Monday 15 August 2016

இடவொதுக்கீடு ஈ.வே.ரா பெற்றுத்தந்ததா?

இடவொதுக்கீடு ஈ.வே.ரா பெற்றுத்தந்ததா?

1871ல் சென்னை மாகாண அரசு கணக்கெடுப்பு நடத்தி பிராமணரல்லாதார் ஒடுக்கப்படுவதாக அறிவித்தது.
ஈ.வே.ரா அப்போது பிறக்கவேயில்லை.
அவர் காங்கிரசிலிருந்து விலகி பிராமணரல்லாதார் கொள்கையை கையிலெடுத்தது இதற்கு 53 ஆண்டு கழித்துதான் (1924ல்).

1893 ல் ஆங்கிலேய ஆட்சி சென்னை மாகாணத்தில் 49 பின்தங்கிய சாதிகளைத் தேர்ந்தெடுத்து கல்வி வழங்குவதில் கவனம் செலுத்தியது.
ஈ.வே.ரா.வுக்கு அப்போது 13 வயது.
ஈ.வே.ரா கல்வியிலும் வேலையிலும் பிராமணரல்லாதார் முன்னுரிமைக்காக பேசியது இதற்கு 32 ஆண்டுகள் கழித்துதான்  (1925ல்).

1927லேயே சென்னை மாகாணம் முழுவதும் அரசு வேலைகளில் சாதிவாரியாக முன்னுரிமை வழங்கப்பட்டது.
அப்போது ஈ.வே.ரா காங்கிரசிலிருந்து விலகி தனியாக சுயமரியாதை இயக்கம் தொடங்கி இரண்டாண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை.
அதுவரை ஈ.வே.ரா இடவொதுக்கீட்டிற்காக எந்த போராட்டத்தையும் நடத்தியிருக்கவில்லை.

1943 ல் அம்பேத்கரின் முயற்சியால் ஆங்கில அரசு அனைத்து துறைகளிலும் பட்டியல் சாதியினருக்கான 8.33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவந்தது.
இதற்கு ஓராண்டு பிறகுதான் ஈ.வே.ரா திராவிடர் கழகம் தொடங்கினார்.
இட ஒதுக்கீடு தொடர்பாக அவர் போராட்டம் நடத்தியது இதற்கு ஏழாண்டுகள் பிறகுதான் (1950ல்)

அதாவது ஈ.வே.ரா பிறக்கும் முன்னரே பிராமணர் ஆதிக்கம் உணரப்பட்டு அவர் செல்வாக்கு பெறும் முன்பே இடவொதுக்கீடும் கிடைத்துவிட்டது.

ஆங்கிலேயர் வெளியேறிய பின் புதிய சட்டம் 1950 ல் நடைமுறைக்கு வந்தது.
சாதி ரீதியான இடவொதுக்கீடு பிராமணர்கள் வழக்கு தொடுத்ததால் நீக்கப்பட்டது.

அப்போது மக்களைத் திரட்டி போராடிய பலரில் ஈ.வே.ராவும் ஒருவர்.

ஆக கல்வியிலும் வேலையிலும் சாதிரீதியான ஒதுக்கீடு பல ஆண்டுகளாக பல்வேறு தலைவர்கள் மக்களைத் திரட்டிப் போராடியதால் கிடைத்தது.

ஈ.வே.ரா கடைசி நேரத்தில் ஒரே ஒரு போராட்டம் நடத்திவிட்டார் என்பதற்காக இடவொதுக்கீடே அவர்தான் வாங்கித் தந்தார் என்றவாறெல்லாம் திராவிடவாதிகள் எழுதுகின்றனர்.

ஈ.வே.ரா போராடியது 'வகுப்புவாரி இடவொதுக்கீடு' அதாவது பிராமணரல்லாதார் இடவொதுக்கீடு.
அவருக்கு தாழ்த்தப்பட்ட சாதியாரைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
அவரது நோக்கம் 3% பிராமணர்கள் அரசுவேலையிலும் 3% ற்கு மேல் இருக்கக்கூடாது என்பதே.

ஆனால் 'சாதிவாரி இடவொதுக்கீடு' தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிப் பெறப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலையிலும் இடம்பெறுவதற்காகக் கோரப்பட்டது.
அதை 1943ல் சாதித்து காட்டியவர்தான் அம்பேத்கர்.

சாதிரீதியான இடவொதுக்கீட்டை பிராமணர்கள் எதிர்த்து வழக்குப் போடும்வரை ஈ.வே.ரா அதில் ஆர்வம் காட்டவில்லை.
பிராமணர்கள் வெற்றிபெற்றதும் அது பொறுக்கமுடியாமல் போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப்பட்டோருக்காக ஈ.வே.ரா என்றும் எங்கேயும் போராடியதோ பேசியதோ கிடையாது.

