஏதாவது வழங்குவாரா?!
சினிமா மோகத்தில் நடிகரை நேரில் பார்க்க காட்டும் அளவுக்கதிகமான ஆர்வம் இன்று 40 உயிர்களை காவு வாங்கும் அளவுக்கு போய்விட்டதே?! இனியாவது மக்கள் திருந்துவார்களா?!
நெரிசல் ஏற்படும் என்று தெரிந்தும் அல்லது கணிக்கத் தவறியும் குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்களை என்னவென்று சொல்வது?!
காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் போல 8 மணிநேரம் அங்கேயே தவம் கிடந்தது என்ன மாதிரியான மனநிலை?!
விஜயை பார்க்க வேண்டும் என்று மரங்களிலும் மொட்டை மாடிகளிலும் குரங்குகள் போல ஏறி நிற்பது. விஜய் மீது பாய்ந்து குதற தயாராக இருப்பது போன்ற செயல்களும் உயிருக்கு ஆபத்து விளைவிக்குமே?!
சில உயிர்கள் போனால்தான் நாம் ஒரு விடயத்தைப் பற்றி பேசவே செய்வோமா?!
28.09.2025