திமுக மேடையில் அஜித் தைரியமாக பேசினாரா
பலரும் நடிகர் அஜித் கருணாநிதியைப் பார்த்து நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதாகவும் அது தவறு என்றும் தைரியமாகப் பேசியதாக கூறுகிறார்கள்.
அந்த முழு வீடியோவை அஜித் ரசிகர் ஒருவர் கைபேசியில் எடுத்திருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் பதிவிட்டு இருந்தார்.
அதில் கருணாநிதியை வானத்தில் தூக்கி வைத்து புகழ்ந்து விட்டு நடிகர்களை போராட்டங்களில் கலந்துகொள்ள சிலர் கட்டாயப் படுத்துவதாகவும் அதற்காக நடிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறும் கெஞ்சுகிறார்.
அதைப் பார்த்தால் நடிகர் அஜித் காவிரி பிரச்சனை, ஈழத் தமிழர் போன்ற பிரச்சனைகளுக்கு சினிமாவில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள் நடிகர்களை அழைத்து போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் பேசியிருப்பது புரிகிறது.
அவ்வாறு சிலர் தொந்தரவு செய்வதைத் தடுக்குமாறும் உரிய பாதுகாப்பு வழங்குமாறும் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கிறார் என்றுதான் புரிகிறது.
இதற்குத்தான் ரஜினி கைதட்டினார்.
இந்த கேள்வி கருணாநிதியை நோக்கி நேரடியாக எழுப்பப்பட்டதாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
கருணாநிதி சினிமாவுக்கு நிறைய சலுகைகளை வாரி வழங்கி தமது குடும்பத்தினரின் சினிமா, டிவி, அரசியல் ஆகியவற்றிற்கு திரைப் பிரபலங்களை பயன்படுத்துபவர்.
ஆனால் அஜித் கேள்வி எழுப்பியது அவரைப் பற்றி அல்ல.
நடிகர் அஜித்தின் இந்த நிலைப்பாடு அவரது தனிப்பட்ட விருப்பம்.
போராட்டங்களில் கலந்து கொள்ள முடியாது என்று அவர் பலமுறை கூறியிருக்கிறார்.
அவரது பெயரால் ரசிகர் மன்றங்கள் இருப்பதையும் கூட அவர் ஆதரிக்கவில்லை.
அவர் விரும்பாத ஒரு பிம்பத்தை அவர் மீது கட்டமைப்பது தவறு.
No comments:
Post a Comment