Thursday, 17 August 2023

தாய்ன் மணிக்கொடி

தாய்ன் மணிக்கொடி 

இவர்தான் நடிகர் அர்ஜுனின் தந்தை எஸ்.பி.சர்ஜா.
 கன்னட திரையுலகில் 20 ஆண்டுகாலம் பிரபலமான நடிகராக இருந்தார்.
 இவரது மகனான அர்ஜுன் (சர்ஜா) தமிழகத்தில் பிரபலமான நடிகராக இருந்தார்.
 எஸ்.பி.சர்ஜா வின் இரண்டு பேரன்களும் கர்நாடக சினிமாவில் நடிகர்களாக உள்ளனர்.

  தமிழ் திரையுலகில் வேற்றினத்தார் ஆதிக்கம் என்பது தமிழ் இன உணர்வை மழுங்கடித்ததில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
 அதில் மிக முக்கியமானவை தெலுங்கர் விஜயகாந்த் மற்றும் கன்னடர் அர்ஜுன் ஆகியோரின் திரைப்படங்கள்.
 
  நம் அருகிலேயே ஈழத் தமிழர் மிகப்பெரிய ஆயுதப் போராட்டம் நடத்தி இலங்கைத் தீவின் 30% நிலப்பரப்பை தமது ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுவந்து உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தனர்.
  ஆனால் நாமோ இது எதுவும் தெரியாமல் இந்தியர் என்கிற மாயையில் மூழ்கடிக்கப்பட்டு பாகிஸ்தான் சதிகளிலிருந்து இந்தியாவை காப்பாற்றுவது பற்றி பாடம் படித்துக் கொண்டிருந்தோம்.

 பாகிஸ்தான் தீவிரவாதிகளை  ஒழித்தது போக கேப்டன் பிரபாகரன் மற்றும் ஜெய்ஹிந்த் போன்ற படங்களில் தமிழினக் காவலர் வீரப்பன் படையை அழிப்பது பற்றியும் பாடம் எடுத்துத்தனர்.
 
  கன்னடர்கள் காவிரிக் கலவரத்தில் தமிழர்களைக் கொன்று தமிழ்ப் பெண்களின் தாலிகளை அறுத்தபோது ஜெய்ஹிந்த் படம் எடுத்து நம்மை தாயின் மணிக்கொடி பாட வைத்தவர் நடிகர் அர்ஜுன்.

 இவர் தமிழ்நாட்டு பிரச்சனைக்கு போராட வரமுடியாது என்று வெளிப்படையாக அறிவித்தவர்.
 
 சர்ஜா என்கிற சாதி பட்டத்தை இவர் போட்டுக் கொண்டிருந்தால் அல்லது நாயுடு என்கிற பட்டத்தை விஜயகாந்த் போட்டுக் கொண்டிருந்தால் நமக்கு அவர்கள் வேற்றினத்தார் என்கிற அடையாளம் தெரிந்து இருக்கும்.
 இவர்கள் நம்மைப் போலவே நடித்து நாக்குப்பூச்சி தெரிக்க இந்தியா இந்தியா என்று 20 வருடங்கள் கத்தி ஒரு தலைமுறையையே முட்டாளாக்கி உள்ளனர்.

Wednesday, 16 August 2023

திமுக மேடையில் அஜித் தைரியமாக பேசினாரா

திமுக மேடையில் அஜித் தைரியமாக பேசினாரா 

 பலரும் நடிகர் அஜித் கருணாநிதியைப் பார்த்து நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதாகவும் அது தவறு என்றும் தைரியமாகப் பேசியதாக கூறுகிறார்கள்.
 அந்த முழு வீடியோவை அஜித் ரசிகர் ஒருவர் கைபேசியில் எடுத்திருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் பதிவிட்டு  இருந்தார்.
 அதில் கருணாநிதியை வானத்தில் தூக்கி வைத்து புகழ்ந்து விட்டு நடிகர்களை போராட்டங்களில் கலந்துகொள்ள சிலர் கட்டாயப் படுத்துவதாகவும் அதற்காக நடிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறும் கெஞ்சுகிறார்.