அவர் தாழ்த்தப்பட்டவர்களையும் இசுலாயமியரையும் பிராமணரல்லாதாரின் எதிரிகளாகவே கடைசிவரைக்கும் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசிவரைக்கும் பறையர்களை கேவலமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி போராட்டத்தையும் 'வகுப்புரிமை நாளாக'த்தான் அறிவத்து போராட அழைத்தார்.

திராவிடம் இதேபோல கடைசிநேரத்தில் புகுந்து முழு போராட்டவரலாறையும் ஆட்டையைப்போடுவது தொடர்ந்து நடந்துவருகிறது.
_______________________

சிலர் 1927 ல் திராவிட கட்சியான ஜஸ்டிஸ் இடவொதுக்கீடை அமல்படுத்தியதைப் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதற்கு 25 ஆண்டுகள் முன்பே கொல்ஹாப்பூர் அரசர் சத்ரபதி ஸாஹுஜி மகராஜ் 50% பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்.
(பிறகு பதினெட்டாண்டுகள் கழித்து 90% இடவொதுக்கீடு பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்)
இதற்கு ஏழாண்டுகள் கழித்துதான் நீதிக்கட்சி இடவொதுக்கீட்டை கொண்டுவருகிறது.
அதாவது அக்கட்சி ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் கழித்து.

அதாவது திராவிடம் ஆட்சிக்கு வருமுன்பே கொல்ஹாப்பூரில் 90% பிராமணரில்லாதோர் பதவி பெற்றுவிட்டனர்.

ஆக இடவொதுக்கீட்டுக்கு முன்னோடி திராவிட கட்சி இல்லை, ஒரு மராத்திய மன்னர்தான்.

நன்றி : Reservation policy in Tamilnadu - Wikipedia
______________________

இது எல்லாமே தொடங்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் மூளையில்தான்.

முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர்.
இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது.
1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன.

இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று பிராமணர்கள் நிறைகின்றனர்.
குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்.
தமிழர்கள் பதவிபெறுவதைக் கண்டு வயிறெரிந்தனர் வேற்றின ஆதிக்க சாதிகள்.

(எப்படி தமிழர்களான யாழ்ப்பாண வெள்ளாளர்கள் ஆங்கிலேயருக்கு அடுத்த பதவிகளில்  நிறைந்திருந்தது சிங்களவர் கண்களை உறுத்தியதோ அதேபோல)

வேற்றினத்தாரின் இந்த 'தமிழின வெறுப்பை'த் தனது பிரித்தாளும் அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டனர் ஆங்கிலேயர்.

திராவிட கட்சியை ஒரு தெலுங்கரையும் மலையாளியையும் வைத்து  உருவாக்கியதும் ஆங்கிலேயரே.
அதனால்தான் முதல் திராவிட கட்சி தோன்றியதும் அதன் முதல் அறிக்கை 'ஆங்கிலேயரிடம் சுதந்திரம் கேட்கக்கூடாது' என்று கூறியது.
திராவிடம் கடைசிவரை ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கடைசிவரை ஆங்கிலேயர்களுக்கு விசுவாசகமாக வாலை ஆட்டியது.

ஆங்கிலேயருக்கு முன் தமிழகத்தை ஆண்ட தெலுங்கு வம்சாவளிகள் பேராதவு திராவிடத்திற்குக் கிடைத்தது.

  வேற்றின ஆட்சியில் தமிழர்களின் நிலத்தை பிடுங்கி நிலவுடைமையாளர்களாக தமிழகம் முழுக்க நிறைந்துகிடந்த அத்தனை வந்தேறிகளும் ஆதரித்தனர்.
திராவிடத்துக்கு பணம் வந்து குவிந்தது.

ஆங்கிலேயருக்கு அடுத்து அரியணை ஏறப்போகும் வடவரை சமாளிக்க தமிழரும் ஆதரித்தனர்.
திராவிடம் என்ற பெயரில் வேற்றினம் அரியணை ஏறியது.
அது இன்றுவரை தொடர்கிறது.

திராவிடவாதிகளுக்கு இடவொதுக்கீடு பற்றி உண்மையில் அக்கறை இருந்தால் (மற்ற மாநிலங்களைப் போல) தமிழ்-சாதிகளைத் தவிர மற்ற சாதிகளை மாநில சலுகையிலிருந்து நீக்கும் நடவடிக்கை ஏன் செய்யவில்லை?

சட்டநாதன் பரிந்துரையை ஏன் நிறைவேற்றவில்லை?

சாதி சாதியாகப் பிரிந்து ஒரு இனத்துக்குள் வேற்றினம் ஊடுருவும் வழியே இது.

திராவிடம் என்பது உருமாற்றி ஏமாற்றும் அரசியல் நாடகம்.
அதன் ஒரு காட்சிதான் இடவொதுக்கீடு சாதனை.

இனியாவது உண்மையை உணருங்கள்.

No comments:

Post a Comment