Friday 5 August 2016

கல்வியும் தாழ்த்தப்பட்டதா?

கல்வியும் தாழ்த்தப்பட்டதா?

1922-25 வாக்கில் (மெக்காலே கல்விமுறை புகுத்தப்பட்ட பிறகும்) அதை விடுத்து மதராஸ் (சென்னை)மாகாணத்தில் பாரம்பரியக் கல்விமுறை பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது 11,575 பள்ளிகளும் 1,094 உயர் கல்வி மையங்களும் இருந்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்த மாணவர்களில் 70-80 சதவிகிதம் பேர் (இன்றைய) பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.
(அதாவது இன்றைய சூழலில் OBC, MBC, SC, ST என்று குறிக்கப்படுவோர்)

அதாவது ஆங்கில ஆண்டைகளின் திராவிட அடிபொடிகள் கூறுவது போல "பல நூறு ஆண்டுகளாக பார்ப்பனரே கல்வி பெறமுடிந்தது.
ஈ.வே.ரா வந்துதான் எல்லாருக்கும் கல்வி கிடைத்தது" என்பது வடிகட்டிய பொய்.

அவர்கள் காட்டும் புள்ளிவிபரங்கள் பிரிட்டிஷ் அரசு நடத்திய ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர் நிறைந்திருந்தது பற்றியதுதான்.

ஆங்கிலேய அரசு அங்கீகரிக்காத நாட்டுப்புற பள்ளிக்கூடங்களிலும் பாரம்பரியக் கல்வி நிலையங்களிலும் கல்வி கற்க சாதி ரீதியாக எந்த தடையும் இருந்திருக்கவில்லை.

ஆங்கிலேயர் வரும் முன்பு மக்கள் முட்டாளாக இருந்திருந்தார்கள் என்றும் சொல்வதற்கில்லை.

ஐரோப்பாவை விடவும் இங்கே வேளாண்மையும், வானியலும், கணிதமும், கலையும், கட்டுமானங்களும் சிறப்பாக இருந்தன.

தகவல்: பிரிட்டிஷ் ஆவண ஆராய்ச்சியாளர் ராம்பால் அவர்களின் பேட்டி.
விரிவான பதிவு
www. tamilpaper. net/? p=4580

No comments:

Post a Comment