 அதைப் பார்த்தால் நடிகர் அஜித் காவிரி பிரச்சனை, ஈழத் தமிழர் போன்ற பிரச்சனைகளுக்கு சினிமாவில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள் நடிகர்களை அழைத்து போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் பேசியிருப்பது புரிகிறது.
 அவ்வாறு சிலர் தொந்தரவு செய்வதைத் தடுக்குமாறும் உரிய பாதுகாப்பு வழங்குமாறும் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கிறார் என்றுதான் புரிகிறது.
 இதற்குத்தான் ரஜினி கைதட்டினார்.
 இந்த கேள்வி கருணாநிதியை நோக்கி நேரடியாக எழுப்பப்பட்டதாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

 கருணாநிதி சினிமாவுக்கு நிறைய சலுகைகளை வாரி வழங்கி  தமது குடும்பத்தினரின் சினிமா, டிவி, அரசியல் ஆகியவற்றிற்கு திரைப் பிரபலங்களை பயன்படுத்துபவர்.
 ஆனால் அஜித் கேள்வி எழுப்பியது அவரைப் பற்றி அல்ல.

  நடிகர் அஜித்தின் இந்த நிலைப்பாடு அவரது தனிப்பட்ட விருப்பம். 
 போராட்டங்களில் கலந்து கொள்ள முடியாது என்று அவர் பலமுறை கூறியிருக்கிறார்.
 அவரது பெயரால் ரசிகர் மன்றங்கள் இருப்பதையும் கூட அவர் ஆதரிக்கவில்லை.

 அவர் விரும்பாத ஒரு பிம்பத்தை அவர் மீது கட்டமைப்பது தவறு.

வீரப்பனை காட்டிக்கொடுத்த மாவோயிஸ்ட்

வீரப்பனை காட்டிக்கொடுத்த மாவோயிஸ்ட்

 வீரப்பனைப் பிடிப்பதில் தமிழக காவல்துறை மாவோயிஸ்ட் என்று அறியப்படும் நக்சலைட் ஆயுதப் போராளி ஒருவரை அழைத்து வந்து வீரப்பன் குழுவுக்கு  வெடிகுண்டு பயிற்சி அளிப்பதாகக் கூறி ஏமாற்றி மயக்கம் ஏற்படும் குண்டை வெடிக்க வைத்து உயிருடன் பிடித்துள்ளனர்.
 இப்போதும் அந்த நபர் முழுநேர மாவோயிஸ்ட் மக்கள் படை போராளியாக இருக்கிறாராம்!
 அதாவது தேசத் துரோகி என்று இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி தமிழக காவல்துறையுடன் கைகோர்த்து தமிழ்தேசிய சக்தியாகத் திகழ்ந்த வீரப்பனாரை வீழ்த்தியுள்ளார்.

 தகவலுக்கு நன்றி: சிவா என்கிற சிவசுப்பிரமணியன் அவர்களது ராவணா யூட்யூப் சேனல் பேட்டி 
 

Tuesday, 15 August 2023

சக் தே இந்தியா

சக் தே இந்தியா

 ஹிந்தியில் மிகச்சிறந்த தேச பக்தி படம் 'சக் தே இந்தியா'.
 அதுவரை முழுக்க விளையாட்டை மையமான வைத்து  எந்த திரைப்படமும் வந்ததில்லை. இந்த படம் வந்த உடனேயே கிரிக்கெட் மாயையை உடைக்க முற்பட்டது.
 இதில் கேட்பாரற்றுக் கிடக்கும் மகளிர் ஹாக்கி அணியை மேம்படுத்தி கோப்பை வெல்ல வைப்பார் அதன் கோச்சாக வரும் ஷாருக் கான்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் முதல் காட்சி இளம் வீராங்கனைகள் வரிசையாக நிற்பார்கள். சாருக் கான் வருவார். ஒவ்வொருவரும் ஒரு அடி முன்வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சி வரும். ஒவ்வொருவரும் neha from gujarat மாதிரி தனது பெயரையும் தனது மாநிலத்தின் பெயரையும் கூறுவார்கள்.  அப்பொழுது அவர் நீங்கள் எல்லோரும் இந்தியர்கள் எனவே நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று கூறுமாறு பணிப்பார்.
 உடனே அவரவர் தமது பெயரையும் தான் இந்தியாவில் இருந்து வருவதாகவும் முழு வேகத்துடன் கூறுவார்கள். 
பிறகு அந்த வீராங்கனைகள் தத்தமது இனத்துடன் தங்குவதை தடுப்பார்.
அதாவது  இரண்டு தமிழ்நாட்டு வீராங்கனைகள் ஒரே அறையில் தங்கியிருந்தால் அவர்களை பிரித்து வெவ்வேறு மாநில வீராங்கனைகளுடன் அறையில் தங்கும்படி செய்வார்.
 இதனால் வேற்றுமைகள் மறைந்து அவர்கள் இந்தியர் என்ற உணர்வுடன் விளையாடி கோப்பையை வெல்வதாக படம் செல்லும்.

  ஆக தேசிய இனங்களின் தனித்தன்மையை அழித்து புதிதான (போலியான) இந்தியா என்கிற அடையாளத்தின் கீழ் இணைப்பதன் மூலமே இந்த நாடு வெற்றி பெறும் என்பது ஆளும் வர்க்கத்தின் மனநிலை.
 தேசிய இனங்களின் தனித்தன்மையை பேணுவது அவர்கள் மொழியை கலாச்சாரத்தை பாதுகாப்பது இதெல்லாம் தேச பக்திக்கு எதிரான சிந்தனை என்பது தான் இந்தியாவை ஆளும் வர்க்கத்தின் உறுதியான நிலைப்பாடு .

நீங்கள் தமிழன் என்றால் உங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் உரிமைகளையும் இந்தியா காவு கேட்கிறது  என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!

  அதையெல்லாம் விட்டுக் கொடுக்க நீங்கள் தயாராக இருந்தால் தாராளமாக இந்தியன் என்று கூறிக் கொள்ளலாம்!

தமிழனாகவும் இருப்பேன் இந்தியனாகவும் இருப்பேன் என்பது கடுகளவும் சாத்தியமில்லை.

  இரண்டுமே நேர் எதிரானது!
இரண்டில் ஏதோ ஒன்று தான் உங்கள் அடையாளம்!

ஆனால் விபரம் தெரியும் முன்பே குழந்தைகளை சுதந்திர தினம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மூளைச்சலவை செய்து அவர்களை இந்தியர் என்று நம்ப வைத்து தேசபக்தியின் பெயரால் அவர்களது மொழியையும் இனத்தையும் வளத்தையும் தியாகம் செய்யச்சொல்லி கேட்கிறது இந்திய தேசம்!

  இப்படி தேசிய இனங்களின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்கச் சொல்வதில் இந்திய தேசியம், இந்துத்துவம், இஸ்லாமியம், தலித்தியம்,  கம்யூனிசம், திராவிடம் என அனைவருமே கைகோர்ப்பார்கள் !

 இந்த இந்திய தேசிய சிந்தனை வலிந்து திணிக்கபடுவதற்கும் ஒரு கன்னிப் பெண் கற்பழிக்கப்படுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை!

Monday, 7 August 2023

சாத்தானின் ஆசான்

சாத்தானின் ஆசான்

ஊரடித்து உலையில் போட்டு 
ஊனுண்டு உடல் கொழுத்து 
பல உடல் புணர்ந்து
பலர் குடல் சரித்து
கால்களை நக்கி
கழிவுகள் அள்ளி
உயர்பதவி பெற்று 
உயிர்ப்புடன் உலவிய
சாத்தானின் ஆசான்!
செத்தவன் ஆனான்!
செத்தும் கெடுக்கிறான்
செதுக்கிய சிலை கேட்டு!
இவனீன்ற மகன்
இன்னொரு சாத்தான்!
அவனீன்ற மகன் 
அதனினும் சாத்தான்!
கடைசி வாரிசும்
கன்னிப் பித்தன்!
இனத்தை பலிகொடுத்து
பணத்தை வாரியெடுத்து
வாழும் ஒரு குடும்பம்
வீழும் நாள் என்றோ?!

#சாத்தான்_செத்தொழிந்த_நாள்

Sunday, 6 August 2023

புலிகளும் பழனி பாபாவும்

புலிகளும் பழனி பாபாவும் 

  புலிகள் உட்பட ஈழப் போராளி இயக்கங்கள் தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி வந்த போது அவர்களை ஆதரித்தவர்களில் பழனி பாபாவும் ஒருவர் (இவர் தமிழரசன் அவர்களுக்கும் ஆதரவளித்து வந்தார்).
 ஐந்து ஆண்டுகள் புலிகளுக்கு அனைத்து வகையிலும் உதவி வந்த பாபா ஈழத்திற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கே தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வந்தார்.
 இந்த நிலையில் அவருடைய பாஸ்போர்ட்டை இந்திய அரசு முடக்குகிறது.

 இஸ்ரேலின் வழிகாட்டுதலின் பெயரில் ஈழத்தில் இஸ்லாமியரை தனியாக பிரித்தெடுக்கும் வேலையை சிங்களவர்கள் செய்கிறார்கள்.
புலிகளுக்கு நிதி தருவதில் விருப்பம் இல்லாத சில இஸ்லாமியர்களையும் இரவில் தனியாக மாட்டும் அப்பாவி இசுலாமியர்களையும் படுகொலை செய்து புலிகள் மீது பழியைப் போடுகின்றனர்.
 புலிகளில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை அவர்களின் குடும்பத்தை மிரட்டுவதன் மூலம் அவர்களை திரும்பி வரச் செய்கின்றனர். திரும்பி வராதோரின் குடும்பங்கள் இலங்கை ராணுவத்தால் சீரழிக்கப்பட்டன.
 ஊர்க்காவல் படை என்கிற பெயரில் இஸ்லாமியரில் சில பொறுக்கிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த ஏவி விடுகின்றனர்.  அவர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்கின்றனர். ஊர்க்காவல் படைக்கு எதிராக புலிகள் எடுத்த நடவடிக்கைகள் இஸ்லாமியருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.
 புலிகள் போல உடைய அணிந்து முழுக்க இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இருந்த காத்தான்குடி பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தி இஸ்லாமியர்களை கொன்று அந்த பழியையும் புலிகள் மீது போடுகின்றனர்.

  இந்த நிலையில் பழனி பாபாவை இலங்கை அரசே நேரடியாக தமிழகம் சென்று அழைத்து வந்து சிறிமாவோவின் கணவரே தனிப்பட்ட முறையில் அவரை கூட்டிச்சென்று இஸ்லாமியர்களை புலிகள் கொன்று வருவதாக கூறி கலவரம் நடந்த இடங்களைக் காட்டுகிறார்.
 இசுலாமிய மக்களை மிரட்டி பாபாவிடம் பொய் சாட்சி கூற வைக்கிறார்.
 சில இஸ்லாமிய தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களையும் பழனி பாபாவிடம் புலிகள் பற்றி தவறாக கூறவைக்கிறார்.
 பழனி பாபா இதை நம்பி விடுகிறார்.
 பிறகு தமிழகத்திற்கு வந்து புலிகளுக்கு எதிராக பேசுகிறார்.
 ஈழத்திற்கு இந்திய அமைதிப் படை சென்றபோதும் அதை ஆதரிக்கிறார்.
 இதைத்தான் தற்போது இஸ்லாமிய மதவெறியர்கள் பரப்பி வருகின்றனர்.

ஆனால் இதன் பிறகு பாமக உடன் பாபா நெருக்கமாகிறார். பா.ம.க தலைவர் ராமதாஸ் புலிகள் பற்றி எடுத்துக் கூறுகிறார்.பா.ம. கட்சி ஈழம் மற்றும் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் பொழுது பழனிபாபா ஈழத்திற்கு முழு ஆதரவு தருவதாகவும் புலிகளை எதிர்ப்பதாகவும் கூறி பாமகவின் ஈழ ஆதரவு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அப்போது திண்டுக்கல் லில் பேசிய பேச்சுதான் இது.
ஈழத்து இசுலாமியர் தனி ஈழம் அமைய ஆதரவளிக்க வேண்டும் என்றும் பேசுகிறார்.
 புலிகளுடன் இருக்கும் பங்காளி சண்டையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

 இதன் பிறகும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபொழுது எந்த தலைவருமே புலிகளுக்கு ஆதரவாக பேசவில்லை.
 ஆனால் பழனி பாபா ராஜீவ் காந்தி தன்னுடைய இடுப்பில் வைத்திருந்த பாதுகாப்பு குண்டு வெடித்துதான் இறந்தார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து புலிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறார். 

 புலிகளுடன் முரண்பட்டாலும் பழனி பாபா அவர்கள் ஈழம் அமைய வேண்டும் என்பதில் இறுதி வரைக்கும் உறுதியாக இருக்கிறார்.